Difference between revisions of "Avogadro/C3/General-Features-in-Avogadro/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 169: Line 169:
 
|-
 
|-
 
|03:27
 
|03:27
|text box இல், '''pH''' மதிப்பை to 7.0 என மாற்றி '''OK''' வை கிளிக் செய்யவும்.
+
|text box இல், '''pH''' மதிப்பை 7.0 என மாற்றி '''OK''' வை கிளிக் செய்யவும்.
  
 
|-
 
|-

Latest revision as of 16:35, 8 January 2018

Time Narration
00:01 அனைவருக்கும் வணக்கம்! Avogadroல் General Features குறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: pH values ஐ மாற்றுவதன் மூலம் compoundகளில் Proton transfer
00:16 crystal structures ஐ Load செய்வது,
00:19 பல்வேறு Miller planes ஐ காட்டுவது,
00:22 super cells ஐக் கட்டமைப்பது,
00:24 coordination compound களின் வடிவமைப்பை காண்பது மற்றும் nanotubesகளைக் கட்டமைப்பது.
00:31 நான் பயன்படுத்துவது: Ubuntu Linux OS version 14.04
00:37 Avogadro version 1.1.1.
00:41 இந்த டுடோரியலைப் பின்தொடர Avogadro interface குறித்த பரிச்சயம் இருக்க வேண்டும்.
00:47 அது தொடர்பான டுடோரியல்களுக்கு எங்கள் இணையதளத்திற்கு செல்லவும்.
00:52 இந்த டுடோரியலில் காட்டப்படும் எடுத்துக்காட்டுகளின் fileகள், code files ஆக கொடுக்கப்பட்டுள்ளன.
00:58 ஒரு புதிய Avogadro விண்டோவைத் திறந்துள்ளேன்.
01:01 நான் pH value களை மாற்றுவதன் மூலம் compound களில் proton transfer ஐ செய்து காட்டுகிறேன்.
01:07 இதற்காக Fragment library இல் இருந்து amino acid களை load செய்கிறேன்.
01:12 Build menu, வை பயன்படுத்தி Fragment libraryக்கு செல்லவும்.
01:16 Fragment library, யில் Amino acids folderஐ டபுள் கிளிக் செய்யவும்.
01:21 D-alanine.cml ஐ தேர்வு செய்து Insert ஐ கிளிக் செய்யவும்.
01:26 Insert Fragment dialog box ஐ மூடவும்.
01:30 CTRL, SHIFT மற்றும் A கீகளை ஒரு சேர அழுத்தி வடிவமைப்பை deselect செய்யவும்.
01:34 Navigation tool ஐப் பயன்படுத்தி வடிவமைப்பை சரியான இணக்கத்திற்கு rotate செய்து கொள்ளவும்.
01:39 amino acidகளில் pH value களை மாற்றுவதன் மூலம் proton transfer ஐ செய்து காட்டுகிறேன்.
01:46 Build மெனுவிற்கு சென்று Add Hydrogens for pH ஐ தேர்வு செய்யவும்.
01:51 Add Hydrogens for pH text box முன்னிருப்பான 7.4 மதிப்புடன் திறக்கிறது.
01:57 text box இல் pH value ஐ 7.0 என்று மாற்றி OK வை கிளிக் செய்யவும்.
02:04 வடிவமைப்பில் Carboxylic group(COOH),Carboxylate ionஆக மாற்றப்படிருப்பதைக் கவனிக்கவும்
02:11 Amino group(NH2), protonated(NH3+) ஆகவும் மாறுகிறது.
02:15 Build மெனுவிற்கு சென்று,Add Hydrogens for pH ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:20 text box இல், pH ஐ 2.0 என மாற்றி Ok வை கிளிக் செய்யவும்.
02:26 Carboxylate ion, Carboxylic group ஆக மாற்றப்படுகிறது.
02:31 Build மெனுவிற்கு சென்று,Add Hydrogens for pH ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:35 text box இல், pH ஐ 10.0 என மாற்றி Ok வை கிளிக் செய்யவும்.
02:41 Carboxylic group,Carboxylate ion ஆக மாற்றப்படுகிறது.
02:46 Amino group(NH2), deprotonate செய்யப்படுகிறது.
02:49 Delete ஐ அழுத்தி வடிவமைப்பை நீக்கவும்.
02:52 இனிamine களில் pHஐ மாற்றுவதன் மூலம் proton transfer குறித்து காட்டுகிறேன்.
02:58 இதற்காக Fragment library யில் இருந்து ethylamine வடிவமைப்பை load செய்கிறேன்’.
03:05 Insert Fragment dialog boxஐ மூடவும்.
03:09 CTRL, SHIFT மற்றும் A கீகளை ஒருசேர அழுத்தி வடிவமைப்பை deselect செய்யவும்.
03:13 Navigation tool ஐப் பயன்படுத்தி வடிவமைப்பை சரியான இணக்கத்திற்கு rotate செய்து கொள்ளவும்.
03:18 Buildமெனுவிற்கு சென்று,Add Hydrogens for pHஐ கிளிக் செய்யவும்.
03:23 Add Hydrogens for pH text box திறக்கிறது.
03:27 text box இல், pH மதிப்பை 7.0 என மாற்றி OK வை கிளிக் செய்யவும்.
03:34 வடிவமைப்பைக் கவனிக்கவும். Amino தொகுதி protonate செய்யப்படுகிறது.
03:39 Buildமெனுவிற்கு சென்று, Add Hydrogens for pHஐ கிளிக் செய்யவும்.
03:43 text box இல், pH மதிப்பை 2.0 என மாற்றி OK வை கிளிக் செய்யவும்.
03:49 இப்போது வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை.
03:53 ஆகவே ethylamine காரத்தன்மை உடைய திரவங்களில் மட்டுமே proton transfer செய்கிறது.
03:59 Buildமெனுவிற்கு சென்று,Add Hydrogens for pHஐ கிளிக் செய்யவும்.
04:03 text box இல், pH மதிப்பை 10.0 என மாற்றி OK வை கிளிக் செய்யவும்.
04:09 Amino group, deprotonateஆகிறது.
04:12 இனிCrystal Library இல் இருந்து Crystal structuresஐ எவ்வாறு load செய்வது என்றும், சில Crystal propertiesகுறித்தும் செயல் விளக்கம் காண்பிக்கிறேன்.
04:20 tool bar இல் New ஐகானை’கிளிக் செய்து புதிய விண்டோவைத் திறக்கவும்.
04:25 File மெனுவில், Importக்கு சென்று Crystal ஐ தேர்வு செய்யவும்.
04:30 Insert Crystal dialog box தோன்றும்.
04:34 இங்கே பல folderகள் இருக்கின்றன.
04:37 halides folderஐ டபுள் கிளிக் செய்யவும்.
04:40 NaCl-Halite.cif fileஐ தேந்தெடுத்து Insertஐ கிளிக் செய்யவும்.
04:47 Insert Crystal dialog boxஐ மூடவும்.
04:51 சரியாக பார்ப்பதற்கு Tool Settings மற்றும் Display Settings ஐ மூடுகிறேன்.
04:58 sodium chloride ன்Crystal அமைப்பு Panel இல் காட்டப்பட்டுள்ளது.
05:02 அந்த அமைப்புடன் அதன் Cell Parameterகளும் காட்டப்பட்டுள்ளன.
05:07 Panel இன் மேல் இடது பக்கம் இருப்பவை:

Lattice Type

Space group மற்றும்

sodium chloride crystal இன் Unit cell volume

05:18 இப்போது இந்த crystalக்கு Miller plane களைக் காட்டுகிறேன்.
05:22 அதற்கு முன் Miller indices குறித்த ஒரு சிறிய அறிமுகம்.
05:28 Miller Indices என்பவை மூன்று இலக்கங்கள் கொண்டவை (hkl).
05:34 இவைcrystal systemகளில் உள்ளமைந்துள்ள plane களின் திசைகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது.
05:41 இனி sodium chloride crystal இன் Miller planes பற்றி காணலாம்.
05:45 View மெனுவிற்கு சென்று Crystal View Options ஐ கிளிக் செய்யவும்.
05:51 Crystal View Options மெனு வலது பக்கத்தில் தோன்றுகிறது.
05:56 Miller Indices radio button ஐ கிளிக் செய்யவும்.
06:00 நான் h', 'k', 'l' ன் மதிப்பை முறையே 2, 3, 2 என மாற்றுகிறேன்.
06:07 plane களிலும் crystal இல் atom களின் இருப்பிடத்திலும் ஏற்படும் மாற்றத்தை கவனிக்கவும்.
06:13 இனி எப்படி ஒரு super cell ஐ கட்டமைப்பது என்று விளக்குகிறேன்.
06:17 Build மெனுவில் Super Cell Builder ஐ தேர்வு செய்யவும்.
06:22 Super Cell Parameters dialog box தோன்றும்.
06:26 Super Cell Option,களுக்கு கீழே நாம் unit cell parameters 'A', 'B' மற்றும் 'C' ஐ மாற்ற முடியும்.
06:34 நான் 'A', 'B' and 'C' இன் மதிப்புகளை '2', '2', '2' என மாற்றுகிறேன்.
06:43 Generate cell ஐ கிளிக் செய்யவும். பின் Close ஐ கிளிக் செய்து dialog boxஐ மூடவும்.
06:50 மூலக்கூறை நன்றாக பார்க்க ஏதுவாக, தேவையான அளவு பெரியதாக்கிக் கொள்ளவும்.
06:55 Panel இல் Crystal lattice காட்டப்படுகிறது.
06:59 இப்பொழுது Miller Indicesஐ 3, 2, 3 என மாற்றுகிறேன்.
07:05 Navigation tool ஐப் பயன்படுத்தி cell ஐ சுழற்றவும் .
07:09 புள்ளியால் ஆன வரைபடம் plane ஐ காட்டுகிறது.
07:13 'h', 'k', 'l' மதிப்புகளை மாற்றுவதன் மூலம் பல planeகளை காணமுடியும்.
07:20 இப்போது Hexamminecobalt(III) க்கு octahedral வடிவமைப்பை உருவாகுகிறேன்.
07:26 tool bar இல் New ஐகானை கிளிக் செய்து புதிய விண்டோவைத் திறக்கவும்.
07:31 Hexammine cobalt(III), வரைய Draw tool ஐகானை கிளிக் செய்யவும்.
07:37 Element drop down இல் Otherஎன்பதை தேர்ந்தெடுக்கவும்.
07:41 Periodic table விண்டோ திறக்கிறது.
07:44 அட்டவணையில் இருந்து Cobaltஐ தேர்ந்தெடுக்கவும்.
07:47 Periodic table விண்டோவை மூடவும்.
07:50 Panelஇன் மீது கிளிக் செய்து Element drop down இல் இருந்து Nitrogenஐ தேர்ந்தெடுக்கவும்.
07:56 cobalt atom ன் மீது ஆறு bond களை கிளிக் மற்றும் drag செய்து வரையவும்.
08:03 ஒவ்வொரு Nitrogenனும் இரண்டு hydrogenகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
08:08 Hexamminecobalt(III) இன் அமைப்பில் , ஒவ்வொரு nitrogen னும் மூன்று hydrogen களுடன் பிணைக்கப்பட்டுள்ளன.
08:15 Element drop down இல் இருந்துHydrogen ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:19 எல்லா Nitrogen atom களின் மீதும் Click மற்றும் drag செய்யவும்.
08:25 Hexamminecobalt(III) இன் அமைப்பு Panel இல் வரையப்பட்டுள்ளது.
08:29 Display Settings ஐ கிளிக் செய்து Display Settings மெனுவைத் திறக்கவும்
08:36 இனி நான்Hexamminecobalt(III) இன் octahedral geometry ஐ காண்பிக்கிறேன்.
08:42 இதற்காக நான் Polygon Display Typeஐ பயன்படுத்துகிறேன்.
08:46 Polygon Display Type activate செய்யப்படவில்லை எனில், Add பட்டனைப் பயன்படுத்தி activate செய்து கொள்ளவும்.


08:52 Polygon Display Type checkbox ன் மீது கிளிக் செய்யவும்.
08:56 optimize செய்வதற்கு , tool barல் உள்ள Auto Optimization Tool ஐ கிளிக் செய்யவும்.
09:01 Force Field drop down இல் , UFFஐ தேர்ந்தெடுக்கவும்.
09:06 optimize செய்ய Start பட்டனை கிளிக் செய்யவும்.
09:11 Stop பட்டனை கிளிக் செய்து Auto optimization செயலை நிறுத்தவும்.
09:16 Navigation tool ஐப் பயன்படுத்தி , வடிவமைப்பின் octahedral geometryஐ பார்க்க ஏதுவாக சுழற்றவும்.
09:22 அதுபோலவே இது iodine heptafluoride இன் pentagonal bipyramidal geometryஆகும்.
09:29 இனி, நாம் Build மெனுவில் உள்ளNanotube builder எனப்படும் மற்றொரு வசதியைப் பற்றி காண்போம்.
09:35 nanotube என்பது nanometer-scale tube-மாதிரியான வடிவமைப்பாகும்.
09:40 Boron carbon nitrogen, Boron carbon மற்றும் Carbon ஆகியவை பல்வகைப்பட்ட nanotube களுக்கான உதாரணமாகும்:
09:50 ஒரு carbon nanotube, என்பதுcarbon structure இன் மிகச்சிறிய உருளை வடிவமாகும். அதில் அறுகோண graphite molecules இரண்டு முனைகளிலும் இணைக்கப்பட்டுள்ளன.
10:01 Tool bar இல் New ஐ கிளிக் செய்து புதிய விண்டோவைத் திறக்கவும்.
10:06 nanotube ஐ சரியாக பார்க்க, பின்புற வண்ணத்தை நீல நிறமாக மாற்றுகிறேன்.
10:12 View க்கு சென்று Set Background Color ஐ தேர்வு செய்யவும்.
10:17 Select Color dialog box தோன்றும்.
10:21 பெட்டியில் , நீல வண்ணத்தை தேர்வு செய்து Okஐ கிளிக் செய்யவும்.
10:26 Build மெனுவிற்கு சென்று Nanotube Builder ஐ தேர்வு செய்யவும்.
10:30 Nanotube Builder மெனு Panelக்கு கீழே தோன்றுகிறது.
10:35 நான் Nanotube Builderமெனுவை காண ஏதுவாக Avogadro விண்டோவின் அளவை சரிசெய்கிறேன்.
10:40 chirality indexகள் n, m ஐ தேர்வு செய்வதன் மூலம் nanotubeஇன் வகையைத் தீர்மானிக்கலாம்.
10:47 நான் n மற்றும் m க்கான index valueகளை 4 மற்றும் 4 என தேர்வு செய்கிறேன்.
10:53 Length ஐ 4.00(நான்கு புள்ளி பூஜ்ஜியம் பூஜ்ஜியம்) என மாற்றவும்.
10:57 Unit field ஐ Periodic units'க்கு அமைக்கவும்.
11:01 Find double bonds checkbox ஐ கிளிக் செய்து nanotube இல் உள்ள இரட்டைப்பிணைப்பை பார்க்கலாம்.
11:08 அதன்பின் Build ஐ கிளிக் செய்யவும்.
11:10 CTRL + SHIFT + Aகளை ஒருசேர அழுத்தி வடிவமைப்பை deselect செய்யவும்.
11:15 Navigation tool ஐ பயன்படுத்தி சுழற்றி, பெரியதாக்கி nanotube ஐ சரியான காட்சிக்கு வைக்கவும்.
11:21 அடுத்து, நான் 6,6 index valuesஉள்ள ஒரு nanotube ஐ கட்டமைக்கிறேன்.
11:27 Build மெனுவிற்கு சென்று Nanotube Builder ஐ தேர்வு செய்யவும்.
11:31 n மற்றும் m மதிப்புகளை 6 மற்றும் 6 என மாற்றி பின்னர் Build ஐ கிளிக் செய்யவும்.
11:40 இரண்டு nanotubeகளும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்படிருப்பதைக் கவனிக்கவும்.
11:44 nanotubeகளை optimize செய்ய, Auto Optimization Tool இன் மீது கிளிக் செய்யவும்.
11:50 Force Field drop down இல் ,MMFF94 ஐ தேர்வு செய்யவும்.
11:56 optimize செய்வதற்கு Start பட்டனை கிளிக் செய்யவும் .
12:02 Stop ஐ கிளிக் செய்து auto optimizationசெயல்பாட்டை நிறுத்தவும்.
12:07 CTRL + SHIFT + A கீகளை ஒருசேர அழுத்தி வடிவமைப்பை deselect செய்யவும்.
12:11 Panel இல் இரட்டைச்சுவர் கொண்ட ஒரு nanotube காட்டப்படுகிறது.
12:16 Navigation tool, ஐப் பயன்படுத்தி nanotubeஐ சரியான காட்சிக்காக சுழற்றிக்கொள்ளவும்.
12:21 இப்போது நான் nanotube இல் உள்ள carbon hexagon ringகளைக் காட்டுகிறேன்.
12:26 Display Types மெனுவில், Ring checkbox ஐ தேர்வு செய்யவும்
12:31 Navigation tool ஐப் பயன்படுத்தி nanotube ஐ சுழற்றி carbon hexagon களைக் காணவும்.
12:38 அனைத்தையும் சுருங்க கூறுவோம்.
12:40 இந்த டுடோரியலில் நாம் கற்றது:
12:43 Compounds களில் pH valuesஐ மாற்றி Proton transfer செய்வது.
12:48 crystal libraryஇல் இருந்து crystal structuresஐ load செய்வது
12:51 பல்வேறு Miller planes ஐ காட்டுவது,
12:54 super cells ஐக் கட்டமைப்பது,
12:56 Coordination compound களின் வடிவமைப்பைக் காண்பது மற்றும் nanotubeகளைக் கட்டமைப்பது .
13:03 பயிற்சிக்காக

Silver chloride(AgCl) இன் crystal structureஐ Load செய்து அதன் Miller planes ஐக் காட்டவும்.

13:09 Coordination library இல் இருந்து வடிவமைப்பை load செய்து அதன் geometry களைக் காட்டவும்.
13:14 Chirality index' 9,9 கொண்ட ஒரு nanotubeஐக் கட்டமைக்கவும்.
13:19 இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்களிடம் நல்ல bandwidth இல்லை எனில் இதை download செய்து பார்த்துக்கொள்ளலாம்
13:27 Spoken Tutorialகளை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகள் நடத்தி சான்றிதழ் அளிக்கிறோம். எங்களைத் தொடர்பு கொள்ளவும்
13:34 இந்திய அரசின் NMEICT, MHRD இந்த spoken tutorial திட்டத்திற்க்கு தேவையான நிதியுதவியை அளிக்கிறது.
13:41 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம். குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா…. நன்றி.

Contributors and Content Editors

Balasubramaniam, Priyacst, Venuspriya