Difference between revisions of "Health-and-Nutrition/C2/Breast-crawl/Tamil"
From Script | Spoken-Tutorial
Venuspriya (Talk | contribs) (Created page with " {| border = 1 | ''' Time ''' | '''Narration''' |- | 00:00 | '''Breast crawl''' குறித்த '''spoken tutorial '''க்கு நல்வரவு . |- |...") |
Venuspriya (Talk | contribs) |
||
Line 370: | Line 370: | ||
|- | |- | ||
| 10:01 | | 10:01 | ||
− | | இந்த tutorial, Maa aur Shishu Poshan projectன் ஒரு பகுதி ஆகும். இந்த tutorialக்கான domain reviewer, Dr. Rupal Dalal, MD Pediatrics. Dr. Taru Jindal, Ms obstetricks மற்றும் Gynaecology. | + | | இந்த tutorial, Maa aur Shishu Poshan projectன் ஒரு பகுதி ஆகும். இந்த tutorialக்கான domain reviewer கள், Dr. Rupal Dalal, MD Pediatrics. Dr. Taru Jindal, Ms obstetricks மற்றும் Gynaecology. |
|- | |- |
Revision as of 14:47, 20 June 2018
Time | Narration |
00:00 | Breast crawl குறித்த spoken tutorial க்கு நல்வரவு . |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, breast crawl என்றால் என்ன |
00:10 | breast crawl க்கான வழிமுறைகள் |
00:13 | breast crawl ன் முக்கியத்துவம் |
00:18 | முதலில் breast crawl என்றால் என்ன என புரிந்துகொள்வோம் |
00:23 | ஒரு குழந்தை உணவு உண்ணும் ஒரு உள்ளுணர்வு நடத்தையுடன் பிறக்கிறது. |
00:28 | பிரசவம் ஆனவுடன் தாயின் வெற்று வயிற்றின் மேல் குழந்தையை வைக்க......., குழந்தை மார்பகத்தை கண்டறிந்து....... பால் குடிக்க தொடங்கும். |
00:40 | இந்த முழு செயல்முறை 'Breast Crawl’ எனப்படும். |
00:46 | குறிப்பு, Breast crawl செயல்முறையை ஆரோக்கியமான குழந்தைகளுக்கு அதாவது சுகப்பிரசவம்....... அல்லது அறுவைசிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளுக்கு செய்யலாம் |
00:58 | பிறந்தவுடன் நன்றாக அழும் குழந்தைகளுக்கு செய்யலாம். |
01:03 | ஆரோக்கியம் குன்றிய அதாவது குறைந்த உடல் எடை....... மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சுவாச பிரச்சனைகளுடன் பிறந்த குழந்தைகளுக்கு Breast crawl ஐ செய்யக்கூடாது |
01:15 | இப்போது breast crawlன் செயல்முறையையும் பின்னர் அதன் முக்கியத்துவத்தையும் கற்போம். |
01:22 | முதலில், பிரசவ அறையின் வெப்பநிலை சுமார் 26 degree Celsiusக்கு உள்ளதா என சோதிக்கவும். |
01:29 | அடுத்தது குழந்தையை தாயின் வெற்று வயிற்றின் மேல் வைத்து சுத்தம் செய்வது. |
01:35 | குழந்தையின் கைகளை தவிர்த்து, உடலை ஒரு சுத்தமான உலர்ந்த துணியால் சுத்தம் செய்யவும். |
01:42 | குழந்தையின் கைகளை ஈரமாகவே வைக்க வேண்டும் என்பதை நினைவுகொள்க. |
01:46 | குழந்தையின் சருமத்தில் உள்ள பாதுகாப்பு வெள்ளைப் பூச்சை நீக்க கூடாது. |
01:53 | இது வானிலை குளிராக இருந்தால் குழந்தையைப் பாதுகாக்கும். |
01:56 | குழந்தையை துடைத்தப்பிறகு அந்த ஈரத்துணியை எடுக்கவும் |
02:01 | அதன் பின் பிரசவப் பணிப்பெண் தொப்புள் கொடியின் துடிப்பை கவனிக்க வேண்டும். |
02:08 | அதன் துடிப்பு நின்றவுடன், தொப்புள் கொடியை துண்டிக்க வேண்டும். |
02:13 | அடுத்து, குழந்தையின் வயிறு தாயின் வயிற்றை தொடுமாறு குழந்தையை தாயின் வெற்று வயிற்றின் மேல் மாற்றி வைக்க வேண்டும். |
02:22 | குழந்தையின் தலை தாயின் கழுவாத மார்பகங்களுக்கு இடையே இருக்க வேண்டும். |
02:26 | குழந்தையின் வாய் தாயின் மார்பகத்திற்கு கீழே இருக்க வேண்டும். |
02:30 | இப்போது குழந்தை breast crawlக்கான சரியான நிலையில் உள்ளது. |
02:37 | பிறந்த குழந்தைக்கு முன்னே நகர்வது மிகவும் இயற்கையானது என்பதால் குழந்தை சுலபமாக தாயின் மார்பகத்தை நோக்கி தவழுகிறது. |
02:46 | அடுத்து செய்யவேண்டியது- தாய் மற்றும் குழந்தையை கதகதப்பாக வைக்க அவர்களை ஒரு உலர்ந்த துணியால் மூடிவது , |
02:54 | குழந்தையின் தலையில் ஒரு தொப்பியை வைக்கவும். |
02:57 | அடுத்தடுத்து வரும் படங்களில் நாம் தொப்பி மற்றும் துணியை காட்டவில்லை என்பதை குறித்துக்கொள்க |
03:04 | இது breast crawlன் போது குழந்தையின் நிலையை சரியாக உற்றுநோக்க நமக்கு உதவும் |
03:10 | துணியால் குழந்தையை மூடியப்பிறகு தாயின் கையால் குழந்தையின் முதுகை தாங்கிபிடிக்க சொல்ல வேண்டும். |
03:18 | breast crawlக்கு உதவும் குழந்தையின் திறன்கள் பற்றி காண்போம், |
03:24 | குழந்தை பிறந்த பிறகு மிகவும் எச்சரிக்கையுடனும் உள்ளுணர்வுடனும் இருக்கும். |
03:29 | குழந்தையின் சுத்தப்படுத்தப்படாத கைகளின் வாசம், அவளின் உழிழ்நீர் சுரப்பை தூண்டும். |
03:35 | மேலும் குழந்தையின் குறைந்த பார்வையால் தாயின் முகம் மற்றும் areolaஐ மட்டும் பார்க்க முடியும் |
03:43 | Areola என்பது மார்பககாம்பை சுற்றியுள்ள கருப்புநிற பகுதி ஆகும். |
03:47 | முடிவாக, குழந்தை தன் கைகள் மற்றும் கால்களை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தாயின் மார்பகத்தை நோக்கி தவழ்ந்து நகர ஆரம்பிக்கும். |
03:57 | இருப்பினும், சில குழந்தைகள் உடனே தவழும், சில குழந்தைகள் சில நேரம் எடுக்கும். |
04:04 | மார்பகத்தை அடைந்த பிறகு குழந்தை முதலில் தன் கைகளால் மார்பகத்தை பிடிக்க முயற்சிக்கும். |
04:12 | இந்த நிலையில், குழந்தை தன் முதல் பாலூட்டத்தை பெறும் வரை, தாயையும் குழந்தையையும் தொந்தரவு செய்யக்கூடாது. |
04:20 | இந்த செயல்முறையின் போது, தாய் மற்றும் பிரசவ பணிப்பெண் இருவரும் பொறுமையாக இருக்க வேண்டும். |
04:27 | ஒரு குழந்தை தன் முதல் பாலூட்டத்திற்கு தாயின் மார்பகத்தை அடைய 30 முதல் 60 நிமிடங்கள் வரை எடுக்கலாம். |
04:35 | பாலூட்டத்தை ஆரம்பிக்கும் போது குழந்தை தன் வாயை அகலமாக திறந்து தாயின் மார்பகத்துடன் நன்றாக இணைத்துக்கொள்ளும். |
04:45 | பால் குடித்தப்பின் குழந்தையை அதே நிலையில் ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேல் வைத்திருக்க வேண்டும். |
04:52 | அவ்வாறு செய்வது, தாய்க்கும் குழந்தைக்கு இடையே பிணைப்பை அதிகரிக்கும். |
04:58 | இருப்பினும் தாய் மருந்து ஏதேனும் எடுத்திருந்தால் மருத்தவரிடம் கலந்தாலோசிக்கவும். |
05:05 | சில நேரங்களில் தாய் பிரசவம் முடிந்தவுடன் வேறொரு அறைக்கு மாற வேண்டியிருக்கலாம். |
05:13 | அச்சமயங்களில், வேறொரு அறைக்கு மாறியப்பின்- ஏற்கனவே சொன்னது போல் குழந்தையை தாயின் வயிற்றுக்கு மேல் வைத்து தாய்க்கும் குழந்தைக்கும் இடையே தொடுஉணர்வைஏற்படுத்த வேண்டும். |
05:29 | இப்போது அறுவைசிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளுக்கான breast crawl பற்றி காண்போம்- |
05:35 | அதற்கு: குழந்தையை தாயின் வயிற்றின் மீது வைக்காமல் மார்பின் மீது வைக்க வேண்டும். அப்போது குழந்தையின் கால்கள் தாயின் தலையை நோக்கி இருக்க வேண்டும். |
05:47 | குழந்தையின் மார்பகம் மற்றும் வயிறு தாயின் தோள்களின் மேலும் வாய் மார்பகத்தின் மேலும் இருக்க வேண்டும். |
05:54 | அறுவைசிகிச்சை அறையிலேயே, குழந்தை மார்பகத்தில் பால்குடிக்கும் நேரத்தை முடிந்தஅளவு அனுமதிக்க வேண்டும் |
05:59 | பிரசவத்திற்கு பின் தாய் சேய் தொடு உணர்வு என்பது குழந்தைப் பராமரிப்பில் மற்றவற்றை விட மிகவும் முக்கியம் என்பதை நினைவுக்கொள்க. |
06:09 | breast crawl முடிந்த பிறகுதான், பிரவசத்திற்கு பிறகான குழந்தை பராமரிப்பை ஆரம்பிக்கவேண்டும் என்பதை குறித்துக்கொள்க. |
06:17 | இப்போது, ஒரு பிறந்த குழந்தைக்கான breast crawl ன் முக்கியத்துவத்தைக் காண்போம், |
06:23 | Breast crawl மூலம், colostrum எனப்படும் முதல் பாலை குழந்தை பெற முடிகிறது |
06:29 | இது மஞ்சள் கலந்த அடர்த்தியான பால் ஆகும். |
06:33 | பிரசவத்திற்கு பிறகு, குழந்தை பால் குடிக்கும் ஒவ்வொரு பாலூட்டத்தின் போதும் colostrum ன் அளவு படிப்படியாக அதிகரிக்கிறது. |
06:43 | குழந்தை - முதல் நாளில் 5 மில்லி லிட்டர்களும், |
06:47 | இரண்டாம் நாளில் 10 மில்லி லிட்டர்களும், |
06:50 | மூன்றாம் நாளில் 25மில்லி லிட்டர்களும், |
06:53 | நான்காம் நாளில் 40 மில்லி லிட்டர்களும், ஐந்தாம் நாளில் 55 மில்லி லிட்டர்களும் ஒவ்வொரு பாலூட்டத்திலும் ஒவ்வொரு மார்பகத்திலும் பெறும். |
07:05 | புதிதாக பிறந்த குழந்தைக்கு இது போதுமானது. |
07:09 | அதனால் colostrumஐ தவிர வேறு எதையும் குழந்தைக்கு கொடுக்க கூடாது. |
07:15 | Colostrum என்பது ஒரு குழந்தைக்கு முதல் தடுப்புமருந்தாக கருதப்படுகிறது. இதில் குழந்தையின் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் நோய்த்தொற்றை தடுக்கும் புரதங்கள் உள்ளன. |
07:27 | இது தாயின் பிரசவத்திற்கு பிறகு குழந்தைக்கு கிடைக்கும் முதல் ஆற்றல் மூலமாகும், |
07:33 | Colostrum ஆனது இரத்தத்தில் குறைந்த glucose அளவையும் தடுக்கிறது. |
07:37 | இது ஒரு குழந்தையின் உடலின் மற்ற இயக்கங்களை பராமரிக்க உதவுகிறது. |
07:42 | இது ஆரோக்கியமான மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது |
07:46 | இது குழந்தை தன் முதல் மலத்தை கழிக்க உதவுகிறது. |
07:50 | Breast crawl முறை, குழந்தை தாயுடன் ஒட்டி இருப்பதால் குழந்தையை கதகதப்பாக வைக்கிறது |
07:57 | குழந்தை தாயின் மார்பகத்துடன் எவ்வாறு நன்றாக இணைவது என்பதை தானாகவே கற்கிறது. |
08:04 | தாயின் ஆரோக்கியமான bacteriaஐ Breast crawl குழந்தைக்கு பரப்புகிறது, |
08:08 | இந்த bacteria குழந்தையின் குடலில் நுழைந்து தொற்றுகளைத் தடுக்கிறது. |
08:13 | இறுதியில் இது குழந்தையின் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கிறது. |
08:18 | Breast crawl மேலும் குழந்தைக்கு அன்பையும் பாதுகாப்பையும் கொடுத்து தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பிணைப்பை ஆரம்பிக்கிறது. |
08:29 | breast crawl மூலம் தாய்க்கும் நன்மை இருக்கிறது |
08:34 | குழந்தையின் காலின் நகர்வுகள் தாயின் கருப்பைக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. இந்த அழுத்தம், கருப்பை சுருக்கத்திற்கும் நஞ்சுக்கொடி நீக்கத்திற்கும் உதவுகிறது |
08:45 | பாலுட்டத்தை ஆரம்பிப்பது தாயின் உடலில் oxytocin ஐ அதிகரிக்கிறது |
08:51 | oxytocin அதிகரிப்பது நஞ்சுக்கொடி நீக்கத்திற்கும் உதவுகிறது. |
08:56 | எனவே, breast crawl ஆனது ரத்தப்போக்கை குறைத்து தாய்க்கு anaemia ஐ தடுக்கிறது. |
09:03 | Anaemia என்பது ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் நிலையாகும் |
09:08 | இது தாய்க்கு சோர்வையும் பலவீனத்தையும் கொடுக்கும். |
09:13 | எனவே, breast crawl ஆனது தாய்க்கும் குழந்தைக்கும் மிகவும் பயன்தரும் இயற்கையான முறையாகும், |
09:21 | இத்துடன் breast crawl மீதான இந்த டுடோரியல் முடிகிறது. |
09:26 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, breast crawl என்றால் என்ன |
09:30 | breast crawl க்கான வழிமுறை மற்றும் breast crawl ன் முக்கியத்துவம் |
09:37 | இந்த டுடோரியல், Spoken Tutorial Project, IIT Bombayஆல் பங்களிக்கப்பட்டது |
09:43 | Spoken Tutorial Project க்கு நிதியுதவி, இந்திய அரசாங்கத்தின் NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
09:49 | இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் கிடைக்கும். |
09:54 | இந்த tutorial ன் ஒருபகுதி நிதி, WHEELS Global Foundationன் பெருந்தன்மையான பங்களிப்பாகும். |
10:01 | இந்த tutorial, Maa aur Shishu Poshan projectன் ஒரு பகுதி ஆகும். இந்த tutorialக்கான domain reviewer கள், Dr. Rupal Dalal, MD Pediatrics. Dr. Taru Jindal, Ms obstetricks மற்றும் Gynaecology. |
10:12 | இந்த tutorial, உணவியலாளர் Rajani Sawant மற்றும் animator Arthi anbalagan ஆல் உருவாக்கப்பட்டது.
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா, நன்றி. |