Difference between revisions of "C-and-C++/C2/Relational-Operators/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !'''Time''' !'''Narration''' |- |00.02 | '''C''' மற்றும் '''C++''' ல் Relational Operators குறித்த spoken tutorialக்கு…')
 
Line 514: Line 514:
 
|  யாருடையது அதிகம் என பார்க்க மதிப்பெண்களை ஒப்பிடுக.  
 
|  யாருடையது அதிகம் என பார்க்க மதிப்பெண்களை ஒப்பிடுக.  
  
| 08.44
 
 
|-  
 
|-  
 +
| 08.44
 
|  இரண்டு அல்லது  மேற்பட்டவர்கள் சம மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களா என சோதிக்கவும்  
 
|  இரண்டு அல்லது  மேற்பட்டவர்கள் சம மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களா என சோதிக்கவும்  
  

Revision as of 15:37, 11 December 2013

Time Narration
00.02 C மற்றும் C++ ல் Relational Operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00.07 இந்த tutorialலில் நாம் கற்கப்போவது:
00.09 Relational operatorகளான
00.12 Less than: உதாரணமாக. a < b
00.15 Greater than: உதாரணமாக. a > b
00.18 Less than or equal to: உதாரணமாக. a <= b
00.23 Greater than or equal to: உதாரணமாக. a >= b
00.28 Equal to: உதாரணமாக. a == b
00.31 Not equal to: உதாரணமாக. a != b
00.38 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது: Ubuntu 11.10 இயங்குதளம்
00.43 Ubuntuல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1


00.50 ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00.53 Relational operators... இயல்எண் மற்றும் தசம புள்ளி எண்களை ஒப்பிட பயன்படுகிறது.
00.58 relational operatorகளை பயன்படுத்தி expressionகள்... false எனில் 0 ஐயும் true எனில் 1 ஐயும் திருப்புகிறது.
01.04 இப்போது ஒரு C programன் உதவியுடன் relational operatorகளை விளக்குகிறேன்.
01.10 ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன்.
01.11 எனவே, editor ஐ திறந்து codeஐ விளக்குகிறேன்.
01.16 முதலில் variableகள் a மற்றும் bஐ declare செய்க.
01.21 இந்த printf statement... பயனரை a மற்றும் b மதிப்புகளை உள்ளிட சொல்லி கேட்கிறது.
01.27 இந்த scanf statement... a மற்றும் b variableகளுக்கான உள்ளீட்டை வாங்குகிறது.
01.33 இப்போது greater than operator உள்ளது.
01.35 இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது.
01.39 a... bஐ விட பெரியது எனில் இது False ஐ திருப்புகிறது.
01.44 மேலுள்ள condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படுகிறது.
01.48 மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது.
01.51 பின் இயக்கம் அடுத்த statementக்கு தாவுகிறது.
01.54 இப்போது less than operator உள்ளது.
01.56 இதுவும் operandகளை ஒப்பிடுகிறது.
01.58 'a... bஐ விட சிறியது எனில் இது true ஐ திருப்புகிறது.
02.03 மேலுள்ள condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படுகிறது.
02.07 இல்லையானால் தவிர்க்கப்படுகிறது.
02.09 இதுவரை code ஐ இயக்குவோம்.
02.13 முதலில் பின்வருவதை comment செய்வோம். /* */ ஐ இடவும்
02.24 Saveல் சொடுக்கவும்.
02.26 relational.c என file ஐ சேமித்துள்ளேன்
02.30 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒன்றாக அழுத்தில் terminal window ஐ திறக்கவும்
02.36 compile செய்ய, இதை terminal லில் எழுதுக gcc relational.c -o rel
02.50 Enter ஐ அழுத்துக..
02.52 இயக்க எழுதுக ./rel Enter ஐ அழுத்துக.


02.58 a க்கு 8 ஐயும் b க்கு 3 ஐயும் தருகிறேன்.
03.02 காணும் வெளியீடு:
03.04 8 is greater than 3.
03.07 a மற்றும் bக்கு வெவ்வேறு மதிப்புகளுடன் code ஐ இயக்க முயற்சிக்கவும்.
03.12 codeக்கு வருவோம்.
03.14 comment ஐ இங்கிருந்து நீக்கி.... இங்கே இடுவோம்.
03.24 இப்போது இருப்பது less than or equal to operator.
03.29 இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது.
03.33 a... b ஐ விட குறைவாகவோ சமமாகவோ இருந்தால் இது true ஐ திருப்புகிறது.
03.39 மேலுள்ள condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படுகிறது.
03.43 மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது.
03.46 பின் இயக்கம் அடுத்த statementக்குத் தாவுகிறது.
03.50 அடுத்தது greater than or equal to operator.
03.53 இது a மற்றும் b ஐ ஒப்பிட்டு a... b ஐ விட பெரியதாகவோ சமமாகவோ இருந்தால் true ஐ திருப்புகிறது.
04.01 condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படும்.
04.05 இப்போது இதுவரை code ஐ இயக்கலாம்.
04.08 Save ல் சொடுக்கவும்.
04.10 terminalக்கு வருவோம்.
04.12 முன்புபோல Compile செய்து இயக்குவோம்.


04.17 a க்கு 8 ஐயும் b க்கு 3ஐயும் தருகிறேன்.
04.23 வெளியீடு காட்டப்படுகிறது:
04.25 8 is greater than or equal to 3
04.30 இப்போது மீதி codeக்கு வருவோம்.
04.33 multiline commentகளை இங்கிருந்தும், இங்கிருந்தும் நீக்குக.
04.43 இப்போது இருப்பது equal to operator.
04.47 இது இரு சமக்குறி மூலம் குறிக்கப்படுகிறது.
04.50 இந்த operator இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமம் எனில் true ஐ திருப்புகிறது.
04.57 a bக்கு சமமாகும் போது இந்த printf statement இயங்குகிறது
05.01 இல்லையெனில், இயக்கம் அடுத்த statementக்குத் தாவுகிறது.
05.06 அதேபோல, not equal to operator.
05.09 இந்த operator இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமமில்லை எனில் true ஐ திருப்புகிறது.
05.15 a bக்கு சமமில்லாத போது இந்த printf statement இயங்கும்
05.21 இந்த programன் முடிவுக்கு வருவோம்.

Return 0;

05.24 Saveல் சொடுக்குவோம்.
05.26 terminalக்கு வருவோம்.
05.28 முன்புபோல Compile செய்து இயக்குவோம்.


05.33 a க்கு 8 ஐயும் b க்கு 3ஐயும் தருவோம்.
05.39 வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:
05.41 8 is not equal to 3
05.45 எனவே relational operatorகள் வேலைசெய்வதைப் பார்ப்போம்.
05.48 இந்த code ஐ வெவ்வேறு உள்ளீடுகளுடன் இயக்க முயற்சிக்கவும்.
05.52 இப்போது இதுபோன்ற program ஐ C++ ல் எழுதுவது மிக சுலபம்.
05.56 syntax ல் சில வித்தியாசங்கள் உள்ளன.
06.00 ஏற்கனவே C++ல் code ஐ எழுதிவைத்துள்ளேன்.
06.04 இதுதான் C++ ல் relational operatorsக்கான code.
06.09 header வித்தியாசமானது என்பதை கவனிக்க.
06.12 இங்கே using statement உம் உள்ளது.
06.16 C++ல் வெளியீட்டு statement cout.
06.19 C++ல் உள்ளீட்டு statement cin.
06.22 இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் ஒத்தவையே.
06.27 saveல் சொடுக்கவும்.
06.29 extension .cpp உடன் file சேமிக்கப்படுகிறதா என உறுதிசெய்யவும்
06.33 என் file ஐ relational.cpp என சேமித்துள்ளேன்
06.38 codeஐ compile செய்வோம்.
06.40 terminal ஐ திறந்து எழுதுக g++ relational.cpp -o rel1
06.51 இயக்க எழுதுக './ rel1, Enter ஐ அழுத்துக..
06.57 a க்கு 8ஐயும் b க்கு 3ஐயும் தருகிறேன்.
07.01 வெளியீடு காட்டப்படுகிறது:
07.03 C codeல் கிடைத்தது போலவே வெளியீடு உள்ளதைக் காண்கிறோம்.
07.08 இப்போது நாம் சந்திக்கக்கூடிய ஒரு பிழையைக் காணலாம்.
07.11 programக்கு வருவோம்
07.13 இங்கே இரு சமக்குறிக்கு பதில் ஒரு சமக்குறி இடுகிறோம் எனில்.
07.20 Saveல் சொடுக்கவும்
07.21 terminalக்கு வருவோம்.
07.24 முன்புபோல Compile செய்து இயக்குவோம்.
07.34 இங்கே இது 3 is equal to 3 என காட்டுவதைக் காணலாம்.
07.38 programக்கு வருவோம்
07.40 ஏனெனில் இங்கே இருப்பது ஒரு assignment operator.
07.44 எனவே b ன் மதிப்பு aக்கு assign செய்யப்படுகிறது.
07.47 இப்போது இந்த பிழையை சரிசெய்வோம்.
07.49 ஒரு சமக்குறியை இடுவோம்
07.52 Save ல் சொடுக்கவும்
07.55 terminalக்கு வருவோம்
07.56 முன்புபோல compile செய்து இயக்குவோம்.
08.04 இப்போது வெளியீடு சரியானது.
08.06 சுருங்கசொல்ல.
08.09 இந்த tutorialலில் நாம் கற்றது
08.10 Relational operatorகளான
08.12 Less than: உதாரணமாக. a b
08.18 Less than or equal to: உதாரணமாக. a<=b
08.23 Greater than or equal to: உதாரணமாக. a>=b
08.27 Equal to: உதாரணமாக. a==b
08.30 Not equal to: உதாரணமாக. a!=b
08.34 பயிற்சியாக
08.35 இந்த program ஐ எழுதுக. மூன்று மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடாக பெறுக.
08.40 யாருடையது அதிகம் என பார்க்க மதிப்பெண்களை ஒப்பிடுக.
08.44 இரண்டு அல்லது மேற்பட்டவர்கள் சம மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களா என சோதிக்கவும்
08.49 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
08.54 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
08.58 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09.06 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
09.14 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

09.24 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09.35 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst