Difference between revisions of "Digital-Divide/D0/Pre-Natal-Health-Care/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 | '''Visual Cue''' | '''Narration''' |- | 00:06 | “வாழ்த்துக்கள். உட்காருங்கள்.” |- | 00:10 |“அனி…')
 
Line 129: Line 129:
 
|-
 
|-
 
|  01.56
 
|  01.56
| “கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் நடக்க முயற்சிக்க வேண்டும்.  
+
| “கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் நடக்க முயற்சிக்க வேண்டும்.  
  
 
|-
 
|-
Line 205: Line 205:
 
|-
 
|-
 
|  03.16
 
|  03.16
|கர்ப்பத்தின் போது நல்ல சுகாதாரத்தை பேணுவதால் உங்களை நினைத்து பெருமையடைகிறேன்.  
+
|கர்ப்பத்தின் போது நல்ல சுகாதாரத்தை பேணுவதால் உங்களால் பெருமையடைகிறேன்.  
  
 
|-
 
|-

Revision as of 14:12, 29 May 2014

Visual Cue Narration
00:06 “வாழ்த்துக்கள். உட்காருங்கள்.”
00:10 “அனிதா, கடைசியாக எப்போது என்னை சந்தித்தீர்கள்?”
00:12 கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு.
00:15 இப்போது, இது எனக்கு நான்காவது மாதம்.
00:19 “கர்ப்ப காலத்தில் முறையான பரிசோதனைகள் அவசியம்.”
00:23 கர்ப்ப காலத்தின் போது பரிசோதனைகள் செய்வது முக்கியமான உடல்நல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.
00:29 கர்ப்ப காலத்தின் போது பிரச்சனைகளை குறைக்க இது உதவும்.
00:33 “கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் மூன்று மாதத்திற்கு ஒருமுறையும் கடைசி மாதத்தில் வாராவாரமும் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.”
00:41 “ பரிசோதனைகள் கீழ்காணும் தகவல்களைத் தரும்
00.43 தாயின் மனரீதியான மாற்றங்கள்,
00.46 கர்ப்ப காலத்திற்கு தேவையான சத்துணவு
00.48 விட்டமின்கள் மற்றும்
00.50 உடல் ரீதியான மாற்றங்கள்.
00.52 “இது எனக்கு முதல் முறை. இவை அனைத்தும் எனக்கு புதியது.
00.55 என்னையும் குழந்தையும் முறையாக பார்த்துக்கொள்ள அறிவுரை கூறுங்கள்.”
01.00 கர்ப்ப காலத்தில் உடல்நலம் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
01:04 இதில் கர்ப்ப காலத்தின் போது தாயின் உடல் நலம் குறித்து காண்போம்.
01:10 முதலில் மிக முக்கியமானது தாயின் உடல்நலம் ஆகும்.
01:14 எனவே இரும்பு சத்து குறைப்பாட்டை தடுப்பது மிக முக்கியமானது.
01:18 கர்ப்ப காலத்தின் போது பெண்கள் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
01.23 “கர்ப்ப காலத்தின் போது, உடலில் ரத்த தேவை அதிகரிக்கிறது.
01.27 உடலின் கூடுதலான ரத்த தேவைக்கு ஹீமோக்ளோபினை உருவாக்க அதிகமான இரும்பு சத்து தேவைப்படுகிறது.
01.34 எனவே பின்வரும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்
01:38 பச்சை காய்கறிகள்,
01.40 முட்டை மஞ்சள் கரு,
01.41 உலர்ந்த பழங்கள்,
01.42 பீன்ஸ் மற்றும்
01.43 இரும்பு சத்து நிறைந்த தானியங்கள்”
01.46 “அறுவை சிகிச்சை பிரசவம் பின்வரும் ஆபத்துகளை கொண்டது
01.50 வெட்டு காயம் உள்ள இடத்தில் நோய்தொற்று
01.52 ரத்த சோகைக்கு காரணமாகும் இரத்த போக்கு.
01.56 “கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் நடக்க முயற்சிக்க வேண்டும்.
01.59 முறையான உடல்நல பாதுகாப்பு மற்றும் சத்தாண உணவுகள் மூலம் இது சாத்தியமாகும்.
02.04 உடலின் ஆற்றல் நிலையை அதிகரிக்க நல்ல உடற்பயிற்சி அவசியம்.
02.09 உடற்பயிற்சி முதுகு பிரச்சனையை குறைக்கிறது மலச்சிக்கலை குறைக்கிறது மனஅழுத்தத்தை குறைக்கிறது.”
02.16 “இந்த இயந்திரம் என்ன செய்கிறது?”
02.18 இது சோனோக்ராபி இயந்திரம்
02.20 இது குழந்தையின் உடல்நலம் மற்றும் வளர்ச்சியை கண்காணிக்க உதவுகிறது”
02.25 “அனிதா, கீழே படுத்துக்கொள்ளுங்கள் சோனோக்ராபியின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது”
02.30 “கர்ப்பத்தின் இருபதாவது வாரத்தில் பொதுவாக சோனோக்ராபி செய்யப்படுகிறது.
02.36 நஞ்சுக்கொடி ஆரோக்கியமாக உள்ளதா, கருப்பையின் உள்ளே குழந்தையின் வளர்ச்சிய சரியாக உள்ளதா என கண்டுபிடிக்கவும் இது பயன்படுகிறது
02.43 “குழந்தையின் எடை குறைவு போன்ற முக்கியமான பிரச்சனைகளை கண்டுபிடுக்க இது உதவுகிறது.
02.48 ஒரு பெரிய அளவிற்கு கருச்சிதைவையும் தடுக்க இது உதவுகிறது.
02.54 “கர்ப்ப காலத்தின் போது முறையான சுகாதார பாதுகாப்பிற்கு பின்வருவன முக்கியமானவை- ”
02.58 முறையான பரிசோதனைகள்
03.00 சோனோக்ராபியின் முக்கியத்துவம்
03.02 இரும்பு சத்து குறைப்பாட்டை தடுத்தல் & நல்ல ஊட்டச்சத்து
03.05 அறுவைசிகிச்சை பிரசவம் பற்றி தகவல்
03.07 உடற்பயிற்சியின் முக்கியத்துவம்
03.09 “டாக்டர் பல தகவல்களை கொடுத்ததற்கு நன்றி. உங்கள் அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றுவோம்.”
03.16 கர்ப்பத்தின் போது நல்ல சுகாதாரத்தை பேணுவதால் உங்களால் பெருமையடைகிறேன்.
03.20 இதனால் குழந்தையும் தாயும் நலமுடன் சந்தோஷமாக இருப்பர்
03.24 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. கர்ப்ப காலத்தில் சத்தான உணவை உட்கொள்ளவும் நன்றாக கவனித்துக்கொள்ளவும் நினைவுகொள்க.
03.32 இந்த டுடோரியலை கேட்டதற்கு நன்றி.
03.35 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
03.38 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
03.40 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
03.45 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
03.49 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
03.53 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
04.00 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
04.05 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
04.11 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்
04.16 இந்த டுடோரியலுக்கு வீடியோ செளரப் காட்கில் மற்றும் ஆர்த்தி
04.21 தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana