Difference between revisions of "Digital-India/C2/Use-SBI-pay-app/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | வணக்கம். SBI Pay appஐ பயன்படுத்துவது குறித்த ஸ்...") |
Nancyvarkey (Talk | contribs) m (Nancyvarkey moved page Showcase-Tutorials/C2/Use-SBI-pay-app/Tamil to Digital-India/C2/Use-SBI-pay-app/Tamil without leaving a redirect) |
(No difference)
|
Latest revision as of 11:21, 12 July 2017
Time | Narration |
00:01 | வணக்கம். SBI Pay appஐ பயன்படுத்துவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது- எவ்வாறு பணம் அனுப்புவது மற்றும் |
00:12 | SBI Pay app மூலம் நம் அனைத்து பரிவர்த்தனைகளையும் எவ்வாறு கண்காணிப்பது |
00:18 | இந்த இணையத்தளத்தில் உள்ள முன் டுடோரியலில் SBI Pay app ல் எவ்வாறு பதிவு செய்வது என கற்றோம் |
00:27 | அந்த டுடோரியலை பின்பற்றி உங்கள் phoneல் SBI Pay appஐ நிறுவியுள்ளீர்களா என்பதை உறுதிபடுத்தவும் |
00:35 | அதை நிறுவியபின், நிரந்தர பதிவிற்கான அனைத்து செயல்முறையையும் முடித்துள்ளீர்களா என்பதையும் உறுதிப்படுத்தவும் |
00:41 | அதாவது SBI Pay appன் password மற்றும் MPIN |
00:47 | இப்போது, SBI Pay appஐ எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம் |
00:52 | உங்கள் Android smartphone ல் இங்கு காட்டப்படுவது போல SBI Pay என தேடவும் |
00:59 | இங்கு செய்து காட்டுவது போல இந்தiconஐ தேர்ந்தெடுத்து இந்த appஐ திறக்கலாம் |
01:05 | பதிவு செய்யும் போது நீங்கள் உருவாக்கிய password ஐ இங்கு கொடுக்கவும் |
01:11 | பின் Submit buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
01:15 | இந்த app, main menu ஆன அடுத்த திரைக்கு உங்களை கொண்டு செல்லும் |
01:21 | இப்போது SBI Pay app மூலம் பணத்தை எவ்வாறு அனுப்பது என கற்போம். |
01:27 | Pay தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
01:30 | appல் இந்த பக்கத்திற்கு வருவீர்கள். |
01:33 | இங்கு நீங்கள் எந்த வங்கி கணக்கில் இருந்து செலுத்த விரும்புகிறீர்களோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும். |
01:39 | நீங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள வங்கி கணக்கு இங்கு பட்டியலில் காட்டப்படும் |
01:44 | அந்த கணக்கை தேர்ந்தெடுக்கவும் |
01:47 | பின் Payee’s Virtual Addressல் தேவையானவற்றை கொடுக்கவும். |
01:53 | குறிப்பு- நீங்கள் பணம் அனுப்பும் நபர் அவரின் phone ல் ஏற்கனவே SBI Payக்காக பதிவு செய்திருக்க வேண்டும் |
01:59 | உடனே இந்த app தகவல்களை பரிசோதிக்கிறது. |
02:03 | தானாகவே அந்த நபரின் பெயரையும் காட்டுகிறது. |
02:07 | Remarks fieldல் உங்களுக்கு தேவையான தகவலை எழுதலாம். அது எதிர்கால குறிப்பாக பயன்படும் |
02:14 | பின் Transaction Amount fieldல் தொகையை கொடுக்கவும். பிறகு Pay buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
02:22 | MPINஐ கொடுக்க சொல்லி இந்த app கேட்கிறது. |
02:26 | இங்கு MPIN ஐ கொடுக்கவும். |
02:30 | பின், Submit Buttonஐ தேர்ந்தெடுக்கவும் |
02:32 | buffering குறி தெரிந்தால் சற்று காத்திருக்கவும். |
02:36 | இப்போது, திரையில் வெற்றி செய்தியை பெறுவீர்கள். |
02:41 | உங்கள் வங்கியில் இருந்து பரிவர்த்தனை தகவலுடன் ஒரு SMSஐயும் பெறுவீர்கள். |
02:48 | உங்கள் பரிவர்த்தனை முடிந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது. |
02:52 | பணம் பெறுபவரும் நீங்கள் அனுப்பிய பணத்தை பெற்றிருப்பார். |
02:56 | இவ்வாறு SBI Pay app மூலம் நீங்கள் பணத்தை அனுப்பலாம். |
03:01 | main menuக்கு திரும்ப வருவோம் |
03:04 | உங்கள் அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க Main menuல் My UPI Transactions தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
03:13 | இதுதான் நீங்கள் இப்போது செய்த பரிவர்த்தனை. |
03:18 | அதேபோல, பணம் பெற்றவரும் அவரின் வங்கியிலிருந்து இதுபோன்ற ஒரு SMSஐ பெறுவார். |
03:25 | பணம் பெற்றவரும் Main menuல் My UPI Transactions தேர்வை பயன்படுத்தி அதை சோதிக்கலாம். |
03:33 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
03:39 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது - பணம் அனுப்புதல் மற்றும் SBI Pay appமூலம் அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணித்தல் |
03:50 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு பல்வேறு தகவல் மற்றும் பொது விழிப்புணர்வு தலைப்புகளில் ஆடியோ வீடியோ டுடோரியல்களை உருவாக்குகிறது. செய்முறை வகுப்புகளும் நடத்துகிறது. |
04:03 | அனைத்து தலைப்புகளையும் கொண்ட பட்டியலைக் காண http://spoken-tutorial.orgக்கு செல்லவும் |
04:11 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் செய்யவும். |
04:21 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |