Difference between revisions of "GIMP/C2/Drawing-Tools/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.23 | GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிரு…')
 
Line 409: Line 409:
 
|-  
 
|-  
 
| 16.00  
 
| 16.00  
| ஆனால் அதற்கு  brush sensitivity மற்றும் opacityஐ தேர்வு நீக்க வேண்டும்.  
+
| ஆனால் அதற்கு  pressure sensitivity மற்றும் opacityஐ தேர்வு நீக்க வேண்டும்.  
  
 
|-  
 
|-  

Revision as of 17:08, 26 March 2014

Time Narration


00.23 GIMP tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00.30 இந்த drawing toolகளை விரிவாக காணலாம்
00.37 முதலாவது drawing tool... pencil. இது மிக கடினமான முனைகளுடன் வேலை செய்கிறது.
00.44 இங்கே நேரான கோட்டை வரைந்துள்ளேன். படத்தை பெரிதாக்குகிறேன் எனில், ஒவ்வொரு pixelலும் கருப்பிலோ வெள்ளையிலோ இருப்பதைக் காணலாம்.
01.01 வரைதலுக்கு paint brush ஐ தேர்ந்தெடுக்கும்போது, மிருதுவான முனையுள்ள கோட்டை பெறுகிறோம் .
01.08 மீண்டும் பெரிதாக்கும்போது, pencilல் வரையும் போது சிதறலுடன் கடினமான கோட்டைக் காணலாம்.
01.17 paint brush ல் வரையும் போது மென்மையான கோட்டைப் பெறுகிறேன்.
01.29 இங்கே pencil க்கு வருவோம்.
01.32 pencil ஓரங்களில் மிக கூர்மையாக உள்ளதையும் paint brush மிருதுவாக உள்ளதையும் காண்க.
01.40 ஆனால் இங்கே சிதறலை காண முடியாது.
01.44 இது trick of the eye எனப்படும்
01.47 இதை பெரிதாக்கும் போது இங்கே இது anti-aliest என காணலாம்.
01.53 இதுதான் pencil க்கும் paint brushக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு.
01.59 மற்றபடி அவையும் அவற்றின் தேர்வுகளும் கிட்டத்தட்ட ஒன்றே.


02.13 இப்போது paint brush உடன் ஆரம்பிக்கலாம்.
02.16 tool box ல் paint brush tool ல் சொடுக்கி அதற்கான தேர்வுகளை பெறலாம்.


02.25 layer modes ஐ போன்றே modes உள்ளன. பார்ப்பது போல multiply அல்லது overlay மற்றும் பல.
02.40 Opacity slider இங்கே உள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம் காட்சித்தன்மை மற்றும் கோட்டின் நிறத்தை கட்டுப்படுத்தலாம்
02.50 25% என மதிப்பை மாற்றுகிறேன். இப்போது நான் வரையும்போது கருப்புக்கு பதிலாக லேசான சாம்பல் நிறக்கோட்டைப் பெறுகிறோம்.
03.02 இந்த கோட்டின் குறுக்கே புது கோட்டை இடும் போது நிறம் திடமாவதைக் காணலாம். ஆனால் புது கோட்டை மேலே இடும் போது மட்டுமே இது நடக்கிறது.
03.22 இந்த பகுதியை பெரிதாக்கி பெரிய brush ஐ தேர்ந்தெடுக்கிறேன்.
03.26 இப்போது ஒரு கோட்டை வரையும் போது அது சாம்பல் நிறம்.
03.30 இரண்டாம் கோட்டை வரைகிறேன். இந்த இரு கோடுகளுக்கும் வெட்டும் பகுதி அடர் சாம்பலாக உள்ளது.
03.36 இங்கே இப்போது மூன்றாவது கோட்டை வரைகிறேன். வெட்டும் இடம் மேலும் அடர் சாம்பலாகிறது. ஆனால் அதே கோட்டில் வரையும் போது அது கருமையைப் பெறவில்லை..
03.48 எனவே இது கோட்டிலிருந்து கோட்டுக்கு மட்டுமே வேலைசெய்கிறது. சாம்பலில் ஒரு இடத்தை எளிமையாக வரைய முடியும். இதை நிரப்பும் போது கவனமாக பார்க்க வேண்டியதில்லை.
04.15 இங்கே Incremental என்ற தேர்வை காணலாம் .
04.20 Incrementalஐ தேர்ந்தெடுக்கும்போது, மேலும் திடமான effect ஐ பெறுகிறோம்.
04.29 brushகளின் தேர்வுகளுக்கு செல்வோம். இங்கே இந்த brush க்கான spacing 20% இருப்பதைக் காணலாம்
04.45 Brushகள் அடிப்படையில் ஒரு stamp ஆகும். அது ஒரே pattern ஐ திரும்பத்திரும்ப பதிக்கிறது.
04.54 இங்கே பெரிதாக்கும் பொது brushன் அளவில் 20%க்கு பின், இந்த brush ன் அடுத்த பதிவு உள்ளதைக் காணலாம்
05.07 இங்கே ஒவ்வொரு brush உம் ஒன்றன்ம் மீது ஒன்றாக உள்ளது.


05.19 Incremental தேர்வை தேர்வு நீக்கும் போது brushன் ஒவ்வொரு பதிவையும் காணலாம், ஆனால் ஒன்றன் மீது ஒன்றாக இல்லை. இரண்டாம் கோட்டை ஆரம்பிக்க வேண்டும்..
05.34 incremental ஐ தேர்வு செய்யும் போது, மேலும் மேலும் வரையலாம்.


05.47 100% க்கு வருவோம்.


05.53 opacity மற்றும் incremental தேர்வுகளை முடித்துள்ளேன்.
05.57 100% உடன் opacityக்கு திரும்பலாம். மீண்டும் பூரண கருப்புடன் வரையலாம்.
06.07 100% ஐ விட opacity குறைவாக உள்ள போது மட்டுமே Incremental அர்த்தமுள்ளதாகும்.


06.15 Scale slider இங்கே pen ன் அளவை கட்டுப்படுத்துகிறது. 1க்கு குறைக்கும் போது, brush ன் சிறிய அளவைப் பெறுகிறோம்.
06.31 0.05 என brush ஐ அளவிடும்போது, மிக நுண்ணிய கோட்டை வரையலாம். 2 என அமைக்கும் போது அகலமான கோட்டைப் பெறுகிறேன்.
06.48 Scale அடிப்படையில் brush ன் விட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. keyboard ல் square bracketகளுடனும் கட்டுப்படுத்தலாம்.
07.15 open square bracket ன் உதவியுடன் brush ன் அளவைக் குறைக்கலாம். close square bracket உடன் அளவை அதிகரிக்கலாம்.


07.32 brush கிட்டத்தட்ட மறைகிறது என காணலாம்.
07.38 எனவே நான் வரையும் இடத்தை விடாமல் அளவை சரிசெய்ய முடியும்.
07.51 GIMP மக்களில் யாரும் எதிர்பார்கிறார் எனில் slider ஐ 1க்கு அமைக்க ஒரு பட்டனை விரும்புகிறேன்.
08.03 எனவே scale தேர்வு முடிந்தது.
08.06 brush ஐ விரிவாக அடுத்த tutorialல் காணலாம்.
08.12 இங்கே pressure sensitivity என்ற தேர்வு உள்ளது. படத்தை edit செய்யும்போது இதை பயன்படுத்தலாம்.
08.30 opacity ஐ காணலாம்.
08.35 இப்போது அதிகமான அழுத்தம் இல்லாமல் நான் வரையும்போது, சாம்பல் நிறத்தில் ஒரு கோட்டைப் பெறுகிறோம். அழுத்தத்தை அதிகரிக்கும்போது கருமையான நிறத்தைப் பெறுகிறேன். அழுத்தத்தைக் குறைக்கும் போது லேசான நிறக் கோட்டைப் பெறுகிறோம்.
09.04 mask ஐ வரைகிறீர்கள் எனில் இந்த தேர்வு பயனுள்ளது.
09.09 இது முற்றிலும் பயனுள்ளது


09.17 அடுத்த தேர்வு hardness.
09.20 அதிக அழுத்தம் இல்லாமல் வரையும் போது, மென்மையான ஓரங்கள் உள்ளன.அழுத்தத்தை அதிகரிக்கும்போது, paint brush ஒரு pen போல வேலை செய்கிறது.


09.38 pencil tool ஐ தேர்ந்தெடுத்து வரையும்போது கடின ஓரங்களைப் பெறுகிறேன். tablet ஐ நன்கு அழுத்தினால் கடின ஓரங்களை உருவாக்கலாம்.
09.51 pressure sensitivity உடன் brush ன் அளவை மாற்ற முடியும்.
10.00 pressure sensitivity ஐ பயன்படுத்தி நிறத்தையும் மாற்றலாம்.
10.05 எனவே background நிறத்திற்கு மற்றொரு நிறத்தைத் தேர்கிறேன், இங்கே இது எப்படி உள்ளது?
10.12 எனவே இந்த சிவப்பு நிறத்தை தேர்வோம்.
10.15 foreground நிறத்திற்கு நல்ல பச்சையை தேர்வோம்.
10.21 தேர்ந்தெடுத்த நிறங்களுடன் குறைந்த அழுத்தத்தில் வரைய ஆரம்பிக்கும் போது பச்சையை பெறுகிறேன். அழுத்தத்தை அதிகரிக்கும் போது சிவப்பை பெறுகிறேன் . விடுவிக்கிறேன் எனில் பச்சை அல்லது பச்சை கலந்ததை மீண்டும் பெறுவோம்.
10.41 இடையில் பச்சைக்கும் சிவப்பிற்கும் இடையில் நிறம் மாறுகிறது.


10.49 கடைசி தேர்வு... use colour from gradient.
11.01 gradient ஐ தேர்ந்தெடுக்க File, Dialogs ... பின் Gradients க்கு செல்க.
11.18 இங்கே gradient.
11.20 இப்போது இந்த window ஐ பிடித்து இங்கே இழுக்கிறேன். இப்போது இங்கே gradient உள்ளது.
11.28 gradient ல் patternகளின் ஒரு பெரிய தேர்வு உள்ளது.


11.33 இதை தேர்ந்தெடுத்து இப்போது இங்கே செல்கிறேன்
11.42 இப்போது நான் வரையும் போது gradientன் pattern ல் வருகிறது.
11.48 gradients உடன் சிலவற்றை எழுதுகையில் அல்லது வேலை செய்கையில் இது முழுதும் வேடிக்கையாக இருக்கிறது.
12.02 குழாய் அல்லது அது போன்றவற்றால் செய்யப்பட்டது போல இது தோன்றுகிறது.
12.07 இவை gradient ன் தேர்வுகளாக இருந்தது.
12.11 brushகளை பயன்படுத்தும் அனைத்து toolகளுக்கும் இந்த தேர்வுகள் பொதுவானது
12.30 அதாவது pencil, paint brush, eraser மற்றும் சில கூடுதலான தேர்வுகளை கொண்ட airbrush .


12.50 Ink க்கு brush இல்லை. ஆனால் மற்ற பல தேர்வுகளை இது கொண்டுள்ளது.
12.55 Clone tool, Healing tool , Perspective clone tool..... மற்றும் blur, sharpen அல்லது dodge மற்றம் burn போன்ற toolகளும் brushesக்கான தேர்வுகளை கொண்டுள்ளன.
13.14 இப்போது pencil மற்றும் paint brushக்கு திரும்ப போகலாம்.


13.21 மீண்டும் இதை துடைக்கலாம்
13.24 இங்கே பயன்படுத்த சில நுணுக்கங்கள் உள்ளன.


13.29 முதலாவது ஒரு கோட்டை வரைவது பற்றியது.
13.33 ஒரு நேரான கோட்டை வரைய நான் முயற்சிக்கும் போது... இது சற்று கடினம்.
13.39 ஒரு click செய்து ஒரு புள்ளியை அமைத்து பின் shift key ஐ அழுத்தவும், ஒரு நேர்க்கோட்டைப் பெறுகிறேன்.
13.48 இங்கே ஒரு நேர்க்கோடு உள்ளது
13.51 அடுத்த நுணுக்கம், ஒரு புள்ளியை அமைத்து Shift + Ctrl ஐ அழுத்துக. இப்போது என் கோட்டின் சுழற்சி 15 degree க்கு அமைக்கப்படுகிறது.
14.05 எனவே வரையறுக்கப்பட்ட கோணத்துடன் என்னால் எளிதாக நேர்க்க கோடுகளை வரைய முடியும்.


14.20 எனவே இங்கே மிக சிறந்தது.
14.24 Shift key உடன் உங்களால் செய்யக்கூடிய சில உள்ளன.
14.29 அதற்கு gradient tool ஐ தேர்க.
14.37 தேர்ந்தெடுக்கப்பட்ட gradient உடன் ஒரு கோட்டை வரைக. பல்வேறு நிறங்களைப் பெறுகிறோம்.
14.45 சிறிய brush ஐ தேர்கிறேன். gradient tool ஐ தேர்வு நீக்குகிறேன். என் நிலையான நிறங்களைத் தேர்கிறேன்.
14.55 இப்போது Ctrl keyஐ அழுத்தும்போது, நான் வரைந்த கோட்டிலிருந்து நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். foreground நிறம் நீலம் போல மாறுவதைக் காணலாம்.
15.09 எனவே படத்துக்கு வெளியே ஏதேனும் இடத்தில் நன்றாக உள்ள ஒரு நிறத்தை எடுக்கலாம்.
15.17 படத்தில் ஏதேனும் ஒன்றில் வரைய விரும்பினால் உங்களுக்கு தேவையான நிறத்தை இது கொண்டுள்ளது.
15.25 வெறுமனே அதன்மீது ctrl click செய்க. அந்த குறிப்பிட்ட நிறம் உங்கள் palet ல் உள்ளது.
15.36 இது ஒரு சிறந்த நுணுக்கம்.
15.39 அடிப்படையில் eraser tool... pen அல்லது brush போன்றதே. ஏனெனில் இது அவற்றிற்கு எதிர்மறையானது.


15.52 eraser உம் வரையும். ஆனால் இது background நிறத்தைக் கொடுக்கிறது.
15.57 அதை இங்கே காணலாம்.
16.00 ஆனால் அதற்கு pressure sensitivity மற்றும் opacityஐ தேர்வு நீக்க வேண்டும்.
16.08 foreground நிறம் மற்றும் background நிறத்தை கருப்பு மற்றும் வெள்ளையாக மாற்றும் போது... வெள்ளையை foreground நிறமாக மாற்றவும். pen ஐ தேர்ந்தெடுக்கவும், eraser போன்று அதே effect ஐ பெறலாம்.
16.25 நிறத்தை மாற்றிய பிறகு அழிப்பது கருப்பாகிறது


16.41 X key ஐ அழுத்துவதன் மூலம் foreground மற்றும் background நிறத்தை மாற்றலாம்.
16.50 pencil, paint brush மற்றும் eraserஐயும் விரிவாக முடித்துவிட்டேன், .
16.59 மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு அனுப்பவும்
17.10 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana