Difference between revisions of "Scilab/C2/Scripts-and-Functions/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 2: Line 2:
  
 
|'''Time'''
 
|'''Time'''
 
 
|'''Narration'''
 
|'''Narration'''
 
 
 
|-
 
|-
 
| 00:01
 
| 00:01
Line 337: Line 334:
 
| 12:31
 
| 12:31
 
|ஆகவே Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள்.
 
|ஆகவே Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள்.
 
  
 
|-
 
|-

Latest revision as of 11:56, 7 April 2017

Time Narration
00:01 Scriptகள் மற்றும் Functionகளுடன் Scilab குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:06 Scilab இல் file formatகள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்.
00:12 பல command களை இயக்க வேண்டி இருக்கும் போது இந்த statement களை ஒரு file ஆக Scilab editor இல் எழுதுவது சுபலபமாக இருக்கும்.
00:21 இவை SCRIPT fileகள் எனப்படும்.
00:24 அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் பைலில் எழுதப்பட்ட command களை இயக்க exec function ஐ அதன் பின்னால் script fileஇன் பெயரை சேர்த்து பயன்படுத்தலாம்.
00:34 இந்த file களின் extension அவற்றின் உள்ளடக்கத்தை பொருத்து பொதுவாக .sce அல்லது .sci
00:42 .sci extension உள்ள File களில் உள்ளது Scilab function and/or..... user defined functionகள்
00:51 இந்த பைல்களை இயக்குவது functionகளை Scilab environment இல் load செய்கிறது; ஆனால் செயலாக்குவதில்லை.
01:00 மாறாக .sce extension உள்ள File களில் Scilab function மற்றும் User defined functionகள் ஆகியன இருக்கலாம்
01:08 extension ஐ .sce மற்றும் .sci எனப்பெயரிடுவது விதி இல்லை; இது scilab community கொண்டுள்ள பாரம்பரியம்.
01:21 Scilab Console window ஐ கணினியில் திறப்போம்.
01:27 command prompt இல் pwd command ஐ டைப் செய்து நடப்பு directory ஐ அடையாளம் காண்போம்.
01:35 scilab console window வின் Task bar க்குச் சென்று editor option மீது சொடுக்கி scilab editor ஐ திறக்கவும்.
01:49 ஒரு file இல் நான் ஏற்கெனெவே command களை type செய்து helloworld.sce என சேமித்துள்ளேன். ஆகவே அந்த file ஐ Open a file shortcut icon மூலம் திறப்பேன்.
02:03 helloworld.sce file ஐ தேர்ந்து சொடுக்கி திறக்கிறேன்.
02:10 புதிய பைலில் நீங்கள் command களை type செய்து நடப்பு directory இல் helloworld.sce என File Menu மூலம் சேமிக்கலாம்.
02:20 scilab editor menu bar இல் Execute button க்கு சென்று Scilab option இல் Load ஐ தேர்க.
02:29 இது file ஐscilab console இல் ஏற்றும்.
02:34 console இல் பைலை ஏற்றியதும் script நீங்கள் பார்ப்பது போல வெளியீட்டைத் தருகிறது:
02:43 அதில் commandகள் மற்றும் அவற்றுக்கான வெளியீட்டைக் காணலாம்
02:49 இப்போது a இன் மதிப்பை 1 ஆக மாற்றலாம்.
02:55 editor இல் File menu க்குச்சென்று, Save ஐ சொடுக்கவும்
03:02 மேலும் script file க்கான path ஐ கொடுத்து நாம் script ஐ நேரடியாக scilab interpreter இல் exec command மூலம் இயக்கலாம்:
03:12 exec அடைப்புகளில் இரட்டை மேற்கோள்களில் helloworld.sce அதுவே file பெயர் ... Enter ஐ அழுத்தவும்
03:31 exec function மூலம் கிடைத்த வெளியீட்டைப் போலவே script file மூலமும் கிடைக்கிறது.
03:37 இப்போது Functionகள் குறித்து பார்க்கலாம்:
03.39 function definition துவங்குவது keyword ஆன function உடன்; முடிவது keyword ஆன endfunction உடன்.
03:46 scilab editor ஐ பயன்படுத்தி function file ஐ function.sci இல் சேமித்துள்ளேன்.
03:57 அதை திறக்கிறேன்
04:03 பார்ப்பது போல function இங்கே define ஆகியுள்ளது.
04:08 இவற்றில் degrees வெளியீட்டு parameter மற்றும் radians ... உள்ளீட்டு parameter
04:21 function இன் பெயர் radians2degrees.
04:26 இந்த function ஐ Scilab இல் Execute menu option மூலம் load செய்கிறேன்
04:40 function இப்போது scilab console இல் load ஆகியுள்ளது
04:44 இதை exec command மூலமும் load செய்யலாம்
04:47 function load ஆகிவிட்டதானால் அதை எப்போது வேண்டுமானாலும் ஏனைய Scilab function போல குறிப்பிட்ட argumentகளை function க்கு பாஸ் செய்து அழைக்கலாம்.
04:56 percent குறியை கொஞ்சம் கவனித்து அது ஏன் இருக்கிறது என நினைவு கூருங்கள்.
05:02 இப்போது  %pi/2 ன் radians2degrees மற்றும் (%pi/4) ன் radians2degrees க்கு மதிப்பை கண்டுபிடிக்கலாம்.
05:17 radians2degrees percent pi/2 .... மற்றும் radians2degrees percent pi by 4 (%pi/4)
05:28 இப்போது நாம் காண்பது ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீடு மற்றும் வெளியீட்டு... argumentகளுடன் கூடிய ஒரு function.
05:33 இந்த function polar coordinateகளை உள்ளீட்டு argument ஆக பெற்று rectangular coordinateகளை வெளியீட்டு argumentகளாக தருகிறது
05:44 நான் ஏற்கெனெவே type செய்துள்ள file ஐ திறக்கிறேன்
05:51 function polar2rect க்கு இங்கே உள்ள x மற்றும் y ஆகியன வெளியீட்டு parameterகள்; மற்றும் r உம் theta உம் உள்ளீட்டு parameterகள்
06:06 இந்த function ஐ scilab இல் exec option மூலம் லோட் செய்யலாம்.
06:21 function load ஆன பின் அதை call செய்ய வேண்டும். இந்த function க்கு இரண்டு உள்ளீட்டு argumentகள் மற்றும் இரண்டு வெளியீட்டு argumentகள் தேவை
06:31 ஆகவே r = 2;
06:37 theta = 45
06:44 இப்போது நாம் சொல்வது x1 comma y1 வெளியீட்டு parameterகள்... equal to function பெயர் polar2rect அடைப்புகளில் r comma theta. Enter ஐ அழுத்தவும்
07:25 x1 மற்றும் y1 இன் மதிப்புகளைக் காணலாம்.
07:29 Scilab இல் ஒரு சுவாரசியமான அம்சம் நீங்கள் எத்தனை function களை வேண்டுமானாலும் ஒரே .sci file இல் அழைக்கலாம்.
07:38 நாம் நினைவில் இருத்த வேண்டியது முன்னிருப்பாக function இல் define செய்த variableகள் அனைத்தும் local லே, இந்த குறிப்பிட்ட function இல் உள்ள variable களின் செல்லுபடி endfunction என்னும் function definition keyword உடன் முடிந்துவிடும்.
07:55 இந்த அம்சத்தின் சாதகம் என்னவென்றால் ஒரே variable பெயரை வெவ்வேறு function இல் பயன்படுத்தலாம்.
08:05 global option ஐ பயன்படுத்தினால் ஒழிய இந்த variableகள் குழப்பத்தை விளைவிக்க மாட்டா.
08:10 global variableகள் குறித்து மேலும் அறிய help global என type செய்க.
08:18 எந்த ஒரு variable ஐயும் function இனுள் கண்காணிக்க disp தேவையாகும்.
08:26 ஒரு function file இனுள், ஒரு semicolon ( ; ) ஐ statement இன் கடைசியில் இடுவதன் விளைவை நீங்களே சோதிக்கலாம்.
08:34 மேலும் இதை disp statementகளுக்கு சோதிக்கலாம்
08:38 Inline Functionகள்:
08:39 Functionகள் என்பன code ன் பகுதிகள்; அவற்றுக்கு நன்கு define செய்த உள்ளீடு மற்றும் வெளியீடு மற்றும் local variableகள் உண்டு.
08:46 ஒரு function ஐ define செய்ய சுலபமான வழி command `deff' ஐ பயன்படுத்துவது
08:53 Scilab , in-line functionகளை உருவாக்குவதை அனுமதிக்கிறது. அவை function இன் body சிறியதாக இருக்கும் போது மிகவும் பயனாகும்
09:02 இதை function deff() இன் உதவியுடன் செய்யலாம்
09:07 இது இரண்டு string parameterகளை எடுத்துக்கொள்ளும்.
09:10 முதல் string define செய்வது function க்கான இடைமுகம்; இரண்டாம் string define செய்வது function இன் statementகள்.
09:19 deff command Scilab இல் function ஐ define செய்து load உம் செய்கிறது.
09:26 ஆகவே deff command define செய்த ஒரு function ஐ execute menu option மூலம் load செய்யத்தேவையில்லை.
09:34 இந்த கருதுகோளை விளக்க ஒரு உதாரணம்:
09:41 inline function ஐ நான் எழுதியிருக்கும் inline.sci file ஐ திறக்கிறேன்
09:51 editor window வை மறு அளவாக்குகிறேன்.
09:57 முன் சொன்னது போல முதல் string declaration function ஐ define செய்கிறது மற்றும் இரண்டாம் string function இன் statementகளை define செய்கிறது
10:13 இந்த function ஐ Scilab editor இல் லோட் செய்வோம். degrees2radians அடைப்புகளில் 90 மற்றும் degrees2radians அடைப்புகளில் 45 இன் மதிப்புகளைக் காண இதை பயன்படுத்துவோம்.
10:54 function அழைக்க வேண்டியது மற்ற functionகளை மட்டுமல்ல. தன்னையே கூடத்தான்!
11:00 இதுவே ஒரு function இன் "recursive" calling.
11:03 உதாரணமாக, ஒரு integer இன் factorial ஐ கண்டுபிடிக்க ஒரு function ஐ எழுதும் போது இது தேவைப்படும்.
11:10 Scilab இல் file formatகள் குறித்து மேலும் விளக்குவோம்:
11:14 முன் சொன்னது போல SCILAB இரண்டு file formatகளை பயன்படுத்துகிறது. அவை SCE file format மற்றும் SCI file format.
11:23 .sce file extension உள்ள file கள் script fileகள் ஆகும். அவற்றில் interactive வகை SCILAB session இல் நாம் என்டர் செய்யும் SCILAB command கள் உள்ளன
11:35 அவற்றில் function ஐ document செய்ய பயனாகும் comment வரிகளும் உண்டு. மேலும் script ஐ இயக்க command EXEC ஐயும் பயன்படுத்தும்.
11:52 .sci file extension உடன் உள்ளவை function fileகள், அவை function statementஉடன் துவங்கும்.
12:00 ஒரு sci file இல் பல function definitionகள் இருக்கலாம். அவை ஒவ்வொன்றிலும் function argumentகள் அல்லது மதிப்பீடு செய்யப்பட்ட வெளியீட்டு variableகள் மீது செயலாகும் SCILAB statementகள் இருக்கலாம்.
12:20 இத்துடன் Scilab ல் Scriptகள் மற்றும் Functionகள் குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
12:25 Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும்.
12:31 ஆகவே Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள்.
12:33 இந்த spoken tutorial, Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
12:40 FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in
12:50 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:56 மேலும் தகவல்களுக்கு : http://spoken-tutorial.org/NMEICT-Intro
13:06 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst