Difference between revisions of "Git/C2/Branching-in-Git/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border=1 | <center>Time</center> | <center>Narration</center> |- |00:01 | ''' Gitல் Branching''' குறித்த '''ஸ்போகன் டுடோரி...") |
|||
Line 9: | Line 9: | ||
|- | |- | ||
|00:05 | |00:05 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: '''Branching''', '''branch''' ஐ உருவாக்குவது, மற்றும் '''branch''' களுக்கு இடையே மாறுவது. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|00:15 | |00:15 | ||
− | | இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது | + | | இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது: '''Ubuntu Linux''' 14.04, '''Git''' 2.3.2 மற்றும் ''''gedit' Text Editor'''. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 332: | Line 326: | ||
|09:07 | |09:07 | ||
|இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம். | |இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|09:12 | |09:12 | ||
− | | | + | | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''Branching''', '''branch''' ஐ உருவாக்குவது, மற்றும் '''master branch '''க்கும், புது '''branch'''க்கும் இடையே மாறுவது. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- |
Latest revision as of 12:05, 28 February 2017
|
|
00:01 | Gitல் Branching குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Branching, branch ஐ உருவாக்குவது, மற்றும் branch களுக்கு இடையே மாறுவது. |
00:15 | இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது: Ubuntu Linux 14.04, Git 2.3.2 மற்றும் 'gedit' Text Editor. |
00:25 | உங்களுக்கு விருப்பமான editorரை பயன்படுத்தலாம். |
00:29 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, terminalலில் Linux command களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
00:36 | இல்லையெனில், அதற்கான Linux டுடோரியல்களுககு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
00:42 | branching பற்றி கற்போம். |
00:44 | ஒரு projectல் பொதுவாக, புது moduleகளை உருவாக்க, அல்லது, bugஐ சரி செய்ய, branches பயன்படுத்தப்படுகின்றன. |
00:52 | Main projectஐ தொந்தரவு செய்யாமல், projectன் புது moduleகளுடன் வேலை செய்ய இது உதவுகிறது. |
00:58 | Gitன் முன்னிருப்பான branch, master ஆகும். |
01:02 | புது moduleகளை உருவாக்க, வேறுபட்டbranchகளை பயன்படுத்தலாம். |
01:06 | பிறகு, அது master branchஉடன் சேர்க்கப்படும். |
01:11 | உதாரணத்திற்கு, இந்த வரைப்படம், master மற்றும் new-module branchகளை கொண்ட ஒரு repositoryஐ காட்டுகிறது. |
01:18 | master branchல், C1, C2 மற்றும் C3 என சில commitகள் உள்ளன. |
01:25 | பிறகு, C3 commitல், branch 'new-module' ஒன்று உருவாக்கப்படுகிறது. |
01:30 | C4, C5மற்றும் C8 என்பன new-module branchன், commitகள் ஆகும். |
01:36 | அதே சமயம், master branchல், commitகள் C6மற்றும் C7 உருவாக்கப்படுகின்றன. |
01:43 | இங்கு, new-module branch, master branchஐ தொந்தரவு செய்யவில்லை என்பதைக் காணலாம். |
01:49 | new-module தயார் ஆகிய பிறகு, அதை master branchவுடன் சேர்த்து விடுவோம். |
01:55 | இந்த டுடோரியலில், branch எவ்வாறு வேலை செய்கிறது என காட்டுகிறேன். அடுத்த டுடோரியலில் Merging பற்றி காண்போம். |
02:03 | Terminalஐ திறக்க, Ctrl+Alt+Tஐ ஒன்றாக அழுத்தவும். |
02:07 | நாம் முன்னர் உருவாக்கிய, Git repository mywebpageக்கு செல்வோம். |
02:13 | டைப் செய்க:cd space mywebpage , பின் Enterஐ அழுத்தவும். |
02:19 | செயல் விளக்கத்திற்கு, html fileகளையே தொடர்ந்து பயன்படுத்துகிறேன். உங்களுக்கு விருப்பமான எந்த file வகையையும் பயன்படுத்தலாம். |
02:28 | Git log ஐ சரி பார்க்க, டைப் செய்க: git space log space hyphen hyphen oneline , பின் Enterஐ அழுத்தவும். |
02:37 | முதலில், நமது repositoryயில் ஏதேனும் branch உள்ளதா என சரி பார்க்கலாம். |
02:43 | டைப் செய்க: git space branch, பின் Enterஐ அழுத்தவும். |
02:48 | முன்னர் கூறியது போல, அது முன்னிருப்பு branch, 'master', ஐ காட்டும். |
02:53 | இப்போது, "new-chapter" என்ற branchஐ உருவாக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். |
02:57 | டைப் செய்க: git space branch space new-chapter, பின் Enterஐ அழுத்தவும். |
03:04 | branch listஐ காண, டைப் செய்க: git space branch, பின் Enterஐ அழுத்தவும். |
03:12 | இங்கு, பட்டியலில், branch "new-chapter"ஐ காணலாம். |
03:16 | master branchஉடன் asterisk symbol லையும் காணலாம். |
03:20 | தற்போது, நாம், master branchல் வேலை செய்கிறோம் என்பதை இது குறிக்கும். |
03:25 | "new-chapter" branchக்கு செல்ல, டைப் செய்க: git space checkout space new-chapter, பின் Enterஐ அழுத்தவும். |
03:36 | branch பெயரை சரி பார்க்க, டைப் செய்க: git space branch, பின் Enterஐ அழுத்தவும். |
03:42 | நாம் "new-chapter" branchல் உள்ளோம் என்பதை asterisk குறிக்கிறது. |
03:49 | அடுத்து, செயல்விளக்க நோக்கத்திற்கு story.html என்ற html fileஐ உருவாக்கி, அதை commit செய்கிறேன். |
03:57 | டைப் செய்க: gedit space story.html space ampersand, பின் Enterஐ அழுத்தவும். |
04:05 | முன்னர் சேமித்து வைத்திருந்த, writer documentலிருந்து, சில codeகளை, copy - paste செய்கிறேன். |
04:12 | fileஐ சேமித்து மூடவும். |
04:15 | எந்த ஒரு, fileஐயும், சேர்க்கும் போதோ அல்லது நீக்கும் போது, commit செய்ய நினைவில் கொள்க. |
04:21 | staging areaவிற்கு fileஐ சேர்க்க, டைப் செய்க: git space add space story.html, பின் Enterஐ அழுத்தவும். |
04:31 | நமது வேலையை commit செய்ய, டைப் செய்க: git space commit space hyphen m space இரட்டை மேற்கோள்களில் “Added story.html in new-chapter branch”, பின் Enterஐ அழுத்தவும். |
04:47 | "new-chapter" branchன், Git logஐ சரி பார்க்க, டைப் செய்க: git space log space hyphen hyphen oneline, பின் Enterஐ அழுத்தவும். |
04:57 | “Added story.html in new-chapter branch” என்ற நமது சமீபத்திய commitஐ இங்கு காணலாம். |
05:04 | இப்போது, சில வேலைகளை செய்ய, master branchக்கு திரும்பி செல்ல வேண்டும் என வைத்துக் கொள்வோம். |
05:10 | ஆதலால், டைப் செய்க: git space checkout space master, பின் Enterஐ அழுத்தவும். |
05:18 | Git log ஐ சரி பார்க்க , டைப் செய்க: git space log space hyphen hyphen oneline, பின் Enterஐ அழுத்தவும். |
05:27 | இங்கு, commit “Added story.html in new-chapter branch” ஐ காண முடியாது. |
05:34 | ஏனெனில், அந்த commit, "new-chapter" branchக்கு மட்டுமே சொந்தமானது. |
05:39 | folder contentஐ சரி பார்க்க, டைப் செய்க: ls, பின் Enterஐ அழுத்தவும். |
05:45 | இங்கு, story.html fileஐயும் காண முடியாது. |
05:49 | அடுத்து, history.html fileலில் சில மாற்றங்களை செய்யலாம். |
05:55 | fileஐ திறக்க, டைப் செய்க: gedit space history.html space ampersand, பின் Enterஐ அழுத்தவும். |
06:05 | சில வரிகளை சேர்க்கவும். |
06:08 | fileஐ சேமித்து மூடவும். |
06:10 | இவ்விடத்தில், நமது வேலையை commit செய்ய, டைப் செய்க: git space commit space hyphen am space இரட்டை மேற்கோள்களில் “Added chapter two in history.html”, பின் Enterஐ அழுத்தவும். |
06:26 | இதுவரை, நாம் master branch ல் வேலை செய்தோம். |
06:30 | இப்போது, new-chapter branchல், இந்த commit வந்துள்ளதா என சரி பார்க்கலாம். |
06:36 | new-chapter branchக்கு செல்ல, டைப் செய்க: git space checkout space new-chapter, பின் Enterஐ அழுத்தவும். |
06:46 | Git log ஐ சரி பார்க்க , டைப் செய்க: git space log space hyphen hyphen oneline , பின் Enterஐ அழுத்தவும். |
06:55 | இங்கு,commit “Added chapter two in history.html”ஐ காண முடியாது. ஏனெனில், அது, master branchல் உள்ளது. |
07:04 | story.html fileலில் சில வரிகளை சேர்க்கலாம். டைப் செய்க: gedit space story.html space ampersand, பின் Enterஐ அழுத்தவும். |
07:16 | Writer documentலிருந்து சில வரிகளை சேர்க்கிறேன். |
07:20 | fileஐ சேமித்து மூடவும். |
07:22 | Git statusஐ சரி பார்க்க, டைப் செய்க: git space status, பின் Enterஐ அழுத்தவும். |
07:29 | இந்நிலையில், நமது வேலையை commit செய்யவில்லை என்பதைக் கவனிக்கவும். |
07:33 | commit செய்யாமல் branchக்கு வர முயற்சித்தால், என்ன நடக்கும். இது, ஒரு errorஐ காட்டும். |
07:41 | master branchக்கு திரும்பிச் செல்ல முயற்சிப்போம். டைப் செய்க: git space checkout space master, பின் Enterஐ அழுத்தவும். |
07:51 | மாற்றங்களை commit செய்யாமல், branchகளுக்கு திரும்பி வர முடியாது, என்பதை இந்த error காட்டுகிறது. |
07:59 | ஒரு வேளை, இந்நிலையில், மாற்றங்களை commit செய்வது, அவசியமில்லாமல் போனால் என்ன செய்வது? அதை stashing மூலம் கையாளலாம். |
08:08 | பின்வரும் டுடோரியல்களில், stashing பற்றிக் கற்போம். |
08:13 | இப்போதைக்கு, இந்த branchலிருந்து கட்டாயமாக வெளிவர, hyphen hyphen force flagஐ பயன்படுத்துவோம். |
08:19 | டைப் செய்க: git space checkout space hyphen hyphen force space master, பின் Enterஐ அழுத்தவும். |
08:28 | மறுபடியும், new-chapter branchக்கு சென்று, மாற்றங்கள் புறக்கணிக்கப்பட்டதா என சரி பார்க்கலாம். |
08:36 | டைப் செய்க: git space checkout space new-chapter, பின் Enterஐ அழுத்தவும். |
08:42 | story.html fileஐ திறக்க, டைப் செய்க: gedit space story.html space ampersand, பின் Enterஐ அழுத்தவும். |
08:54 | இங்கு, நமது மாற்றங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டன என்பதைக் காணலாம். geditஐ மூடவும். |
09:01 | அடுத்த டுடோரியலில், new-chapter branch உடன், master branchஐ சேர்க்கக் கற்போம். |
09:07 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்து விட்டோம். |
09:12 | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது: Branching, branch ஐ உருவாக்குவது, மற்றும் master branch க்கும், புது branchக்கும் இடையே மாறுவது. |
09:23 | பயிற்சியாக- "chapter-two" என்ற branch ஐ உருவாக்கவும். |
09:28 | chapter-two branchக்கு செல்லவும். |
09:31 | சில commitகளை செய்யவும். |
09:33 | master branchக்கு திரும்பவும். |
09:36 | master branchல், "branch chapter-two"ன், commitகளை காண முடியாது என்பதை Git logஐ பார்த்து, புரிந்து கொள்ளவும். |
09:44 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
09:52 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
09:59 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:03 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
10:15 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |