Difference between revisions of "PERL/C2/Array-functions/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 418: Line 418:
 
|08:29
 
|08:29
 
|பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது.
 
|பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது.
 
|-
 
|08:33
 
|சுருங்கசொல்ல
 
  
 
|-
 
|-
 
|08:34
 
|08:34
|இந்த டுடோரியலில் நாம் கற்றது -  
+
|சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது -  
  
 
|-
 
|-

Latest revision as of 11:03, 7 April 2017

Time Narration
00:01 Perl ல் Array Functionகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது Perl ல் Array functionகளான ,
00:11 push pop shift
00:14 unshift , split
00:16 splice மற்றும் join
00:18 sort, qw
00:20 இங்கே நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும் Perl 5.14.2
00:28 gedit Text Editor ஐயும் பயன்படுத்துவேன்.
00:32 உங்களுக்கு விருப்பமான எந்த text editor ஐயும் பயன்படுத்தலாம்.
00:36 Perl ல் Variableகள், Data Structureகள் மற்றும் Arrayகள் குறித்த அறிவு இருக்க வேண்டும்
00:43 Commentகள், loopகள் மற்றும் conditional statementகள் குறித்தும் தெரிந்திருப்பது நன்று.
00:48 அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தில் காணவும்.
00:54 Perl சில உள்ளடங்கிய function களை தருகிறது
00:57 இந்த functionகள் Array ல் பல்வேறு செயல்பாடுகளை செயல்படுத்தும்
01:02 முதலில் ஒரு Array ன் கடைசி இருப்பில் இருந்து elementகளை எவ்வாறு சேர்ப்பது மற்றும் நீக்குவது என்று கற்போம்.
01:08 'இது பின்வருமாறு செய்யப்படுகிறது;
01:10 push function ஒரு Array ன் கடைசி இருப்பில் ஒரு element ஐ சேர்கிறது
01:15 pop function ஒரு Array ன் கடைசி இருப்பிலிருந்து ஒரு element ஐ நீக்குகிறது
01:21 ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி push மற்றும் pop functionகள்பற்றி அறிவோம்.
01:26 டெர்மினலை திறந்து டைப் செய்க gedit perlArray dot pl space ampersand
01:33 எண்டரை அழுத்துக
01:36 இது gedit ல் perlArray dot pl file ஐ திறக்கும்.
01:41 திரையில் காட்டப்படும் code ஐ டைப் செய்க
01:45 இங்கே, நீளம் 3 உடன் உள்ள ஒரு Array ஐ declare செய்துள்ளோம்.
01:50 push function இந்த Array ன் கடைசி இருப்பில் ஒரு element ஐ நுழைக்கும் அதாவது 3 க்கு பின்;
01:57 அதே சமயம், pop function அந்த Array ன் கடைசி இருப்பிலிருந்து ஒரு element ஐ நீக்கும்.
02:04 இங்கே, அந்த Array ல் இருந்து 4 நீக்கப்படும்.
02:08 file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக.
02:11 push function 2 argument களை ஏற்கிறது-
02:14 push function க்கான முதல் argument, ஒரு element ஐ நாம் எதில் சேர்க்கிறோமோ அந்த Array.
02:20 இரண்டாம் argument அந்த Array னுள் நாம் சேர்க்க வேண்டிய element.
02:25 pop function ன் syntax பின்வருமாறு -
02:29 pop function ஒரே ஒரு argument ஐ ஏற்கிறது
02:32 இது எதில் element நீக்கப்பட வேண்டுமோ அந்த Array ஆகும்.
02:36 குறிப்பு: இந்த இரு functionகளும் ஒரு Array ன் கடைசி இருப்பில் வேலைசெய்கின்றன .
02:41 pop function மூலம் நீக்கப்படும் element ஐ மற்றொரு variable னுள் பெற்றுக்கொள்ளலாம்.
02:46 அதற்கான syntax $variable space = space pop அடைப்புகளில் @myArray
02:57 இப்போது டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்குக.
03:01 டைப் செய்க perl perlArray dot pl பின் எண்டரை அழுத்துக
03:07 டெர்மினலில் உள்ளது போல் வெளியீடு உள்ளது.
03:11 இப்போது, ஒரு Array ன் முதலாவது இருப்பில் இருந்து ஒரு element ஐ எவ்வாறு நீக்குவது மற்றும் சேர்ப்பது என காண்போம்.
03:18 unshift function ஐ பயன்படுத்தி இதை செய்யலாம்- இது ஒரு Array ன் முதலாம் இருப்பில் ஒரு element ஐ சேர்க்கிறது
03:25 shift function - ஒரு Array ன் முதல் element ஐ நீக்குகிறது.
03:31 ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி இதை புரிந்துகொள்ளலாம்.
03:35 நான் ஏற்கனவே உருவாக்கிய perlArray dot pl file ஐ திறக்கிறேன்.
03:39 திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க.
03:43 unshift function ஒரு element ஐ முதலாம் இருப்பில் அதாவது 1 க்கு முன் நுழைக்கும்
03:52 shift function முதலாம் இருப்பில் இருந்து ஒரு element ஐ நீக்கும்.
03:57 இங்கே, பூஜ்ஜியம் நீக்கப்படும்.
04:00 file ஐ சேமிக்க Ctrl + S ஐ அழுத்துக.
04:03 unshift function இரு argument களை ஏற்கிறது -
04:06 முதலாம் argument எதில் ஒரு element ஐ சேர்கிறோமோ அந்த Array
04:10 இரண்டாம் argument அந்த Array ல் சேர்க்கப்பட வேண்டிய element
04:15 shift function ஒரே ஒரு argument ஐ ஏற்கிறது-
04:18 அது எதில் இருந்து element நீக்கப்பட வேண்டுமோ அந்த Array.
04:22 குறிப்பு: இந்த இரு functionகளும் Array ன் முதல் இருப்பில் வேலைசெய்கின்றன.
04:27 shift function ஆல் நீக்கப்படும் element ஐ ஏதேனும் variable ல் பெறலாம்.
04:33 அதற்கான syntax - $variable space = space shift அடைப்புகளில் @myArray
04:44 பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க.
04:48 perl perlArray dot pl பின் எண்டரை அழுத்துக.
04:54 டெர்மினலில் வெளீயிடு காட்டப்படுகிறது.
04:59 இப்போது, Array ன் குறிப்பிட்ட ஒரு இருப்பில் இருந்து எவ்வாறு ஒரு element ஐ நீக்குவது என காண்போம்
05:05 splice function Array ன் ஒரு குறிப்பிட்ட இருப்பில் இருந்து ஒரு element ஐ நீக்குகிறது.
05:11 இந்த function ஆல் திருப்பப்படும் மதிப்பு... நீக்கப்பட்ட elementகளின் array ஆகும்.
05:17 ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி இதை புரிந்துகொள்வோம்.
05:21 நான் ஏற்கனவே உருவாக்கிய perlArray dot pl file ஐ திறக்கிறேன்.
05:26 திரையில் காட்டப்படும் code ன் பகுதியை டைப் செய்க.
05:30 எங்கிருந்து element களை நீக்க வேண்டுமோ அந்த index ஐயும் அதிலிருந்து எதுவரை elementகளை நீக்க வேண்டுமோ அந்த offset ஐயும் தரவேண்டும்
05:39 இங்கே, elementகள் 5 மற்றும் 6 நீக்கப்படும்.
05:44 பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க -
05:49 perl perlArray dot pl எண்டரை அழுத்துக
05:55 வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது
05:59 இப்போது Arrayகளின் மற்ற சில உள்ளடங்கிய functionகளை காண்போம்
06:04 split function ஒரு குறிப்பிட்ட delimiter ல் ஒரு string ஐ பிரிக்க பயன்படுகிறது
06:10 இந்த function ஆல் திருப்பப்படும் மதிப்பு ஒரு Array ஆகும்.
06:14 இந்த Array ன் elementகள்... அந்த string ல் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகள் ஆகும்
06:19 join function ஒரு குறிப்பிட்ட delimiter ஐ பயன்படுத்தி ஒரு Array ன் elementகளை சேர்கிறது
06:25 சேர்க்கப்பட்ட elementகளின் ஒரு string ஐ இது திருப்புகிறது
06:28 sort function... அகரவரிசை/எண் வரிசையில் ஒரு Array ஐ வரிசைப்படுத்துகிறது.
06:34 qw function ஒரு காலி இடத்தால் பிரிக்கப்பட்ட வார்த்தைகளின் ஒரு Array ஐ திருப்புகிறது
06:40 இப்போது ஒரு உதாரண ப்ரோகிராமை பயன்படுத்தி இந்த அனைத்து functionகளையும் புரிந்துகொள்வோம்.
06:45 டெர்மினலுக்கு வந்து டைப் செய்க
06:48 gedit arrayFunctions dot pl space ampersand பின் எண்டரை அழுத்துக
06:55 திரையில் காட்டப்படும் பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க.
07:00 இங்கே, variable string ன் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு Array ன் ஒரு element ஆக மாறும்
07:07 இங்கே, newArray ன் ஒவ்வொரு element ம் comma ஆல் சேர்க்கப்படும்.
07:12 sort function ஒரு Array ன் elementகளை அகர வரிசையில் வரிசைப்படுத்தும்.
07:19 qw function காலி இடத்தால் பிரிக்கப்பட்ட வார்த்தைகளின் ஒரு Array ஐ உருவாக்கும்.
07:25 ஒவ்வொரு function ஐயும் புரிந்துகொள்வோம்
07:28 split function இரு argumentகளை ஏற்கிறது.
07:31 முதல் argument எதனால் string பிரிக்க பட வேண்டுமோ அந்த delimiter ஆகும்
07:36 இரண்டாவது பிரிக்கப்பட வேண்டிய string ஆகும்.
07:39 Delimiterகளை forward slash, ஒற்றை அல்லது இரட்டை மேற்கோள்களில் குறிப்பிடலாம்
07:45 join function இரு argumentகளை ஏற்கிறது.
07:48 முதலாவது எதனால் Array elementகள் சேர்க்கப்பட வேண்டுமோ அந்த delimiter ஆகும்.
07:53 இரண்டாவது அந்த Array.
07:55 Delimiterகள் ஒற்றை அல்லது இரட்டை மேற்கோள்களில் குறிப்பிடப்படலாம்
07:58 sort function ஒரே ஒரு argument ஐ ஏற்கிறது, அது அந்த வரிசைப்படுத்தப்பட வேண்டிய Array .
08:05 qw function காலி இடத்தால் பிரிக்கப்பட்ட ஒரு Array ன் வார்த்தைகளை திருப்புகிறது
08:11 qw ஐ பயன்படுத்தி எழுதப்பட்டிருந்தால் மேற்கோள்களில் அந்த வார்த்தையை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை
08:17 பின் டெர்மினலுக்கு வந்து Perl script ஐ இயக்க டைப் செய்க -
08:23 perl arrayFunctions dot pl
08:26 பின் எண்டரை அழுத்துக
08:29 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படுகிறது.
08:34 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது -
08:36 ஒரு Array ல் இருந்து elementகளை சேர்த்தல்/நீக்குதல்
08:40 Array ல் செயல்படுத்தப்படும் அடிப்படை functionகளை உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி காணுதல்
08:46 இங்கே உங்களுக்கான பயிற்சி -
08:48 'script.spoken-tutorial.org/index.php/Perl'
08:54 '/ ' (forward slash) delimiter ல் இந்த string ஐ பிரிக்கவும்
08:59 புதிதாய் உருவாக்கப்பட்ட Array ன் ஆரம்பத்தில் https:// ஐ சேர்க்கவும்
09:06 அந்த Array ல் இருந்து element “Perl” ஐ நீக்கவும்
09:09 எண் Array ஐ declare செய்து அதை வரிசைப்படுத்தவும்
09:12 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
09:15 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
09:19 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
09:24 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:30 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:34 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:40 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:44 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:51 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:02 இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.
10:04 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst