Difference between revisions of "Health-and-Nutrition/C2/Breast-conditions/Tamil"
From Script | Spoken-Tutorial
Venuspriya (Talk | contribs) |
|||
(2 intermediate revisions by one other user not shown) | |||
Line 423: | Line 423: | ||
| 09:40 | | 09:40 | ||
| மார்பகக் கட்டிகளை அகற்ற, அறுவை சிகிச்சை, மற்றும், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தேவை. | | மார்பகக் கட்டிகளை அகற்ற, அறுவை சிகிச்சை, மற்றும், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தேவை. | ||
− | |||
|- | |- | ||
Line 448: | Line 447: | ||
| 10:24 | | 10:24 | ||
| இத்துடன், தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களின் மார்பக தன்மைகள் குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். | | இத்துடன், தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களின் மார்பக தன்மைகள் குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:20 | | 11:20 | ||
− | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது '''IIT Bombay'''இல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி. |
|} | |} |
Latest revision as of 15:57, 5 August 2020
|
|
00:00 | தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களின் மார்பக தன்மைகள் குறித்த இந்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கனமான வீங்கிய மார்பகங்கள் மற்றும் வீங்கிய, வலி கொண்ட மார்பகங்கள் பற்றி கற்கப்போகிறோம். |
00:13 | முதலில் கனமான வீங்கிய மார்பகங்கள் பற்றி பார்ப்போம். |
00:17 | பொதுவாக, பிரசவத்திற்குப் பிறகு, 3 முதல் 5 நாட்களுக்குள், மார்பக வீக்கம் ஏற்படுகிறது. |
00:23 | அது, இரண்டு மார்பகங்களிலும், ஒரே நேரத்தில் ஏற்படுகிறது. |
00:28 | தாய், கனமான மார்பக வீக்கத்தை, பால் நிறைந்த மார்பகம் என நினைத்து, குழப்பிக்கொள்ளக் கூடாது. |
00:33 | இப்போது, மார்பக வீக்கம், மற்றும், பால் நிறைந்த மார்பகங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை விவாதிப்போம். |
00:40 | மார்பக வீக்கத்தில், மார்பகம், விறைத்து, வீங்கி, முழுமையாக பால் நிறைந்து, வலி கொடுக்கிறது. |
00:46 | இது பளபளப்பான தோற்றத்தையும், மேற்பரப்பில் பெருமளவில் புடைத்த நரம்புகளையும் காட்டுகிறது. |
00:52 | இதனால், 24 மணிநேரத்திற்கு மேலாக நீடிக்கும் காய்ச்சலால், தாய் பாதிக்கப்படலாம், மற்றும், குழந்தை பால் குடிப்பது கடினமாகிறது. |
01:01 | ஆனால், பால் நிறைந்த மார்பகங்கள் சாதாரணமாக இருக்கின்றன. |
01:04 | பால் நிறைந்த மார்பகங்கள், பெரிதாக தெரிந்தாலும், பளபளப்பான தோற்றத்தை கொடுப்பதில்லை. |
01:10 | பால் நிறைந்த மார்பகங்கள், வலி கொடுப்பதில்லை, மற்றும், அப்போது, காய்ச்சலும் இருப்பதில்லை. |
01:17 | இப்போது தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களுக்கு ஏற்படுகின்ற, மார்பக வீக்கத்திற்கான காரணங்களை பற்றி விவாதிப்போம். |
01:23 | மார்பக வீக்கம், பின்வரும் நிலைமைகளில் ஏற்படலாம் - |
01:27 | குழந்தை பிறந்தவுடன், தாய், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை எனில் |
01:32 | குழந்தைக்கு, தாய், நேரத்திற்கு, தாய்ப்பால் கொடுக்கவில்லை எனில், |
01:36 | தாய்ப்பால் கொடுக்கும் போது, தாயின் மார்பகத்தை குழந்தை, சரிவர பற்றிக்கொள்ளவில்லை எனில், மற்றும், |
01:42 | தாய்ப்பால் கொடுப்பதை, தாய், திடீரென நிறுத்திவிடுகையில். |
01:47 | இப்போது, மார்பக வீக்கத்திற்கு, எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம் என்பதை பற்றி விவாதிப்போம். |
01:51 | முதலில்- தாயை, சுத்தமான நீரில், கையை கழுவச் சொல்ல வேண்டும். |
01:56 | பின், தாய், குழந்தையை, பார்க்க, சுவாசிக்க, மற்றும் தொடுவதற்கு ஏற்ப, குழந்தையை, தாய்க்கு நெருக்கமாக கொண்டு வர வேண்டும். |
02:03 | குழந்தை ஒத்துழைக்கவில்லை எனில், தாய், குழந்தையின் துணியை முகர்ந்து கொள்ளலாம். |
02:08 | அதன் பிறகு, தாய், ஒரு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும். |
02:12 | பின், 5 முதல்10 நிமிடங்களுக்கு, மார்பகங்களில், ஈரமான, சூடான துணியை வைக்கவும், அல்லது, |
02:18 | தாய், வெதுவெதுப்பான நீரில், ஒரு குளியல் எடுத்துக் கொள்ளலாம். |
02:21 | அது, மார்பகங்களில் இருந்து, பால் வெளிவர உதவி புரியும். |
02:24 | அதன் பின், தாய், ஓய்வெடுத்துக் கொள்ள, சுகாதார ஊழியர் கூற வேண்டும்- ஏனெனில், அதிக மன அழுத்தம், பால் வெளியேறுதலை பாதிக்கும், மற்றும், |
02:33 | பால், வெளியில் வராது. |
02:36 | இப்போது, சுகாதார ஊழியர் அல்லது குடும்ப உறுப்பினர் எவரேனும், தாயின் கழுத்து, மற்றும், முதுகின் மேற்பகுதியில், மென்மையாக உருவி விட வேண்டும். |
02:43 | அது, மார்பகங்களில் இருந்து, பால் வெளிவர உதவி புரியும். |
02:46 | ஏனெனில், மார்பகம், மற்றும், முதுகின் மேற்பகுதிக்கு செல்வதற்கான, நரம்பு ஒன்றேயாகும். |
02:52 | பின், தாய், தன் மார்பகங்களை, வட்ட வடிவத்தில், மெதுவாக தடவி கொடுக்க வேண்டும். |
02:57 | தடவி கொடுப்பது, தாய்க்கு இதமாக இருப்பதுடன், பால் வெளியேற்றுதலை மேம்படுத்திக் கொடுக்கும். |
03:03 | இவை அனைத்தும் ஆக்ஸிடோசின்னின் வெளியீட்டிற்கு உதவி புரியும். |
03:07 | இது, ஆக்ஸிடோசின் ரிபிளக்ஸ், அல்லது, லெட்-டௌன் ரிபிளக்ஸ் (reflex) எனப்படுகிறது. |
03:12 | ஆக்ஸிடோசின் என்பது, மார்பகத்தில் இருந்து, பால் வெளிவர உதவி புரியும், ஒரு ஹார்மோன் ஆகும். |
03:17 | பின், தாய், ஏரோலாவை மென்மையாக்க, மார்பகத்தை தன் கை மூலம் அழுத்தி சிறிதளவு பாலை, வெளியேற்ற வேண்டும். |
03:23 | இது, குழந்தை, மார்பகத்தை சரியாக பற்றிக்கொள்ள உதவி புரியும். |
03:27 | தாய்ப்பால் கொடுக்கும் போது, தாய், ஏரோலாவை சுற்றி அழுத்தம் கொடுக்க வேண்டும். |
03:33 | பிறகு- தாய், ஏரோலாவை, குழந்தையின் வாய்க்கு, எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், குழந்தைக்கு மார்பகத்தை தானே பற்றிக்கொள்ள கடினமாக இருக்கும். |
03:43 | இரண்டு மார்பகங்களில் இருந்தும், தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கவும். |
03:46 | ஒவ்வொரு பாலூட்டல் இடைவெளியிலும், தாய், ஈரமான குளிர்ந்த துணியை 5ல் இருந்து 10 நிமிடங்களுக்கு மார்பகத்தின் மீது வைக்க வேண்டும், அல்லது, |
03:54 | மார்பகங்களில், குளிர்ந்த முட்டைக்கோஸ் இலைகளை வைத்துக் கொள்ளலாம். |
03:58 | இந்த முட்டைக்கோஸ் இலைகளை, குளிர்சாதன பெட்டி, அல்லது மண் பானையில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். |
04:04 | இது, நீர்கோர்த்த மென்மையான மார்பக வீக்கத்தை குறைக்க உதவுகிறது. |
04:09 | பின், தாய், அடிக்கடி, தாய்ப்பால் கொடுக்க வேண்டும். |
04:13 | இப்போது, மார்பக வீக்கத்தை, எப்படி தவிர்ப்பது என்று கற்போம். |
04:17 | முதலில், குழந்தையின் பசி அறிகுறிகளை தாய் புரிந்துகொள்ள முயற்சிக்கவும், அதாவது- நெளிதல் |
04:25 | அதிகரிக்கின்ற ரூடிங் ரிபிளக்ஸ் அதாவது |
04:28 | குழந்தை தன் கன்னத்தை அல்லது வாயைத் தொட்ட எதையுமே நோக்கித் தன் தலையை திருப்பிக் கொள்ளுதல் |
04:36 | தன் விரல்களை சப்புதல். |
04:39 | கடைசியில், குழந்தை அழத் தொடங்குகிறது. |
04:43 | குழந்தை, எப்போதெல்லாம், ஆரம்ப பசியின் அறிகுறிகளை காட்ட தொடங்குகிறதோ, அப்போதெல்லாம், குழந்தை அழும் வரை காத்திராமல், பாலூட்டவும். |
04:50 | குழந்தை, சரியாக மார்பகத்தை பற்றிக்கொண்டுள்ளதா, மற்றும் பசியாரிக் கொண்டிருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
04:55 | ஒரு மார்பகத்தில் முழுவதுமாக பால் கொடுத்துவிட்டு, பின், அடுத்த மார்பகத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நினைவு கொள்க. |
05:02 | அடுத்து, மாஸ்டிடிஸ் எனப்படும், மற்றொரு மார்பக நிலைமையை பற்றி கற்போம். |
05:08 | இந்நிலைமையில், மார்பகத்தின் ஒரு பகுதி, சிவந்து, வீங்கி, கனமாகிவிடும். |
05:14 | தாய், கடுமையான வலி, காய்ச்சல் மற்றும் நோய்வாய்ப்படுகிறார். |
05:18 | பல தாய்மார்கள் முதல் 6 வாரங்களில், மாஸ்டிடிஸ்ஐ அனுபவிக்கின்றனர். |
05:22 | ஆனால் பாலூட்டலின் போது, இது எந்த நேரத்திலும் ஏற்படலாம். |
05:27 | இதை சில நேரங்களில் மார்பக வீக்கம் என குழப்பத்தை ஏற்படுத்துகிறது. |
05:31 | எனினும், வீக்கம், ஒரு மார்பகம் முழுவதையும், அல்லது இரண்டு மார்பகங்களையும் பாதிக்கிறது. |
05:37 | ஆனால், மாஸ்டிடிஸ், மார்பகத்தின் ஒரு பகுதி, மற்றும், பொதுவாக, ஒரு மார்பகத்தை மட்டுமே பாதிக்கிறது. |
05:44 | மாஸ்டிடிஸ், வீக்கம் அடைந்த ஒரு மார்பகத்தில் உருவாகி பின்னர் பால் நாளங்களில் அடைப்பு ஏற்படலாம். |
05:51 | இப்போது, பால் நாள அடைப்புக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில், அவை எவ்வாறு, மாஸ்டிடிஸ்ஆக, உருவாகின்றன, என்பதை பற்றி விவாதிப்போம். |
05:59 | ஒரு மார்பகத்தின் பகுதியிலிருந்து, பால் வெளியேற்றப்படாமல் இருப்பதே, பிளாக்ட் டக்ட் என்கின்ற நிலைமை ஆகும். |
06:04 | வழக்கமாக இந்த பால் நாளம், கெட்டியான பாலால் தடுக்கப்பட்ட, மார்பகத்தின் பகுதியாகும். |
06:11 | இது, கட்டி உருவாகுவதற்கு வழிவகுக்கிறது. இந்த கட்டி மென்மையாகவும், அதன் மேலிருக்கும் தோல், சிவப்பாகவும் இருக்கும். |
06:20 | பால் நாள அடைப்பு, மற்றும், மார்பக வீக்கம், பால் வெளியேறுதலை நிறுத்துகிறது, அல்லது குறைக்கிறது. |
06:24 | பால் நாள அடைப்பு, மற்றும் மார்பக வீக்கத்தில், மார்பகத்தின் ஒரு பகுதியில், பால் தங்கி இருந்தால், அது ஸ்டேஸிஸ் எனப்படுகிறது. |
06:32 | இந்த ஸ்டேஸிஸ் அகற்றப்படாவிட்டால், அது, மார்பகத் திசுக்களில், வீக்கத்தை ஏற்படுத்தலாம். அது நாண்- இபெக்ட்டிவ் மாஸ்டிடிஸ் எனப்படுகிறது. |
06:42 | சில நேரங்களில், மார்பகத்திற்கு, பாக்டீரியாவால் தொற்று ஏற்படுகிறது. அது இபெக்ட்டிவ் மாஸ்டிடிஸ் எனப்படுகிறது. |
06:51 | பின்வரும் நிலைமைகளில், வெடிப்பு மூலம், பாக்டீரியா எளிதில் உள்ளே நுழையும்: |
06:56 | அதாவது மார்பகத்தில் வெடிப்பு, சிகிச்சை அளிக்கப்படாத மாஸ்டிடிஸ், மற்றும், தாமதமான சிகிச்சை. |
07:06 | கவனிக்கவும்: சிகிச்சை அளிக்கப்படாத மாஸ்டிடிஸ், மார்பகக் கட்டிக்கு வழி வகுக்கிறது. |
07:11 | இப்போது, மாஸ்டிடிஸ்க்கான காரணங்களை பற்றி விவாதிப்போம். |
07:15 | மாஸ்டிடிஸ்க்கான முதல் மற்றும் முன்னணி காரணம், போதிய அளவு பாலூட்டுதல் இல்லாததே ஆகும். |
07:21 | வேலைக்கு செல்லுகின்ற ஒரு பெண்ணாக இருந்தால், அடிக்கடி தாய்ப்பாலூட்டுவது சவாலாகிவிடுகிறது. |
07:27 | போதிய அளவு பாலூட்டுதல் இல்லாததற்கு காரணம், தாய், அல்லது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமலும் இருக்கலாம். |
07:33 | இரண்டாவது, மார்பக காம்பில் பாலூட்டினால், மார்பகத்தில் இருந்து முழுவதுமாக குழந்தையால் பால் குடிக்க முடியாது |
07:40 | மூன்றாவது, பால் அதிகமாக சுரத்தல். |
07:43 | நான்காவது, குழந்தைக்கு சீக்கிரமாக தாய்ப்பாலை நிறுத்துதல்- இங்கு, குழந்தை, தாய்ப்பாலைத் தவிர, மற்ற உணவுகளையும் சாப்பிடுகிறது. |
07:59 | ஐந்தாவது, இறுக்கமான ஆடைகள்- தாய் இறுக்கமான ஆடைகளை பயன்படுத்தினால், குறிப்பாக இரவுகளில் தாய் இறுக்கமான ப்ரா அணிந்தால், அது மார்பகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது, பால் நாளங்களை தடுக்கக் கூடும். |
08:03 | ஆறாவது மன அழுத்தம் - தாய், ஏதேனும், மன அழுத்த நிலைகளை அனுபவித்துக் கொண்டிருந்தால், அது, பால் வெளியேற்றுதலை பாதிக்கும். |
08:12 | ஏழாவது, மார்பககாம்பு வெடிப்பு- மார்பக திசுவுக்குள், பாக்டீரியா நுழைய, இது வழிவகுக்கிறது, மற்றும், மாஸ்டிடிஸ்க்கும், இது வழிவகுக்கலாம். |
08:22 | மாஸ்டிடிஸ்க்கான சிகிச்சை முறையை பார்ப்போம். |
08:26 | முதலில், அதற்கான காரணத்தை கண்டுபிடித்து பின், சிகிச்சையை தொடங்கவும். |
08:31 | பாலூட்டும் முன், தாய், வெதுவெதுப்பான, ஈரத்துணியால் மார்பகத்தை அழுத்த வேண்டும். |
08:35 | அல்லது, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். |
08:37 | பாதிக்கப்பட்ட மார்பகத்திலிருந்து, முதலில், தாய்ப்பாலூட்ட தொடங்க வேண்டும். |
08:42 | அது வலியை அதிகரித்தாலோ, அல்லது, பால் வெளியேற்றுதலை பாதித்தாலோ, பாதிக்கப்படாத மார்பகத்துடன் தொடங்கவும். |
08:50 | அடிக்கடி, தாய்ப்பாலூட்டுதல் அவசியம் என்பதை நினைவில் கொள்க. |
08:55 | மார்பகக்காம்பு அல்லது ஏரோலாவின் மீது காயம் இல்லையெனில், தாய், பாதிக்கப்பட்ட பக்கத்திலிருந்து, தாய்ப்பாலூட்டலாம். |
09:04 | மாஸ்டிடிஸ் மார்பகத்திலிருந்து ஒரு தாய், குழந்தைக்கு பாலூட்டும் போதெல்லாம், |
09:09 | குழந்தைக்கு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதால் , தொற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளதா என குழந்தையிடம் தாய் கண்காணிக்க வேண்டும், என்பதை நினைவில் கொள்க. |
09:17 | ஏனெனில், பாதிக்கப்பட்ட பக்கத்திலிருந்து வருகின்ற தாய்ப்பால், பல தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும். |
09:24 | மார்பகத்தை மென்மையாக அழுத்தி விடுவது, பால் வருவதை அதிகரிக்கும், |
09:28 | இது, பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மார்பகக்காம்பை நோக்கிய, ஒரு மென்மையான அழுத்தமாக இருக்க வேண்டும். |
09:34 | மற்றும் தாய், போதுமான ஓய்வு எடுக்க வேண்டும். |
09:37 | அறிகுறிகள் கடுமையாக இருந்தால், அவர் மருத்துவரைப் பார்க்க வேண்டும். |
09:40 | மார்பகக் கட்டிகளை அகற்ற, அறுவை சிகிச்சை, மற்றும், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தேவை. |
09:47 | இவைகளைத் தவிர, தாய், தன் உடலை தளர்த்தி, மூச்சை, ஆழமாகவும், சீராகவும் விட, முயற்சி எடுக்க வேண்டும். |
09:55 | லெட்-டௌன் ரிபிளக்ஸ்ஐ தொடங்குவதற்கு உதவ, இனிமையான இசையை கேட்டுக்கொண்டே, உங்கள் குழந்தையைப் பற்றி நினைத்துக் கொள்ளவும். |
10:04 | மாஸ்டிடிஸ்ஐ தவிர்க்க, குழந்தை, மார்பகத்தை சரியாக பற்றிக்கொள்வது அவசியம் என்பதை நினைவில் கொள்க. |
10:09 | அது, பால் நாள அடைப்பை தவிர்ப்பதால், குழந்தைக்கு போதுமான பால் கிடைக்கும். |
10:14 | இந்த அனைத்து மார்பக நிலைகளையும் தடுப்பதற்கான வழிகள்- குழந்தை மார்பகத்தை சரியாக பற்றுதல் , குழந்தையை சரியான நிலையில் வைத்தல், மற்றும், முறையான தாய்ப்பாலூட்டுதல். |
10:24 | இத்துடன், தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களின் மார்பக தன்மைகள் குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். |
11:20 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி. |