Difference between revisions of "Drupal/C3/Drupal-Site-Management/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
| 00:06 | | 00:06 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: '''Report'''களைக் காணுதல், '''Drupal''' ஐ update செய்தல், Modules மற்றும் themesஐ update செய்தல் மற்றும் | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: '''Report'''களைக் காணுதல், '''Drupal''' ஐ update செய்தல், Modules மற்றும் themesஐ update செய்தல் மற்றும் Drupal ஐ பழைய பதிப்பிற்கு கொண்டுவருதல். |
− | Drupal ஐ பழைய பதிப்பிற்கு கொண்டுவருதல். | + | |
|- | |- |
Revision as of 22:06, 16 October 2016
Time | Narration |
00:01 | வணக்கம், Drupalல் Site Management குறித்த Spoken tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: Reportகளைக் காணுதல், Drupal ஐ update செய்தல், Modules மற்றும் themesஐ update செய்தல் மற்றும் Drupal ஐ பழைய பதிப்பிற்கு கொண்டுவருதல். |
00:18 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Ubuntu இயங்குதளம், Drupal 8 மற்றும் Firefox Web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம். |
00:33 | Site management என்றால் என்ன? Site management என்பது: Drupalல் codeஐ update செய்வது அதாவது core, modules மற்றும் themesஐ update செய்வது |
00:44 | errorகளை புரிந்துகொண்டு சரிசெய்வது, userகளின் செயல்பாடுகளை கவனித்தல் போன்றவை. |
00:51 | நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம். |
00:56 | site management ன் ஆரம்பம் Reports menu. உங்களுக்கு கூடுதல் உதவி தேவையெனில் Help menuஐ காணவும். |
01:07 | Reportsஐ க்ளிக் செய்க. நம் Drupal siteல் பெறக்கூடிய reportகளின் பட்டியலைப் காண்கிறோம் |
01:14 | Available Updatesஐ க்ளிக் செய்க |
01:17 | எதாவது சிவப்பு பின்புலத்தில் தெரிந்தால், அது security update அதை சீக்கிரம் update செய்யவேண்டும். |
01:25 | மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது security update இல்லை. ஆனால் அதற்கு ஒரு புது பதிப்பு வந்துள்ளது என பொருள். |
01:33 | Settings tabல், Drupalக்கு updatesஐ சோதிக்கும் கால இடைவெளியை குறிப்பிடலாம் |
01:40 | updates ஏதேனும் இருந்தால் நமக்கு emailயும் அனுப்ப சொல்லலாம். இதை நான் வலுவாக பரிந்துரைக்கிறேன். |
01:50 | Reportsல் "Recent log messages" ஆனது Drupal ஆல் கண்டுபிடிக்கப்பட்ட error களை காட்டுகிறது. இதை அடிக்கடி பார்க்க வேண்டும். |
02:01 | Reportsல், Status report ஆனது Drupalஆல் கண்டுபிடிக்கப்பட்ட installation அல்லது configuration பிரச்சனைகளைக் காட்டுகிறது. |
02:10 | உதாரணமாக - என்னுடையது MySQL 5.6.30, Drupal Core status up-to-dateல் இல்லை, database up-to-date உள்ளது முதலியன. |
02:25 | Reportsல், மேலும் முக்கியமானவை Top 'access denied' errors மற்றும் Top 'page not found' errors. |
02:34 | இவை நம் site முடிந்தவரை சரியாக மிகவும் திறமையாக வேலைசெய்கிறதா என உறுதிசெய்வதற்கான சில வழிகள். |
02:41 | Top search phrases... siteன் search formsல் அடிக்கடி தேட பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைக் கொடுக்கிறது. |
02:49 | Drupal websiteல் reporting sectionஐ புரிந்துகொள்வது siteஐ பராமரிப்பதில் முதல் படி |
02:57 | அடுத்து Drupalஐ update செய்ய கற்போம். |
03:01 | Available updatesஐ க்ளிக் செய்க. |
03:04 | நம் Drupal coreன் தற்போதைய பதிப்பு 8.1.0 என்பதையும் recommended version 8.1.6 என்பதையும் காண்க. |
03:15 | இது இந்த டுடோரியலைப் பதிவு செய்யும்போது இதன் நிலை. |
03:20 | உங்களின் recommended version மாறியிருக்கலாம். |
03:24 | Drupalக்கான recommended versionஐ காண இணைய இணைப்பு வேண்டும் என்பதை மறக்காதீர். |
03:32 | Drupal core ஐ update செய்ய code fileகளை download செய்து நம் siteக்கு அதை பயன்படுத்த வேண்டும். |
03:40 | அதன் படிநிலைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம். |
03:45 | பின்வரும் படிகள் Bitnami Drupal stackக்கு பொருந்தும். |
03:50 | ஆனால் பெரும்பாலான படிகள் வேறுவழிகளில் நிறுவப்பட்ட Drupal க்கும் பொருந்தும். |
03:57 | படி 1: முதலில் site ஐ Maintenance modeல் வைக்க வேண்டும் |
04:03 | அதற்கு Configurationக்கு சென்று Developmentல் Maintenance modeஐ க்ளிக் செய்க. |
04:11 | "Put site into maintenance mode"ல் checkmark ஐ இடவும். |
04:16 | Save configuration buttonஐ க்ளிக் செய்க. |
04:19 | Maintenance mode செயலில் இருக்கும்போது administrators மட்டும்தான் login செய்யமுடியும். |
04:26 | admin தவறுதலாக logout செய்திருந்தால், URL ல் homepage க்கு பின் /user என கொடுத்து login செய்யவேண்டும் |
04:37 | ஆனால் மற்றவர்களுக்கு site under maintenance என்ற செய்தி மட்டும் காட்டப்படும். |
04:42 | படி 2: நடப்பு பதிப்பின் databaseஐ backup எடுத்தல். |
04:47 | Bitnami Drupal Stack control windowஐ திறப்போம். |
04:52 | இந்த control windowஐ எவ்வாறு திறக்கவேண்டும் என்பதற்கு Installation of Drupal டுடோரியலைக் காணவும். |
05:00 | Open PhpMyAdmin buttonஐ க்ளிக் செய்க. |
05:05 | phpmyadmin pageக்கு வருகிறோம். |
05:10 | இங்கு default username ஆனது root. |
05:13 | Drupal admin password மற்றும் phpmyadmin password இரண்டும் ஒன்றே. |
05:20 | எனவே username ல் root பின் Drupal admin passwordஐ டைப் செய்க, Go buttonஐ க்ளிக் செய்க. |
05:29 | backup எடுக்க, முதலில் top panelல் Export button ஐ க்ளிக் செய்க. |
05:36 | Export methodஐ Custom என தேர்க. |
05:40 | Database list ல் bitnami_drupal8ஐ தேர்க. |
05:45 | Output sectionல், filename template ஐ "drupal-8.1.0" என கொடுத்து Compression ஐ gzipped என்போம். |
05:58 | உங்கள் நடப்பு பதிப்பிற்கு ஏற்ப file பெயரை மாற்றிக்கொள்ளவும். |
06:03 | Object creation options sectionல், Add DROP DATABASE statement optionல் ஒரு check-mark ஐயும் |
06:12 | Add DROP TABLE optionல் ஒரு check-mark ஐயும் இடவும். |
06:16 | கீழே வந்து அடியில் Go buttonஐ க்ளிக் செய்க. |
06:21 | fileஐ சேமிக்க OK buttonஐ க்ளிக் செய்க. |
06:25 | Downloads folderக்கு சென்று backup file "drupal-8.1.0.sql.gz"ஐ காணவும். |
06:36 | படி 3: அனைத்து serverகளையும் நிறுத்துதல். |
06:42 | அனைத்து serverகளையும் நிறுத்த Bitnami Drupal Stack control windowக்கு வந்து |
06:49 | Manage Servers tab ஐ க்ளிக் செய்து Stop All buttonஐ க்ளிக் செய்க. |
06:56 | படி 4: Welcome tab ஐ க்ளிக் செய்து Open Application Folder buttonஐ க்ளிக் செய்க. |
07:04 | இது file browserஐ திறக்கும். |
07:07 | இதில் apps, drupal பின் htdocsக்கு செல்க |
07:15 | படி 5: Drupalன் நடப்பு பதிப்புக்கு codeஐ backup எடுக்க ஒரு folder ஐ இங்கு உருவாக்க வேண்டும். |
07:24 | அந்த folderக்கு நடப்பு பதிப்பின் எண்ணைக் பெயராக கொடுக்கவும். |
07:29 | அடுத்து, backup database fileஐ drupal-8.1.0 folderக்கு நகர்த்தவும். |
07:36 | படி 6: htdocs folderக்கு திரும்ப செல்லவும். |
07:42 | அடுத்து, folderகள் core மற்றும் vendor மற்றும் மற்ற fileகளை backup folder drupal-8.1.0ல் வைக்கவும். |
07:55 | இது database மற்றும் code இரண்டையும் ஒரே இடத்தில் வைக்க உதவும். |
08:00 | இது பழைய Drupal coreன் backup copy ஆகும். தேவையெனில் பழைய பதிப்பை திரும்ப பெற இது உதவும். |
08:07 | படி 7: நம் htdocs folderக்கு திரும்ப வருவோம். |
08:13 | அடுத்து, Drupalன் சமீபத்திய பதிப்பை தரவிறக்குவோம். |
08:18 | web browserஐ திறந்து இங்கு காட்டப்படும் linkக்கு செல்லவும் |
08:24 | Drupal 8ன் சமீபத்திய recommended versionஐ download செய்வோம். |
08:28 | இந்த டுடோரியலை பதிவுசெய்யும்போது அது Drupal core 8.1.6. |
08:35 | இந்த பார்க்கையில் இந்த பதிப்பு மாறியிருக்கலாம். |
08:40 | அதை திறக்க க்ளிக் செய்க. |
08:43 | download செய்ய tar.gz அல்லது zip fileஐ க்ளிக் செய்க. |
08:49 | சேமிக்க OK buttonஐ க்ளிக் செய்க. |
08:53 | இப்போது நம் Downloads folderக்கு சென்று drupal zip fileஐ htdocs folderக்கு நகர்த்துவோம். |
09:01 | உங்கள் வசதிக்காக drupal-8.1.6.zip file இந்த டுடொரியல் பக்கத்தில் Code files linkல் கொடுக்கப்பட்டுள்ளது. |
09:11 | உங்களிடம் இணைய இணைப்பு இல்லையெனில் அதை தரவிறக்கி பயன்படுத்தவும். |
09:18 | படி 8: அந்த fileஐ Unzip செய்க. இது htdocs folderல் drupal-8.1.6 folderஐ உருவாக்கும். |
09:30 | அதை திறக்க டபுள் க்ளிக் செய்க. |
09:34 | புது Drupal folderல் இருந்து, folderகள் core மற்றும் vendor மற்றும் மற்ற regular fileகளை htdocs folderக்கு நகர்த்துவோம். |
09:44 | படி 9: Bitnami Drupal Stack control windowக்கு வருவோம். |
09:51 | இப்போது Manage Servers tabக்கு சென்று அனைத்து serverகளையும் ஆரம்பிக்க Start All buttonஐ க்ளிக் செய்க. |
10:00 | படி 10: நம் siteக்கு செல்ல Welcome tabல், Go to Application button பின் Access Drupal linkஐ க்ளிக் செய்க. |
10:12 | Reports ஐ க்ளிக் செய்து பின் Status reportக்கு செல்வோம். |
10:17 | இங்கு, நம் Drupal பதிப்பைக் காணவும். இப்போது நாம் சமீபத்திய பதிப்பில் உள்ளோம். |
10:24 | ஆனால் நம் database பழையதாக உள்ளது. |
10:27 | core, module அல்லது themeஐ update செய்யும்போதெல்லாம், databaseஐயும் update செய்யவேண்டும். |
10:36 | படி 11: databaseஐ update செய்தல். |
10:42 | Extend menu க்கு சென்று update script linkஐ க்ளிக் செய்க. |
10:47 | Continue buttonஐ க்ளிக் செய்க. |
10:51 | சில pending updates உள்ளது என்கிறது. இந்த எண் உங்களுக்கு வேறுபடலாம். |
10:58 | Apply pending updates buttonஐ க்ளிக் செய்க. |
11:04 | இப்போது Administration pages linkஐ க்ளிக் செய்க. |
11:08 | errors ஏதும் வரவில்லை எனில் core ஐ வெற்றிகரமாக update செய்துள்ளோம் என பொருள். |
11:14 | படி 12: Go online linkஐ க்ளிக் செய்க. |
11:18 | Put site to maintenance mode optionல் check-mark ஐ நீக்குவோம். |
11:25 | Save configuration buttonஐ க்ளிக் செய்க. |
11:29 | இது மற்றவர்கள் காணும்படி siteஐ online modeக்கு திரும்ப கொண்டுவருகிறது. |
11:34 | இதுவரை நாம் பார்த்த படிகள் Bitnami installationக்கு பொருந்தும். |
11:40 | Drupal ஐ வேறு வழிகளில் நீங்கள் நிறுவியிருந்தால் Bitnami பகுதிகளை தவிற மற்ற அனைத்து படிகளும் உங்களுக்கு பொருந்தும். |
11:48 | இப்போது themes மற்றும் modulesஐ update செய்ய கற்போம். |
11:53 | core update உடன் ஒப்பிடுகையில் இது மிக சுலபம். ஒரு button க்ளிகில் இதை முடித்துவிடலாம். |
12:01 | சிலசமயங்களில் core update ஏதும் இன்றி modules அல்லது themes update மட்டும் இருக்கலாம். அதை காண்போம் |
12:09 | படி 1: Reports menuஐ க்ளிக் செய்து Available updatesஐ க்ளிக் செய்க. |
12:15 | Update tabஐ க்ளிக் செய்க. |
12:19 | இங்கு, இது சில themes மற்றும் modulesஐ update செய்ய வேண்டும் என்கிறது. |
12:25 | அனைத்தையும் தேர்ந்தெடுப்போம். |
12:28 | பின் Download these updates buttonஐ க்ளிக் செய்க. |
12:33 | performing updates in maintenance modeல் checkmark இருப்பதை உறுதிசெய்க. |
12:39 | updateஐ செயல்படுத்த Continue buttonஐ க்ளிக் செய்க. |
12:43 | இது codeஐ update செய்து siteஐ online modeக்கு கொண்டுவருகிறது. |
12:49 | படி 2: Run database updates linkஐ க்ளிக் செய்க. |
12:55 | databaseஐ backup எடுக்கவில்லை எனில், முன்னர் காட்டியதுபோல அதை செய்யவும். |
13:01 | Continue buttonஐ க்ளிக் செய்க. |
13:04 | core update க்கு நாம் செய்ததுபோல இது databaseஐ update செய்யும். |
13:09 | Apply pending updates buttonஐ க்ளிக் செய்க. |
13:14 | Administration pages linkஐ க்ளிக் செய்க. |
13:18 | Drupal தானாக siteஐ online modeக்கு கொண்டுவருகிறது. |
13:24 | இல்லையெனில், Go online என்ற optionஐ மேலே காண்பீர்கள். |
13:33 | படி 3: கடைசியாக, அனைத்தும் up to dateல் உள்ளதா என காண்போம். |
13:39 | Reports menuல் Available updatesஐ க்ளிக் செய்க. |
13:44 | இங்கு நம் Drupal core, Modules மற்றும் Themes அனைத்தும் up-to-dateல் இருப்பதைக் காணலாம். |
13:51 | அடுத்து, நம் பழைய பதிப்பிற்கு திரும்ப செல்ல கற்போம். |
13:56 | சில சமயம் உங்களுக்கே தெரியாமல் update தோல்வியுற்றால், பழைய பதிப்பிற்கே திரும்ப செல்லலாம். |
14:05 | அதற்கு பழைய core மற்றும் databaseஐ திரும்ப கொண்டுவரவேண்டும். |
14:10 | படி 1: siteஐ Maintenance modeல் வைக்கவும். |
14:17 | படி 2: Drupal Stack Control windowல் அனைத்து serverகளையும் நிறுத்தவும். |
14:25 | படி 3: htdocs folderஐ திறந்து |
14:30 | folderகள் core மற்றும் vendor மற்றும் மற்ற regular fileகளை drupal-8.1.6 folderக்கு நகர்த்தவும். |
14:40 | htdocs folderக்கு வந்து பழைய பதிப்பின் folderஐ திறக்கவும். |
14:44 | drupal-8.1.0ல் இருந்து folderகள் core மற்றும் vendor மற்றும் மற்ற regular fileகளை htdocs folderக்கு நகர்த்தவும். |
15:00 | படி 4: Drupal Stack Control windowல் Apache மற்றும் MySQL serverகளை செயல்படுத்தவும். |
15:11 | படி 5: பழைய databaseஐ கொண்டுவருதல். |
05:15 | Drupal Stack Control windowல் இருந்து phpMyAdmin pageஐ திறப்போம். |
15:23 | மேலே Import buttonஐ க்ளிக் செய்க. |
15:27 | Browse buttonஐ க்ளிக் செய்க. |
15:30 | இங்கு backup database fileஐ தேர்ந்தெடுக்கவும். |
15:34 | பின் அடியில் Go buttonஐ க்ளிக் செய்க. |
15:38 | படி 6: கடைசியாக நம் பழைய பதிப்பிற்கு வந்துவிட்டோமா என சோதிப்போம். |
15:45 | நம் Drupal siteக்கு வருவோம். |
15:49 | Reports menu ல் Status reportஐ க்ளிக் செய்க. |
15:52 | இப்போது நாம் Drupal பதிப்பு 8.1.0க்கு வந்துவிட்டோம் என்பதைக் காணலாம். |
15:59 | பழைய core மற்றும் databaseஐ மட்டும் திரும்ப கொண்டுவரமுடியும். |
16:05 | modules மற்றும் themesஐ கொண்டுவர முடியாது என்பதை குறித்துக்கொள்க. |
16:10 | படி 6ல் அவற்றிற்கு backup எடுக்கவில்லை எனவே அதன் பழைய பதிப்புகளை இங்கு காணமுடியாது. |
16:18 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
16:22 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் Site managementன் முக்கிய அம்சங்களை கற்றோம். அவை reportகளை பார்த்து ஆய்வு செய்தல், database மற்றும் codeஐ backup எடுத்தல் |
16:39 | Drupal coreஐ update செய்தல், Modules மற்றும் themesஐ update செய்தல் மற்றும் பழைய பதிப்பிற்கு திரும்ப வருதல். |
16:49 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
16:58 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
17:06 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
17:22 | இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |