Difference between revisions of "Git/C2/Stashing-and-Cleaning/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|Border = 1 | <center>Time</center> | <center>Narration</center> |- |00:01 |'''Git'''ல், ''' stashing மற்றும் cleaning ''' குறித்த '''ஸ்...") |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
|00:11 | |00:11 | ||
− | | | + | |''' stash'''ஐ உருவாக்குவது, ''' stash'''ஐ செயல்படுத்துவது மற்றும் '''stash'''ஐ நீக்குவது |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|00:19 | |00:19 | ||
− | | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: | + | | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: '''Ubuntu Linux 14.04''', '''Git 2.3.2''' மற்றும் '''gedit Text Editor''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 181: | Line 175: | ||
|- | |- | ||
− | |04: 34 | + | |04:34 |
| terminalலில், '''stash''' பெயர், '''branch''' பெயர் மற்றும் '''stash''' உருவாக்கப்பட்ட இடம் அனைத்தும் தெரியும். | | terminalலில், '''stash''' பெயர், '''branch''' பெயர் மற்றும் '''stash''' உருவாக்கப்பட்ட இடம் அனைத்தும் தெரியும். | ||
Line 362: | Line 356: | ||
|- | |- | ||
|09:22 | |09:22 | ||
− | | ''' stash@{1}''' நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும், ''' stash@{2}''' ஆனது ''' stash@{1}''' | + | | ''' stash@{1}''' நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும், ''' stash@{2}''' ஆனது ''' stash@{1}''' ஆகிவிட்டது. |
− | ஆகிவிட்டது. | + | |
|- | |- | ||
Line 419: | Line 412: | ||
|- | |- | ||
|10:51 | |10:51 | ||
− | |மேலும், நாம் கற்றது | + | |மேலும், நாம் கற்றது: ''' stash'''ஐ உருவாக்குவது, ''' stash'''ஐ செயல்படுத்துவது மற்றும் '''stash'''ஐ, நீக்குவது |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 443: | Line 432: | ||
|- | |- | ||
|11:21 | |11:21 | ||
− | | repositoryலிருந்து எல்லா stashகளையும் நீக்கவும். | + | | repositoryலிருந்து எல்லா stashகளையும் நீக்கவும். (குறிப்பு-''' git stash clear''') |
− | + | ||
− | (குறிப்பு-''' git stash clear''') | + | |
|- | |- |
Latest revision as of 14:58, 6 April 2017
|
|
00:01 | Gitல், stashing மற்றும் cleaning குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, stashing. |
00:11 | stashஐ உருவாக்குவது, stashஐ செயல்படுத்துவது மற்றும் stashஐ நீக்குவது |
00:19 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04, Git 2.3.2 மற்றும் gedit Text Editor |
00:32 | உங்களுக்கு விருப்பமான editorரை பயன்படுத்தலாம். |
00:36 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, Git commandகள், மற்றும், Gitல் branching பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:43 | இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:48 | இப்போது stashing பற்றிக் கற்போம். |
00:51 | ஒரு branchன் தற்காலிக மாற்றங்களை சேமிக்க stashing பயன்படுத்தப்படுகிறது. |
00:57 | branchகளுக்கு இடையே மாறும் போது, தற்போதைய பணியை, commit செய்யாமல் நிறுத்திவைக்க இது உதவுகிறது. |
01:04 | தற்காலிக மாற்றங்களின் Stashஐ எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம். |
01:08 | இந்த டுடோரியலின் தொடரில் முன்னதாகவே, stash ஐ பார்த்தோம் என்பதை நினைவில் கொள்க. |
01:16 | இப்போது, அதை மேலும் விரிவாகக் கற்போம் |
01:20 | terminalஐ திறந்து தொடங்குவோம். |
01:25 | நாம் முன்னதாக உருவாக்கிய, Git repository mywebpageஐ திறக்கவும். |
01:30 | டைப் செய்க: cd space mywebpage, பின் Enterஐ அழுத்தவும். |
01:35 | செயல் விளக்கத்திற்கு, html fileகளையே தொடர்ந்து பயன்படுத்துகிறேன். உங்களுக்கு விருப்பமான எந்த file வகையையும் பயன்படுத்தலாம். |
01:44 | இப்போதிலிருந்து, terminalலில், எந்த command ஐ டைப் செய்த பிறகும், Enter key ஐ அழுத்த நினைவில் கொள்க. |
01:52 | முதலில், branch listஐ சரி பார்க்க, டைப் செய்க: git space branch. |
01:58 | நான், chapter-three என்ற branchஐ முன்னதாகவே உருவாக்கிவிட்டேன். |
02:03 | செயல் விளக்க நோக்கத்திற்கு, உள்ளே ஒரு commit செய்து இருக்கிறேன். |
02:08 | நீங்களும் ஒரு புது branchஐ உருவாக்கி, அதன் உள்ளே commit செய்ய நினைவில் கொள்க. |
02:15 | branch chapter-threeகு செல்ல, டைப் செய்க: git space checkout space chapter-three. |
02:23 | Git log ஐ சரி பார்க்கவும். |
02:26 | செயல் விளக்கத்திற்காக, chapter-three branchல் நான் உருவாக்கிய commit இது தான். |
02:31 | folder contentஐ சரி பார்க்க, டைப் செய்க: "ls". |
02:35 | நீங்கள் Windows operating systemல் வேலை செய்கிறீர்கள் என்றால், "ls" commandகு பதிலாக "dir" commandஐ பயன்படுத்தவும். |
02:43 | நம்மிடம் மூன்று html fileகள் உள்ளன என்பதை கவனிக்கவும். |
02:47 | இப்போது, mypage.html fileலில் சில மாற்றங்களை செய்வோம். |
02:53 | mypage.html fileஐ திறக்க, டைப் செய்க: gedit space mypage.html space ampersand. |
03:03 | முன்னர் சேமித்து வைத்திருந்த, writer documentலிருந்து, சில வரிகளை, copy paste செய்கிறேன். |
03:11 | fileஐ சேமித்து மூடவும். |
03:14 | Git statusஐ சரி பார்க்க, டைப் செய்க: git space status. |
03:19 | நமது மாற்றங்கள் stage ல் சேர்க்கப்படவில்லை என்பதை புரிந்து கொள்க. |
03:24 | ஒரு பெரிய projectல் பணி புரியும் போது, அடிக்கடி branchகளுக்கு இடையே மாறும் நிலைமை ஏற்படலாம். |
03:30 | வேறு வேலை செய்ய, master branchகு திரும்பச் செல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். |
03:37 | டைப் செய்க: git space checkout space master. |
03:41 | மாற்றங்களை commit செய்யாமல், மற்ற branchகளுக்கு திரும்பி செல்ல முடியாது என்று ஒரு error காட்டும். |
03:48 | என் வேலையில் பாதி மட்டும் முடிந்திருப்பதால், என் மாற்றங்களை இப்போது commit செய்ய வேண்டாம். |
03:55 | hyphen hyphen force flagஐ பயன்படுத்தி, இந்த branchலிருந்து கட்டாயமாக வெளிவர முயன்றால், மாற்றங்கள் புறக்கணிக்கப்படும். |
04:04 | மாற்றங்களை தற்காலிகமாக சேமிக்க செய்ய வேண்டுமெனில், Stashingஐ பயன்படுத்தவும். |
04:11 | மாற்றங்களை தற்காலிகமாக சேமிக்க, டைப் செய்க: git space stash space save space இரட்டை மேற்கோள்களில் “Stashed mypage.html”. |
04:24 | இங்கு, “Stashed mypage.html” என்ற stash பெயரை கொடுத்துள்ளேன். உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு பெயரை கொடுக்கலாம். |
04:34 | terminalலில், stash பெயர், branch பெயர் மற்றும் stash உருவாக்கப்பட்ட இடம் அனைத்தும் தெரியும். |
04:42 | Git statusஐ சரி பார்க்க, டைப் செய்க: git space status. “nothing to commit”, என்ற தகவலைக் காணலாம். |
04:51 | ஆதலால், இப்போது branchகளுக்கு இடையே மாறலாம். |
04:55 | மறுபடியும், master branchகுள் செல்ல, டைப் செய்க: git space checkout space master. |
05:03 | stashingகு பிறகு , branchகளுக்குள் மாற முடிகிறது என்பதை கவனிக்கவும். |
05:07 | அடுத்து, stashingன் வேறு ஒரு வழிமுறையை காணலாம். |
05:11 | அதற்கு, மீண்டும் chapter-three branchகு செல்ல, டைப் செய்க: git space checkout space chapter-three. |
05:20 | இப்போது, history.html fileஐ edit செய்கிறேன். டைப் செய்க:' gedit space history.html space ampersand. |
05:31 | என் Writer documentலிருந்து சில வரிகளை சேர்க்கிறேன். |
05:35 | fileஐ சேமித்து மூடவும். |
05:38 | Git statusஐ சரி பார்க்க, டைப் செய்க: git space status. |
05:44 | உதாரணத்திற்கு, stashல், இந்த மாற்றங்களை வேறு வழியில் சேமிக்க வேண்டும் எனில், டைப் செய்க: git space stash. |
05:54 | இங்கு, stash பெயரைக் கொடுக்கவில்லை என்பதை கவனிக்கவும். |
05:58 | நாம் stash பெயரைக் கொடுக்கவில்லை எனில், சமீபத்திய commitன் பெயரில் stash சேமிக்கப்படும். |
06:04 | அடுத்து, stash பெயரும், சமீபத்திய commitஉம் ஒன்றாக உள்ளனவா என சரி பார்க்கலாம். |
06:10 | முதலில், Git log ஐ சரி பார்க்கவும். |
06:14 | stash பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git space stash space list. |
06:20 | சமீபத்திய commitஉம், சமீபத்திய stash பெயரும் ஒன்றாகவே இருக்கின்றன. |
06:25 | பட்டியலில், சமீபத்திய stash, முதலில் இருப்பதை கவனிக்கவும். அப்படியெனில், stashகள், கால வரிசைப்படி பட்டியலிடப்படுகின்றன. |
06:35 | இந்த stash id தானாகவே உருவாக்கப்படும். |
06:40 | செயல் விளக்க நோக்கத்திற்கு, மற்றொரு stashஐ உருவாக்குகிறேன். |
06:45 | அதற்கு, story.html fileஐ edit செய்ய, டைப் செய்க: gedit space story.html space ampersand. |
06:55 | story.html fileலில் சில வரிகளை சேர்க்கிறேன். |
07:00 | பிறகு, fileஐ சேமித்து மூடவும். |
07:03 | இப்போது, மாற்றங்களை stashல் சேமிக்கிறேன். |
07:07 | டைப் செய்க: git space stash space save space இரட்டை மேற்கோள்களில் “Stashed story.html”. |
07:17 | stash பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git space stash space list. |
07:24 | chapter-three branchல் மூன்று stashகள் இருப்பதைக் காணலாம். |
07:30 | சில நேரங்களில், stashகளில் எந்த மாற்றங்களை சேமித்தோம் என்று நினைவிருக்காது. |
07:36 | அதை சரி பார்க்க கற்போம். |
07:40 | உதாரணத்திற்கு, stash@{0}ன் விவரங்களை காண வேண்டும் எனில். |
07:45 | டைப் செய்க: git space diff space stash at the rate (@) symbol curly bracketகளுக்குள் zero. |
07:54 | இப்போது story.htmlன் மாற்றங்களை காணலாம். இதைத் தான் நாம், stash@{0}ல் சேமித்தோம். |
08:01 | அடுத்து, stashed fileகளில் தொடர்ந்து வேலை செய்வோம். |
08:06 | அதற்கு, முதலில், stashகளை செயல்படுத்த வேண்டும். |
08:10 | stash பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git space stash space list. |
08:17 | உதாரணத்திற்கு, இப்போது, stash@{1}ஐ செயல்படுத்துவோம். |
08:21 | அதற்கு, டைப் செய்க: git space stash space apply space stash @' (at the rate symbol) curly bracketகளுக்குள் ஒன்று. |
08:33 | stash idஐ குறிப்பிடவில்லை எனில், சமீபத்திய stash, அதாவது, stash@{0} , செயல்படுத்தப்படும். |
08:40 | நம் stash வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைக் காணலாம். |
08:44 | stash பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git space stash space list. |
08:51 | பட்டியலில் stash@{1} அங்கேயே இருப்பதால், இது, பிற்காலத்தில் குழப்பத்திற்கு வழி வகுக்கலாம். |
08:58 | அதனால், stashஐ செயல்படுத்திய பிறகு, அதை நீக்குவது சிறந்தது. |
09:03 | stash@{1}ஐ நீக்க, டைப் செய்க: git space stash space drop space stash@ (at the rate symbol) curly bracketகளுக்குள் ஒன்று. |
09:16 | stash பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git space stash space list. |
09:22 | stash@{1} நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும், stash@{2} ஆனது stash@{1} ஆகிவிட்டது. |
09:30 | இப்போது, stashஐ வேறு ஒரு வழியில் செயல்படுத்த கற்போம். டைப் செய்க: git space stash space pop. |
09:39 | stash@{0} செயல்படுத்தப்பட்டதை காணலாம். |
09:43 | அதனால், stash pop commandஐ பயன்படுத்தினால், மிகவும் சமீபத்திய stash, அதாவது, stash@{0} செயல்படுத்தப்படும். |
09:52 | மறுபடியும், stash பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git space stash space list. |
09:59 | இப்போது, stash@{0} நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும், stash@{1} ஆனது, stash@{0} ஆகிவிட்டது. |
10:07 | ஆதலால், stash pop command, stash@{0}ஐ செயல்படுத்தி, மேலும் அதனை தானாகவே நீக்கிவிடும். |
10:15 | அடுத்து, எல்லா stashகளையும் ஒரே நேரத்தில் நீக்கக் கற்போம். |
10:20 | நமது repositoryலிருந்து எல்லா stashகளையும் நீக்க, டைப் செய்க: git space stash space clear. |
10:28 | மறுபடியும், stash பட்டியலை சரி பார்க்க, டைப் செய்க: git space stash space list. |
10:36 | stash பட்டியல் காலியாக இருப்பதைக் காணலாம். |
10:40 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம். |
10:44 | சுருங்கசொல்ல, |
10:46 | இந்த டுடோரியலில் நாம் stashing பற்றி கற்றோம். |
10:51 | மேலும், நாம் கற்றது: stashஐ உருவாக்குவது, stashஐ செயல்படுத்துவது மற்றும் stashஐ, நீக்குவது |
10:58 | பயிற்சியாக, உங்கள் repositoryயில் மூன்று stashகளை உருவாக்கவும். |
11:03 | git stash show commandஐ ஆய்ந்தறியவும். |
11:07 | git stash show, மற்றும், git stash show stash@{1} commandகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளவும். |
11:14 | சமீபத்திய stashஐ செயல்படுத்தவும். (பயன்படுத்துக- git stash pop) |
11:21 | repositoryலிருந்து எல்லா stashகளையும் நீக்கவும். (குறிப்பு- git stash clear) |
11:28 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:36 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:48 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின், NMEICT, MHRD மூலம் அளிக்கிறது. |
11:55 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
12:01 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |