Difference between revisions of "Jmol-Application/C2/Create-and-edit-molecular-models/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 162: Line 162:
 
|03:04  
 
|03:04  
 
| Energy minimization செய்து படத்தை '''dot mol '''file ஆக சேமிக்கலாம்.
 
| Energy minimization செய்து படத்தை '''dot mol '''file ஆக சேமிக்கலாம்.
 
|-
 
| 03:10
 
| இங்கே பயிற்சி.
 
  
 
|-
 
|-
 
| 03:11
 
| 03:11
| பின்வரும் மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்கவும்.'''3-ப்ரோமோ-1-ப்யூட்டனால் (butanol) ''' மற்றும் '''2-அமினோ-4-க்ளோரோ-பென்டேன் (pentane)'''
+
| இங்கே பயிற்சி பின்வரும் மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்கவும்.'''3-ப்ரோமோ-1-ப்யூட்டனால் (butanol) ''' மற்றும் '''2-அமினோ-4-க்ளோரோ-பென்டேன் (pentane)'''
  
 
|-
 
|-

Latest revision as of 15:53, 6 April 2017

Time Narration
00:01 வணக்கம். Jmol அப்ளிகேஷனில் மூலக்கூறு மாதிரிகளை உருவாக்குதல் மற்றும் திருத்துதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது,
00:12 மூலக்கூறு மாதிரியில் ஹைட்ரஜன் அணுவிற்கு பதிலாக ஒரு செயல்பாட்டு குழுவை சேர்த்தல்
00:17 பிணைப்புகளை சேர்த்தல் மற்றும் நீக்குதல்
00:20 அணுக்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல்
00:23 மற்றும் contextual menu என அழைக்கப்படும் Pop-up menu ஐ எவ்வாறு பயன்படுத்துதல் என கற்றல்.
00:29 இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு
00:32 Jmol அப்ளிகேஷன் விண்டோ மற்றும்
00:36 மூலக்கூறு மாதிரிகளை உருவாக்க பயன்படும் Modelkit function ஆகியவை குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
00:41 அது குறித்த டுடோரியல்களுக்கு, எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:46 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
00:49 உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04
00:53 Jmol பதிப்பு 12.2.2
00:57 மற்றும் Java பதிப்பு 7.
01:00 Jmol அப்ளிகேஷனை திறக்க Dash homeல் க்ளிக் செய்க.
01:05 search box ல் டைப் செய்க Jmol.
01:08 திரையில் Jmol ஐகான் தோன்றுகிறது.
01:11 Jmol அப்ளிகேஷன் விண்டோவை திறக்க Jmol ஐகான் மீது க்ளிக் செய்க.
01:17 ஏற்கனவே நாம் உருவாக்கிய ப்ரோபேன் மாதிரியுடன் ஆரம்பிக்கலாம்
01:22 file ஐ திறக்க, tool bar ல் “Open file” ஐகான் மீது க்ளிக் செய்க.
01:27 திரையில் ஒரு dialog box தோன்றுகிறது.
01:30 தேவையான file உள்ள folder மீது க்ளிக் செய்க.
01:34 என் file Desktop ல் உள்ளது.
01:37 எனவே, நான் Desktop ஐ தேர்ந்தெடுத்து Open பட்டன் மீது க்ளிக் செய்கிறேன்.
01:43 “File or URL” உரைப்பெட்டியில் file பெயரை டைப் செய்க
01:48 பின் Open பட்டன் மீது க்ளிக் செய்க.
01:51 திரையில் ப்ரோபேனின் மாதிரி தோன்றுகிறது.
01:55 ப்ரோபேனில் ஹைட்ரஜன்களுக்கு பதிலாக பின்வருவன போன்ற செயல்பாட்டு குழுக்களை வைக்க முடியும்:
01:59 ஹைட்ராக்சி (hydroxy), அமினோ (amino),...... ப்ளூரோ, க்ளோரோ, ப்ரோமோ(bromo) போன்ற ஹாலொஜன்கள் (halogens) மற்றும் பல.
02:07 ப்ரோபேன் மூலக்கூறை ப்ரோபனால் (Propanol) ஆக மாற்ற அதில் ஹைட்ராக்சி குழுவை சேர்க்க விரும்புகிறேன்.
02:13 model kit menu ஐ திறக்கவும். இங்கே செயல்பாட்டு குழுக்களின் ஒரு பட்டியல் உள்ளது.
02:20 ஆக்ஸிஜன் அணுவிற்கு அருகில் உள்ள பெட்டியில் குறியிடுக.
02:23 முதல் கார்பன் அணுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் அணு மீது க்ளிக் செய்க.
02:28 ஹைட்ரஜன் அணு ஹைட்ராக்சி குழுவால் மாற்றப்பட்டது என்பதை கவனிக்கவும். இங்கே ஆக்சிஜன் அணு சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
02:37 ப்ரோபேன் இப்போது 1-ப்ரோபனால் (Propanol) ஆக மாற்றப்பட்டது
02:41 இப்போது 1-ப்ரோபனாலை 2-க்ளோரோ-1-ப்ரோபனாலாக மாற்ற முயற்சிப்போம்
02:47 model kit menu ல் இருந்து க்ளோரோ குழுவை தேர்ந்தெடுக்கவும்.
02:51 இரண்டாம் கார்பன் அணுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் மீது க்ளிக் செய்க.
02:57 இப்போது 2-க்ளோரோ-1-ப்ரோபனால் மாதிரியைக் கொண்டுள்ளோம். இங்கே க்ளோரின் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.
03:04 Energy minimization செய்து படத்தை dot mol file ஆக சேமிக்கலாம்.
03:11 இங்கே பயிற்சி பின்வரும் மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்கவும்.3-ப்ரோமோ-1-ப்யூட்டனால் (butanol) மற்றும் 2-அமினோ-4-க்ளோரோ-பென்டேன் (pentane)
03:20 Energy minimization செய்து படத்தை JPEG format ல் சேமிக்கவும்.
03:25 படத்தை வெவ்வேறு file formatகளில் சேமிக்க:
03:28 Tool bar ல் “Save current view as an image” ஐகானை பயன்படுத்தவும்.
03:33 நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்
03:40 இப்போது Jmol அப்ளிகேஷன் விண்டோவிற்கு திரும்ப வருவோம்.
03:45 Jmol அப்ளிகேஷனும் ஒருPop-up menu ஐ தருகிறது.
03:50 அந்த pop-up menu ஐ இரு வெவ்வேறு வழிகளில் அணுகலாம்.
03:55 model kit menu திறந்திருந்தால், அதை மூடவும்.
03:59 model kit menu ல் கீழே வந்து “exit model kit mode” மீது க்ளிக் செய்க
04:04 Pop-up menu ஐ திறக்க, panel மீது ரைட்-க்ளிக் செய்க.
04:09 panel ல் Pop-up menu தோன்றுகிறது.
04:12 அணுக்களின் காட்சியை மாற்ற பல செயல்பாடுகளை Pop-up menu தருகிறது.
04:18 இது பல்வேறு selection மற்றும் rendering தேர்வுகளைக் கொண்டுள்ளது.
04:22 இந்த menu ல் உள்ள பல செயல்பாடுகள் menu bar லும் உள்ளன.
04:28 Pop-up menu ல் உள்ள ஐடம்கள் சுய விளக்கம் அளிப்பவை.
04:32 அவற்றிற்கு ஒரு விரிவான விளக்கம் தேவையில்லை.
04:35 Pop-up menu ஐ மூட Jmol panel மீது க்ளிக் செய்க.
04:39 Jmol logo மீது க்ளிக் செய்வது Pop-up menu ஐ அணுக இரண்டாம் வழி ஆகும்.
04:44 இது Jmol panel ன் கீழ் வலது பக்கம் உள்ளது.
04:49 இப்போது இந்த மூலக்கூறை திருத்துவதையும் அதை ஈத்தேன் மூலக்கூறாக மாற்றுவதையும் காண்போம்.
04:55 அதற்கு, ஹைட்ராக்சி குழு...., க்ளோரின் குழு......, கார்பன்..... மற்றும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களை நீக்குவோம்.
05:05 model kit menu ஐ திறக்கவும்.
05:08 “delete atom” க்கு அருகில் உள்ள பெட்டியில் குறியிடுக
05:12 நீங்கள் நீக்க விரும்பும் அணுக்கள் மீது க்ளிக் செய்க.
05:15 ஆக்சிஜன்,..... க்ளோரின்..... மற்றும் கார்பன் அணு.
05:21 ஈத்தேன் மூலக்கூறை உருவாக்க ஹைட்ரஜன்களை இந்த மூலக்கூறுக்கு சேர்க்க வேண்டும்.
05:26 model kit menu ல் “add hydrogens” தேர்வு மீது க்ளிக் செய்க.
05:32 மூலக்கூறுக்கு இரு ஹைட்ரஜன் அணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
05:36 இப்போது திரையில் ஈத்தேன் மாதிரியைக் கொண்டுள்ளோம்.
05:40 ஆல்கீன்கள் (alkenes) மற்றும் ஆல்கைன்களை (alkynes) உருவாக்க கற்போம்.
05:45 மூலக்கூறில் இரட்டை பிணைப்பை சேர்க்க, model kit menu ஐ திறக்கவும்.
05:50 double” தேர்வை குறியிடவும்.
05:53 ஈத்தேன் மூலக்கூறில் இரு கார்பன் அணுக்களுக்கு இடையேயான பிணைப்பு மீது கர்சரை வைக்கவும்.
05:58 கார்பன் அணுக்களை சுற்றி சிவப்பு நிற வளையங்கள் தோன்றுகின்றன.
06:01 அந்த பிணைப்பு மீது க்ளிக் செய்க.
06:05 ஒற்றை பிணைப்பு இரட்டை பிணைப்பாக மாற்றப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
06:09 panel ல் ஈத்தேன் மாதிரியைக் கொண்டுள்ளோம்.
06:13 இப்போது ஈத்தேனை ஈத்தைனாக மாற்றுவோம்,
06:16 modelkit menu ல் க்ளிக் செய்து “triple” தேர்வை குறியிடுக.
06:21 ஈத்தேன் மூலக்கூறின் இரட்டை பிணைப்பு மீது கர்சரை வைத்து அதன் மீது க்ளிக் செய்க.
06:28 இரட்டை பிணைப்பு முப்பிணைப்பாக மாற்றப்பட்டுள்ளது.
06:31 இது ஈத்தைன் மாதிரி ஆகும்
06:34 மிக நிலையான வெளி வடிவமைப்பை பெற energy minimization செய்து சேமிக்கவும்.
06:41 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது
06:43 அல்கேன்களில் ஹைட்ரஜன்அணுவிற்கு பதிலாக செயல்பாட்டு குழுக்களை சேர்த்தல்
06:48 அல்கேன்களை அல்கீன்கள் மற்றும் அல்கைன்களாக மாற்ற பிணைப்புகளை சேர்த்தல்
06:52 அணுக்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் மற்றும்
06:54 Pop-up-menu ஐ பயன்படுத்துதல்.
06:59 பயிற்சியாக 2-ப்ளூரோ-1,3-ப்யூட்டடைன் (butadiene) மற்றும் 2-பென்டைன் (pentyne) மாதரிகளை உருவாக்குக
07:06 மாதிரியின் காட்சியை wireframe ஆக மாற்ற Pop-up menu ஐ பயன்படுத்துக
07:10 energy minimization செய்து படத்தை PDF format ல் சேமிக்கவும்.
07:16 நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
07:24 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What]_is_a_Spoken_ Tutorial
07:27 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
07:31 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07:36 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:41 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:45 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:52 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:57 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:04 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:08 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst