Difference between revisions of "Jmol-Application/C2/Measurements-and-Labeling/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 449: Line 449:
 
|-
 
|-
 
| 08:48
 
| 08:48
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
+
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_ Tutorial
http://spoken-tutorial.org/What]_is_a_Spoken_ Tutorial
+
  
 
|-
 
|-

Revision as of 15:35, 23 February 2017

Time Narration
00:01 Jmol அப்ளிகேஷனில் அளவீடுகள் மற்றும் பெயரிடல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:09 கார்பாக்சிலிக் அமிலம் (carboxylic acid) மற்றும் நைட்ரோஆல்கேனின் (nitroalkane) மாதிரிகளை உருவாக்குதல்
00:14 ஒரு மாதிரியில் குறியீடு மற்றும் எண்ணுடன் அணுக்களுக்கு பெயரிடல்
00:19 பிணைப்பு நீளங்கள், பிணைப்பு கோணங்கள் மற்றும் இருமுக (dihedral) கோணங்களை அளவிடுதல்.
00:24 இந்த டுடோரியலைத் தொடர உங்களுக்கு
00:27 Jmol அப்ளிகேஷனில் மூலக்கூறு மாதிரிகளை உருவாக்கவும் திருத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.
00:32 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களை எங்கள் வலைதளத்தில் காணவும்.
00:37 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:
00:39 உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04
00:44 Jmol பதிப்பு 12.2.2
00:47 Java பதிப்பு 7
00:50 இந்த animation ஐ பயன்படுத்தி ஒரு கார்பாக்சில் (carboxyl) குழுவின் கட்டமைப்பு படிகளுடன் ஆரம்பிக்கலாம்.
00:56 உதாரணமாக, அசிட்டிக் அமிலம் (Acetic acid) என பொதுவாக அழைக்கப்படும் எத்தனாயிக் அமிலத்தின் (Ethanoic acid) மாதிரியை உருவாக்குவோம்.
01:03 ஈத்தேன் (Ethane) மாதிரியுடன் ஆரம்பிக்கலாம்.
01:06 மெத்தில் குழுவில் ஒன்றை கார்பாக்சில் (carboxyl) குழுவாக மாற்ற வேண்டும்.
01:11 ஒரே கார்பன் அணுவின் இரு ஹைட்ரஜன்களுக்கு பதிலாக ஹைட்ராக்சி குழுவை வைக்கவும்.
01:18 ஹைட்ராக்சி குழுவின் ஒரு ஆக்ஸிஜன் இடமிருந்தும் கார்பன் இடமிருந்து ஹைட்ரஜன்களை நீக்கவும்.
01:23 கார்பன்-ஆக்சிஜன் பிணைப்பை இரட்டை பிணைப்பாக்கவும்.
01:26 மெத்தில் குழு கார்பாக்சில் (Carboxyl) குழுவாக மாற்றப்படுகிறது.
01:31 ஈத்தேன் எத்தனாயிக் அமிலமாக (Ethanoic acid) மாற்றப்பட்டிருப்பதை கவனிக்கவும்
01:35 மேற்சொன்ன படிகளை பின்பற்றி Jmol அப்ளிகேஷனில் எத்தனாயிக் அமில (Ethanoic acid) மாதிரியை உருவாக்குவோம்
01:42 இது Jmol panel ல் ஈத்தேனின் மாதிரி ஆகும்
01:46 ஒரு மெத்தில் குழுவை கார்பாக்சில் (carboxyl) குழுவாக மாற்றுவோம்.
01:50 Modelkit menu ல் ஆக்சிஜனை தேர்ந்தெடுப்போம்.
01:54 ஒரே கார்பன் அணுவில் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன்கள் மீது க்ளிக் செய்க.
01:58 இப்போது modelkit menuல் delete atom தேர்வில் குறியிடுக
02:02 ஆக்சிஜனுடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜனையும் நீக்கவும்
02:07 கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜனையும் நீக்கவும்.
02:11 பின் கார்பன் மற்றும் ஆக்சிஜனுக்கு இடையே இரட்டை பிணைப்பை கொண்டுவரவும்
02:16 எனவே modelkit menu ல் double தேர்வை குறியிடுக
02:20 பின் கார்பன் மற்றும் ஆக்சிஜன் இணைக்கப்பட்டுள்ள பிணைப்பு மீது க்ளிக் செய்க.
02:25 திரையில் அசிட்டிக் அமிலத்தின் (Acetic acid) மாதிரியைக் கொண்டுள்ளோம்.
02:28 அமைப்பை மேம்படுத்த energy minimization செய்க.
02:32 ஒரு நைட்ரோ குழுவை உருவாக்க இதே உத்தியைப் பின்பற்றுவோம்.
02:37 இங்கே ஒரு ஈத்தேன் மாதிரியுடன் Jmol panel உள்ளது
02:40 இப்போது இந்த மூலக்கூறைநைட்ரோ-ஈத்தேனாக மாற்றுவோம்
02:45 modelkit menu மீது க்ளிக் செய்து நைட்ரஜனில் குறியிடுக.
02:50 ஈத்தேன் மூலக்கூறில் ஹைட்ரஜன் அணு மீது க்ளிக் செய்க.
02:54 நைட்ரஜன் அணு நீலநிற கோளமாக பிரதிபலிக்கிறது.
02:58 அடுத்து, நைட்ரஜனுடன் இணைக்கப்பட்டுள்ள இரு ஹைட்ரஜன்களுக்கு பதிலாக ஹைட்ராக்சி குழுவை வைப்போம்.
03:04 modelkit menu மீது க்ளிக் செய்து ஆக்சிஜனில் குறியிடுக
03:10 பின் நைட்ரஜனுடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன்கள் மீது க்ளிக் செய்க
03:14 ஆக்சிஜன் அணுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன்களை நீக்கவும்.
03:18 modelkit menu ஐ திறந்து delete atom ல் குறியிடுக.
03:23 ஆக்சிஜன் அணுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் மீது க்ளிக் செய்க.
03:26 இப்போது நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அணுக்களுக்கிடையே ஒரு இரட்டை பிணைப்பை கொண்டுவருவோம்.
03:32 modelkit menu ல் “double” தேர்வில் குறியிடுக
03:36 நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அணுவை இணைக்கும் பிணைப்பு மீது க்ளிக் செய்க.
03:40 இதுவே நைட்ரோஈத்தேன் மாதிரியாகும்
03:44 பயிற்சியாக-
03:45 1-ப்யூட்டனாயிக் அமிலம் (butanoic acid) மற்றும் எத்தில்அசிட்டேட் (ethylacetate) மாதிரிகளை உருவாக்கவும்
03:50 Energy minimization செய்வதன் மூலம் அமைப்பை மேம்படுத்தவும்
03:53 படத்தை சேமிக்கவும்.
03:56 நீங்கள் முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
04:02 Jmol panel க்கு திரும்ப வருவோம்.
04:04 இங்கே திரையில் 1-ப்யூட்டனாயில்க அமில (butanoic acid) மாதிரி உள்ளது.
04:08 மாதிரியில் அணுக்களுக்கு பெயரிட கற்போம்.
04:12 தனிமம் மற்றும் எண்ணுக்கு பொருத்தமான குறியீடுகளுடன் இதை செய்யலாம்.
04:17 display menu ஐ திறந்து, Label ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:22 அனைத்து அணுக்களுக்கும் அந்தந்த தனிமத்திற்கு பொருத்தமான பெயரிட “Symbol” ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:29 Name” தேர்வு... குறியீடு எண் இரண்டையும் கொடுக்கும்.
04:34 Number” தேர்வு... அணுக்களின் எண்களை கொடுக்கும்.
04:37 None” தேர்வை பயன்படுத்தி மாதிரியில் இருந்து பெயர்களை அழிக்க முடியும்.
04:43 மேற்சொன்ன அனைத்து மாற்றங்களை செய்ய Pop-up menu ஐயும் பயன்படுத்தலாம்.
04:48 Pop-up menu ஐ திறக்க panel மீது ரைட்-க்ளிக் செய்து வெவ்வேறு தேர்வுகளை காணவும்.
04:55 ஒரு மூலக்கூறின் ஏதேனும் இரு அணுக்களுக்கிடையேயான தூரத்தை “Tools” menu ஐ பயன்படுத்தி அளவிடலாம்.
05:01 அளவிடுவதற்கு முன், modelkit menu ஐ திறந்து “minimize” மீது க்ளிக் செய்க.
05:07 Energy minimization செய்யப்பட்டு இப்போது மாதிரி மிகவும் நிலையான வெளிவடிவமைப்பில் உள்ளது.
05:14 இப்போது “Tools” menu மீது க்ளிக் செய்து, “Distance Units” ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:20 தேவைக்கேற்ப தேர்வுகளை துணை-menu ல் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
05:25 உதாரணமாக, Angstrom ஐ தேர்ந்தெடுக்கிறேன்
05:28 எனவே நான் அளவிடும் பிணைப்பின் நீளங்கள் Angstrom அலகில் இருக்கும்.
05:34 rotate molecule ஐகான் மீது க்ளிக் செய்க. பின் கர்சரை panel க்கு கொண்டுவரவும்.
05:42 அணுக்கள் 9 மற்றும் 4 க்கு இடையேயான தூரத்தை அளவிடுகிறேன்.
05:46 முதலில் ஆரம்ப அணுவான அணு எண் 9 மீது டபுள்-க்ளிக் செய்க.
05:52 அளவீட்டை நிர்ணயிக்க, கடைசி அணுவான அணு எண் 4 மீது டபுள்-க்ளிக் செய்க.
05:58 பிணைப்பின் நீளம் இப்போது திரையில் காட்டப்படுகிறது.
06:02 பிணைப்பு நீளங்களின் அளவீடுகளை மேலும் செய்வோம்.
06:05 கார்பன் மற்றும் ஆக்சிஜனுக்கு இடையேயான இரட்டை பிணைப்பின் பிணைப்பு நீளத்தை அளவிடுவோம்.
06:10 எனவே அணு 5 மீது டபுள்-க்ளிக் செய்து பின் கர்சரை அணு எண் 7 க்கு கொண்டுவந்து அதன் மீது டபுள்-க்ளிக் செய்க.
06:19 அதேபோல, கார்பன் மற்றும் ஆக்சிஜனுக்கு இடையேயான ஒற்றை பிணைப்பின் தூரத்தை அளவிடுவோம்.
06:25 எனவே, அணு 5 மீது டபுள்-க்ளிக் செய்து பின் அணு 6 க்கு கர்சரை கொண்டு வந்து அதன் மீது டபுள்-க்ளிக் செய்க.
06:34 அனைத்து பிணைப்பு நீளங்களும் panel ல் காட்டப்படுவதைக் காணலாம்.
06:39 ஒரு மாதிரியில் பிணைப்பு கோணங்கள் மற்றும் இருமுக கோணங்களை அளவிடமுடியும்.
06:44 உதாரணமாக அணுக்கள் 9, 4 மற்றும் 1 க்கு இடையேயான பிணைப்பு கோணத்தை அளவிடுவோம்.
06:51 அணு எண் 9 மீது டபுள்-க்ளிக் செய்து, பின் அணு 4 மீது க்ளிக் செய்க.
06:56 கோண அளவீட்டை நிர்ணயிக்க, அணு 1 மீது டபுள்-க்ளிக் செய்க.
07:01 திரையில் பிணைப்பு கோணம் காட்டப்படுவதைக் காணலாம்.
07:05 மற்றொரு பிணைப்பு கோணத்தை அளவிடலாம், அது அணுக்கள் 1, 5 மற்றும் 6 க்கு இடையே என்போம்.
07:12 அணு 1 மீது டபுள்-க்ளிக் செய்து, அணு 5 மீது க்ளிக் செய்து கடைசியாக அணு எண் 6 மீது டபுள்-க்ளிக் செய்க.
07:23 முறுக்கம் (torsional) அல்லது இருமுக கோண அளவீடு 4 அணுக்களை உள்ளடக்கியது.
07:29 எனவே அணுக்கள் 8, 4,1 மற்றும் 2 ஐ தேர்ந்தெடுப்போம்.
07:34 இருமுக கோண அளவீட்டிற்காக முதலில் அணு எண் 8 மீது டபுள்-க்ளிக் செய்க.
07:39 அணு எண் 4 மீது க்ளிக் செய்து, பின் அணு எண் 1 மீதும் க்ளிக் செய்க.
07:43 கடைசியாக, இருமுக கோண அளவீட்டை நிர்ணயிக்க, அணு எண் 2 மீது டபுள்-க்ளிக் செய்க.
07:50 திரையில் இருமுக கோண அளவீடு காட்டப்படுவதைக் காண்க.
07:55 உருவாக்கப்பட்ட அனைத்து அளவீடுகளின் மதிப்புகளையும் அட்டவணை வடிவில் காணமுடியும்.
08:00 tool bar ல் “Click atom to measure distances” ஐகான் மீது க்ளிக் செய்க.
08:06 panel ல் “Measurements” dialog box திறக்கிறது.
08:10 இதுவரை நாம் உருவாக்கிய அனைத்து அளவீடுகளின் ஒரு பட்டியலை இது கொண்டுள்ளது.
08:14 இப்போது இந்த படத்தை சேமித்து அப்ளிகேஷனில் இருந்து வெளியேறலாம்.
08:17 சுருங்கசொல்ல:
08:19 இந்த டுடோரியலில் நாம் கற்றது-
08:22 கார்பாக்சிலிக் அமிலம் (carboxylic acid) மற்றும் நைட்ரோஅல்கேனின் மாதிரிகளை உருவாக்குதல்
08:26 ஒரு மாதிரியில் தனிமம் மற்றும் எண்ணின் குறியீடுடன் அணுக்களுக்கு பெயரிடல்
08:31 பிணைப்பு நீளங்கள், பிணைப்பு கோணங்கள் மற்றும் இருமுக கோணங்களை அளவிடுதல்.
08:36 பயிற்சியாக-
08:38 ஒற்றை, இரட்டை மற்றும் முப்பிணைப்புகளுடன் மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்கவும்
08:43 கார்பன் அணுக்களுக்கு இடையேயான பிணைப்பு நீளங்களை அளவிடவும்
08:45 பின் அவற்றை ஒப்பிடவும்.
08:48 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_ Tutorial
08:51 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:54 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:59 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:04 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:08 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:15 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:19 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:26 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
09:31 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst