Difference between revisions of "LibreOffice-Writer-on-BOSS-Linux/C3/Using-track-changes/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 2: Line 2:
 
|| TIME
 
|| TIME
 
|| NARRATION
 
|| NARRATION
 
  
 
|-
 
|-
Line 50: Line 49:
 
|-
 
|-
 
||01:16
 
||01:16
||Seven-reasons-to-adopt-FOSS.odt
+
||Seven-reasons-to-adopt-FOSS.odt Government-support-for-FOSS-in-India.odt
Government-support-for-FOSS-in-India.odt
+
  
 
|-
 
|-

Latest revision as of 10:35, 7 April 2017

TIME NARRATION
00:00 அனைவருக்கும் வணக்கம்.
00:03 LibreOffice Writer இல் 'Track changes while Editing a document' குறித்த Spoken tutorial க்கு நல்வரவு
00:09 இதில் document களை Writerஇல் peer review செய்வதை பார்க்கலாம்
00:15 இருப்பிலுள்ள ஒரு document ஐ திறக்கலாம்.
00:18 'Record Changes' option ஐ பயன்படுத்தி peer review செய்து குறிப்புகளை தருவதை காணலாம்.
00:25 வசதி என்னவென்றால் review செய்பவர் குறிப்புகள் எழுதலாம்; text ஐ சேர்க்கலாம், நீக்கலாம், மாற்றலாம்; இவை அத்தனையும் document இல் தெளிவாக காண்பிக்கப்படும்.
00:40 இவற்றை சுலபமாக காணும் ஆசிரியர் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாம், நிராகரிக்கலாம்; இப்படி திருத்தங்களை மீண்டும் எழுதும் வேலையின்றி குறிப்புகளை உள்ளிடலாம்.
00:52 பைலை சேமிக்கும்போது இந்த குறிப்புகளும் சேர்த்து சேமிக்கப்படும்.
00:56 ஆகவே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
01:01 இங்கு பயனாவது GNU/Linux மற்றும் Libre Office Suite version 3.3.4.
01:09 இந்த tutorial இல் ஏற்கெனெவே உருவாக்கி சேமித்த சில document களை பயன்படுத்துவேன். அவை -
01:16 Seven-reasons-to-adopt-FOSS.odt Government-support-for-FOSS-in-India.odt
01:24 Writer ஐ துவக்க Applications - Office and LibreOffice Writer என முறையே சொடுக்குக. Seven-reasons-to-adopt-FOSS.odt ஐ திறக்கவும்.
01:40 'record changes' option ஐ செயலாக்க
01:43 EDIT → CHANGES சென்று RECORD option ஐ checkசெய்யவும்.
01:52 SHOW option ஐயும் check செய்க. இது எந்த பின்வரும் மாறுதல்களையும் தெளிவாக காட்டும்.
02;00 document இல், இரண்டாம் point ஐ உள்நுழைக்கலாம்.
02:05 point எண் 2 சென்று type செய்யலாம்.
02:08 Linux is a virus resistant operating system since each user has a distinct data space and cannot directly access the program files.
02:36 Enter செய்க. நடப்பு point எண் இரண்டு - point எண் 3 ஆகிவிட்டது.
02:41 உள்ளிட்ட text வேறு நிறத்தில் இருப்பதை காணுங்கள்.
02:45 text மீது சொடுக்கியை வைக்க செய்தி தெரிகிறது.
02:50 “Inserted Sriranjani:” உள்நுழைத்த தேதி, நேரம்.
02:55 இப்படி document இல் குறிப்பெழுதியவர் அடையாளம் காட்டப்படுகிறார். இந்த பெயர் எங்கிருந்து வந்தது? கணினியில் LibreOffice நிறுவப்பட்ட போது கொடுத்த பெயரே இது.
03:07 முதல் வரியில் “avalable” சொல்லின் எழுத்துப்பிழையை திருத்தவும். திருத்தத்தை காணலாம்.
03:16 முதல் point ஐ நீக்குவோம் -
03:18 “It can be installed on all computers without restriction or needing to pay license fees to vendors”.
03:30 நீக்குதல் என்பது வரியை உண்மையில் நீக்கவில்லை. ஆனால் நீக்க பரிந்துரை செய்யப்பட்டதாக குறிக்கிறது.
03:39 text மீது சொடுக்கியை வைக்க ஒரு செய்தி தெரிகிறது.
03:43 “Deleted Sriranjani:” நீக்கிய தேதி, நேரம்.
03:48 இப்படி இருப்பில் உள்ள ஒரு document இல் text ஐ சேர்த்தல், நீக்குதல், மாற்றுதல் போன்ற மாற்றங்களை செய்யலாம்.
04:00 ஒரே document ஐ ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களும் கூட திருத்தலாம்.
04:03 LO Writer இவற்றை வெவ்வேறு நிறங்களில் காட்டும். இதனால் யார் திருத்தி உள்ளார்கள் என சுலபமாக கண்டுகொள்ளலாம்.
04:12 சந்தேகமானால் சொடுக்கியை text மேல் வைக்க குறிப்பில் விவரங்கள் காட்டப்படும்.
04:18 என் சக பணியாளர் குரு திருத்திய ஒரு document ஐ திறந்து இதை காட்டுகிறேன்.
04:26 “Government-support-for-FOSS-in-India.odt” என்னும் text ஆவண கோப்பை திறப்போம்.
04:34 document இல் பல சேர்க்கைகள், அடித்தல் திருத்தங்களை காணலாம்.
04:41 சொடுக்கியை text மேல் வைக்க குறிப்பில் அடித்தல் திருத்தங்களை Guru செய்தார் என காட்டப்படுகிறது.
04:51 அடியில் ஒரு point ஐ சேர்க்கலாம் “CDAC, NIC, NRC-FOSS are institutions of Government of India which develop and promote FOSS”
05:17 இந்த உள்நுழைவின் நிறம் குரு செய்த மாற்றங்களுக்கான நிறத்திலிருந்து வித்தியாசமானது.
05:23 சொடுக்கியை இந்த உள்நுழைவின் மேல் வைக்க “Inserted: Sriranjani” என்ற செய்தி காட்டப்படுகிறது.
05:28 இப்படியாக ஒரு document உருவாக்கியவரின் கைக்கு மீண்டும் போய் சேரு முன் பலர் திருத்தங்களை செய்யலாம்.
05:34 document ஐ சேமிக்காமல் மூடுவோம்.
05:44 இப்போது ஆசிரியர் மறு ஆய்வாளரின் திருத்தங்களை எப்படி ஒப்புக்கொள்வதோ நிராகரிப்பதோ செய்யலாம் என பார்க்கலாம்.
05:49 “Government-support-for-FOSS-in-India”,document இல் நான்தான் ஆசிரியர் என்றும் குரு செய்த திருத்தங்களை ஒப்புக்கொள்வதோ நிராகரிப்பதோ செய்யப்போகிறேன் எனலாம்.
06:11 point 2 க்குப்போய் நீக்கப்பட்ட text 'reasons' மீது வலது சொடுக்குகிறேன். பின் 'Accept Change' என்பதையும் சொடுக்குகிறேன்.
06:22 text நீங்கி மறு ஆய்வாளர் கொடுத்த மாற்றம் ஏற்கப்பட்டது.
06:27 'needs' என்ற உள்நுழைத்த text ஐ வலது-சொடுக்குக; 'Accept Change' ஐயும் சொடுக்குக.
06:34 text சாதாரணமாகி விட்டது. இதைத்தான் மறு ஆய்வாளர் பரிந்துரைத்தார்.
06:39 இப்படியாக, மறு ஆய்வாளர் தரும் உள்நுழைவு, நீக்கம் ஆகிய எல்ல திருத்தங்களையும் ஆசிரியர் ஒப்புக்கொள்ள முடியும்.
06:48 point 1 க்கு சென்று நீக்கப்பட்ட “The OpenOffice document standard has been notified under this policy” வரி மீது வலது சொடுக்குக. 'Reject change' ஐ தேர்ந்தெடுக்கவும்.
07:01 text சாதாரணமாகி விட்டது. அதாவது பரிந்துரை ஆசிரியரால் நிராகரிக்கப்பட்டது.
07:08 point 5 க்கு சென்று “Government Schools in these states and in Orissa, Karnataka and Tamil Nadu learn Linux” வரி மீது வலது சொடுக்குக. 'Reject change' ஐ தேர்ந்தெடுக்கவும். இது மறு ஆய்வாளர் உள்நுழைத்த வரிகளை நீக்கிவிட்டது.
07:26 இப்படி மறு ஆய்வாளர் தரும் உள்நுழைவு, நீக்கம் - எல்லா திருத்தங்களையும் ஆசிரியர் ஒப்புக்கொள்ளவோ நிராகரிக்கவோ முடியும்.
07:33 இறுதியாக, ஒப்புக்கொள்ளல், நிராகரிப்பு எல்லாம் முடிந்த பின் EDIT >> CHANGES சென்று 'Record', 'Show' option களை குறி நீக்கவும்.
07:55 குறி நீக்கிய பின் திருத்தம் தனியாக குறிக்கப்பட மாட்டாது.
08:00 மறு ஆய்வாளர்களின் மாற்றங்களை ஒப்புக்கொண்டோ நிராகரித்தோ முடிவு செய்தபின், ஆவண சேமித்தலை உறுதி செய்க.
08:08 இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது. இறுதியாக பயிற்சி.
08:15 ஒரு document ஐ திறந்து சொற்பிழைகளை Record Changes பாங்கில் திருத்துக.
08:24 இங்கே ஏற்கெனெவே அந்த பயிற்சியை செய்து வைத்து இருக்கிறேன்.
08:30 கீழ் வரும் தொடுப்பில் விடியோவை காணவும். இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணலாம்.
08:40 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
08:44 இணையத்தில் பரிட்சை தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
08:53 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது..
09:02 மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:13 மூல பாடம் IT for change.தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி

Contributors and Content Editors

Priyacst