Difference between revisions of "Linux-Old/C2/Ubuntu-Desktop-14.04/Tamil"
From Script | Spoken-Tutorial
Nancyvarkey (Talk | contribs) m (Nancyvarkey moved page Linux/C2/Ubuntu-Desktop/Tamil to Linux-Old/C2/Ubuntu-Desktop-14.04/Tamil without leaving a redirect) |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
| 00:06 | | 00:06 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது | + | | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: '''gnome '''environmentல் '''உபுண்டு லினக்ஸ் டெஸ்க்டாப்''', '''உபுண்டு டெஸ்க்டாப்'''ல் சில applicationகள் '''டெஸ்க்டாப்'''ன் themeஐ மாற்றுதல் |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:18 | | 00:18 | ||
Line 376: | Line 373: | ||
|- | |- | ||
| 12:12 | | 12:12 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்றது | + | | இந்த டுடோரியலில் நாம் கற்றது: '''Ubuntu Desktop''', '''launcher''' மற்றும் அதில் காணப்படும் சில iconகள், முக்கியமான சில applicationகளான '''Calculator, Text Editor, Terminal, Firefox Web Browser, Movie Player''' மற்றும் '''LibreOffice Suite componentகள்''' '''Home''' folder மற்றும் உங்கள் '''Desktop'''ன் themeஐ மாற்றுதல் |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | Player''' மற்றும் '''LibreOffice Suite componentகள்''' | + | |
− | + | ||
|- | |- | ||
| 12:36 | | 12:36 |
Latest revision as of 12:41, 6 September 2018
Time | Narration |
00:01 | உபுண்டு லினக்ஸ் டெஸ்க்டாப் மீதான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: gnome environmentல் உபுண்டு லினக்ஸ் டெஸ்க்டாப், உபுண்டு டெஸ்க்டாப்ல் சில applicationகள் டெஸ்க்டாப்ன் themeஐ மாற்றுதல் |
00:18 | இந்த டுடோரியலை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 14.04 |
00:25 | உபுண்டு லினக்ஸ்ன் சில பழைய பதிப்புகளில், desktop இவ்வாறு இருக்கும். |
00:32 | Applications, Places மற்றும் System tabகளை திரையின் மேல் இடது மூலையில் காணலாம் . |
00:40 | உபுண்டு லினக்ஸ்ன் புதிய பதிப்புகளில், desktop இவ்வாறு இருக்கும். |
00:46 | launcher ஐ திரையின் இடது பக்கம் காணலாம். launcher மறைந்திருந்தால், இங்கு காட்டப்படுவது போல அதை தெரியுமாறு செய்யலாம். |
00:55 | அதற்கு, mouse ஐ திரையின் இடப்பக்கத்திற்கு நகர்த்தவும். இப்போது launcher தெரியும். |
01:02 | mouseஐ அங்கிருந்து நகர்த்தினால் மீண்டும் launcher மறைந்துவிடும். |
01:07 | launcher ஐ எவ்வாறு எப்போதும் தெரியுமாறு வைப்பது? desktop திரையின் வலது மூலையில் உள்ள wheel icon ஐ க்ளிக் செய்க . |
01:16 | பின் System Settings ஐ க்ளிக் செய்து Appearance ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:22 | Appearanceல், Behavior tabல் க்ளிக் செய்க. |
01:26 | இங்கே, Auto-hide the Launcher ஐ OFF என மாற்றவும். இப்போது, launcher எப்போதும் தெரியும். |
01:35 | இந்த விண்டோவை மூடுவோம். |
01:37 | முன்னிருப்பாக launcherல் சில iconகள் இருப்பதைக் காண்க. |
01:41 | launcherன் மேலே Dash home icon ஐ காணலாம் |
01:45 | Dash homeஐ திறக்க அதன் மீது க்ளிக் செய்க. |
01:48 | மேலே ஒரு search bar field ஐ காண்பீர்கள். |
01:52 | இப்போது, ஒரு குறிப்பிட்ட applicationக்கு செல்வது எப்படி? அது மிக சுலபம்! |
01:58 | Calculator application ஐ காண முயற்சிப்போம். |
02:02 | எனவே search bar fieldல் டைப் செய்க C a l c. |
02:06 | LibreOffice Calc மற்றும் Calculator இரண்டும் காட்டப்படுவதைக் காண்க. |
02:11 | Calculator iconஐ க்ளிக் செய்க. Calculator application இப்போது திரையில் திறக்கிறது. |
02:19 | உபுண்டு லினக்ஸ்ன் பழைய பதிப்புகளில், Applications -> Accessories -> Calculatorல் க்ளிக் செய்ய வேண்டும் |
02:27 | Calculator எண்கணித, அறிவியல் அல்லது நிதியியல் கணக்கீடுகளுக்கு உதவுகிறது. |
02:33 | சில எளிய கணக்கீடுகளை முயற்சிப்போம். |
02:37 | டைப் செய்க 5 asterix 8 பின் equal to குறியை அழுத்துக. |
02:42 | equal to குறியை அழுத்துவதற்கு பதிலாக, கீபோர்டில் Enter keyஐயும் அழுத்தலாம். |
02:48 | Calculatorல் விடை காட்டப்படுகிறது. |
02:50 | இதேபோல, Calculator applicationஐ பயன்படுத்தி அனைத்து கணக்கீடுகளையும் செய்யலாம். |
02:58 | close buttonஐ அழுத்தி Calculator ஐ மூடுவோம். |
03:03 | உபுண்டு லினக்ஸ் இயங்குதளத்தின் மேலும் சில முக்கியமான applicationகளை காண்போம். |
03:08 | அதற்கு, Dash homeக்கு மீண்டும் செல்வோம் |
03:12 | Dash Homeஐ திறப்பதற்கான மற்றொரு வழி கீபோர்டில் Windows keyஐ அழுத்துவது. |
03:18 | Search bar ல் டைப் செய்க gedit. Text Editor icon தோன்றுகிறது. அதன் மீது க்ளிக் செய்க. |
03:25 | உபுண்டு லினக்ஸ்ன் பழைய பதிப்புகளில், Applications >> Accessories >> geditல் க்ளிக் செய்ய வேண்டும் |
03:33 | நீங்கள் இப்போது திரையில் காண்பது gedit Text Editor விண்டோ. |
03:38 | இங்கே சில உரைகளை டைப் செய்கிறேன். "Hello World". |
03:43 | fileஐ சேமிக்க, கீபோர்டில் Ctrl S keyகளை ஒருசேர அழுத்துக. |
03:49 | மாறாக, File க்கு சென்று Saveல் க்ளிக் செய்க. |
03:54 | இப்போது, “Save as” என்ற ஒரு dialog box திறக்கிறது. இது filename மற்றும் file ஐ சேமிக்கும் இடத்தை கேட்கிறது. |
04:03 | "hello.txt" என பெயரைக் கொடுக்கிறேன் |
04:09 | இடத்திற்கு Desktop ஐ தேர்ந்தெடுத்து Save buttonஐ க்ளிக் செய்கிறேன். |
04:14 | gedit விண்டோவை இப்போது மூடி நம் file Desktop ல் சேமிக்கப்பட்டதா இல்லையா என காண்போம். |
04:22 | இப்போது Desktopல் அந்த file hello.txtஐ காணலாம். அதாவது நம் text file வெற்றிகரமாக சேமிக்கப்பட்டது. |
04:30 | இந்த file ஐ அதன் மீது டபுள்-க்ளிக் செய்து திறக்கிறேன். நாம் எழுதிய உரையுடன் நம் text file திறக்கப்பட்டிருப்பதைக் காண்க. |
04:39 | gedit Text Editor பற்றி இணயத்தளத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளன. இதற்கான ஸ்போகன் டுடோரியல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
04:49 | இந்த text editor ஐ மூடுவோம் மற்றொரு application, Terminalஐ காண்போம். |
04:55 | Windows key ஐ அழுத்தி Dash home க்கு வருவோம். |
04:59 | search bar fieldல் டைப் செய்க terminal . |
05:03 | Terminal iconஐ க்ளிக் செய்க. |
05:06 | உபுண்டு லினக்ஸ்ன் பழைய பதிப்புகளில் இதற்கு Applications >> Accessories >> Terminalக்கு செல்ல வேண்டும் |
05:13 | திரையில் terminal விண்டோ திறக்கிறது. Terminal ஐ திறப்பதற்கான shortcut key Ctrl+Alt+T என்பதை குறித்துகொள்க |
05:22 | Terminal command line என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கிருந்து கணினிக்கு கட்டளையிடலாம். |
05:29 | உண்மையில் இது GUIஐ விட சக்திவாய்ந்த ஒன்று. |
05:33 | Terminal விண்டோவிற்கு வருகிறேன். |
05:35 | இப்போது terminalன் வேலையை அறிய ஒரு எளிய command ஐ டைப் செய்வோம் 'ls' பின் Enterஐ அழுத்துக |
05:44 | நடப்பு directory ன் fileகள் மற்றும் folderகளின் ஒரு பட்டியலைக் காணலாம். |
05:49 | இங்கே Home folderன் fileகள் மற்றும் folderகளை இது காட்டுகிறது. Home folder பற்றி பின்னர் இதே டுடோரியலில் காண்போம். |
05:59 | இங்கு terminal பற்றி அறிய மேலும் நேரத்தை செலவிடபோவதில்லை. |
06:02 | terminalஐ மூடுவோம் |
06:05 | இந்த இணையத்தளத்தில் Linux ஸ்போகன் டுடோரியல் தொடரில் Terminal commandகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. |
06:12 | இப்போது, மற்றொரு application அதாவது Firefox Web Browserஐ காண்போம் |
06:17 | மீண்டும் கீபோர்டில் Windows ஐ அழுத்தி Dash homeஐ திறந்து search barல் டைப் செய்க Firefox . |
06:25 | Firefox Web Browser iconஐ க்ளிக் செய்க. |
06:29 | பழைய பதிப்புகளில் Applications -> Internet -> Firefox Web Browserக்கு செல்ல வேண்டும் |
06:35 | world wide webஐ அணுக Firefox Web Browser பயன்படுகிறது. இப்போது Firefox browser விண்டோ திறந்திருப்பதைக் காண்க. |
06:45 | spoken-tutorial தளத்திற்கு செல்வோம். அதற்கு address bar க்கு செல்க அல்லது கீபோர்டில் F6 ஐ அழுத்துக. |
06:52 | இப்போது F6 ஐ அழுத்துகிறேன். நாம் address barல் உள்ளோம். |
06:58 | address barல் ஏதெனும் text இருந்தால் நீக்க backspace ஐ அழுத்துக. |
07:03 | இப்போது டைப் செய்வோம் "http://spoken-tutorial.org". |
07:13 | நாம் டைப் செய்யும்போது, Firefox சில சாத்தியங்களை பரிந்துரைக்கலாம். |
07:18 | அவற்றில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் அல்லது முழு முகவரியையும் டைப் செய்து Enterஐ அழுத்தலாம் |
07:24 | கொடுக்கப்பட்ட இணையத்தளத்திற்கு Firefox இணைக்கப்படும். |
07:27 | browserல் Spoken Tutorial Homepage திறக்கிறது. |
07:31 | இதை மூடிவிட்டு நாம் அடுத்த applicationக்கு செல்வோம். |
07:35 | Dash home க்கு மீண்டும் சென்று search barல் டைப் செய்க office |
07:41 | Calc, Impress, Writer மற்றும் Draw போன்ற பல LibreOffice componentகளை காணலாம் |
07:48 | உபுண்டு லினக்ஸ்ன் பழைய பதிப்புகளில், Applications >> Officeக்கு செல்ல வேண்டும் |
07:55 | Spoken Tutorial இணையத்தளத்தில் இந்த componentகளின் மிக சிறப்பான டுடோரியல்கள் உள்ளன. |
08:01 | இப்போது Video தேர்வை காண்போம். |
08:04 | Dash home க்கு சென்று டைப் செய்க video. |
08:07 | காட்டப்படும் பட்டியலில், ஒரு முக்கியமான application, Videos உள்ளது |
08:13 | Videos வீடியோக்கள் அல்லது பாடல்களை இயக்க பயன்படுகிறது. முன்னிருப்பாக, open format video fileகளுக்கு மட்டும் வேலைசெய்யும். |
08:22 | உபுண்டு லினக்ஸ்ன் பழைய பதிப்புகளில், Applications >> Sound & Videoக்கு செல்ல வேண்டும் |
08:28 | இங்கே பல்வேறு applicationகளை காணலாம் application Movie Player இங்கு உள்ளது. அதன் மீது க்ளிக் செய்க. |
08:36 | என் pen-driveல் இருந்து ஒரு உதாரண file ஐ இயக்குகிறேன். |
08:39 | இப்போது, என் கணினியின் usb slot ல் என் pen-driveஐ நுழைக்கிறேன். pen-drive folder தானாக திறக்கப்படுகிறது. |
08:48 | அது திறக்கவில்லை எனில், launcherல் இருந்து அதை அணுகலாம். |
08:54 | launcherன் கீழே pen-drive icon க்கு செல்க. |
08:58 | அதன் மீது க்ளிக் செய்தால், pen-driveன் fileகள் மற்றும் folderகளை அது காட்டும். |
09:04 | இப்போது ஒரு movie file big-buck-bunny.ogvஐ திறக்கிறேன் |
09:10 | இது என் file; அதை திறக்க அதன் மீது டபுள் க்ளிக் செய்கிறேன். |
09:14 | இது முன்னிருப்பாக Videosல் திறக்கிறது. |
09:18 | movieஐ நிறுத்துவோம். |
09:22 | உபுண்டு லினக்ஸ்ன் பழைய பதிப்புகளில், Desktopல் pen-drive தெரியவரும். |
09:27 | Desktopக்கு நேரடியாக செல்ல, புது Ubuntu பதிப்புகளில், கீபோர்டில் Ctrl, Windows மற்றும் D keyகளை அழுத்தவும். |
09:35 | பழைய Ubuntu பதிப்புகளில், Desktopக்கு செல்ல Ctrl, Alt, D அல்லது Windows மற்றும் D keyகள் பயன்படுகின்றன |
09:45 | பதிப்புகளில் இதுமாதிரியான மாறுதல்களை கையாள பயனர் தயாராக இருக்கவேண்டும். |
09:51 | இப்போது Desktopக்கு செல்ல Ctrl, Windows மற்றும் D keyகளை அழுத்துவோம். |
09:57 | இந்த desktopன் மேலும் சில முக்கிய விஷயங்களை இப்போது காண்போம். |
10:01 | launcherல் உள்ள folder iconஐ காண்க. |
10:04 | அதை க்ளிக் செய்வோம். Home folder திறக்கிறது. |
10:09 | உபுண்டு லினக்ஸ்ன் பழைய பதிப்புகளில், Places >> Home Folderஐ க்ளிக் செய்ய வேண்டும் |
10:15 | உபுண்டு லினக்ஸ்ல் ஒவ்வொரு பயனருக்கும் ஒரு தனித்த Home folder உள்ளது. |
10:20 | Home folderஐ நம் fileகள் மற்றும் folderகளை சேமிக்கும் "நம் வீடு" எனலாம் . |
10:27 | நாம் அனுமதிக்காதவரை, அவற்றை யாராலும் காண முடியாது. |
10:33 | file permissionகள் குறித்து மேலும் அறிய Linux ஸ்போகன் டுடோரியல்களை காணவும். |
10:39 | மீண்டும் நம் Home folderக்கு வருவோம், மற்ற folderகளையும் காணலாம்….. |
10:45 | Desktop, Documents, Downloads,போன்ற பல. |
10:50 | Linuxல், ஒவ்வொன்றும் ஒரு file. Desktop folder ஐ அதன் மீது டபுள் க்ளிக் செய்து திறக்கலாம். |
10:57 | இங்கே, text editorல் இருந்து நாம் சேமித்த அதே "hello.txt" fileஐ காணலாம். எனவே இந்த folderஉம் Desktop உம் ஒன்றே. |
11:08 | இதை இப்போது மூடுகிறேன். |
11:10 | desktopல் ஒரே theme ஐ பார்ப்பதற்கு சலிப்பாக இருக்கிறதா? அதை மாற்றுவோம். |
11:15 | Dash home க்கு சென்று search bar fieldல் டைப் செய்க system settings . பின் system settings icon மீது க்ளிக் செய்க. |
11:24 | மாறாக, desktop திரையில் மேல் வலதுபக்கம் wheel iconஐ க்ளிக் செய்யலாம் System Settings பின் Appearanceல் க்ளிக் செய்க |
11:35 | முந்தைய உபுண்டு லினக்ஸ் பதிப்புகளில், இதற்கு System ->Preferences ->Appearanceஐ க்ளிக் செய்ய வேண்டும் |
11:42 | Appearance window திறக்கிறது. |
11:44 | இங்கே Themes tabல், ஏற்கனவே நிறுவப்பட்ட பல themeகள் உள்ளன. |
11:50 | உங்கள் விருப்பத்திற்கேற்ப இந்த themeகளை பயன்படுத்தலாம். |
11:54 | அதன் மீது க்ளிக் செய்தவுடன், உங்கள் desktop ல் மாற்றம் ஏற்படுவதைக் காணலாம். |
12:00 | Ctrl+Windows மற்றும் D keyகளை ஒருசேர அழுத்தி அதை தெளிவாக காணலாம். |
12:08 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சுருங்கசொல்ல. |
12:12 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Ubuntu Desktop, launcher மற்றும் அதில் காணப்படும் சில iconகள், முக்கியமான சில applicationகளான Calculator, Text Editor, Terminal, Firefox Web Browser, Movie Player மற்றும் LibreOffice Suite componentகள் Home folder மற்றும் உங்கள் Desktopன் themeஐ மாற்றுதல் |
12:36 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும் |
12:42 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
12:53 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
13:04 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |