Difference between revisions of "Java/C3/Static-Methods/Tamil"
From Script | Spoken-Tutorial
Venuspriya (Talk | contribs) |
|||
Line 463: | Line 463: | ||
|- | |- | ||
| 10:28 | | 10:28 | ||
− | | இந்த டுடோரியலை தமிழாக்கம் | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி. |
|} | |} |
Latest revision as of 17:10, 23 November 2017
Time | Narration |
00:01 | வணக்கம். Static Methods குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:05 | இந்த tutorialஇல் நாம் கற்கப் போவது:
static methods, அவற்றை define செய்வது |
00:12 | instance methods மற்றும் static methodsக்கு இடையேயான வேறுபாடு மற்றும் static methodsஇன் பயன்பாடு |
00:20 | இதற்கு நான் பயன்படுத்தியிருப்பது:
Ubuntu 14.04 JDK 1 .7 மற்றும் Eclipse 4.3.1 |
00:31 | இந்த tutorialஐ தொடர Java மற்றும் Eclipse IDE தெரிந்திருக்க வேண்டும் |
00:38 | மேலும் Javaவில் instance variables, methods மற்றும் static variables பற்றி அறிந்திருத்தல் வேண்டும். |
00:45 | தெரியாவிட்டால், அதற்கான Java tutorials ஐ, கீழே காணும் தொடுப்பின் மூலம் அறியலாம். |
00:50 | static method என்பது மொத்த classஇலும் தொடர்பான method ஆகும். |
00:56 | இது class method என்றும் அழைக்கப்படும்; மேலும் static keywordஇனால் declare செய்யப்படும் |
01:02 | Static variablesஐக் கையாள static methods பயன்படுத்தப்படும். |
01:07 | இப்போது Eclipseக்கு சென்று, StaticMethodDemo என்ற பெயரில் புதிய projectஐ உருவாக்குவோம். |
01:14 | Projectஇனுள், static methodsஐ விளக்க தேவையான classesஐ உருவாக்குவோம். |
01:21 | StudentEnroll என்ற புதிய class ஐ உருவாக்குவோம். |
01:25 | Static methodsஐ எப்படி பயன்படுத்துவது என்பதை உதாரணத்துடன் பார்ப்போம். |
01:30 | Static Variable tutorialஇல் பயன்படுத்திய உதாரணத்தை இது ஒத்திருக்கும். |
01:37 | இங்கு மறுபடியும் StudentEnroll classஐ குறிக்கின்றோம். |
01:42 | name மற்றும் id, instance variableகளாகக் கையாளப்படுகின்றன, என்பதை நினைவில் கொள்க. |
01:48 | இங்கு organization மற்றும் total count variableகள், class முழுவதற்கும் பொதுவானவை. |
01:54 | எனவே அவற்றை static variableகளாகக் கருதலாம். |
01:58 | StudentEnroll classஐ குறிப்பதற்கு, கீழே காணும் code இனை type செய்க |
02:03 | இரண்டு static variables count மற்றும் orgname இருப்பதை கவனிக்கவும் |
02:08 | மேலும் orgname என்பது static constant அல்ல; அது சாதாரண static variable ஆகும். |
02:15 | Static variable orgname , “IIT Bombay” என initialize செய்யப்பட்டுள்ளது. |
02:21 | இப்போது Sourceஐ click செய்து -> Generate Constructor using Fieldsஐ தேர்ந்தெடுக்கவும். |
02:27 | உருவாக்கப்பட்ட codeஇல் இருந்து super keywordஐ நீக்கவும். |
02:32 | Constructorஇனுள், type செய்க, count ++ semicolon. இதனால் countஇன் மதிப்பு , ஒவ்வொரு முறை object உருவாகும் போதும் அதிகரிக்கப்படுகின்றது. |
02:42 | இப்போது variableகளின் மதிப்பை print செய்ய showData( ) எனும் methodஐ இந்த class இல் சேர்ப்போம். |
02:48 | எனவே type செய்க: public void showData( ). |
02:51 | id, name மற்றும் organisation nameஇன் மதிப்புகளை print செய்ய, bracketகளுக்குள் பின்வரும் code இனை type செய்க |
02:58 | இப்போது setOrgName என்ற static methodஐ சேர்ப்போம். |
03:03 | பின்வரும் code இனை type செய்யவும். |
03:05 | இங்கு குறிப்பிடப்பட்டுள்ள setOrgName method, static method ஆகும். மேலும் orgnameஇன் மதிப்பை அது மாற்றக் கூடும் |
03:13 | Static variableகளைக் கையாளும் எந்த methodஐயும், static method எனலாம் |
03:19 | இப்போது instance method மற்றும் static method இடையேயான வேறுபாட்டினைக் காணலாம். |
03:25 | Instance methods, static variablesஐ அணுக முடியும். |
03:29 | அதேசமயம் ஒரு static method, static variableகளை மட்டுமே நேரடியாக அணுகி, அவற்றை மாற்ற முடியும். |
03:35 | objectஇனால் மட்டுமே Instance methodகள் செயலாக்கப்படுகின்றன. |
03:39 | அதேசமயம் static methodஐ, object இன்றி நேரடியாக செயலாக்கம் செய்ய முடியும் . |
03:45 | static methodஇனுள், ‘this’ மற்றும் ‘super’ keyword ஐ பயன்படுத்த முடியாது. |
03:50 | ஏனென்றால் இந்த keywordகள், ஒரு குறிப்பிட்ட classஇன் உதாரணத்தைக் குறிப்பவை. |
03:56 | Static அமைப்பில், classஇன் உதாரணங்களைக் குறிப்பிட முடியாது. |
04:01 | இப்போது இந்த static methodஇனுள் instance variable ஐ நேரடியாக அணுகும் போது, என்ன ஆகும் என பார்க்கலாம் |
04:09 | Type செய்க, id= “newid” semicolon |
04:13 | இப்போது Eclipseஇல் பிழை காட்டப்படுகிறது. |
04:17 | instance variableஐ', static method'இனுள் நேரடியாக அணுக முடியாது என்பதை அது குறிப்பிடுகிறது.. |
04:23 | எனவே இந்த வரியை செயலிழப்பு செய்ய comment செய்து தொடர்வோம். |
04:27 | நாம் இப்போது showOrgData எனும் மற்றொரு static methodஐ இணைப்போம் . |
04:31 | இந்த வரிகள் orgname மற்றும் countஇன் மதிப்புகளை print செய்கின்றன. |
04:36 | இப்போது default package'இல் right click செய்து, New-> Class என்பதை click செய்து, Demo என பெயர் கொடுக்கவும். |
04:44 | இந்த classஇனுள்', main method' இருக்க வேண்டும். |
04:48 | எனவே main என type செய்து, பிறகு Ctrl+spaceஐ அழுத்தி main method ஐ உருவாக்கவும். |
04:54 | மாணவர் சேர்க்கையைக் குறிப்பதற்கு, StudentEnroll classஇல் சில objectகளை உருவாக்குவோம். |
05:01 | எனவே 3 objectகளை உருவாக்க பின்வரும் codeஇனை type செய்க: s1, s2 and s3. |
05:08 | இப்போது மாணவர் சேர்க்கை விவரங்களை print செய்ய, showData methodஐ செயலாக்கம் செய்வோம். |
05:12 | s1, s2 மற்றும் s3 மீது showData method ஐ செயலாக்கம் செய்ய, பின்வரும் codeஇனை type செய்க. |
05:19 | orgname மற்றும் countஇன் மதிப்புகளை print செய்ய, showOrgData methodஐயும் செயலாக்கம் செய்வோம் |
05:27 | இது static method என்பதால், class name மூலம் இதனை நேரடியாக செயலாக்கம் செய்யலாம். |
05:31 | அதற்கு, இந்த codeஐ type செய்யவும். |
05:34 | இப்போது Demo programஐ run செய்யலாம் |
05:37 | s1 தொடர்புடைய variable களின் மதிப்புகளான IT101, ADIL மற்றும் IIT BOMBAY print ஆகியிருப்பதைப் பார்க்கலாம் |
05:47 | இவ்வாறு s2 மற்றும் s3 தொடர்புடைய மதிப்புகளும் print ஆகியுள்ளன. |
05:53 | orgnameஇன் மதிப்பான IIT BOMBAY, s1, s2 மற்றும் s3க்கு பொதுவானது என்பதை கவனிக்கவும். |
06:02 | static method showOrgData மூலம், orgname மற்றும் count தனித்தனியாக print செய்யப்படுகின்றன.. |
06:08 | Organisation name IIT Bombay என print செய்யப்பட்டுள்ளதைக் காணவும். |
06:13 | ஏற்கனவே 3 objectகளை உருவாக்கியுள்ளதால், 'மாணவர் சேர்க்கை எண்ணிக்கையின்' மதிப்பு 3 என print ஆகியுள்ளது. |
06:21 | class nameஇனால் static methodஐ நேரடியாக செயலாக்கம் செய்யலாம் |
06:26 | இப்போது static method setOrgNameஐ செயலாக்கம் செய்வோம். |
06:30 | இப்போது நிறுவனத்தின் பெயரை “IIT Bombay” யிலிருந்து “IIT Mumbai” என மாற்றுவோம். |
06:36 | பின்வரும் codeஇனை type செய்க. |
06:38 | சேர்க்கை விவரங்களை print செய்ய showData methodஇனை, s1, s2 மற்றும் s3 மீது மீண்டும் செயலாக்கம் செய்வோம். |
06:47 | அதற்கு பின்வரும் codeஇனை மீண்டும் type செய்யவும் |
06:50 | orgname மற்றும்countஇன் மதிப்புகளை print செய்ய, இன்னொரு முறை showOrgData method ஐ செயலாக்கம் செய்யலாம் |
06:58 | அதற்கு, இந்த codeஐ type செய்க. |
07:00 | Demo programஐ மறுபடியும் run செய்யவும் |
07:03 | Organisation name, “IIT Mumbai” என மாறிருப்பதைக் காணலாம். |
07:08 | இப்போது slidesக்கு வருவோம். |
07:11 | Object references ஐ ஒரு static methodக்கு அனுப்பலாம். |
07:15 | இவ்வாறு static method, ஒரு objectஇன் instance variablesஐ அணுக முடியும். |
07:22 | இதனை நம் codeஇல் முயற்சி செய்யலாம். Eclipse க்கு மாறி, StudentEnroll classக்கு செல்லவும் |
07:30 | இப்போது setOrgName methodஇல், மற்றொரு argument ஐ StudentEnroll classஇன் objectஆக அனுப்பவும். |
07:38 | எனவே String orgக்கு பிறகு, type செய்க: comma StudentEnroll s |
07:45 | இப்போது methodஇனுள், id = "newid" என்பதை uncomment செய்து செயலாக்கம் செய்யவும் |
07:50 | idக்கு பதிலாக, type செய்க: s.id |
07:54 | Demo classக்கு செல்லவும். |
07:56 | StudentEnroll object s1ஐ அனுப்புவதால், setOrgName methodக்கான function callஇல் மாற்றம் செய்யலாம். |
08:05 | எனவே “IIT Mumbai”ஐ அடுத்து, type செய்க: comma s1. |
08:10 | Demo programஐ மறுபடியும் run செய்யவும் |
08:12 | s1க்கான idஇன் மதிப்பு “newid” என மாறியிருப்பதைக் காணலாம் |
08:19 | இப்போது சுருக்கமாகப் பார்ப்போம். இந்த tutorialஇல் நாம் கற்றது |
08:24 | static method மற்றும் அதன் பயன் |
08:28 | static methods மற்றும் instance methodsஇன் வேறுபாடு , மேலும் |
08:33 | static methodsஐ உருவாக்கும் முறை மற்றும் செயலாக்கம் |
08:37 | இந்த பயிற்சி Static variable பயிற்சியின் தொடர்ச்சி |
08:42 | நீங்கள் Static variable பயிற்சியை முடித்துவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் |
08:47 | இங்கே மாற்றங்களை மட்டுமே நாங்கள் முன்வைக்கிறோம். |
08:50 | இங்கு “status”ஐ குறிக்க ஒரு variable உள்ளது |
08:55 | car “in” for service அல்லது “out” after service என்பதை, அது குறிக்கிறது. |
09:01 | No of cars out after Service என்பதைக் குறிக்க மற்றொரு variable உள்ளது. |
09:08 | service(Car c) எனும் methodஐ define செய்து, அது statusஐ "out" என புதுப்பிக்குமாறு செய்யவும். |
09:13 | அவ்வாறே அது No of Cars in for Service மற்றும் No of Cars out after Service இன் மதிப்புகளையும் மாற்றும் |
09:21 | அத்துடன் carஇன் அனைத்து விவரங்களையும் print செய்ய, show( ) எனும் methodஇனை define செய்யவும் |
09:26 | முன்பு போல், பட்டியலிடப்பட்டுள்ளபடி பின்வருமாறு செய்ய வேண்டும் |
09:30 | தேவைக்கேற்ப static method ஐ அடையாளம் கண்டு define செய்ய வேண்டும், என்பதை கவனத்தில் கொள்க. |
09:35 | அத்துடன் Demo classஐ உருவாக்கவும். |
09:38 | main methodஇனுள், CarServiceக்கு சில objectsகளை உருவாக்கவும். |
09:43 | service( ) methodஐ சில objectsஇல் செயலாக்கம் செய்யவும் |
09:47 | அனைத்து objectsகளைக் கொண்டும், show( ) methodஐ செயலாக்கம் செய்து, முடிவுகளை சரிபார்க்கவும். |
09:52 | கீழே காணும் தொடுப்பின் மூலம், Spoken Tutorial திட்டம் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். |
09:57 | அதை பதிவிறக்கம் செய்து காணுங்கள் |
09:59 | Spoken Tutorial திட்டக்குழு,
spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது; இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது |
10:08 | மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
10:11 | இந்திய அரசாங்கத்தின் MHRD இன் NMEICT, Spoken Tutorial திட்டத்திற்கு நிதியுதவி தருகிறது. |
10:20 | மேலும் இந்த திட்டம் பற்றி அறிய, கீழே உள்ள தொடுப்பினைக் காணவும். |
10:28 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஐஸ்வர்யா, குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி. |