Difference between revisions of "Java/C3/Exception-Handling/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 |<center>Time</center> |<center>Narration</center> |- | 00:01 | ''' Exception Handling''' குறித்த Spoken Tutorial க்கு நல்வரவ...")
 
 
Line 412: Line 412:
 
|-
 
|-
 
|10:20
 
|10:20
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது ...
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா,குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .
 +
  ...
 
நன்றி.
 
நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 16:26, 11 December 2017

Time
Narration
00:01 Exception Handling குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த tutorialஇல் நாம் கற்கப் போவது: Exception  ; Checked மற்றும் Unchecked Exceptions  ; try-catch block மற்றும் finally block களைக் கொண்டு exceptionகளைக் கையாள்வது
00:20 இதற்கு நாம் பயன்படுத்துவது::Ubuntu 14.04 JDK 1 .7 மற்றும் Eclipse 4.3.1
00:32 இந்த tutorialஐ தொடர Java மற்றும் Eclipse IDE தெரிந்திருக்க வேண்டும்
00:39 தெரியாவிட்டால், அதற்கான Java tutorials ஐ, கீழே காணும் தொடுப்பின் மூலம் அறியலாம்.
00:45 ஒரு programஐ செயல்படுத்தும் போது எற்படும் எதிர்பராத நிகழ்வு, exception ஆகும்.
00:52 இது programஇன் இயல்பான ஓட்டத்தில் குறுக்கிடுவதுடன், அசாதாரண terminationஐ விளைவிக்கிறது.
01:00 exceptionகள் ஏற்படுவதன் அடிப்படையில், unchecked exceptions மற்றும் checked exceptions என வகைப்படுத்தப்படுகின்றன.
01:08 இப்போது eclipseஐ திறந்து, ExceptionDemo எனும் புதிய projectஐ உருவாக்குவோம்.
01:16 இந்த projectஇனுள், exception handlingஐ விளக்குவதற்கு தேவையான classகளை உருவாக்குவோம்.
01:24 Marks எனும் புதிய classஐ உருவாக்குவோம்
01:28 இப்போது Marks classஐ குறிப்பதற்கு, பின்வரும் codeஇனை type செய்யவும்
01:34 இந்த program, marks arrayஇல் store செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களின் மதிப்பெண்களை print செய்யும்
01:41 இந்த programஐ run செய்து, outputஐ சரி பார்க்கலாம்.
01:45 arrayஇல் உள்ள மதிப்புகள் அச்சிடப்பட்டு வருகின்றன என்பதை நாம் காணலாம்.
01:50 இல்லாத ஒரு ' array element 'ஐ அணுக முயற்சித்தால், என்ன நடக்கும் என்று பார்க்கலாம்
01:57 இப்போது பின்வரும் codeஇனை type செய்யவும்
02:00 நமது arrayஇல் 5 elementகளே உள்ளன என்பதை அறிவோம்..
02:04 ஆனால் இந்த statement இல், நாம் index 50 எனும் இல்லாத elementஐ அணுக முயற்சிக்கிறோம்.
02:12 இப்போது இந்த programஐ run செய்யலாம்
02:15 வரி எண் 7இல் “ArrayIndexOutOfBoundsException“ என பிழை காண்பிக்கப்படுகிறது.
02:25 இந்த தகவல் exceptionஇன் விவரங்களான, exceptionஇன் வகைப்பாடு, அது எங்கே ஏற்பட்டது மேலும் இதர தகவல்களையும் குறிப்பிடுகின்றது
02:35 இந்த பிழைக்கு பிறகு program நிறுத்தப்படுவதால், print statement செயல்படுத்தப்படவில்லை என்பதை கவனிக்கவும்
02:42 இது Unchecked exceptionக்கான உதாரணமாகும்.
02:46 Unchecked exceptions இயக்கப்படும் போது, சரி பார்க்கப்படுவதால், அவை Runtime exception என்றும் அழைக்கப்படுகின்றன
02:54 ஒரு எண்ணை பூஜியத்தால் வகுப்பது, இல்லாத array elementஐ அணுகுவது போன்ற programming bugs மற்றும் logical errorகளை அவை கையாள்கின்றன.
03:07 இப்போது try catch block மூலம் exception ஐக் கையாள்வது பற்றி கற்போம்.
03:13 try blockஇனுள் உள்ள codeஇன் இந்த பகுதி, ஒரு exception ஐ உருவாக்க முடியும்
03:19 இதற்கு தொடர்புடைய catch block, exceptionஇன் விவரங்களை .'object eஇல் பெற முடியும்.
03:26 catch blockஇனுள், பிழை தகவல்களைக் காண்பிப்பதற்கு அல்லது பிழையிலிருந்து மீள்வதற்கான codeஇனை எழுதலாம்
03:34 இப்போது eclipseக்கு மாறுவோம்
03:37 முதலில் இதுபோன்ற exceptionக்கு காரணமான code அருகில் ஒரு try blockஐ சேர்க்கலாம்.
03:44 இப்போது நாம் தொடர்புடைய ஒரு catch blockஐ சேர்க்க வேண்டும்
03:48 இப்போது பின்வரும் codeஇனை type செய்யவும்
03:51 இங்கே “Array Overflow Exception occurred” எனும் ஒரு தனிப்பயனாக்க செய்தியை print செய்கிறோம்
03:57 அடைப்புக்குறிகளுக்குள், ArrayIndexOutOfBoundsExceptionக்கான உதாரணத்தை உருவாக்கியுள்ளோம்
04:05 ArrayIndexOutOfBoundsException வகைப்படும் exceptionகளை, இந்த block கைப்பற்ற முடியும்.
04:11 இப்போது programஐ run செய்வோம்.
04:14 பிழை தகவல் print ஆகியுள்ளதைக் காணலாம்
04:18 இந்த முறை, marks array print ஆகுவதும், செயல்படுத்தப்படுகின்றது
04:24 இவ்வாறு exceptionகளைக் கையாளலாம்.
04:27 அடுத்து பல catch blockகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்
04:32 பல்வேறு வகையான exceptionகள், ஒரு block மூலம் எழுப்பப்படும் போது அவற்றைப் பயன்படுத்தலாம்.
04:38 try blockஇனுள் பின்வரும் codeஇனை type செய்யவும்.
04:42 codeஇன் இந்த வரி, ஒரு array elementஐ பூஜ்யத்தால், அதாவது aஇன் மதிப்பால் வகுக்கிறது
04:49 எனவே முதலில் ஒரு ArithmeticException எழுப்பப்படுகிறது.
04:53 இப்போது ArithmeticExceptionஐக் கையாள இன்னொரு catch blockஐ இணைப்போம்
04:58 எனவே தற்போதுள்ள catch blockற்கு அடுத்து பின்வரும் codeஇனை type செய்யவும்.
05:03 மீண்டும் programஐ run செய்யலாம்
05:06 இந்த முறை, "Arithmetic Exception occurred" எனும் பிழை முதலில் கண்டறியப்பட்டுள்ளதால், தகவல் print ஆகியுள்ளது.
05:13 try catch block இன் வெளியே உள்ள மீதமுள்ள codeஇன் பகுதி செயல்படுத்தப்படுகின்றது.
05:19 அடுத்து checked exceptionsஐ பற்றி பார்ப்போம்
05:23 Compile timeஇன் போது Checked exceptions சரி பார்க்கப்படுகின்றன.
05:27 எனவே programஐ run செய்வதற்கு முன்பு, அவற்றைக் கையாள வேண்டும்
05:31 எடுத்துக்காட்டாக: இல்லாத ஒரு fileஐ அணுகுவது அல்லது network மெதுவாக இயங்கும் போது, network systemஐ அணுகுவது.
05:41 இப்போது Eclipseக்கு மாறி, MarksFile எனும் புதிய classஐ உருவாக்குவோம்
05:47 main methodஐ சேர்ப்போம்.
05:50 இப்போது கணினியில் உள்ள ஒரு fileஐ படிக்க வேண்டும்.
05:54 எனவே பின்வரும் codeஇனை type செய்யவும்.
05:57 இங்கு FileReader object fr , null என initialize செய்யப்பட்டுள்ளது
06:03 FileReader objectஐ பயன்படுத்தி ஒரு fileஐ அணுகவோ, படிக்கவோ முடியும்
06:08 Eclipse ஒரு பிழையை காண்பிக்கும்.
06:11 பிழையை திருத்த, அதை click செய்து, import FileReader java dot io என்பதை double click செய்யவும்.
06:19 FileReader class, java dot io packageஇலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது
06:25 நாம் package மற்றும் அதன் பயன் பற்றி விவரமாக, பிந்தைய tutorialஇல் கற்கலாம்.
06:31 Home folderஇல் உள்ள Marks எனும் fileஐ அணுகுவதற்கு frஐ அனுமதிக்க, பின்வரும் codeஇனை type செய்யவும்
06:40 இங்கு காட்டப்பட்டுள்ள தடம், கணினியின் home folderக்கு என மாற்றம் செய்யப்பட வேண்டும்.
06:46 இப்போது ஒரு பிழை தோன்றுகிறது. Codeஇன் இந்த வரி FileNotFoundExceptionஐ உருவாக்கக் கூடும் என்பதை அது குறிக்கிறது
06:55 Errorஇல் click செய்து , Surround with try/catch என்பதை double click செய்யவும்.
07:00 Eclipse தானாகவே try catch blockஐ புகுத்தி, பிழையை திருத்துவதை நாம் காணலாம்.
07:08 எனவே இது checked exception என்பதை புரிந்து கொள்கிறோம்.
07:12 அடுத்து finally blockஐ எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்
07:16 பின்வரும் codeஇனை type செய்யவும்.
07:18 finally block பொதுவாக try-catch blockஐ பின்பற்றும்.
07:22 இந்த blockஇல் உள்ள code, exception ஏற்பட்டாலும் இல்லாவிடினும், செயல்படுத்தப்படுகிறது. இது print statementஐக் கொண்டுள்ளது.
07:32 இப்போது finally blockஇனுள் உள்ள file குறிப்பினை மூடலாம்.
07:37 எனவே type செய்க, fr dot close
07:40 இப்போது இது IOException ஐ எழுப்பலாம் என்பதை Eclipse குறிக்கிறது
07:45 எனவே errorஇல் click செய்து Surround with try/catch என்பதை double click செய்யவும்.
07:51 இப்போது programஐ run செய்யலாம்.
07:54 FileNotFoundException எனும் தகவல் print ஆகியுள்ளதைப் பார்க்கலாம்.
07:59 ஏனெனில் Marks எனும் பெயரில் நமது home folderஇல் file ஏதும் இல்லை
08:04 fr இன்னும் பூஜ்ய மதிப்பையே குறிப்பதால் நாம் ஒரு NullPointerException ஐக் கூட காணலாம்
08:12 ஆனால் finally blockஇனுள் உள்ள print statement செயல்படுத்தப்படுவதை நாம் காணலாம்.
08:18 இப்போது Marks எனும் text fileஐ home folderஇல் உருவாக்கலாம்
08:23 நீங்கள் windows பயன்படுத்தினால், உங்கள் local driveஇல் text fileஐ உருவாக்கி, அதன் தடத்தைக் குறிப்பிடுங்கள்
08:29 எடுத்துக்கட்டாக இவ்வாறு குறிப்பிடலாம் D:\\Marks.txt
08:37 இப்போது programஐ மீண்டும் run செய்யலாம்.
08:40 Marks file உருவான பின், exceptionகள் ஏதும் இல்லையென்பதை நாம் சரி பார்த்துக் கொள்ளலாம்
08:46 மேலும் “Inside finally block” print ஆகியுள்ளது.
08:50 fr எனும் FileReader Object மூடப்படுகின்ற cleanup operationஉம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
08:58 இதன் மூலம் இந்த tutorialஇன் முடிவுக்கு வருகிறோம்.
09:02 சுருக்கமாகப் பார்ப்போம்.
09:04 இந்த tutorialஇல் நாம் கற்றது: Exception  ; Checked மற்றும் Unchecked Exceptions  ; try-catch block மற்றும் finally block களைக் கொண்டு exceptionகளைக் கையாள்வது
09:17 ஒரு பயிற்சியாக, NullPointerException எனும் மற்றொரு Runtime Exceptionஐக் கற்கவும்
09:24 இந்த tutorialஇன் Assignment தொடுப்பில் கொடுக்கப்பட்டுள்ள Demo.java என பெயரிட்ட Java programஐப் பார்க்கவும்
09:31 இந்த codeஐ run செய்யும் போது, ஒரு exception எழுப்பப்படும்.
09:35 Exceptionற்கு காரணமான codeஐக் கண்டறியவும்.
09:40 try-catch block பயன்படுத்தி அதை சரி செய்யவும்.
09:43 கீழே காணும் தொடுப்பின் மூலம், Spoken Tutorial திட்டம் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். அதை பதிவிறக்கம் செய்து காணுங்கள்.
09:54 Spoken Tutorial திட்டக்குழு, spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது; இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் அறிய mail எழுதவும்...
10:09 இந்திய அரசின் MHRD இன் NMEICT, Spoken Tutorial திட்டத்திற்கு நிதியுதவி தருகிறது. மேலும் இந்த திட்டம் பற்றி அறிய, கீழே உள்ள தொடுப்பினைக் காணவும்.
10:20 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா,குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .
...

நன்றி.

Contributors and Content Editors

Aishwarya raman, Venuspriya