Difference between revisions of "Health-and-Nutrition/C2/Basics-of-newborn-care/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 272: Line 272:
 
|04:57
 
|04:57
  
| ஒரு வேளை நிறைமாத அல்லது குறைமாதகுழந்தை, தாய்ப்பால் குடிக்க ஆர்வமில்லாமல் இருந்தால் சுகாதார ஊழியர் அல்லது மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்
+
| ஒரு வேளை நிறைமாத அல்லது குறைமாத குழந்தை, தாய்ப்பால் குடிக்க ஆர்வமில்லாமல் இருந்தால் சுகாதார ஊழியர் அல்லது மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்
  
 
|-
 
|-
Line 307: Line 307:
 
| 05:44
 
| 05:44
  
|பிறப்புறுப்பு பகுதியில் சோப்பை உபயோகப்படுத்த வேண்டாம். பெண் குழந்தைக்கு முன் இருந்து பின்னோக்கி துடைப்பது சிறுநீர் பகுதி நோய்த்தொற்றினை தவிர்க்கும்
+
| பிறப்புறுப்பு பகுதியில் சோப்பை உபயோகப்படுத்த வேண்டாம். பெண் குழந்தைக்கு முன் இருந்து பின்னோக்கி துடைப்பது சிறுநீர் பகுதி நோய்த்தொற்றினை தவிர்க்கும்
  
 
|-
 
|-
Line 337: Line 337:
 
| 06:25
 
| 06:25
  
| அணையாடை ஈரமாக இருக்கையில், குழந்தையின் மிருதுவான தோல் எரிச்சலாகி புண் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது
+
| அணையாடை ஈரமாக இருக்கையில், குழந்தையின் மிருதுவான தோல் எரிச்சலாகி புண் ஏற்பட வாய்ப்புள்ளது
  
 
|-
 
|-
Line 361: Line 361:
 
| 06:55
 
| 06:55
  
| ஈரத்தன்மைக்கு எதிர் அரணாக இருப்பதால் ஜிங்ன்க் ஆக்சைடு பயன்படுத்துவது நல்லது  
+
| ஈரத்தன்மைக்கு எதிர் அரணாக இருப்பதால் ஜிங்ன்க் ஆக்சைடை பயன்படுத்துவது நல்லது  
  
 
|-
 
|-
Line 433: Line 433:
 
| 08:24
 
| 08:24
  
| குழந்தை திடீரென இறக்கும் நோய் ஏற்படாமல் இது தடுக்கும்
+
| குழந்தை திடீரென இறக்கும் நோய் ஏற்படாமல் இருக்க இது தடுக்கும்
  
 
|-
 
|-

Latest revision as of 12:27, 24 February 2020

Time
Narration
00:00 பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது பச்சிளம் குழந்தை பராமரிப்பு
00:11 தொப்புள் கொடி பராமரிப்பு. தாய்ப்பால் தருதல் மற்றும் ஏப்பம் விட வைத்தல்
00:15 டயாபர் கட்டுதல் மற்றும் டயாபர் புண்
00:19 பச்சிளம் குழந்தை தூங்கும் தன்மை
00:23 மொத்த குடும்பமும் ஆவலோடு குழந்தை பிறப்பினை உற்சாகமாக எதிர்பார்த்து, குழந்தையைப் பார்க்க, கையாள விரும்புகின்றது.
00:34 எனவே,பச்சிளம் குழந்தையைக் கையாள சில முக்கிய விதிமுறைகளை விதிப்பது அவசியமாகிறது
00:40 பச்சிளம்குழந்தைக்கு எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் சுலபத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும்
00:48 தொடுவது, கையாளுவதற்கு முன் கைகளை சுத்தமாகக் கழுவுவது, நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும்
00:57 கைகளை சுத்தம் செய்ய, சோப்பு மற்றும் நீரினால் கழுவி பின் உலர்ந்த சுத்தமான துணியினால் துடைத்த பிறகு தான் குழந்தையை தூக்க வேண்டும்
01:07 குழந்தையை எவ்வாறு பிடித்துக் கொள்வது என்பதைப் பற்றி முதலில் கற்றுக் கொள்வோம்
01:11 குழந்தையின் தலை மற்றும் கழுத்தினை ஒரு கையாலும், பிட்டப் பகுதியினை இன்னொரு கையாலும் தாங்கிப் பிடிக்கவும்
01:19 எப்போதும் குழந்தையின் தலை, கழுத்து மற்றும் பிட்டத்தை தாங்கித்தான் படுக்க வைக்க வேண்டும்
01:26 குழந்தையை தூக்கத்திலிருந்து எழுப்ப பின் வருமாறு செய்யலாம்
01:31 குழந்தையின் உள்ளங்காலை நீவிவிடலாம், தூக்கித் தாங்கிப்பிடித்து உட்காரும் நிலையில் வைக்கலாம் அல்லது காதினை மென்மையாக தொடலாம்-
01:42 பச்சிளம் குழந்தை மென்மையான உணர்வு மிக்கது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவும்
01:46 குழந்தையை கையாளும் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பச்சிளம் குழந்தையுடன் கரடுமுரடான விளையாட்டு கூடாது

01:55 கால் முட்டி மேல் வைத்து ஆட்டுவதோ ,மேலே தூக்கிப்போட்டு பிடிப்பதோ கூடாது
02:01 குழந்தையை ஒருபோதும் விளையாட்டாகவோ அல்லது எரிச்சலுற்றோ குலுக்கக்கூடாது
02:05 குழந்தையின் கழுத்து பாதிக்கும்படியாகத் தூக்க்க கூடாது. இவை அனைத்தும் குழந்தைக்கு உள்காயங்களை ஏற்படுத்தும்
02:14 இப்போது வீட்டில் இருந்தபடியே, தொப்புள்கொடி பராமரிப்பதைக் கற்றுக்கொள்வோம்
02:18 கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு தொப்புள் கொடி உயிர்நாடி ஆகும். எனினும், குழந்தை பிறந்த பின் அது தேவைப்படுவதில்லை
02:30 குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே தொப்புள்கொடியின் துடிப்பு நின்றவுடன் இடுக்கி இடப்படுகிறது
02:37 மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு போகும் முன் காய்ந்து சுருங்க ஆரம்பித்து விடுகிறது
02:45 ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தொப்புள்கொடி தானே முழுவதுமாக விழுந்துவிடும்
02:50 தொப்புள் கொடி மூலம் உடலில், நோய் தொற்று ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்
02:57 எனவே,தொப்புள்கொடியைச் சரியாக பராமரிப்பது அத்தியாவசியமானது
03:02 அதற்காக, தொப்புள்கொடி ஈரம் படாமலும் காற்று படும் வகையிலும் இருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்
03:09 தொப்புள்கொடி விழும்வரை ஸ்பான்ச் அல்லது துணியினால் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும்
03:14 தொப்புள்கொடி குழந்தையின் அணையாடையில் படாமல் வைக்கவும் அல்லது மடித்து ஓரத்தில் வைக்கவும்
03:24 பின்வரும் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அணுகவும். தொப்புள்கொடி அல்லது அதன் அருகாமையில் ரத்தம் கசிந்தால்
03:32 சீழ், வீக்கம் மற்றும் தொப்புளைச் சுற்றி சிவந்தநிறம்
03:36 தொப்புள் பகுதி வலிக்கிறது என்பதனை உணர்த்தும் அறிகுறிகள்
03:41 மற்றும் ஒரு மாதம் ஆகியும் தொப்புள்கொடி விழவில்லை எனில்
03:46 சிலசமயங்களில் தொப்புள் கொடி விழும் முன்னரும் விழுந்த பின்னரும் சிறிதளவு ரத்தம் கசியலாம். இது விரைவாக நின்றுவிட்டால் பிரச்சனை இல்லை.
04:01 தொப்புள்கொடியினை ஒருபோதும் பிய்த்து எடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்
04:04 பவுடர் , களிம்பு போன்றவற்றை, மேலே தடவ வேண்டாம்
04:08 தொப்புள்கொடி விழுந்த பின்னர் துணியினால் கட்ட வேண்டாம்
04:13 குழந்தையின் ஊட்டச்சத்துக்காக எவ்வாறு தாய்ப்பால் கொடுப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்
04:20 பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் குழந்தைக்கு கட்டாயமாகத் தாய்ப்பாலூட்ட வேண்டும்
04:25 முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது
04:30 தாய், குழந்தையை தோலோடு தோல் அரவணைப்பது, குழந்தையின் பசி அறிகுறிகளை கவனித்து பாலூட்டுவது அத்தியாவசியமாகும்
04:40 இவை அனைத்தையும் இந்தத் தொடரின் வேறு ஒரு காணொலியில் நாம் பார்த்துள்ளோம்
04:46 சில வேளைகளில் பால் தருவதற்காக பச்சிளம் குழந்தையை முக்கியமாக எடை குறைந்த, குறைமாதப் பிரசவக்குழந்தையை அடிக்கடி எழுப்ப வேண்டியிருக்கும்
04:57 ஒரு வேளை நிறைமாத அல்லது குறைமாத குழந்தை, தாய்ப்பால் குடிக்க ஆர்வமில்லாமல் இருந்தால் சுகாதார ஊழியர் அல்லது மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்
05:09 பாலூட்டும்போது கூடவே விழுங்கப்படும் காற்று குழந்தையை எரிச்சலூட்டி சிணுங்கவைக்கும்
05:15 இதனைத் தவிர்க்க பால் கொடுத்தவுடன் குழந்தையை உட்கார வைத்து ஏப்பம் விட வைக்கவும்
05:20 இந்தத் தொடரின் வேறு ஒரு காணொலியில் இது விளக்கப்பட்டுள்ளது
05:25 அடுத்து, டயாப்பர் கட்டுவது பற்றி பார்ப்போம். ஒவ்வொரு முறையும் துணி ஈரமான பின்னும் மலம் கழித்த பின்னும் குழந்தையை மல்லாக்க படுக்க வைத்து அசுத்தமான துணியைக் கழற்றவும்
05:37 பிறப்புறுப்பு பகுதியினை தண்ணீர் மற்றும் மெல்லிய துணி மூலம் மிருதுவாக சுத்தம் செய்து துடைக்கவும்
05:44 பிறப்புறுப்பு பகுதியில் சோப்பை உபயோகப்படுத்த வேண்டாம். பெண் குழந்தைக்கு முன் இருந்து பின்னோக்கி துடைப்பது சிறுநீர் பகுதி நோய்த்தொற்றினை தவிர்க்கும்
05:55 தாய் அல்லது பராமரிப்பவர் அணையாடையை மாற்றும் முன்னும் பின்னும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
06:03 சில நேரங்களில் டயாபர் காரணமாகக் குழந்தைக்கு புண் ஏற்படலாம்
06:08 டயாபர் புண் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சினை. சிவந்த தடித்த புண்ணை, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைப்பதன் மூலம் சரி செய்யலாம்
06:18 சில நேரங்களில் களிம்பை உபயோகப்படுத்துவது, சில சமயங்களில் துணி அல்லது டயப்பர் கட்டாமல் இருப்பது புண்ணைச் சரிசெய்யும்
06:25 அணையாடை ஈரமாக இருக்கையில், குழந்தையின் மிருதுவான தோல் எரிச்சலாகி புண் ஏற்பட வாய்ப்புள்ளது
06:33 இதை தடுக்கவும் சரிசெய்யவும் மலஜலம் கழித்த பின் அடிக்கடி துணியினை மாற்றவும்
06:41 மெல்லிய துணி கொண்டு தண்ணீர் மூலம் மென்மையாக சுத்தம் செய்யவும். எரிச்சல் ஏற்படுத்துவதால் துடைப்பான்களை தவிர்ப்பது நல்லது
06:50 களிம்பினை புண் இருக்கும் இடத்தில் நிறையத் தடவி விட வேண்டும்
06:55 ஈரத்தன்மைக்கு எதிர் அரணாக இருப்பதால் ஜிங்ன்க் ஆக்சைடை பயன்படுத்துவது நல்லது
07:03 வாசனை மற்றும் நிறம் இல்லாத சோப்பைக்கொண்டு துணியைத் துவைக்க வேண்டும்
07:08 ஒரு நாளில் சில மணி நேரங்கள் துணி அல்லது டயாப்பர் இல்லாமல் இருக்க விடவும். காற்றோட்டமாக இருப்பது தோல் குணமடைய உதவி செய்யும்.
07:18 புண் 3 நாட்களுக்கு மேலே இருந்தாலோ அல்லது அதிகமானாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்
07:27 மருந்து தேவைப்படக்கூடிய பூஞ்சைக் காளான் நோயாகவும் இருக்கலாம்.
07:33 கடைசியாக குழந்தையின் தூக்க அமைப்பினைப் பற்றிப் பார்ப்போம்
07:38 குழந்தை, ஒரு நாளில் 10-14 மணிநேரம் வரை தூங்கும்
07:43 பச்சிளம்குழந்தை 2-4 மணி நேரம் வரை தூங்கும்
07:48 பகல் இரவு என்ற பேதம் கிடையாது
07:52 இரவு நேரங்களில் விழிப்புடனும் சுறுசுறுப்புடனும், பகலில் தூங்கவும் வாய்ப்பு உண்டு
07:58 இரவு நேர தூக்கத்தை அதிகரிக்க குறைவான வெளிச்சத்தில் இரவில் தூங்க வைக்கவும். உதாரணத்திற்கு மந்தமான இரவு விளக்கினை உபயோகிப்பது, பகல் நேரத்தில் விழிப்புடன் வைத்திருக்க பேசுவது மற்றும் விளையாடுவது.
08:17 மல்லாக்க படுத்து தான் குழந்தை உறங்க வேண்டும் என்பதை தாயும் குழந்தை பராமரிப்பவரும் ஞாபகத்தில் வைத்திருக்கவும்
08:24 குழந்தை திடீரென இறக்கும் நோய் ஏற்படாமல் இருக்க இது தடுக்கும்
08:30 குழந்தையின் தொட்டிலில் பின்வரும் பொருட்களை தவிர்க்கவும். போர்வை, ஆட்டுத்தோலால் ஆன மெத்தை, பொம்மைகள் மற்றும் தலையணைகள்
08:44 இவை அனைத்தும் குழந்தையை மூச்சுத்திணற வைக்கலாம்
08:47 தூங்கும்போது, குழந்தையின் தலையின் நிலையை முதலில் வலது புறம் பின்பு இடது புறம் என அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும்
08:58 இதனால் தட்டைத் தலை ஏற்படுவதனைத் தவிர்க்கலாம்
09:04 இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது Dr. செல்வன் . குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Arthi, Sakinashaikh