Difference between revisions of "KiCad/C2/Mapping-components-in-KiCad/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 329: Line 329:
 
|-  
 
|-  
 
|07:41  
 
|07:41  
| குரல் கொடுத்தது '''IIT Bombay'''இல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .  
+
| குரல் கொடுத்தது '''IIT Bombay'''இல் இருந்து சண்முகப் பிரியா, நன்றி.
 
+
..... நன்றி. x
+
  
 
|}
 
|}

Latest revision as of 21:04, 8 December 2017

Time Narration
00:01 வணக்கம்,
00:03 KiCadல் footprintகளுடன் componentகளை map செய்வது குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது-
00:10 தொடர்புடைய footprintகளுடன் componentகளை map செய்வது.
00:13 இந்த டுடோரியலுக்கு முன் நிபந்தனையாக, அடிப்படை மின்னனு circuit தெரிந்து இருக்க வேண்டும்.
00:18 Userக்கு, KiCadல், circuit schematicஐ வடிவமைக்கவும்,
00:23 Electric rule check மற்றும் netlist generationஉம் செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.
00:26 அதற்கான டுடோரியல்களுக்கு, இந்த வலைத்தளத்தை பார்க்கவும்: spoken hyphen tutorial.org
00:33 இந்த டுடோரியலுக்கு நாம் பயன்படுத்துவது, இயங்கு தளமாக, Ubuntu 12.04 உடன்
00:37 KiCad பதிப்பு 2011 hyphen 05 hyphen 25.
00:47 KiCadஐ தொடங்க,
00:49 Ubuntu desktop திரையின், மேல் இடது மூலைக்கு செல்லவும்.
00:52 முதல் icon, அதாவது Dash homeஐ க்ளிக் செய்யவும்.
00:56 Search barல், டைப் செய்க: 'KiCad', பின் Enterஐ அழுத்தவும்.
01:04 இது, KiCad main windowஐ திறக்கும்.
01:07 'EEschema'ஐ திறக்க, மேல் panelக்கு செல்லவும். EEschema tabஐ க்ளிக் செய்யவும்.
01:17 Schematicஐ கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறும் ஒரு Info dialog-box தோன்றும்.
01:21 OKஐ க்ளிக் செய்யவும்.
01:24 முன்னர் உருவாக்கப்பட்ட, Astable multivibratorன் circuit schematicஐ நான் பயன்படுத்துகிறேன்.
01:30 இதைச் செய்ய- File menuவிற்கு சென்று, Openஐ க்ளிக் செய்கிறேன்.
01:37 இந்த windowஐ visible areaவிற்கு கொண்டு வருகிறேன்.
01:44 File சேமிக்கப்பட்டிருக்கும் folderஐ தேர்வு செய்யவும்.
01:50 பின், Openஐ க்ளிக் செய்யவும்.
01:55 இது circuit schematicஐ திறக்கும்.
01:57 Mouseன் scroll பட்டனை பயன்படுத்தி, அதை பெரிதாக்குகிறேன்.
02:02 இந்த circuitக்கு, netlistஐ நாம் ஏற்கெனவே உருவாக்கிவிட்டோம்.
02:07 இப்போது, schematicல் பயன்படுத்தப்பட்ட componentகளை map செய்யும் செயல்முறையை, footprintகளுடன் காண்போம்.
02:14 Footprint என்பது, Printed Circuit Boardல் வைக்கப்பட்டுள்ள componentன் உண்மையான layout ஆகும்.
02:21 Componentகளை map செய்யத் தொடங்க-
02:24 'EESchema' windowவின் மேல் panelக்கு செல்லவும்.
02:28 Run Cvpcb பட்டனை க்ளிக் செய்யவும்.
02:33 இது Cvpcb windowஐ திறக்கும்.
02:37 Component Library Error என்று தலைப்பிடப்பட்ட, dialog-boxஐயும் அது திறக்கும்.
02:42 அதை மூட, OK பட்டனை க்ளிக் செய்யவும்.
02:47 அது 'project1.net' fileஐ திறப்பதை கவனிக்கவும். நாம் Netlist generation tutorialலில் இந்த fileஐ உருவாக்கியிருப்பதை நினைவு கூறவும்.
02:58 'Cvpcb' window, இரண்டு panelகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.
03:03 இடது panelன் முதல் coloumn, serial எண் ஆகும்.
03:07 இரண்டாவது coloumn, schematicல் பயன்படுத்தப்பட்ட componentகள் பட்டியலின், reference idஐ காட்டுகிறது.
03:14 மூன்றாவது coloumn, தொடர்புடைய componentகளின் மதிப்புகளை காட்டுகிறது.
03:19 வலது panel, கிடைக்கின்ற footprintகளின் பட்டியலை தருகிறது.
03:25 இப்போது, componentகளை, அதனுடன் தொடர்புடைய footprintகளுடன் map செய்வோம்.
03:30 தேர்ந்தெடுக்கப்பட்ட componentக்கு கிடைக்கும் footprintகளின் பட்டியலை நாம் காணலாம். அதாவது, 'Cvpcb' windowவின் வலது பகுதியில் 'C1'.
03:41 தேர்ந்தெடுக்கப்பட்ட componentக்கு தொடர்புடைய footprintஐ இப்போது நாம் காண்போம்.
03:45 'Cvpcb' windowவின் மேல் panelலில், View selected footprintஐ க்ளிக் செய்யவும்.
03:53 தேர்ந்தெடுக்கப்பட்ட footptrintன் imageஐ காட்டும், footprint windowஐ இது திறக்கும்.
04:02 இவற்றை க்ளிக் செய்வதனால், வெவ்வேறு footprintகளின் படங்களை நாம் காணலாம்.
04:12 இப்போது, footprint windowஐ நான் மூடுகிறேன்.
04:15 முதல் component, 'C1'க்கு, வலது panelல் இருந்து, 'C1' footprintஐ நாம் தேர்வு செய்வோம்.
04:22 முதல் componentக்கு, 'C1' footprintஐ ஒதுக்க, footprint மீது டபுள் க்ளிக் செய்யவும்.
04:27 'C1' footprint, பட்டியலின் முதல் componentக்கு ஒதுக்கப்படுவதை நீங்கள் காணலாம்.
04:34 அதே போல், இரண்டாவது component 'C2'க்கு, footprint 'C1'ஐ டபுள் க்ளிக் செய்து அதை தேர்ந்தெடுப்போம்.
04:43 அடுத்த component 'D1'க்கு, LED hyphen 3MMஐ தேர்ந்தெடுக்கிறோம்.
04:50 Connector 'P1'க்கு, வலது panelலில் இருந்து, SIL hyphen 2ஐ தேர்ந்தெடுக்கிறோம்.
05:02 அதை தேர்ந்தெடுக்க, வலது panelலில், கீழ் இறங்கி வருகிறேன்.
05:09 'R1'க்கு, 'R3'ஐ தேர்ந்தெடுக்கிறோம்.
05:13 'R2'க்கு, 'R3'ஐ தேர்ந்தெடுக்கிறோம்.
05:17 'R3'க்கு, 'R3'ஐ தேர்ந்தெடுக்கிறோம்.
05:22 'UI'க்கு, அதாவது, 'LM555'க்கு, நிலையான எட்டு pin IC footprintஆன, DIP hyphen 8 underscore 300 underscore ELLஐ தேர்வு செய்கிறோம்.
05:38 இப்போது, 'Cvpcb' windowவின் மேல் panelலில் இருக்கும், Save netlist and footprint files பட்டனை க்ளிக் செய்து, netlistஐ சேமிப்போம்.
05:48 இது Save Net and Component List windowஐ திறக்கும்.
05:54 சிறந்த பார்வைக்கு, Windowஐ resize செய்கிறேன்.
06:00 இந்த fileஐ சேமிக்க, Saveஐ க்ளிக் செய்யவும். இது fileஐ சேமித்து, 'Cvpcb' windowவையும் தானாகவே மூடும்.
06:13 இப்போது, footprintகளின் தகவல்களுடன் netlist, update செய்யப்படுகிறது.
06:18 இங்கு, componentகளை map செய்யும் செயல்முறை முடிவடைகிறது.
06:21 'EEschema' windowக்கு செல்லவும். இப்போது, windowஐ மூடவும்.
06:29 KiCad main windowவையும் மூடவும்.
06:35 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
06:38 இந்த டுடோரியலில் நாம் கற்றது
06:40 'Cvpcb' windowஐ பயன்படுத்தி, தொடர்புடைய footprintகளுடன் componentகளை map செய்வது.
06:47 இந்த இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
06:51 அது ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
06:56 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில், அதை தரவிறக்கி காணவும்.
07:02 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:
07:04 ஸ்போகன் டுடொரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:07 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
07:11 மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்: contact at spoken hyphen tutorial dot org.
07:19 Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
07:23 இதற்து ஆதரவு இந்திய அரசாங்கத்தின் National Mission on Education through ICT, MHRD மூலம் கிடைக்கிறது
07:29 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:
07:32 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro.
07:38 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.
07:41 குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா, நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Venuspriya