Difference between revisions of "Jmol-Application/C2/Measurements-and-Labeling/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 202: | Line 202: | ||
| 03:40 | | 03:40 | ||
| இதுவே '''நைட்ரோஈத்தேன்''' மாதிரியாகும் | | இதுவே '''நைட்ரோஈத்தேன்''' மாதிரியாகும் | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:45 | | 03:45 | ||
− | | '''1-ப்யூட்டனாயிக் அமிலம் (butanoic acid)''' மற்றும் '''எத்தில்அசிட்டேட் (ethylacetate)''' மாதிரிகளை உருவாக்கவும் | + | | பயிற்சியாக- '''1-ப்யூட்டனாயிக் அமிலம் (butanoic acid)''' மற்றும் '''எத்தில்அசிட்டேட் (ethylacetate)''' மாதிரிகளை உருவாக்கவும் |
|- | |- |
Latest revision as of 15:54, 6 April 2017
Time | Narration |
00:01 | Jmol அப்ளிகேஷனில் அளவீடுகள் மற்றும் பெயரிடல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:09 | கார்பாக்சிலிக் அமிலம் (carboxylic acid) மற்றும் நைட்ரோஆல்கேனின் (nitroalkane) மாதிரிகளை உருவாக்குதல் |
00:14 | ஒரு மாதிரியில் குறியீடு மற்றும் எண்ணுடன் அணுக்களுக்கு பெயரிடல் |
00:19 | பிணைப்பு நீளங்கள், பிணைப்பு கோணங்கள் மற்றும் இருமுக (dihedral) கோணங்களை அளவிடுதல். |
00:24 | இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு |
00:27 | Jmol அப்ளிகேஷனில் மூலக்கூறு மாதிரிகளை உருவாக்கவும் திருத்தவும் தெரிந்திருக்க வேண்டும். |
00:32 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களை எங்கள் வலைதளத்தில் காணவும். |
00:37 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: |
00:39 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04 |
00:44 | Jmol பதிப்பு 12.2.2 |
00:47 | Java பதிப்பு 7 |
00:50 | இந்த animation ஐ பயன்படுத்தி ஒரு கார்பாக்சில் (carboxyl) குழுவின் கட்டமைப்பு படிகளுடன் ஆரம்பிக்கலாம். |
00:56 | உதாரணமாக, அசிட்டிக் அமிலம் (Acetic acid) என பொதுவாக அழைக்கப்படும் எத்தனாயிக் அமிலத்தின் (Ethanoic acid) மாதிரியை உருவாக்குவோம். |
01:03 | ஈத்தேன் (Ethane) மாதிரியுடன் ஆரம்பிக்கலாம். |
01:06 | மெத்தில் குழுவில் ஒன்றை கார்பாக்சில் (carboxyl) குழுவாக மாற்ற வேண்டும். |
01:11 | ஒரே கார்பன் அணுவின் இரு ஹைட்ரஜன்களுக்கு பதிலாக ஹைட்ராக்சி குழுவை வைக்கவும். |
01:18 | ஹைட்ராக்சி குழுவின் ஒரு ஆக்ஸிஜன் இடமிருந்தும் கார்பன் இடமிருந்து ஹைட்ரஜன்களை நீக்கவும். |
01:23 | கார்பன்-ஆக்சிஜன் பிணைப்பை இரட்டை பிணைப்பாக்கவும். |
01:26 | மெத்தில் குழு கார்பாக்சில் (Carboxyl) குழுவாக மாற்றப்படுகிறது. |
01:31 | ஈத்தேன் எத்தனாயிக் அமிலமாக (Ethanoic acid) மாற்றப்பட்டிருப்பதை கவனிக்கவும் |
01:35 | மேற்சொன்ன படிகளை பின்பற்றி Jmol அப்ளிகேஷனில் எத்தனாயிக் அமில (Ethanoic acid) மாதிரியை உருவாக்குவோம் |
01:42 | இது Jmol panel ல் ஈத்தேனின் மாதிரி ஆகும் |
01:46 | ஒரு மெத்தில் குழுவை கார்பாக்சில் (carboxyl) குழுவாக மாற்றுவோம். |
01:50 | Modelkit menu ல் ஆக்சிஜனை தேர்ந்தெடுப்போம். |
01:54 | ஒரே கார்பன் அணுவில் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன்கள் மீது க்ளிக் செய்க. |
01:58 | இப்போது modelkit menuல் delete atom தேர்வில் குறியிடுக |
02:02 | ஆக்சிஜனுடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜனையும் நீக்கவும் |
02:07 | கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜனையும் நீக்கவும். |
02:11 | பின் கார்பன் மற்றும் ஆக்சிஜனுக்கு இடையே இரட்டை பிணைப்பை கொண்டுவரவும் |
02:16 | எனவே modelkit menu ல் double தேர்வை குறியிடுக |
02:20 | பின் கார்பன் மற்றும் ஆக்சிஜன் இணைக்கப்பட்டுள்ள பிணைப்பு மீது க்ளிக் செய்க. |
02:25 | திரையில் அசிட்டிக் அமிலத்தின் (Acetic acid) மாதிரியைக் கொண்டுள்ளோம். |
02:28 | அமைப்பை மேம்படுத்த energy minimization செய்க. |
02:32 | ஒரு நைட்ரோ குழுவை உருவாக்க இதே உத்தியைப் பின்பற்றுவோம். |
02:37 | இங்கே ஒரு ஈத்தேன் மாதிரியுடன் Jmol panel உள்ளது |
02:40 | இப்போது இந்த மூலக்கூறைநைட்ரோ-ஈத்தேனாக மாற்றுவோம் |
02:45 | modelkit menu மீது க்ளிக் செய்து நைட்ரஜனில் குறியிடுக. |
02:50 | ஈத்தேன் மூலக்கூறில் ஹைட்ரஜன் அணு மீது க்ளிக் செய்க. |
02:54 | நைட்ரஜன் அணு நீலநிற கோளமாக பிரதிபலிக்கிறது. |
02:58 | அடுத்து, நைட்ரஜனுடன் இணைக்கப்பட்டுள்ள இரு ஹைட்ரஜன்களுக்கு பதிலாக ஹைட்ராக்சி குழுவை வைப்போம். |
03:04 | modelkit menu மீது க்ளிக் செய்து ஆக்சிஜனில் குறியிடுக |
03:10 | பின் நைட்ரஜனுடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன்கள் மீது க்ளிக் செய்க |
03:14 | ஆக்சிஜன் அணுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன்களை நீக்கவும். |
03:18 | modelkit menu ஐ திறந்து delete atom ல் குறியிடுக. |
03:23 | ஆக்சிஜன் அணுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் மீது க்ளிக் செய்க. |
03:26 | இப்போது நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அணுக்களுக்கிடையே ஒரு இரட்டை பிணைப்பை கொண்டுவருவோம். |
03:32 | modelkit menu ல் “double” தேர்வில் குறியிடுக |
03:36 | நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அணுவை இணைக்கும் பிணைப்பு மீது க்ளிக் செய்க. |
03:40 | இதுவே நைட்ரோஈத்தேன் மாதிரியாகும் |
03:45 | பயிற்சியாக- 1-ப்யூட்டனாயிக் அமிலம் (butanoic acid) மற்றும் எத்தில்அசிட்டேட் (ethylacetate) மாதிரிகளை உருவாக்கவும் |
03:50 | Energy minimization செய்வதன் மூலம் அமைப்பை மேம்படுத்தவும் |
03:53 | படத்தை சேமிக்கவும். |
03:56 | நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
04:02 | Jmol panel க்கு திரும்ப வருவோம். |
04:04 | இங்கே திரையில் 1-ப்யூட்டனாயில்க அமில (butanoic acid) மாதிரி உள்ளது. |
04:08 | மாதிரியில் அணுக்களுக்கு பெயரிட கற்போம். |
04:12 | தனிமம் மற்றும் எண்ணுக்கு பொருத்தமான குறியீடுகளுடன் இதை செய்யலாம். |
04:17 | display menu ஐ திறந்து, Label ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:22 | அனைத்து அணுக்களுக்கும் அந்தந்த தனிமத்திற்கு பொருத்தமான பெயரிட “Symbol” ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:29 | “Name” தேர்வு... குறியீடு எண் இரண்டையும் கொடுக்கும். |
04:34 | “Number” தேர்வு... அணுக்களின் எண்களை கொடுக்கும். |
04:37 | “None” தேர்வை பயன்படுத்தி மாதிரியில் இருந்து பெயர்களை அழிக்க முடியும். |
04:43 | மேற்சொன்ன அனைத்து மாற்றங்களை செய்ய Pop-up menu ஐயும் பயன்படுத்தலாம். |
04:48 | Pop-up menu ஐ திறக்க panel மீது ரைட்-க்ளிக் செய்து வெவ்வேறு தேர்வுகளை காணவும். |
04:55 | ஒரு மூலக்கூறின் ஏதேனும் இரு அணுக்களுக்கிடையேயான தூரத்தை “Tools” menu ஐ பயன்படுத்தி அளவிடலாம். |
05:01 | அளவிடுவதற்கு முன், modelkit menu ஐ திறந்து “minimize” மீது க்ளிக் செய்க. |
05:07 | Energy minimization செய்யப்பட்டு இப்போது மாதிரி மிகவும் நிலையான வெளிவடிவமைப்பில் உள்ளது. |
05:14 | இப்போது “Tools” menu மீது க்ளிக் செய்து, “Distance Units” ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:20 | தேவைக்கேற்ப தேர்வுகளை துணை-menu ல் இருந்து தேர்ந்தெடுக்கவும். |
05:25 | உதாரணமாக, Angstrom ஐ தேர்ந்தெடுக்கிறேன் |
05:28 | எனவே நான் அளவிடும் பிணைப்பின் நீளங்கள் Angstrom அலகில் இருக்கும். |
05:34 | rotate molecule ஐகான் மீது க்ளிக் செய்க. பின் கர்சரை panel க்கு கொண்டுவரவும். |
05:42 | அணுக்கள் 9 மற்றும் 4 க்கு இடையேயான தூரத்தை அளவிடுகிறேன். |
05:46 | முதலில் ஆரம்ப அணுவான அணு எண் 9 மீது டபுள்-க்ளிக் செய்க. |
05:52 | அளவீட்டை நிர்ணயிக்க, கடைசி அணுவான அணு எண் 4 மீது டபுள்-க்ளிக் செய்க. |
05:58 | பிணைப்பின் நீளம் இப்போது திரையில் காட்டப்படுகிறது. |
06:02 | பிணைப்பு நீளங்களின் அளவீடுகளை மேலும் செய்வோம். |
06:05 | கார்பன் மற்றும் ஆக்சிஜனுக்கு இடையேயான இரட்டை பிணைப்பின் பிணைப்பு நீளத்தை அளவிடுவோம். |
06:10 | எனவே அணு 5 மீது டபுள்-க்ளிக் செய்து பின் கர்சரை அணு எண் 7 க்கு கொண்டுவந்து அதன் மீது டபுள்-க்ளிக் செய்க. |
06:19 | அதேபோல, கார்பன் மற்றும் ஆக்சிஜனுக்கு இடையேயான ஒற்றை பிணைப்பின் தூரத்தை அளவிடுவோம். |
06:25 | எனவே, அணு 5 மீது டபுள்-க்ளிக் செய்து பின் அணு 6 க்கு கர்சரை கொண்டு வந்து அதன் மீது டபுள்-க்ளிக் செய்க. |
06:34 | அனைத்து பிணைப்பு நீளங்களும் panel ல் காட்டப்படுவதைக் காணலாம். |
06:39 | ஒரு மாதிரியில் பிணைப்பு கோணங்கள் மற்றும் இருமுக கோணங்களை அளவிடமுடியும். |
06:44 | உதாரணமாக அணுக்கள் 9, 4 மற்றும் 1 க்கு இடையேயான பிணைப்பு கோணத்தை அளவிடுவோம். |
06:51 | அணு எண் 9 மீது டபுள்-க்ளிக் செய்து, பின் அணு 4 மீது க்ளிக் செய்க. |
06:56 | கோண அளவீட்டை நிர்ணயிக்க, அணு 1 மீது டபுள்-க்ளிக் செய்க. |
07:01 | திரையில் பிணைப்பு கோணம் காட்டப்படுவதைக் காணலாம். |
07:05 | மற்றொரு பிணைப்பு கோணத்தை அளவிடலாம், அது அணுக்கள் 1, 5 மற்றும் 6 க்கு இடையே என்போம். |
07:12 | அணு 1 மீது டபுள்-க்ளிக் செய்து, அணு 5 மீது க்ளிக் செய்து கடைசியாக அணு எண் 6 மீது டபுள்-க்ளிக் செய்க. |
07:23 | முறுக்கம் (torsional) அல்லது இருமுக கோண அளவீடு 4 அணுக்களை உள்ளடக்கியது. |
07:29 | எனவே அணுக்கள் 8, 4,1 மற்றும் 2 ஐ தேர்ந்தெடுப்போம். |
07:34 | இருமுக கோண அளவீட்டிற்காக முதலில் அணு எண் 8 மீது டபுள்-க்ளிக் செய்க. |
07:39 | அணு எண் 4 மீது க்ளிக் செய்து, பின் அணு எண் 1 மீதும் க்ளிக் செய்க. |
07:43 | கடைசியாக, இருமுக கோண அளவீட்டை நிர்ணயிக்க, அணு எண் 2 மீது டபுள்-க்ளிக் செய்க. |
07:50 | திரையில் இருமுக கோண அளவீடு காட்டப்படுவதைக் காண்க. |
07:55 | உருவாக்கப்பட்ட அனைத்து அளவீடுகளின் மதிப்புகளையும் அட்டவணை வடிவில் காணமுடியும். |
08:00 | tool bar ல் “Click atom to measure distances” ஐகான் மீது க்ளிக் செய்க. |
08:06 | panel ல் “Measurements” dialog box திறக்கிறது. |
08:10 | இதுவரை நாம் உருவாக்கிய அனைத்து அளவீடுகளின் ஒரு பட்டியலை இது கொண்டுள்ளது. |
08:14 | இப்போது இந்த படத்தை சேமித்து அப்ளிகேஷனில் இருந்து வெளியேறலாம். |
08:17 | சுருங்கசொல்ல: |
08:19 | இந்த டுடோரியலில் நாம் கற்றது- |
08:22 | கார்பாக்சிலிக் அமிலம் (carboxylic acid) மற்றும் நைட்ரோஅல்கேனின் மாதிரிகளை உருவாக்குதல் |
08:26 | ஒரு மாதிரியில் தனிமம் மற்றும் எண்ணின் குறியீடுடன் அணுக்களுக்கு பெயரிடல் |
08:31 | பிணைப்பு நீளங்கள், பிணைப்பு கோணங்கள் மற்றும் இருமுக கோணங்களை அளவிடுதல். |
08:36 | பயிற்சியாக- |
08:38 | ஒற்றை, இரட்டை மற்றும் முப்பிணைப்புகளுடன் மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்கவும் |
08:43 | கார்பன் அணுக்களுக்கு இடையேயான பிணைப்பு நீளங்களை அளவிடவும் |
08:45 | பின் அவற்றை ஒப்பிடவும். |
08:48 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_ Tutorial |
08:51 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
08:54 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
08:59 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:04 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:08 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:15 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:19 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:26 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
09:31 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |