Difference between revisions of "Health-and-Nutrition/C2/Breastfeeding-latching/Tamil"
From Script | Spoken-Tutorial
Venuspriya (Talk | contribs) |
Venuspriya (Talk | contribs) |
||
Line 387: | Line 387: | ||
| 10:32 | | 10:32 | ||
| வாயைத் திறத்தல் | | வாயைத் திறத்தல் | ||
− | தலையை திருப்புதல் | + | தலையை திருப்புதல் |
− | + | வாயில் விரலை வைத்தல் | |
− | + | ||
|- | |- | ||
| 10:37 | | 10:37 |
Revision as of 16:41, 23 March 2018
|
|
00:01 | வணக்கம், பாலூட்ட மார்பகத்தை குழந்தையின் வாயினுள் செலுத்துவதற்கான டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்க போது, குழந்தையை தாயின் மார்பகத்துடன் நன்றாக இணைத்து மார்பத்தை அதன் வாயுனுள் செலுத்துவதற்கான சரியான முறை மற்றும் பாலூட்டும் காலஇடைவெளி. |
00:20 | நன்றாக பாலூட்டுதற்கு, மார்பத்தை குழந்தையின் வாயினுள் சரியாக செலுத்துவது மிக அவசியம் என்பதை குறித்துக்கொள்க . |
00:29 | குழந்தையின் வாயினுள் மார்பகத்தை சரியாக செலுத்தவில்லையெனில் மார்பக காம்பில் மட்டுமே குழந்தை பால் குடிக்கும். |
00:36 | அது குழந்தைக்கு மிகச்சிறிதளவுதான் பால் கொடுக்கும். |
00:40 | ஆனால் மார்பகத்தின் areola ன் கீழ் பகுதியுடன் குழந்தை நன்றாக இணைவது குழந்தைக்கு தேவையான பாலைக் கொடுக்கும். |
00:50 | Areola என்பது மார்பக காம்பை சுற்றியுள்ள கருப்புநிறப் பகுதி என்பதை நினைவுக்கொள்ளவும். |
00:56 | இப்போது ஆரம்பிக்கலாம். முதலில் தாய், பொருத்தமான பாலூட்டும் பிடிப்பு முறையில் குழந்தையை பிடிக்க வேண்டும |
01:05 | இந்த பிடிப்பு முறைகள், இந்த டுடோரியல் வரிசையில் வேறொரு வீடியோவில் விளக்கப்பட்டுள்ளன. |
01:11 | இந்த டுடோரியல் cross cradle பிடிப்பு முறையை பயன்படுத்தி விளக்கப்படுகிறது. |
01:16 | குழந்தையை சரியாக வைப்பது, அதன் வாயினுள் சரியாக மார்பகத்தை செலுத்துவதற்கும் சரியாக பாலூட்டுவதற்கும் மிகவும் முக்கியம் |
01:24 | இந்த படத்தில் தாய் குழந்தையை சரியாக cross cradle பிடிப்பு முறையில் பிடித்துள்ளார். |
01:31 | மார்பத்தை வாயினுள் செலுத்துவற்கு குழந்தையும் தயாராக உள்ளது. |
01:35 | மார்பகத்தை வாயினுள் செலுத்துவதற்கு முன் குழந்தை கொட்டாவி விடுவது போல் வாயை அகலமாக திறக்க வேண்டும். |
01:42 | ஏன்? இதை ஒருவர் vada pav அல்லது burgerஐ சாப்பிடுவதை பார்த்து புரிந்து கொள்வோம். |
01:49 | நாம் vada pav அல்லது burgerஐ பெரியதாக கடிக்க வாயை அகலமாக திறக்கிறோம். |
01:56 | அதேபோல- குழந்தை வாயை அகலமாக திறப்பது அதன் வாயினுள் மார்பகத்தின் அதிக பகுதியை செலுத்த உதவும். |
02:04 | குழந்தையின் வாயை அகலமாக திறக்க வைக்க, தாய், குழந்தையின் மேல் உதட்டில் தன் மார்பக காம்பை, குழந்தை அகலமாக வாயை திறக்கும் வரை மெதுவாக தேய்க்க வேண்டும் |
02:16 | சில நேரங்களில் குழந்தை வாயை அகலமாக திறக்க 2 நொடி முதல் 2 நிமிடங்களை வரை எடுக்கலாம், பொறுமையாக இருக்க வேண்டும். |
02:25 | எந்த பாலூட்டும் முறைக்கும், மார்பத்தை பிடித்திருக்கும் தாயின் விரல்கள் மற்றும் பெருவிரல், குழந்தையின் உதடுகளுக்கு நேரே இணையாக இருக்கவேண்டும் என்பதை நினைவுக்கொள்க |
02:36 | குழந்தை வாயை அகலமாக திறக்கும்போது குழந்தையின் கீழ் உதடு areola க்கு அடியில் இருக்க வேண்டும் |
02:43 | மார்பக காம்பானது குழந்தையின் வாய்க்கு மேல்நோக்கி இருக்க வேண்டும். வாய்க்கு நடுவில் அல்ல. |
02:50 | இப்போது தாய் உடனே தன் மார்பகத்தை குழந்தையின் வாயினுள் வைக்க வேண்டும். |
02:55 | குழந்தையின் தலையை சற்று வெளிப்புறம் சாய்ப்பதன் மூலம் குழந்தையின் தாடையை முதலில் மார்பகத்துடன் அழுத்த வேண்டும். |
03:02 | குழந்தையின் வாயை அடைவதற்கு, தாய் தன் முதுகை வளைக்கவோ தன் மார்பகத்தை தள்ளவோ கூடாது. |
03:08 | குழந்தையின் தோள்களை மெதுவாக சற்று தள்ளி குழந்தையை மார்புக்கு கொண்டுவர வேண்டும். |
03:15 | தாயின் aerolaன் கீழ் பகுதி, குழந்தையின் வாயினுள் இருப்பது இதில் மிக முக்கியம். |
03:25 | இது குழந்தையின் வாயினுள் வசதியான இடத்திற்கு மார்பக காம்பு அடைய உதவும். |
03:31 | குழந்தை தன் நாக்கை, அதன் கீழ் உதட்டுக்கு அருகே இருக்கும் areola ஐ அழுத்தியவாறு இருக்க வேண்டும். |
03:37 | இது அதிகமான பால் நாளங்களை அழுத்தி அதிக பாலைக் கொடுக்கும். |
03:42 | அடுத்த படி, குழந்தை மார்பகத்துடன் நன்றாக இணைந்துள்ளதா என சோதிப்பது |
03:48 | அதை சரிபார்க்க, தாய், பின்வரும் அறிகுறிகளை பார்க்க வேண்டும்: |
03:54 | குழந்தையின் வாய் அகலாக திறந்துள்ளதா |
03:57 | areolaன் பகுதி, குழந்தையின் கீழ் உதட்டு பக்கத்தை விட மேல் உதட்டு பக்கம் அதிகமாக தெரிகிறதா. |
04:06 | குழந்தையின் கீழ் தாடை முழுவதுமாக தாயின் மார்பகத்துடன் பொதிந்துள்ளதா. |
04:11 | குழந்தை பாலை விழுங்கும் போது அதன் தாடை முற்றிலும் இறங்குகிறதா. |
04:16 | குழந்தையின் கீழ் உதடு வெளிப்பக்க திசையில் வளைந்துள்ளதா. |
04:22 | இருப்பினும், நன்றாக இணைந்திருக்கும் குழந்தைக்கு பெரும்பாலும் இது மார்பகத்தினுள் மறைந்திருக்கும் |
04:28 | அந்த சமயங்களில், குழந்தையின் கீழ் உதட்டுக்கு அருகில் இருக்கும் மார்பகத்தை சற்று அழுத்தி, குழந்தையின் கீழ் உதடு வெளிநோக்கி வளைந்துள்ளதா என பார்க்கவும். |
04:41 | அடுத்து, குழந்தையின் மூக்கை பார்க்கவும். குழந்தையின் மூக்கு தாயின் மார்பகத்துடன் அழுந்தி இருந்தால் - |
04:49 | குழந்தையின் தலையை சற்று மேல்நோக்கி தாய் வளைக்க வேண்டும் இதனால் குழந்தையின் தாடை மார்பகத்துடன் மேலும் இணையும், |
04:58 | மேலும் குழந்தையின் மூக்கு மற்றும் நெற்றி, மார்பகத்தை விட்டு தள்ளி வரும். |
05:04 | இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தை மார்பகத்துடன் மேலும் நன்றாக இணையும். |
05:09 | குழந்தையின் முழு முகத்தையும் மார்பகத்தில் இருந்து நகர்த்த கூடாது. |
05:13 | இதனால் மார்பக காம்பு மட்டும் வாயில் இருக்கும். |
05:16 | பாலூட்டும்போது தாய் வசதியாக இருக்க வேண்டும் என்பதை நினைவுக்கொள்க. |
05:21 | கிள்ளுதல், இழுத்தல் அல்லது தேய்த்தல் போன்ற உணர்வுகள் மார்பக காம்பில் இருக்க கூடாது. |
05:27 | பாலூட்டும்போது தாய்க்கு வலித்தால் குழந்தை சரியாக மார்பகத்துடன் இணையாமல் இருக்கலாம். |
05:35 | குழந்தை சரியாக மார்பகத்துடன் இணையாமல் இருப்பதற்கான பொதுவான ஒரு காரணத்தைக் காணலாம் . |
05:40 | குழந்தையின் வாயின் நடுவில் மார்பக காம்பை வைக்க, பல தாய்மார்கள் தங்கள் areolaஐ அழுத்துகிறார்கள் |
05:48 | இங்கு, குழந்தையின் வாய் அகலமாக திறக்கவில்லை. |
05:52 | குழந்தை மார்பக காம்புடன் மட்டும் இணைகிறது. |
05:56 | இங்கு, குழந்தையின் மேல் மற்றும் கீழ் உதட்டுக்கு அருகே ஒரே அளவான areola தெரிகிறது. |
06:04 | குழந்தையின் தாடை மார்பகத்தை விட்டு தள்ளி உள்ளது. |
06:07 | குழந்தை பாலை குடிக்க தொடர்ந்து வேகமாக உறிஞ்சுகிறது. |
06:14 | உறிஞ்சும்போது, குழந்தையின் கன்னம் பள்ளமாகிறது |
06:17 | பாலை விழுங்கும் போது குழந்தையின் தாடை முற்றிலும் கீழே இறங்கவில்லை |
06:23 | இதனால் மார்பகம் நசுக்கப்பட்டுகுழந்தையின் வாயின் கடினமான பகுதியில் அழுத்தப்படுகிறது. |
06:31 | இது தாய்க்கு வலியை கொடுக்கும் மார்பக காம்பும் காயமாகும். |
06:37 | மேலும் மார்பக காம்பில் பால் குடிக்கும் போது, areola க்கு அடியில் இருக்கும் பெரிய பால் நாளங்களில் இருந்து பால் குழந்தை கிடைக்காது. |
06:45 | இதனால் குழந்தை போதுமான அளவு பால் பெறுவதில்லை. |
06:50 | மார்பக காம்பில் மட்டும் குழந்தை பால் குடித்தால், |
06:54 | தாய் தன் சுத்தமான சுண்டு விரலை குழந்தையின் வாயின் ஓரத்தில் வைக்க வேண்டும். |
06:59 | குழந்தையின் வாயில் இருந்து மார்பக காம்பை விடுவிக்க விரலை பயன்படுத்த வேண்டும். |
07:04 | பிறகு மீணடும் குழந்தையை சரியாக அதே மார்பகத்துடன் இணைத்து மார்பகத்தை வாயினுள் செலுத்த வேண்டும். |
07:11 | சரியாக மார்பகத்தை வாயினுள் செலுத்தியபிறகு, குழந்தைக்கு போதுமான foremilk மற்றும் hindmilk கிடைக்கிறதா என தாய் சோதிக்க வேண்டும். |
07:19 | Foremilk என்பது மார்பகத்தின் முன் பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும் நீர்த்த பால் ஆகும். |
07:25 | இது தண்ணீர் மற்றும் புரதத்தால் ஆனது. |
07:29 | இது குழந்தையின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் அத்தியாவசியமானது. |
07:36 | Hind milk என்பது மார்பகத்தின் பின் பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும் அடர்த்தியான பால் ஆகும். |
07:42 | இது குறிப்பாக கொழுப்பால் ஆனது. |
07:46 | இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உடல் எடை அதிகரிப்பதற்கும் அத்தியாவசியமானது. |
07:53 | குழந்தை foremilk மற்றும் hindmilk இரண்டையும் பெறுவதை உறுதிப்படுத்த- தாய் ஒரு மார்பகத்தில் முழுவதுமாக பால் கொடுத்து விட்டு அடுத்த மார்பகத்தில் கொடுக்க வேண்டும். |
08:05 | ஒரு மார்பகத்தில் முழுவதுமாக பாலுட்டப்பட்டுவிட்டதா என சோதிக்க, தாய் தன் மார்பகத்தை தன் கையால் அழுத்தவேண்டும். |
08:15 | மார்பகத்தில் இருந்து நீர்த்த பால் நன்றாக வெளியேறினாளோ, |
08:19 | அல்லது அடர்ந்த பால் நன்றாக வெளியேறினாளோ |
08:24 | பிறகு, தாய் அதே மார்பகத்தில் மீண்டும் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். |
08:29 | கையால் அழுத்தும் போது அடர்ந்த பாலில் சிறு துளிகள் மட்டும் வெளியேறினால், |
08:35 | தாய் அந்த மார்பகத்தில் முழுவதுமாக குழந்தைக்கு பாலூட்டிவிட்டாள் என பொருள். |
08:41 | ஆனால், அடுத்த மார்பகத்தில் பால் கொடுக்கும் முன், குழந்தை ஏப்பம் விடுமாறு தாய் செய்ய வேண்டும். அதற்கு குழந்தையை தன் மடியில் உட்கார வைத்து குழந்தையின் உடலை சற்று முன்னோக்கி சாய்த்து தன் கையை குழந்தையின் தாடையில் வைத்து வாய் திறக்குமாறு செய்யவேண்டும். |
09:00 | 2, 3 நிமிடங்களுக்குள் குழந்தை ஏப்பம் விட வேண்டும். |
09:04 | அடுத்த 5 நிமிடங்களுக்கு ஏப்பம் விடவில்லை எனில், |
09:08 | குழந்தை மார்பகத்துடன் நன்கு இணைந்து பால் குடித்துள்ளது என பொருள். |
09:14 | பால் குடிக்கும்போது அதிகமான காற்று குழந்தையின் வாயினுள் செல்லவில்லை. |
09:21 | இப்போது, தாய் அடுத்த மார்பகத்தில் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். |
09:26 | குழந்தையின் வயிறு நிறைந்துவிட்டால், அடுத்த மார்பகத்தில் பால் குடிக்கமாட்டாள். |
09:32 | ஆனால் தாய் எப்போதும் இரு மார்பகத்தில் இருந்தும் பால் கொடுக்க வேண்டும். |
09:39 | பால் போதுமானது என்பதை குழந்தையே முடிவு எடுக்க வேண்டும். |
09:45 | பால் குடிக்கும்போது குழந்தை தூங்கினால், தாய் குழந்தையை எழுப்ப வேண்டும். அதற்கு குழந்தையின் பாதத்தை மெதுவாக தட்டலாம் |
09:55 | அல்லது குழந்தையின் முதுகை மெதுவாக வருடலாம் |
09:59 | அல்லது ஏப்பம் விட உட்கார வைத்தது போல உட்கார வைக்கலாம். |
10:04 | சரியான முறையில் பாலூட்டுவதுடன் பாலூட்டும் காலஇடைவெளியும் மிக முக்கியும். |
10:12 | 24 மணிநேரத்தில் 12 முறையாவது தாய் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். |
10:17 | அதில் 2, 3 முறையாவது இரவில் பாலூட்ட வேண்டும். |
10:24 | குழந்தைக்கு பாலூட்ட, தாய், குழந்தையின் பசி அறிகுறிகளை பார்க்க வேண்டும். அவை - அசைதல் |
10:32 | வாயைத் திறத்தல்
தலையை திருப்புதல் வாயில் விரலை வைத்தல் |
10:37 | விரல்களை சப்புதல் மற்றும் உடலை நீட்டுதல் |
10:42 | குழந்தை பாலுக்காக அழுதால், மிகவும் தாமதமாகிவிட்டது என பொருள். |
10:49 | 2 வாரங்கள், 6 வாரங்கள் மற்றும் 3 மூன்று மாதங்களில் குழந்தையின் வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும் என்பதை குறித்துக்கொள்க. |
10:59 | அப்போது குழந்தைக்கு அதிக பால் தேவைப்படும். |
11:05 | மேலும் குழந்தை அடிக்கடி பால் குடித்தால் தாயின் மார்பகத்தில் அதிகமாக பால் உற்பத்தியாகும். |
11:12 | எனவே, அந்த வளர்ச்சி காலங்களில் தாய் அதிகமாக அடிக்கடி பால் கொடுக்க வேண்டும். |
11:19 | குழந்தையின் வாழ்நாளில் முதல் 6 மாதங்களுக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால் சிறந்த ஊட்டச்சத்தாகும் என்பதை நினைவுகொள்க. |
11:30 | குழந்தையை நன்றாக மார்பகத்துடன் இணைத்து பாலூட்டுவதே வெற்றிகரமாக தாய்ப்பாலூட்டும் முறையாகும். . |
11:36 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
11:41 | நாம் கற்றது, குழந்தையை தாயின் மார்பகத்துடன் நன்றாக இணைத்து மார்பத்தை அதன் வாயுனுள் செலுத்துவதற்கான சரியான முறை மற்றும் பாலூட்டும் காலஇடைவெளி |
11:54 | இந்த டுடோரியல், Spoken Tutorial Project, IIT Bombayஆல் பங்களிக்கப்பட்டது |
12:02 | Spoken Tutorial Project க்கு நிதியுதவி, இந்திய அரசாங்கத்தின் NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் கிடைக்கும். |
12:15 | இந்த tutorial ன் ஒருபகுதி நிதி, WHEELS Global Foundationன் பெருந்தன்மையான பங்களிப்பாகும். |
12:22 | இந்த tutorial, Maa aur Shishu Poshan projectன் ஒரு பகுதி ஆகும்.
இந்த tutorialக்கான domain reviewer, Dr. Rupal Dalal, MD Pediatrics. |
12:34 | இந்த tutorial, உணவியலாளர் Tasneem Shaikh மற்றும் animator Shital Joshi ஆல் உருவாக்கப்பட்டது.
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா, நன்றி. |