Difference between revisions of "Java/C3/Abstract-Classes/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | <center>'''Time'''</center> | <center>'''Narration'''</center> |- | 00:00 | '''abstract class''' பற்றிய '''spoken tutorial''' க்கு நல்...")
 
 
Line 422: Line 422:
 
|-
 
|-
 
| 10:28
 
| 10:28
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சங்கர், குரல் கொடுத்தது….. நன்றி.
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சங்கர், குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 14:55, 23 November 2017

Time
Narration
00:00 abstract class பற்றிய spoken tutorial க்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில், கற்கபோவது: abstract methods மற்றும் concrete methods
00:12 abstract class மற்றும் concrete class.
00:16 abstract class களை எப்படி பயன்படுத்துவது .
00:18 இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது:ubuntu 12.04, JDK 1.7 மற்றும் eclipse 4.3.1
00:28 இந்த tutorial லை பின்பற்ற, Java மற்றும் Eclipse IDE ஆகியவற்றின் அடிப்படைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
00:36 Java வின் sub classing பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.
00:40 இல்லையெனில், அதற்குரிய Java tutorialகளுக்கு, கீழ்க்கண்ட இணைப்பை பார்வையிடவும்.
00:46 முதலில் நாம் abstract method ஐ பற்றி பார்ப்போம்.
00:50 ஒரு abstract method ஆனது எந்தவித implementation னும் இல்லாமல் declare செய்யப்படுகிறது.
00:55 Abstract keyword மூலம் இத declare செய்யப்படுகிறது.
00:59 இதில் opening மற்றும் closing parenthesis கள் பயன்படுத்த தேவையில்லை.
01:04 Sample program களை கொண்டு abstract method இன் பயன்பாட்டை இனி புரிந்துகொள்வோம்.
01:09 இப்போது நாம் eclipse க்கு மாறுவோம், Abstract Demo என்கிற புதிய project ஐ உருவாக்குவோம்.
01:16 இந்த project இல் நாம் abstract class பயன்பாட்டிற்கு தேவையான class களை முதலில் உருவாக்குவோம்.
01:24 இப்போது, ​​src folder ஐ right கிளிக் செய்து பின் New > Classஐ தேர்வு செய்யவும்.
01:30 இந்த class இற்கு Person என்று பெயரிட்டு Enter ஐ அழுத்தவும்.
01:35 அந்த person பெயர் மற்றும் வயதைக் குறிக்க field களை சேர்ப்போம். இதற்கு Type செய்க:String name semicolon.
01:44 மேலும் type செய்க:int age semicolon
01:48 இப்போது Source ஐ click செய்து வரும் option இல் Generate constructor using fields என்பதை தேர்ந்தெடுக்கவும்.
01:55 generate செய்யப்பட்ட code இல் இருந்து super keyword ஐ நீக்கவும்.
01:59 Constructor ஆனது name மற்றும் age field களுக்கு மதிப்புகளை initialize செய்யும்.
02:05 அடுத்து நாம் concrete method ஐ பற்றி பார்ப்போம்.
02:08 ஒரு concrete method ஆனது curlybrackets பயன்படுத்தி முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.
02:14 இதே Class இற்கு ஒரு concrete method ஐ பயன்படுத்தி name ஐ யும் age ஐ யும் print செய்ய முயல்வோம்.
02:21 திரையில் காண்பிக்கப்படும் code ஐ type செய்யவும்.
02:25 இங்கே விளக்கப்பட்டுள்ள showBasicDetails( ) method ஆனது concrete method க்கு ஒரு உதாரணம் ஆகும்.
02:32 இந்த method ஐ முழுமையாக செயல்ப்படுத்தப்படுவதை கவனிக்கவும்.
02:36 இப்போது நாம் இதே class இற்கு abstract method ஐ சேர்ப்போம்.
02:41 எனவே, type செய்க:public void showDetails( ) semicolon.
02:46 Abstract keyword ஐ இன்னும் சேர்க்கவில்லை என்பதால் ஒரு error காண்பிக்கும்.
02:51 எனவே, இப்போது abstract keyword ஐ சேர்க்கவும்.
02:55 இப்போது, மற்றொரு error வருவதை பார்க்கலாம்.
02:58 ஏனெனில் இந்த abstract method களை abstract class இற்கு மட்டுமே சேர்க்க முடியும்.
03:03 எனவே, இப்போது abstract keywordPerson class இல் சேர்ப்பதன் மூலம் abstract class ஆக மாற்றலாம்.
03:10 Person class என்று இங்கே காட்டப்படுவது ஒரு abstract class ஆகும்.
03:15 இது showDetails( ) எனப்படும் ஒரு abstract method ஐ பெற்றிருக்கும்.
03:20 இங்கே உள்ள figure இதன் inheritance relation ஐ குறிக்கிறது.
03:24 இங்கே, Person class என்பது abstract class ஆகும்.
03:29 Employee class மற்றும் Student class போன்றவை Person class களின் subclass ஆகும்.
03:35 இந்த sub class இற்கு தனக்கு ஏற்றார்போல வெவ்வேறு implementation களை வழங்க முடியும்.
03:40 இது தற்போது Person class இல் வரும் showDetails( ) methodஇல் வழங்கப்படுகிறது.
03:45 உதாரணமாக:Employee class இல் உள்ள ShowDetails( ) method Employee ID மற்றும் Salary போன்ற விவரங்களை printசெய்கிறது, இதேபோல் Student class இல் உள்ள ShowDetails( )ஆனது Student Register Number மற்றும் Grade போன்றவைகளை print செய்கிறது.
04:01 Default package இல் right click செய்து Employee என்று மற்றொரு class ஐ உருவாக்கவும்.
04:07 இப்போது இதை ஒரு Person class இன் sub class ஆக இணைக்க இவ்வாறு type செய்க:extends Person.
04:14 இப்போது, Eclipse IDE இல் ஒரு error வருவதை நாம் காணலாம்.
04:19 Abstract method showDetails( ) க்கு ஒரு implementation ஐ வழங்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது.
04:26 சிறிது நேரம் கழித்து அதை செய்வோம்.
04:28 இப்போது employee ID மற்றும் employee salary ஆகியவற்றைக் குறிக்கும் இரண்டு field களை உருவாக்குங்கள்.
04:34 எனவே, type செய்க:String empid semicolon மற்றும் int salary semicolon
04:42 இப்போது Source என்பதைக் click செய்து, Generate constructor using field என்பதை தேர்ந்தெடுக்கவும்.
04:49 இந்த constructor, name, age, employee ID மற்றும் salary போன்றவற்றின் மதிப்புகளை initialize செய்யும்.
04:56 இப்போது showDetails method ஐ define செய்வோம். Type செய்க:public void showDetails( ) .
05:04 இந்த method இன் உள்ளே ஊழியர் விவரங்களை print செய்திட வேண்டும் எனில்
05:09 திரையில் காண்பிக்கப்படும் code ஐ type செய்யவும்.
05:13 ShowDetails( ) method செயல்படுத்தப்பட்டவுடன், error மறைந்துவிடுகிறது என்பதை நினைவில் கொள்க.
05:19 அடுத்து நாம் project இல் வரும் Student class ஐ பற்றி பார்ப்போம்.
05:23 நான், ஏற்கனவே Student எனப்படும் sub class ஐ உருவாக்கியுள்ளேன்.
05:28 Student class இல் இரண்டு field கள் உள்ளன– register number - மாணவர் பதிவு எண் மற்றும் grade-தேர்வு தரம் ஆகியவற்றைக் குறிக்கும்.
05:37 இந்த class உள்ளே ஒரு constructor உம் உருவாக்கப்பட்டுள்ளது.
05:42 name, age, register number மற்றும் grade இற்கான மதிப்புகள் வழங்க இந்த constructor பயன்படுத்தப்படுகிறது.
05:50 இந்த classல் showDetails method உம் implement செய்யப்படுகிறது.
05:56 இது Student Register Number மற்றும் gradeஐ print செய்கிறது.
06:00 Employee class, அதன் showDetails( ) methodன் implementation ஐ கொண்டுள்ளது.
06:08 Students class உம் அதன் showDetails( ) methodன்implementation ஐ கொண்டுள்ளது
06:14 இப்போது default package ஐ right click செய்து.
06:17 New > Class சென்று, பெயரை Demo என கொடுக்கவும்.
06:23 இந்த class இன் உள்ளே main methodஐ பயன்படுத்துவோம்.
06:27 எனவே, main என type செய்து main method ஐ உருவாக்க ctrl + space ஐ அழுத்தவும்.
06:33 இப்போது Person class ஐ instantiate செய்ய type செய்க:Person P1 equals new Person .
06:42 Bracket கள் மற்றும் double quote களுக்கு இடையில் John பின்னர் semicolon
06:48 இப்போது நாம் ஒரு error ஐ பார்க்க முடியும். ஏனெனில், இந்த Person class ஆனது abstract ஆகும் மற்றும் அது instantiate ஆவதில்லை.
06:58 இந்த வரியை நீக்குவோம்.
07:00 திரையில் வரும் code ஐ typeசெய்க.
07:04 இப்போது Employee class ஐ பயன்படுத்தி Student class ஐ instantiate செய்ய Person p1 equals new Employee என type செய்யவும்.
07:14 முதல் வரியில் நாம் வெவ்வேறு argument களின் மதிப்புகளை எடுத்துச்செல்கிறோம்.
07:19 John, Employee name எனவும்.
07:22 40, age எனவும் எடுத்துக்கொள்கிறோம்.
07:25 E267 என்பது Employee ID என்றும் மற்றும் 10000 என்பது Employee salary இன் மதிப்பாக எடுத்துக்கொள்கிறோம்.
07:33 Person class இல் concrete method ஐ செலுத்த p1.showBasicDetails( ) பயன்படும்.
07:41 Object p1 ஐ பயன்படுத்தி p1.showDetails( ) என தருவதன் மூலம் showDetails method யையும் call செய்யலாம்.
07:50 இதேபோல் Student class ஐ பயன்படுத்தி Person class instantiate செய்யவும்.
07:55 இது Person p2 equals new Student எனக் குறிப்பிடப்படுகிறது.
08:01 இப்போது, நாம் வெவ்வேறு argumentகளின் மதிப்புகளை அனுப்புகிறோம்.
08:06 showBasicDetails( ) மற்றும் showDetails( )method ஆகியவற்றைப் இதே object ஐ பயன்படுத்தி invoke செய்யலாம்.
08:15 இப்போது இந்த Demo programrun செய்யவும்.
08:18 எனவே, Class demo வை right click செய்து பின்னர் Run as > Java Application ஐ தேர்ந்தெடுக்கவும்.
08:25 name மற்றும் age போன்ற அடிப்படை ஊழியர் விவரங்களை output இல் பார்க்க முடியும்.
08:31 இவை showBasicDetails( ) method மூலம் print செய்யப்படுகின்றன.
08:35 employee ID மற்றும் salary போன்ற பணியாளர் விவரங்கள் showDetails( ) method மூலம் print செய்யப்படுகின்றன.
08:43 இதேபோல், name மற்றும் age போன்ற அடிப்படை மாணவர் விவரங்கள் showBasicDetails( ) method மூலம் print செய்யப்படுகின்றன.
08:52 Students register number மற்றும் grade போன்ற மாணவர்களின் மற்ற விவரங்கள் showDetails( ) method மூலம் print செய்யப்படுகின்றன.
09:01 இப்போது, இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
09:07 இந்த டுடோரியலில், நாம் கற்றுக் கொண்டவை:

Abstract methods மற்றும் concrete methods.

09:14 Abstract மற்றும் concrete class கள் மற்றும் Abstract class களை எப்படி உருவாக்குவது மற்றும் பயன்படுத்துவது.
09:21 உங்கள் பயிற்சிக்காக, abstract method இல் run( ) என்ற abstract class Vehicle ஒன்றை உருவாக்கவும்.
09:29 run method ஐ பயன்படுத்தி Vehicle class ஐ extend செய்து ஒரு subclass car ஐ உருவாக்கி அதன்மூலம் Car is running on 4 wheels என்று print செய்யவும்.
09:39 மீண்டும் run method ஐ செயல்படுத்தி Vehicle class ஐ extend செய்து ஒரு sub class bikeஐ உருவாக்கி அதைக்கொண்டு Bike is running on 2 wheels என்பதை print செய்யவும்.
09:50 முடிவுகளை சரிபார்க்க main method ஐ கொண்டு ஒரு Demo class ஐ உருவாக்கவும்.
09:56 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருக்கமாக காட்டும். அதை தரவிறக்கி பார்க்கவும்.
10:03 spoken tutorial திட்ட குழுவானது spoken tutorialகளை பயன்படுத்தி workshop களை நடத்துகிறது.
10:09 online testகளில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ்களை அளிக்கிறது.
10:13 மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும்.
10:16 spoken tutorial திட்டத்திற்கு NMEICT, MHRD, இந்திய அரசால் நிதியளிக்கப்படுகிறது.
10:23 இந்த பணி பற்றிய மேலும் தகவல்கள் காட்டப்பட்டுள்ள link இல் கிடைக்கும்.
10:28 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சங்கர், குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst