Difference between revisions of "Digital-Divide/D0/Model-Village-Hiware-Bazar/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 127: | Line 127: | ||
|- | |- | ||
| 02:19 | | 02:19 | ||
− | | 4.பூரண மதுவிலக்கு அல்லது ''' | + | | 4.பூரண மதுவிலக்கு அல்லது '''ந ஷா பந்தி(Nasha Bandi)''' |
|- | |- | ||
Line 199: | Line 199: | ||
|- | |- | ||
| 04.00 | | 04.00 | ||
− | | ''' | + | | '''ந ஷா பந்தி(Nasha Bandi)''' |
|- | |- |
Revision as of 18:56, 9 June 2014
Visual Cue | Narration |
00:01 | மாதிரி கிராமம் : ஹிவரே பசார் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:09 | 1. ஹிவரே பசார் மக்கள் சந்தித்த பிரச்சனைகள் |
00:13 | 2. ஹிவரே பசாரின் தற்போதைய நிலை |
00:16 | 3. இந்த மாற்றங்களை கொண்டுவர உதவிய செயல்முறைகள். |
00:20 | ஹிவரே பசார் மக்கள் சந்தித்த பிரச்சனைகள் |
00:24 | ஹிவரே பசார் மக்கள் விவசாயத்திற்கு மழையை நம்பியிருந்தனர். |
00:29 | தீவிர மண் அரிப்பால் நிலம் தரம் இழந்திருந்தது. |
00.35 | குடிநீர் பற்றாக்குறை இருந்தது. |
00.40 | அவர்களிடம் போதுமான தீவினம் இல்லை. |
00.44 | விறகுகளும் இல்லை. |
00.49 | இவை பின்வரும் பல சமூக பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது:- |
00.53 | வேலைவாய்ப்பினமை. |
00.55 | மக்கள் வேலை கிடைக்க மிக சிரமபட்டனர். |
00.58 | இடம்பெயர்வு |
01:00 | மக்கள் கிராமத்தில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர். |
01:03 | குற்ற விகிதமும் அதிகரித்தது. |
01:06 | ஹிவரே பசாரின் தற்போதைய நிலை |
01:09 | 1995 ல் ரூ 830 ஆக இருந்த தனிநபர் வருமானம் 2012 ல் ரூ 30,000 ஆக அதிகரித்துள்ளது |
01.19 | கிராமத்தில் 6 கோடி மக்கள் உள்ளனர் |
01.23 | 1995 ல் 168 ஆக இருந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2012 ல் 3 ஆக குறைந்துள்ளது |
01.34 | அதே காலகட்டத்தில், ஒரு நாளின் பால் உற்பத்தி 150 லிட்டரில் இருந்து 4000 லிட்டர்களாக அதிகரித்துள்ளது. |
01:43 | கல்வியறிவு விகிதம் 30% லிருந்து 95% ஆக அதிகரித்துள்ளது |
01.51 | குற்ற விகிதம் கடுமையாக குறைந்துள்ளது
. |
01.54 | வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. |
01.57 | நிலையை உயர்த்த உதவிய செயல்முறைகள். |
02.00 | ஐந்து முனை அணுகுமுறை அல்லது பஞ்ச்சுட்ரி(Panchsutri)
|
02.05 | 1.இலவச தன்னார்வ தொழிலாளர் அல்லது ஸ்ரம்டான்(Shramdaan) |
02:09 | 2.அதிக மேய்ச்சலுக்கு தடை அல்லது சரை பந்தி(Charai bandi)
|
02:14 | 3.மரம் வெட்டுதலுக்கு தடை அல்லது குர்ஹட் பந்தி(Kurhad bandi) |
02:19 | 4.பூரண மதுவிலக்கு அல்லது ந ஷா பந்தி(Nasha Bandi) |
02.25 | 5. குடும்ப கட்டுப்பாடு அல்லது குடும்ப் நியோஜன்(Kutumb Niyojan) |
02.30 | ஸ்ரம்டான்(Shramdaan) |
02.32 | சமூக நலனுக்காக மக்கள் ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய ஆரம்பித்தனர். |
02.38 | கிராமத்தினர் ஒரு வேலை கலாச்சாரத்தை உருவாக்கினர். |
02.42 | நீரோட்டத்தின் வேகத்தை குறைக்க அவர்கள் ஒன்றாக வந்து மலைக்கு அருகே அணைகளை கட்டினர் |
02.50 | இந்த அணைகள் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும் மண் அரிப்பை குறைக்கவும் உதவின. |
02.58 | சரை பந்தி(CharaiBandi) |
03.00 | அதிகமான கால்நடை மேய்ச்சல் தடைசெய்யப்பட்டது. |
03.05 | அதிகமான மேய்ச்சல் மண் அரிப்புக்கும் நிலம் பாலைவனமாதலுக்கும் வழிவகுக்கிறது. |
03.12 | அதிக மேய்ச்சலுக்கு தடை - |
03.14 | 1994-95 ல் புற்களின் உற்பத்தி 200 டன்களில் இருந்து 2001-2002 ல் 5000-6000 டன்களுக்கும் மேலே அதிகரித்துள்ளது |
03.30 | குர்ஹர்ட் பந்தி(Kurhad Bandi) |
03.32 | மரம் வெட்டுதல் தடை செய்யப்பட்டது. |
03.35 | மரங்கள் மண் அரிப்பை தடுக்க உதவுகின்றன |
03.40 | மண் அரிப்பு நிலம் தரமிழப்பிற்கு காரணமாகிறது. அதனால் விவசாய உற்பத்தி குறைகிறது. |
03.47 | மரங்கள் மழைநீரின் வேகத்தை குறைத்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. |
03.54 | மரக்கழிவுகள் மண் வளத்தை அதிகரிக்க உதவுகின்றன. |
04.00 | ந ஷா பந்தி(Nasha Bandi) |
04.02 | 22 சாராயக் கடைகள் மூடப்பட்டன |
04.05 | சாராயம் குடிப்பதும் புகையிலையும் முற்றிலும் தடைசெய்யப்பட்டன |
04.10 | சாராயக்கடை வைத்திருந்தவர்களுக்கு கடன் வழங்க கிராம சபை வங்கிகளுடன் இணைந்தது |
04:17 | குற்ற விகிதம் குறைந்தது |
04:20 | சமூகத்திற்கு உதவும் பல ஆக்க பணிகளில் மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர் |
04.26 | குடும்ப் நியோஜன்(Kutumb Niyojan) |
04.28 | குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற விதி அமுல்படுத்தப்பட்டது |
04.33 | ஆயிரத்திற்கு 11 என பிறப்பு விகிதம் குறைக்கப்பட்டிருந்தது |
04.39 | இது பெண்களுக்கு கர்ப்ப காலம் சம்பந்தப்பட்ட ஆபத்துகளை தடுக்கிறது |
04.44 | குடும்ப கட்டுப்பாடும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கிறது |
04.49 | இது மக்களை வலுப்படுத்தவும் குடும்ப கல்வியை மேம்படுத்தவும் உதவுகிறது |
04.55 | ஒரு நிலையான சமூகத்தை உருவாக்குவதற்கு குடும்ப கட்டுப்பாடு முக்கியமானதாகும் |
05.01 | இந்த டுடோரியலில் இருந்து நாம் கற்றது |
05:04 | கிராம மக்கள் ஒன்றிணைந்தால் நல்ல மாற்றங்களை கொண்டுவரலாம் |
05:09 | பஞ்ச் சுட்ரி (Panchsutri) கொள்கைகள் மிக பயனுள்ளது என்பதை நிரூபித்துள்ளன |
05.15 | இந்த செயல்முறைகளை பின்பற்றினால் இது போன்ற மேலும் பல மாதிரி கிராமங்களை உருவாக்க முடியும் |
05:21 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது |
05.24 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
05.28 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
05.32 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
05.37 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
05.44 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
05.48 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
05.55 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
06.01 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06.09 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
06.21 | இந்த டுடோரியலுக்கு ஸ்க்ரிப்ட் மயன்க் மிலின்ட், ட்ராயிங்ஸ் செளரப் காட்கில் |
06.28 | தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |