Difference between revisions of "Health-and-Nutrition/C2/Basics-of-newborn-care/Tamil"
From Script | Spoken-Tutorial
Sakinashaikh (Talk | contribs) |
|||
Line 125: | Line 125: | ||
| குழந்தையின் கழுத்து பாதிக்கும்படியாகத் தூக்க்க கூடாது | | குழந்தையின் கழுத்து பாதிக்கும்படியாகத் தூக்க்க கூடாது | ||
− | |||
இவை அனைத்தும் குழந்தைக்கு உள்காயங்களை ஏற்படுத்தும் | இவை அனைத்தும் குழந்தைக்கு உள்காயங்களை ஏற்படுத்தும் | ||
Line 198: | Line 197: | ||
|03:24 | |03:24 | ||
− | | பின்வரும் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அணுகவும் | + | | பின்வரும் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அணுகவும். தொப்புள்கொடி அல்லது அதன் அருகாமையில் ரத்தம் கசிந்தால் |
− | + | ||
− | + | ||
− | தொப்புள்கொடி அல்லது அதன் அருகாமையில் ரத்தம் கசிந்தால் | + | |
|- | |- | ||
Line 324: | Line 320: | ||
| 05:44 | | 05:44 | ||
− | |பிறப்புறுப்பு பகுதியில்சோப்பை உபயோகப்படுத்த வேண்டாம் | + | |பிறப்புறுப்பு பகுதியில்சோப்பை உபயோகப்படுத்த வேண்டாம். பெண் குழந்தைக்கு முன் இருந்து பின்னோக்கி துடைப்பது சிறுநீர் பகுதி நோய்த்தொற்றினை தவிர்க்கும் |
− | + | ||
− | பெண் குழந்தைக்கு முன் இருந்து பின்னோக்கி துடைப்பது சிறுநீர் பகுதி நோய்த்தொற்றினை தவிர்க்கும் | + | |
|- | |- | ||
Line 345: | Line 339: | ||
| 06:08 | | 06:08 | ||
− | | டயாபர் புண் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சினை | + | | டயாபர் புண் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சினை. சிவந்த தடித்த புண்ணை, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைப்பதன் மூலம் சரி செய்யலாம் |
− | + | ||
− | சிவந்த தடித்த புண்ணை, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைப்பதன் மூலம் சரி செய்யலாம் | + | |
Line 372: | Line 364: | ||
| 06:41 | | 06:41 | ||
− | |மெல்லிய துணி கொண்டு தண்ணீர் மூலம் மென்மையாக சுத்தம் செய்யவும் | + | |மெல்லிய துணி கொண்டு தண்ணீர் மூலம் மென்மையாக சுத்தம் செய்யவும். எரிச்சல் ஏற்படுத்துவதால் துடைப்பான்களை தவிர்ப்பது நல்லது |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 451: | Line 440: | ||
| 07:58 | | 07:58 | ||
− | | இரவு நேர தூக்கத்தை அதிகரிக்க ஒளித் தூண்டலை இரவில் குறைக்கவும் | + | | இரவு நேர தூக்கத்தை அதிகரிக்க ஒளித் தூண்டலை இரவில் குறைக்கவும். உதாரணத்திற்கு மந்தமான இரவு விளக்கினை உபயோகிப்பது, பகல் நேரத்தில் விழிப்புடன் வைத்திருக்க பேசுவது மற்றும் விளையாடுவது. |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 471: | Line 458: | ||
| 08:30 | | 08:30 | ||
− | | குழந்தையின் தொட்டிலில் பின்வரும் பொருட்களை தவிர்க்கவும். | + | | குழந்தையின் தொட்டிலில் பின்வரும் பொருட்களை தவிர்க்கவும். ஆட்டுத்தோலால் ஆன மெத்தை,பொம்மைகள் மற்றும் தலையணைகள், |
− | + | ||
− | ஆட்டுத்தோலால் ஆன மெத்தை,பொம்மைகள் மற்றும் தலையணைகள், | + | |
|- | |- |
Revision as of 16:06, 19 February 2020
|
|
00:00 | பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது பச்சிளம் குழந்தை பராமரிப்பு |
00:11 | தொப்புள் கொடி பராமரிப்பு
தாய்ப்பால் தருதல் மற்றும் ஏப்பம் விட வைத்தல் |
00:15 | டயாபர் கட்டுதல் மற்றும் டயாபர் புண் |
00:19 | பச்சிளம் குழந்தை தூங்கும் தன்மை |
00:23 | மொத்த குடும்பமும் ஆவலோடு குழந்தை பிறப்பினை உற்சாகமாக எதிர்பார்த்து, குழந்தையைப் பார்க்க, கையாள விரும்புகின்றது. |
00:34 | எனவே,பச்சிளம் குழந்தையைக் கையாள சில முக்கிய விதிமுறைகளை விதிப்பது அவசியமாகிறது |
00:40 | பச்சிளம்குழந்தைக்கு எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் சுலபத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும் |
00:48 | தொடுவது, கையாளுவதற்கு முன் கைகளை சுத்தமாகக் கழுவுவது, நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும் |
00:57 | கைகளை சுத்தம் செய்ய,சோப்பு மற்றும் நீரினால் கழுவி பின் உலர்ந்த சுத்தமான துணியினால் துடைத்த பிறகு தான் குழந்தையை தூக்க வேண்டும் |
01:07 | குழந்தையை எவ்வாறு பிடித்துக் கொள்வது என்பதைப் பற்றி முதலில் கற்றுக் கொள்வோம் |
01:11 | குழந்தையின் தலை மற்றும் கழுத்தினை ஒரு கையாலும், பிட்டப் பகுதியினை இன்னொரு கையாலும் தாங்கிப் பிடிக்கவும் |
01:19 | எப்போதும் குழந்தையின் தலை, கழுத்து மற்றும் பிட்டத்தை தாங்கித்தான் படுக்க வைக்க வேண்டும் |
01:26 | குழந்தையை தூக்கத்திலிருந்து எழுப்ப பின் வருமாறு செய்யலாம் |
01:31 | குழந்தையின் உள்ளங்காலை நீவிவிடலாம், தூக்கித் தாங்கிப்பிடித்து உட்காரும் நிலையில் வைக்கலாம் அல்லது காதினை மென்மையாக தொடலாம்- |
01:42 | பச்சிளம் குழந்தை மென்மையான உணர்வு மிக்கது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவும் |
01:46 | குழந்தையை கையாளும் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பச்சிளம் குழந்தையுடன் கரடுமுரடான விளையாட்டு கூடாது |
01:55 | எனவே கால் முட்டி மேல் வைத்து ஆட்டுவதோ ,மேலே தூக்கிப்போட்டு பிடிப்பதோ கூடாது |
02:01 | குழந்தையை ஒருபோதும் விளையாட்டாகவோ அல்லது எரிச்சலுற்றோ குலுக்கக்கூடாது |
02:05 | குழந்தையின் கழுத்து பாதிக்கும்படியாகத் தூக்க்க கூடாது
இவை அனைத்தும் குழந்தைக்கு உள்காயங்களை ஏற்படுத்தும்
|
02:14 | இப்போது வீட்டில், தொப்புள்கொடி பராமரிப்பதைக் கற்றுக்கொள்வோம் |
02:18 | கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு தொப்புள் கொடி உயிர்நாடி ஆகும்.எனினும் .
குழந்தை பிறந்த பின் அது தேவைப்படுவதில்லை |
02:30 | குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே தொப்புள்கொடியின் துடிப்பு நின்றவுடன் இடுக்கி இடப்படுகிறது |
02:37 | மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு போகும் முன் காய்ந்து சுருங்க ஆரம்பித்து விடுகிறது |
02:45 | ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தொப்புள்கொடி தானே முழுவதுமாக விழுந்துவிடும் |
02:50 | தொப்புள் கொடி மூலம் உடலில், நோய் தொற்று ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்
|
02:57 | எனவே,தொப்புள்கொடியைச் சரியாக பராமரிப்பது அத்தியாவசியமானது |
03:02 | அதற்காக, தொப்புள்கொடி ஈரம் படாமலும் காற்று படும் வகையிலும் இருக்கவேண்டும் என்பதைநினைவில் கொள்ளவும் |
03:09 | தொப்புள்கொடி விழும்வரை ஸ்பான்ச் அல்லது, துணிக்குளியல் மட்டுமே தர வேண்டும்
|
03:14 | தொப்புள்கொடி குழந்தையின் அணையாடையில் படாமல் வைக்கவும் அல்லது மடித்து ஓரத்தில் வைக்கவும் |
03:24 | பின்வரும் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அணுகவும். தொப்புள்கொடி அல்லது அதன் அருகாமையில் ரத்தம் கசிந்தால் |
03:32 | சீழ், வீக்கம் மற்றும் தொப்புளைச் சுற்றி சிவந்தநிறம்
|
03:36 | தொப்புள் பகுதி வலிக்கிறது என்பதனை உணர்த்தும் அறிகுறிகள் |
03:41 | மற்றும்ஒரு மாதம் ஆகியும் தொப்புள்கொடி விழவில்லை எனில் |
03:46 | சிலசமயங்களில் தொப்புள் கொடி விழும் முன்னரும் விழுந்த பின்னரும் சிறிதளவு ரத்தம் கசியலாம் இது விரைவாக நின்றுவிட்டால் பிரச்சனை இல்லை.
|
04:01 | தொப்புள்கொடியினை ஒருபோதும் பிய்த்து எடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் |
04:04 | பவுடர் , களிம்பு போன்றவற்றை,மேலே தடவ வேண்டாம் |
04:08 | தொப்புள்கொடி விழுந்த பின்னர் துணியினால் கட்ட வேண்டாம் |
04:13 | குழந்தையின் ஊட்டச்சத்துக்காக எவ்வாறு தாய்ப்பால் கொடுப்பது என்பதைப் பற்றி பார்ப்போம் |
04:20 | பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் குழந்தைக்கு கட்டாயமாகத் தாய்ப்பாலூட்ட வேண்டும் |
04:25 | முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது |
04:30 | தாய், குழந்தையை தோலோடு தோல் அரவணைப்பது, குழந்தையின் பசி அறிகுறிகளை கவனித்து பாலூட்டுவது அத்தியாவசியமாகும் |
04:40 | இவை அனைத்தையும் இந்தத் தொடரின் வேறு ஒரு காணொலியில் நாம் பார்த்துள்ளோம்
|
04:46 | சில வேளைகளில் பால் தருவதற்காக பச்சிளம் குழந்தையை முக்கியமாக எடை குறைந்த, குறைமாதப் பிரசவக்குழந்தையை அடிக்கடி எழுப்ப வேண்டியிருக்கும |
04:57 | ஒரு வேளை நிறைமாத அல்லது குறைமாதகுழந்தை, தாய்ப்பால் குடிக்க ஆர்வமில்லாமல் இருந்தால் சுகாதார ஊழியர் அல்லது மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்
|
05:09 | பாலூட்டும்போது கூடவே விழுங்கப்படும் காற்று குழந்தையை எரிச்சலூட்டி சிணுங்கவைக்கும் |
05:15 | இதனைத் தவிர்க்க பால் கொடுத்தவுடன் குழந்தையை உட்கார வைத்து ஏப்பம் விட வைக்கவும் |
05:20 | இந்தத் தொடரின் வேறு ஒரு காணொலியில் இது விளக்கப்பட்டுள்ளது |
05:25 | அடுத்து, டயாப்பர் கட்டுவது பற்றி பார்ப்போம். ஒவ்வொரு முறையும் மலம் கழித்த பின்னும் துணி ஈரமான பின்னும் குழந்தையை மல்லாக்க படுக்க வைத்து அசுத்தமான துணியைக் கழற்றவும் |
05:37 | பிறப்புறுப்பு பகுதியினை தண்ணீர் மற்றும் மெல்லிய துணி மூலம் மிருதுவாக சுத்தம் செய்து துடைக்கவும் |
05:44 | பிறப்புறுப்பு பகுதியில்சோப்பை உபயோகப்படுத்த வேண்டாம். பெண் குழந்தைக்கு முன் இருந்து பின்னோக்கி துடைப்பது சிறுநீர் பகுதி நோய்த்தொற்றினை தவிர்க்கும் |
05:55 | தாய் அல்லது பராமரிப்பவர் அணையாடையை மாற்றும் முன்னும் பின்னும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
|
06:03 | சில நேரங்களில் டயாபர் காரணமாகக் குழந்தைக்கு புண் ஏற்படலாம் |
06:08 | டயாபர் புண் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சினை. சிவந்த தடித்த புண்ணை, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைப்பதன் மூலம் சரி செய்யலாம்
|
06:18 | சில நேரங்களில் களிம்பு, சில சமயங்களில் துணி அல்லது டயப்பர் கட்டாமல் இருப்பது புண்ணைச் சரிசெய்யும் |
06:25 | அணையாடை ஈரமாக இருக்கையில். குழந்தையின் மிருதுவான தோல் எரிச்சலாகி புண் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது |
06:33 | இதை தடுக்கவும் சரிசெய்யவும் மலஜலம் கழித்த பின் அடிக்கடி துணியினை மாற்றவும் |
06:41 | மெல்லிய துணி கொண்டு தண்ணீர் மூலம் மென்மையாக சுத்தம் செய்யவும். எரிச்சல் ஏற்படுத்துவதால் துடைப்பான்களை தவிர்ப்பது நல்லது |
06:50 | களிம்பினை புண் இருக்கும் இடத்தில் நிறையத் தடவி விட வேண்டும்
|
06:55 | ஈரத்திற்கு எதிர் அரணாக இருப்பதால் ஜிங்ன்க் ஆக்சைடு பயன்படுத்துவது நல்லது |
07:03 | வாசனை மற்றும் நிறம் இல்லாத சோப்பைக்கொண்டு துணியைத்துவைக்க வேண்டும் |
07:08 | ஒரு நாளில் சில மணி நேரங்கள் துணி அல்லது டயாப்பர் இல்லாமல் இருக்க விடவும். காற்றோட்டமாக இருப்பது தோல் குணமடைய உதவி செய்யும்.
|
07:18 | புண் 3 நாட்களுக்கு மேலே இருந்தாலோ அல்லது அதிகமானாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெறவும் |
07:27 | மருந்து தேவைப்படக்கூடிய பூஞ்சைக் காளான் நோயாகவும் இருக்கலாம். |
07:33 | கடைசியாக குழந்தையின் தூக்க அமைப்பினைப் பற்றிப் பார்ப்போம் |
07:38 | குழந்தை, ஒரு நாளில் 10லிருந்து 14 மணிநேரம் வரை தூங்கும் |
07:43 | பச்சிளம்குழந்தை 2-4 மணி நேரம் வரை தூங்கும்
|
07:48 | பகல் இரவு என்ற பேதம் கிடையாது
|
07:52 | இரவு நேரங்களில் விழிப்புடனும் சுறுசுறுப்புடனும், பகலில் தூங்கவும் வாய்ப்பு உண்டு |
07:58 | இரவு நேர தூக்கத்தை அதிகரிக்க ஒளித் தூண்டலை இரவில் குறைக்கவும். உதாரணத்திற்கு மந்தமான இரவு விளக்கினை உபயோகிப்பது, பகல் நேரத்தில் விழிப்புடன் வைத்திருக்க பேசுவது மற்றும் விளையாடுவது. |
08:17 | மல்லாக்க படுத்து தான் குழந்தை உறங்க வேண்டும் என்பதை தாயும் குழந்தை பராமரிப்பவரும் ஞாபகத்தில் வைத்திருக்கவும் |
08:24 | குழந்தை திடீர் இறப்புத்தொகை நோய் ஏற்படாமல் இது தடுக்கும் |
08:30 | குழந்தையின் தொட்டிலில் பின்வரும் பொருட்களை தவிர்க்கவும். ஆட்டுத்தோலால் ஆன மெத்தை,பொம்மைகள் மற்றும் தலையணைகள், |
08:44 | இவை அனைத்தும் குழந்தையை மூச்சுத்திணற வைக்கலாம் |
08:47 | தூங்கும்போது,குழந்தையின் தலையின் நிலையை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும் |
08:58 | இதனால் தட்டைத் தலை ஏற்படுவதனைத் தவிர்க்கலாம் |
09:04 | பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்து விட்டோம்.இந்த டுடோரியலைத் தமிழாக்கம் செய்தது ................... குரல் கொடுத்தது ....................... நன்றி |