Difference between revisions of "LaTeX-Old-Version/C2/MikTeX-Updates/Tamil"
From Script | Spoken-Tutorial
Nancyvarkey (Talk | contribs) m (Nancyvarkey moved page LaTeX/C2/MikTeX-Updates/Tamil to LaTeX-Old-Version/C2/MikTeX-Updates/Tamil without leaving a redirect) |
|
(No difference)
|
Latest revision as of 13:15, 4 July 2016
Time | Narration |
---|---|
00:00 | மிக்டெக் என்னும் ஒரு லேடக் வினியோகத்தில் காணாமல் இருக்கும் பொதிகளை நிறுவுவதையும் அதை அப்டேட் செய்வதையும் பார்க்கலாம். |
00:10 | டெஸ்க்டாப் இல் டெக்னிக் சென்டரை காணலாம், இதை நிறுவுவது எப்படி எனத்தெரியாவிட்டால் விண்டோஸ் இல் லேடக் நிறுவி இயக்குவது என்ற டுடோரியல் ஐ காணுங்கள். அதில் விண்டோஸ் இல் மிக்டெக் நிறுவுதலும் சேர்த்துள்ளது. |
00:22 | இது விண்டோஸ் இல் மிக்டெக் நிறுவுவதையும் அடக்கியது. நான் தயாரித்த எல்லா டுடோரியல்களிலும், |
00:30 | பதிவு செய்த டுடோரியலின் அளவு நான் கணினியில் செலவிட்ட நேரமேதான். |
00:37 | ஆனால் நடப்பு டுடோரியலில் வலை இணைப்பு தேவையாக உள்ள சிலவற்றை காட்ட வேண்டியிருக்கிறது. |
00:43 | வலை இணைப்பு வேகம் மிதமாக இருப்பின் தரவிறக்கங்கள் நேரமாகலாம். |
00:48 | ஆகவே தேவையான போது பதிவை தற்காலிக நிறுத்தம் செய்து விடுவேன். |
00:55 | பீமர் கிளாஸ் ஐ பயன்படுத்தும் ஒரு பைலை காணலாம். இதோ இருக்கிறது |
01:02 | பீமர் பற்றி தெரியாவிடில் அதுகுறித்த டுடோரியல் ஐ காண்க. |
01:09 | கண்ட்ரோல் f7 ஐ ஒன்றாக அழுத்தி இந்த பைலை தொகுக்கலாம். |
01:23 | மிக்டெக்.... பீமரை காணவில்லை என்று புகார் செய்கிறது. |
01:27 | பிறகு இந்த பிரச்சினையை கையாளுவதை பார்க்கலாம். மிக்டெக் ஐ அப்டேட் செய்யலாம். |
01:34 | இப்போது நான் செய்வது போல இரண்டு விதமாக செய்யலாம். start ஐ சொடுக்கி Programs க்கு போகலாம். |
01:47 | மிக்டெக் இல் இரண்டு தேர்வுகள் உண்டு. நேரடியாக அப்டேட் செய்யலாம், அல்லது உலாவி பொதிகளை தேர்ந்தெடுத்து செய்யலாம். |
01:57 | அப்டேட் க்குப்போகலாம். ஒரு பாக்கேஜ் ரெபாசிடரியை தேர்ந்தெடுக்கலாம். |
02:12 | வழக்கமாக நான் inria வை பயன்படுத்துகிறேன். கடைசியாக அதை பயன்படுத்தியதால் இப்போது அது தேர்வாக காட்டப்படுகிறது. |
02:19 | ஆனால் ஆரம்பத்தில் உங்களுக்கு இந்த இரண்டு பொத்தான்கள்தான் தெரியும். |
02:22 | Let me choose a remote package repository ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:28 | இதை முயற்சித்து பார்க்கலாம். அதற்கு முன் இணைப்புகளை அமைக்க வேண்டும். |
02:34 | நாங்கள் ஒரு ப்ராக்ஸி server ஐ பயன்படுத்துகிறோம்.... Address. Port. |
02:44 | அதற்கு authentication வேண்டும். ஆகவே இங்கே நான் ஒரு குறியிடுகிறேன். ஆகவே இதை தேர்ந்தெடுக்க அது பெயர் password எல்லாம் கேட்கும். |
02:58 | அந்த தகவலை உள்ளிடுகிறேன். தொலை ரெபாசிடரியில் நான் எனக்கு சௌகரியமான தேர்வை அமைத்துக்கொள்ள முடியும். இங்கு இது ஏற்கெனெவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. |
03:19 | அதையே தேர்ந்தெடுக்கிறேன். அப்டேட் செயல் நேரமெடுக்கும். ஏனெனில் அது எல்லா பொதிகளின் தகவல்களையும் தரவிறக்க வேண்டும். |
03:33 | இதனால் நான் பதிவை கொஞ்ச நேரம் நிறுத்துகிறேன். ஐந்து நிமிடங்கள் சென்றதும் அது வந்து அப்டேட் எதுவும் இல்லை என்று சொல்கிறது. ஏன் என்றால் நான் இப்போதுதான் அப்டேட் செய்தேன். |
03:47 | இல்லை எனில் என்ன செய்யும்? பொதிகளின் பட்டியலை கொடுத்து தேர்ந்தெடுக்க பொதிகளை பரிந்துரையும் செய்யும். |
03:56 | முதலில் அப்டேட் செய்த போது எல்லா பொதிகளையும் பட்டியல் இட்டு தேர்ந்தெடுத்தும் இருந்ததால் எல்லாவற்றையுமே அப்டேட் செய் என்றேன் |
04:05 | நீங்கள் இப்படி தினசரி செய்ய வேன்டியதில்லை. அவ்வப்போது செய்தால் போதும். |
04:11 | சரி. இப்போது திரும்பிப்போகலாம். என்னால் திரும்பிப்போக முடிகிறது. |
04:22 | இப்போது உங்கள் அருகில் உள்ள ரெபாசிடரி மூலமோ ஒரு டிவிடி, சிடி வினியோகத்தின் மூலமோ இந்த அப்டேட்டை செய்யவும் முடியும். |
04:34 | நீங்கள் அப்படிக்கூட செய்யலாம். இப்போது இதை நான் கான்சல் செய்கிறேன். |
04:41 | இன்னும் பீமரை சேர்ப்பது பற்றி நாம் பார்க்கவில்லை. மிக்டெக் வினியோகத்தை அப்டேட் செய்தோம் அவ்வளவே. |
04:53 | நான் அதற்கு இரண்டு வழிகள் இருப்பதாக சொன்னேன். இப்போது காட்டப்போவது இரண்டாவது வழி. programs, மிக்டெக் போகலாம். |
05:03 | இதில் browse packages எனத்தேர்ந்தெடுக்கலாம். இதுவும் கொஞ்ச நேரம் ஆகும். லோட் ஆக சில நொடிகள். |
05:17 | வினியோகத்தை கட்டுமானம் செய்த போது சேர்த்த எல்லா பேக்கேஜ்களின் பட்டியலும் தரப்படும். |
05:23 | இந்த நெடு பத்திதான் மிக முக்கியம். இதில்தான் நமக்கு வேண்டிய பேக்கேஜ் கணினியில் இருக்கிறதா என்று காணமுடியும். |
05:31 | ஆகவே இப்போது கீழே போய் பீமர் இருக்கிறதா என்று பார்க்கலாம். இதோ பீமர். ஆனால் இந்த பத்தியில் ஒன்றும் இல்லை. ஆகவே நம் கணினியில் பீமர் இல்லை. |
05:44 | சரி மேற்கொண்டு போகு முன் முதலில் இப்படி போகலாம்: ‘task’, ‘update wizard’ – சற்று நேரம் முன் பார்த்த அதே மெனு பட்டியலை காண்கிறோம். |
06:01 | நீங்களும் முன் செய்தையே செய்ய முடியும். வலை இணைப்பை அமைத்துவிட்டு இணைப்பு, ப்ராக்ஸி, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சோதித்துவிட்டு தேவையான பொதியை தேர்ந்தெடுத்துவிட்டு மேலே போகலாம். |
06:13 | நாம் இப்போது அப்டேட் செய்யப்போவதில்லை என்பதால் இதை நாம் தொடரப்போவதில்லை. சில தொலை தளங்கள் வேலை செய்யாமலும் இருக்கலாம் என்பதையும் நினைவில் இருத்த வேன்டும். |
06:26 | சிலவற்றை முயற்சி செய்து சரியாக வேலை செய்வதை பார்க்கவும். பின் தைரியம் வந்துவிடும். |
06:34 | பிறகு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். இப்போது இதை கான்சல் செய்கிறேன். |
06:40 | இப்போது நாம் செய்ய நினைத்ததை செய்வோம். இதை தேர்ந்தெடுக்கிறேன். உடனேயே இது செயலுக்கு வந்துவிட்டது. |
06:50 | இப்போது இதை நிறுவு என்று சொன்னால்... இந்த நிறுவல் அப்டேட் செய்யப்படும், ஒரு பொதி நிறுவப்படும் என்று சொல்கிறது. |
07:01 | அதையே செய்வோம். இது இப்போது ப்ராக்ஸி உறுதிபடுத்தல் வேண்டும் என்கிறது. இப்போது இதை மூடலாம். |
07:11 | இங்கு நாம் செய்ய வேண்டியது.... அது புதுப்பிக்கிறது போலும்.. கொஞ்சம் நேரமாகிறது. ஆகவே நாம் ரெபாசிடரியை மாற்றுவோம். |
07:30 | இதை மீண்டும் செய்ய வேண்டும். இணைப்பு.. ஏற்கெனெவே இருக்கிறது. சரி. இதற்கும் password வேண்டி இருக்கிறது. |
07:42 | அதை கொடுப்போம். சரி, ஆகவே ‘inria’ ஏற்கெனெவே தேர்வில் இருக்கிறது. இதை முடித்துவிடலாம். |
08:04 | சில நிமிடங்களுக்குப்பின் சிலதை அப்டேட் செய்ய முடியாது என்று பிழை செய்தி வருகிறது. பரவாயில்லை. |
08:10 | என்ன செய்யலாம் எனில் எப்படியாவது நாம் விரும்பிய பொதியை நிறுவலாம். பீமர் இதோ இருக்கிறது. |
08:23 | இதை தேர்ந்தெடுப்போம். இதை அழுத்தலாம். இது நிறுவலை தொடங்கிவிட்டது. பதிவை இடை நிறுத்தம் செய்கிறேன். சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு பீமரை தரவிறக்கிவிட்டது. ஆகவே இதை மூடலாம். |
08:45 | இப்போது சோதிக்கலாம்.உதாரணமாக …. இந்த பக்கத்தை அது அப்டேட் செய்கிறது. |
08:55 | அது பாட்டுக்கு செய்யட்டும். நாம் இங்கே வந்து இதை control f7 ஐ பயன் படுத்தி தொகுக்கலாம். |
09:05 | பழைய பைலை என்ன செய்தோம் என்று நினைவில்லை. இதை கான்சல் செய்யலாம். இதுதான் சமீபத்திய தொகுப்பின் பைல். |
09:22 | இதை தெளிவாக்க இதை மூடி control f7 செய்யலாம். |
09:34 | முன்னே இது பீமரை காணவில்லை என்று புகார் கூறியது, இப்போது வேறு ஏதோ காணவில்லை என்கிறது. |
09:41 | பீமர் பற்றி புகார் இல்லை. ஏன்? அது நிறுவப்பட்டுவிட்டது. கீழே போய் பீமரை பார்க்கலாம். |
09:54 | கீழே ஸ்க்ரால் செய்து பார்க்க பீமர் நவம்பர் ஐந்தாம் தேதி நிறுவப்பட்டதாக சொல்கிறது. இப்போதைய புகார் என்ன என்று பார்க்கலாம். |
10:13 | இது நேரடியாக நிறுவ தேர்வு தருகிறது, ஆகவே இரண்டு வழிகள் உள்ளன. |
10:17 | ஒன்று இங்கேயே இதை நிறுவுவது. இரண்டாவது இதன் வழியாக போவது. இதை செய்தால்.... . |
10:24 | இது உறுதிப்படுத்தலை கேட்கிறது. |
10:35 | முன் செய்த முறையில் அது பிரதி எடுப்பதை எல்லாம் காட்டிக்கொண்டு இருந்தது. இப்போது எல்லாம் பின் புலத்தில் நடக்கிறது. |
10:45 | ஆகவே கொஞ்ச நேரம் காத்திருப்போம். |
10:48 | அதையும் தரவிறக்கிவிட்டது. xcolor.sty காணவில்லை, நிறுவவா என்கிறது. |
10:55 | சரி என்போம். அது பின் புலத்தில் நிறுவுகிறது. சரி இப்போது translator காணவில்லை என்கிறது. அதையும் நிறுவலாம். |
11:10 | பல நிமிடங்களுக்குப்பின்னும் ஒன்றும் பிழை செய்தி காணவில்லை. சரி, இங்கே போய் இப்போதைய நிலை என்ன என்று பார்க்கலாம். |
11:22 | இங்கே ஒரு மறு அமைவு செய்துவிட்டு நாம் நிறுவச்சொன்னதெல்லாம் நிறுவியாகிவிட்டதா என்று சோதிக்கலாம். |
11:29 | பீமர் இதோ இருக்கிறது. மற்றவை எல்லாம் - pgfcode, xcolor மற்றும் translator எல்லாம் இருக்கின்றனவா என பார்க்கலாம். |
11:59 | pgf இன்று நிறுவியதாக காட்டுகிறது. Translator உம் நிறுவியாகிவிட்டது. |
12:17 | Xcolor தான் மீதி. அதையும் சோதிக்க …. அதுவும் நிறுவியாகிவிட்டது. ஆகவே தேவையான எல்லாம் நிறுவியாகிவிட்டது. இப்போது தொகுக்கலாம். control f7. |
12:40 | எல்லாம் சரியாக இருப்பதாக தோன்றுகிறது. இனி இது வேண்டாம். மூடிவிடலாம். |
12:48 | நான் உருவாக்கிய பைலை திறக்கிறேன். அப்போது அது லேடக் பைல்களில் இருக்கும். அதன் பெயர் மிக்டெக் update dot tex. |
13:03 | இப்போது மிக்டெக் update dot பிடிஎஃப் ஐ பார்க்கிறேன். இதோ இதுதான் நான் பார்க்கும் பைல். இதை சுமத்ராவால் திறக்கிறேன். |
13:21 | இதோ இருக்கிறோம். இதை கொஞ்சம் சிறியதாக்கலாம். போதும். நீங்கள் பெரியதாக்கும் போது என்ன ஆகிறது என கவனியுங்கள். |
13:42 | இதை இப்போது மூடலாம். இங்கே தேதி நவம்பர் நான்கு என்று இருக்கிறது. ஏனெனில் நேற்று இதை செய்யப்பார்த்தேன். சரியாக வரவில்லை. |
13:54 | ஆக்வே இதை ஐந்து என்று மாற்றலாம். சேமித்து.. Control f7. அது அப்டேட் ஆகிவிட்டது. கீழே போகலாம். |
14:14 | இந்த டுடோரியல் தயாரிக்க நிதி உதவி ஐசிடி வழியாக National Mission on Education மூலம் கிடைக்கிறது. |
14:24 | இந்த திட்டத்துக்கு வலைத்தளம் sakshat.ac.in. உங்கள் ஆலோசனைகளை எனக்கு அனுப்புவதை வரவேற்கிறேன். மின்னஞ்சல் kannan@iitb.ac.in . |
14:35 | எதிர்காலத்தில் இந்த ஸ்போகன் டுடோரியல் செயல்களை spoken tutorial. Org மூலம் செய்ய இருக்கிறோம். |
14:42 | கடைசியாக ஒரு விஷயம் .. பல அப்டேட்களும் தனி பேக்கேஜ்களும் நிறுவ அதிக நேரம் எடுக்கவில்லை. |
14:51 | சில நிமிடங்களே ஆகியிருக்கலாம். ஆனால் முதல் முதல் செய்யும் அப்டேட்கள் அதிக நேரம் பிடிக்கும். |
14:56 | உதாரணமாக இங்கே பயன்படுத்தியது மிக்டெக் 2.7, இதை முதலில் அப்டேட் செய்ய 20 நிமிடங்களோ, அரை மணி நேரம் கூட ஆகலாம். |
15:08 | உங்களுடையது எந்த பதிப்பு மிக்டெக் என்பதை பொருத்து அப்டேட் ஆக நேரமும் முயற்சியும் தேவையாக இருக்கலாம். |
15:17 | அதன் பின் அதிக பிரச்சினை இல்லாத வலை இணைப்பு இருந்தால் தனி பேக்கேஜ்கள் அதிக நேரம் பிடிக்காது. |
15:24 | இத்துடன் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். கலந்து கொண்டமைக்கு நன்றி. வணக்கம். |