Difference between revisions of "Health-and-Nutrition/C2/Cross-cradle-hold/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 405: | Line 405: | ||
|இத்துடன் இந்த tutorial முடிகிறது. | |இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
− | + | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா, நன்றி. | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|} | |} |
Latest revision as of 17:05, 5 August 2020
|
|
00:01 | பாலூட்டுவதற்கான Cross cradle பிடிப்பு முறை குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorialல் நாம் கற்கபோவது- குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்ற சரியான பாலூட்டும் பிடிப்பு முறையை தேர்ந்தெடுத்தல் |
00:16 | பாலூட்டும் முன் தாய் செய்யவேண்டியவை |
00:20 | Cross cradle பிடிப்பு முறைக்கான படிப்படியான வழிமுறைகள். |
00:24 | இதை ஆரம்பிக்கலாம். |
00:26 | உலகம் முழுவதும் பல்வேறு பிடிப்பு முறைகளை பயன்படுத்தி தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டுக்கிறார்கள். |
00:32 | தாய்க்கும் சேய்க்கும் பாலூட்டுவதற்கான சிறந்த பிடிப்பு முறையானது பாலூட்டி முடிக்கும் வரை தாயும் சேயும் வசியாக இருப்பதே ஆகும் |
00:43 | குழந்தை தாயின் மார்பகத்துடன் சேர்த்து அணைத்து போதுமான அளவு பால் பெறுமாறு இருக்க வேண்டும் |
00:51 | Cross cradle பிடிப்பு என்ற ஒருவகை பிடிப்பு முறை பற்றி கற்போம். |
00:56 | Cross cradle பிடிப்பு முறையானது-
குழந்தையின் உடலின் முழுக் கட்டுப்பாட்டுற்கும் மார்பகத்தை தாங்குவதற்கும் நன்றாக மார்பகம் குழந்தையின் வாயினுள் செல்வதற்கும் சிறந்த முறை ஆகும். |
01:06 | பாலூட்டுவதற்கு முன், தாய் தன் கைகளை சுத்தமாக கழுவி உலர வைக்க வேண்டும். |
01:12 | பின்னர் சுடவைத்து குளிர்விக்கப்பட்ட நீரை அருந்த வேண்டும். |
01:16 | பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 750 முதல் 850 மில்லி லிட்டர் வரை பாலை உற்பத்தி செய்கிறார்கள். |
01:24 | அதனால், அவர்கள் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். |
01:29 | அடுத்து, தாயின் நிலை பற்றி காண்போம். |
01:33 | தாய் தரையில் அல்லது கட்டிலில் கால்களை மடித்தவாறு உட்கார வேண்டும். |
01:38 | அல்லது நாற்காலியில் பாதங்கள் தரையில் படியுமாறு உட்கார வேண்டும். |
01:43 | நாற்காலி உயரமாக இருந்தால் காலுக்கு சிறிய நாற்காலியோ அல்லது தலையணையோ வைத்து உட்கார வேண்டும். |
01:54 | உட்காரும் போது, முதுகு நேராக உள்ளதா என கவனிக்கவும் - இத முதுகு வலியை தவிர்க்கும் |
02:03 | தோள்கள் தூக்கியோ அல்லது வளைத்தோ இல்லாமல் தளர்ந்து இருக்கவேண்டும் |
02:08 | பாலூட்டி முடிக்கும் வரை இவ்வாறே தளர்ந்து இருக்க வேண்டும். |
02:13 | தாய் பாலூட்டவிருக்கும் மார்பகத்தை திறந்து வைக்க வேண்டும். |
02:19 | அதில் உள்ளாடை அல்லது ரவிக்கை கொண்டு அழுத்தம் கொடுக்க கூடாது. |
02:26 | வசதியாக உட்கார்ந்த பிறகு, குழந்தையை தூக்க வேண்டும். |
02:31 | தாய் பாலூட்டவிருக்கும் மார்பகத்திற்கு எதிரான கையால் குழந்தையின் தலையை பிடிக்க வேண்டும். |
02:39 | தாயின் அதே கையின் அக்குளில் குழந்தையின் கால்கள் இருக்க வேண்டும். |
02:45 | இங்கு காட்டப்படும் தாய், தன் வலது மார்பகத்தில் பாலூட்டுகிறார். அதானால், குழந்தையின் கால்கள் அவரின் இடது அக்குளில் உள்ளது. |
02:57 | குழந்தையின் தலையின் அடிப்பாகத்தை பிடிக்க தாய் தன் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களை பயன்படுத்துகிறார். |
03:05 | குழந்தையை தூக்க மேலும் ஆதரவு வேண்டுமெனில் தன் மடிமீது ஒரு தலையணையை வைத்துக்கொள்ளலாம். |
03:15 | மார்பகத்தை குழந்தைக்கு அருகில் கொண்டுவர தாய் குனியக்கூடாது என்பதை நினைவு கொள்க. |
03:21 | இது வசதியாக இருக்காது. முதுகு வலியும் ஏற்படும். |
03:26 | எப்போதும் நேராக அமர்ந்து குழந்தையை தூக்கியே மார்பகத்திற்கு கொண்டு வரவேண்டும். |
03:33 | அடுத்து, தாயின் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களின் நிலையைக் காண்போம். |
03:39 | தாயின் கட்டைவிரல் குழந்தையின் ஒரு காதின் பின்புறமும், மற்ற விரல்கள் மற்றொரு காதின் பின்புறமும் இருக்க வேண்டும். |
03:46 | குழந்தையின் காதின் பின்புறத்தில் இருந்து விரல்களை கழுத்திற்கு நகர்த்தக் கூடாது. |
03:52 | தாயின் மணிக்கட்டு குழந்தையின் தோள்களுக்கு இடையே இருக்க வேண்டும். |
03:56 | குழந்தையின் முதுகில் தாயின் கையால் அழுத்தத்தைக் கொடுக்க கூடாது. |
04:04 | இது குழந்தைக்கு பால் குடிக்கும்போது வசதியாக இருக்கும். |
04:08 | அடுத்து, குழந்தையின் உடலை எவ்வாறு சரியாக வைப்பது என பார்ப்போம். |
04:15 | குழந்தையின் வயிறு தாயின் உடலோடு சற்று அழுந்தி இருக்க வேண்டும். |
04:20 | இதனால் மார்பகத்தை எட்ட குழந்தைக்கு கடினமாக இருக்காது. |
04:26 | மற்றும் குழந்தையின் வாய் நன்றாக மார்பத்துடன் இணையவும் எளிமையாக இருக்கும். |
04:32 | அடுத்தது குழந்தையின் உடலை ஒழுங்கமைக்க கற்போம். |
04:37 | நாம் சாப்பிடும் போது, எப்போதும நம் தலை, கழுத்து மற்றும் உடல் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். |
04:43 | ஆனால், பாலூட்டும் போது, பல தாய்மார்களால் குழந்தையின் தலை ஒருபக்கமாக சாய்க்கப்படுகிறது. |
04:50 | இது குழந்தைக்கு வசதியாக இருக்காது. |
04:55 | பாலூட்டும் போது குழந்தையின் தலை, கழுத்து மற்றும் உடல் எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கவேண்டும். |
05:01 | இதனால் குழந்தை எளிதாக பாலை விழுங்க முடியும். |
05:05 | இப்போது குழந்தையின் உடலை வைப்பதற்கான மூன்றாவது விஷயத்தைக் காண்போம். |
05:10 | தாய் குழந்தையின் முழு உடலையும் தாங்க வேண்டும். |
05:14 | இல்லையெனில் குழந்தை மார்பகத்துடன் நன்றாக இணைய அதிகமான முயற்சி எடுக்க வேண்டிவரும். |
05:22 | அடுத்து, குழந்தையின் மூக்கு மற்றும் தாடையின் நிலையைக் காண்போம். |
05:28 | குழந்தையின் மூக்கு, மார்பக காம்பிற்கு நேராக இருக்க வேண்டும். |
05:33 | தாடையானது மேல்நோக்கி மார்பகத்திற்கு மிக அருகில் இருக்க வேண்டும். |
05:38 | இது பாலூட்டும்போது areola ன் கீழ்பெரும்பகுதி குழந்தையின் வாயினுள செல்வதை உறுதிசெய்யும். |
05:45 | இதனால், குழந்தை திறமையாக அதிகமாக பால் குடிக்க கீழ் தாடையை பயன்படுத்தும். |
05:51 | குறிப்பு- Areola என்பது மார்பக காம்பை சுற்றி இருக்கும் கருப்பு பகுதி. |
05:57 | இப்போது குழந்தை சரியான நிலையில் உள்து, அடுத்து மார்பகத்தை எவ்வாறு பிடிப்பது என காண்போம். |
06:04 | மற்றொரு கையின் விரல்களை பயன்படுத்தி தாய் தன் மார்பகத்தை அடியில் U வடிவத்தில் பிடிக்க வேண்டும். |
06:12 | படத்தில் காட்டப்படும் தாய் தன் வலது மார்பகத்தை பிடிக்க வலது கையை பயன்படுத்துகிறார். |
06:19 | கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களின் சரியான நிலைகளை புரிந்துகொள்ள, தாயின் வலது மார்பகக் காம்பை கடிகாரத்தின் மையமாக கற்பனைசெய்து கொள்க. |
06:31 | தாய் தன் வலது கட்டைவிரலை இந்த கடிகாரத்தில் 9 ல் வைக்க வேண்டும். |
06:38 | வலது ஆட்காட்டி மற்றும் நடு விரல்களை 3 ல் வைக்க வேண்டும். |
06:46 | விரல்களை எப்போதும் குழந்தையின் உதடுகளுக்கு இணையாக வைக்க வேண்டும்.
ஏன்? |
06:51 | இதை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம். |
06:56 | வடாபாவ் அல்லது burgerஐ நாம் சாப்பிடும்போது, நமது வாயும் உதடுகளும் கிடைமட்டமாக திறக்கிறது. |
07:02 | வடாபாவ் அல்லது burgerஐ கடிக்க அதை கிடைமட்டாக பிடிக்கிறோம். |
07:08 | இங்கே, கட்டைவிரல் மற்று மற்ற விரல்கள் உதடுகளுக்கு இணையாக வைக்கப்படுகிறது. |
07:12 | வடாபாவ் அல்லது burgerஐ செங்குத்தாக வைத்தால், அதை பெரியதாக கடிக்க முடியாது. |
07:19 | அதேபோல, குழந்தையின் உதடுகளின் திசையை கவனிக்கவும். |
07:25 | இங்கு உதடுகள் செங்குத்தாக உள்ளன. எனவே, விரல்கள் மற்றும் கட்டை விரல்களை மார்பத்தின் மீது செங்குத்தாக வைக்க வேண்டும். |
07:34 | இது areola ன் பெரும் பகுதி குழந்தையின் வாயினுள் செல்ல உதவும். |
07:39 | குழந்தையின் உதடுகளுக்கு இணையாக இருப்பது தவிர, மார்பக காம்பில் இருந்து 3 விரல் இடைவெளியில் தாயின் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்கள் இருக்க வேண்டும். |
07:50 | வடாபாவ் அல்லது burgerஐ சாப்பிடும்போது, அதை மிக அருகில் வைத்தால் பெரிதாக கடிக்க முடியாமல் நமது விரல்கள் தடுத்து விடும். |
08:00 | மிக தூரத்தில் வைத்தால், வாயில் வைக்க சரியான வடிவில் இருக்காது. |
08:07 | எனவே, பெரிதாக கடிக்க சரியான தூரத்தில் வைக்க வேண்டும். |
08:12 | அதேபோல குழந்தைக்கும், இங்கு காட்டப்படுவது போல மார்பக காம்பில் இருந்து 3 விரல் இடைவெளி சரியானதாக இருக்கும். |
08:20 | இந்த இடைவெளி, குழந்தையின் வாயில் areolaன் பெரும்பகுதி செல்ல தாயின் விரல்கள் தடுக்காமல் இருப்பதை உறுதி செய்யும் |
08:29 | மார்பக காம்பை மட்டும் தாய் அழுத்தக்கூடாது, அது குறைந்த அளவு பால் கொடுக்கும் |
08:35 | areola க்கு அடியில் இருக்கும் பால் சுரப்பிகளில் இருந்து பால் வெளிவர அதை அழுத்த வேண்டும் |
08:42 | குழந்தை நன்றாக மார்பகத்துடன் இணைந்திருக்க மார்பகத்தை சரியான அளவில் வைக்க வேண்டும். |
08:49 | குழந்தையின் மூக்கு இருக்கும் மார்பகத்தின் பக்கத்தில் தாயின் கட்டைவிரல் மார்பக காம்பில் இருந்து 3 விரல் அளவு இடைவெளியில் இருக்க வேண்டும். |
08:59 | மற்றும் குழந்தையின் தாடை இருக்கும் மார்பகத்தின் பக்கத்தில் தாயின் இரண்டு விரல்கள் மார்பக காம்பில் இருந்து 3 விரல் அளவு இடைவெளியில் இருக்க வேண்டும். |
09:09 | மீண்டும் வடாபாவ் அல்லது burger உதாரணத்திற்கு செல்வோம். |
09:13 | வடாபாவ் அல்லது burger ஐ சரியாக பிடித்த பிறகு, பெரிதாக கடிக்க அதை எப்போதும் அழுத்துகிறோம். |
09:21 | அதேபோல, தாயும் தன் மார்பகத்தை கீழே சற்று அழுத்தி U வடிவத்தில் பிடிக்க வேண்டும். |
09:28 | இது குழந்தையின் வாயில் மார்பகத்தின் பெரும்பகுதி செல்ல உதவும். |
09:34 | ஆனால் தாய் தன் மார்பகத்தை V வடிவில் அழுத்தக்கூடாது என்பதை நினைவுகொள்க. |
09:39 | V வடிவ அழுத்தம், மார்பகத்தை குறைத்து மார்பக காம்பை மட்டும் வாயில் செலுத்தும். |
09:45 | மார்பகத்தின் இருபுறமும் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்கள் கொண்டு சமமான அழுத்தம் கொடுக்க வேண்டும். |
09:52 | இல்லையெனில், மார்பக காம்பு ஏதேனும் ஒரு பக்கம் சாய்ந்து சரியாக வாயினுள் செல்லாது. |
10:00 | மார்பகத்தை ஒருபக்கமாக அழுத்தி குழந்தைக்கு அருகில் கொண்டுவரக்கூடாது என்பதை நினைவு கொள்க. |
10:08 | எப்போதும் குழந்தையைதான் மார்பகத்திற்கு அருகில் கொண்டுசெல்ல வேண்டும். |
10:12 | இப்போது, குழந்தை, Cross cradle பிடிப்பு முறையில் மார்பகத்தை வாயினுள் செலுத்தி பால் குடிக்க தயாராக உள்ளது. |
10:18 | சரியாக மார்பகத்தை வாயினுள் செலுத்துவதற்கான வழிமுறை இந்த தொடரின் மற்றொரு tutorialல் விளக்கப்படுகிறது. |
10:24 | குழந்தையின் வாயினுள் சரியாக மார்பகத்தை செலுத்தியபின், மார்பகம் கணமாக இல்லையெனில்- தாய் தன் கையில் இருந்து மார்பகத்தை விடுவித்து தன் கையை குழந்தையை தாங்க அடியில் கொண்டுவர வேண்டும். |
10:40 | இந்த நிலையில், தாய் தன் இருகைகளையும் தன் உடலின் அருகில் கொண்டுவரவேண்டும். |
10:46 | இது பால் கொடுக்கும்போது தாய்க்கு வசதியாக இருக்கும். |
10:50 | இத்துடன் இந்த tutorial முடிகிறது.
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா, நன்றி. |