Difference between revisions of "Avogadro/C3/Stereoisomerism/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | <center>Time</center> | <center>Narration</center> |- || 00:01 ||அனைவருக்கும் வணக்கம். '''Stereoisomerism'''குறி...")
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 57: Line 57:
 
|-
 
|-
 
|| 01:41
 
|| 01:41
||'''1,2-dichloroethane''' இவை மூன்று '''conformer''' களில் காணப்படுகிறது. அவை :
+
||'''1,2-dichloroethane''' மூன்று '''conformer''' களில் காணப்படுகிறது. அவை :
 
'''Eclipsed''', '''Gauche''' மற்றும் '''Anti'''
 
'''Eclipsed''', '''Gauche''' மற்றும் '''Anti'''
 
|-
 
|-
Line 461: Line 461:
 
|-
 
|-
 
||12:51
 
||12:51
|| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம். குரல் கொடுத்தது…. நன்றி.  
+
|| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம்.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி.  
 
|-
 
|-
 
|}
 
|}

Latest revision as of 16:49, 29 January 2018

Time
Narration
00:01 அனைவருக்கும் வணக்கம். Stereoisomerismகுறித்த இந்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் Conformational isomerism,

Geometrical isomerism மற்றும் R-S configuration களை உதாரணத்துடன் கற்போம்.

00:18 நான் பயன்படுத்துவது,

Ubuntu Linux OS version. 14.04 Avogadro version 1.1.1.

00:28 இந்த டுடோரியலைப் பின்தொடர Avogadro interface குறித்த பரிச்சயம் இருக்க வேண்டும். அது தொடர்பான டுடோரியல்களுக்கு எங்கள் இணைய தளத்திற்கு செல்லவும்.
00:39 இந்த டுடோரியலில் காட்டப்படும் எடுத்துக்காட்டுகளின் fileகள், code files ஆக கொடுக்கப்பட்டுள்ளன.
00:45 இந்த டுடோரியலில் Avogadro வைப் பயன்படுத்தி stereoisomerகளைக் கட்டமைப்பது பற்றி காணலாம்.
00:51 stereoisomerismகுறித்து சிறிய அறிமுகம் செய்கிறேன்.
00:56 அணுக்களின் spatial arrangement களின் மூலம் Stereoisomerism தோன்றுகிறது.
01:03 Isomerகள் என்பவை ஒரே வடிவமைப்பைக் கொண்டவை. எனவே அவை பண்புகளில் பெரிதாக வேறுபடுவதில்லை.
01:09 isomerகளின் வகைப்பாடு இந்த slideல் காட்டப்படுகிறது.
01:16 நான் Conformational isomerismஇல் இருந்து தொடங்குகிறேன்.
01:21 இது stereoisomerism இன் ஒரு வகையாகும்.
01:23 இவற்றில், isomerகளின் ஒற்றைப் பிணைப்பை சுழற்றுவதன் மூலம் ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
01:30 ஒற்றைப் பிணைப்பை மேற்கொண்டு சுழற்றுவது rotational energy barrierஇன் மூலம் தடுக்கப்படுகிறது.
01:36 1,2-dichloroethaneஇன் conformers உடன் தொடங்குவோம்.
01:41 1,2-dichloroethane மூன்று conformer களில் காணப்படுகிறது. அவை :

Eclipsed, Gauche மற்றும் Anti

01:50 நான் Avogadro விண்டோவைத் திறந்துள்ளேன்.
01:53 Draw tool ஐ கிளிக் செய்யவும்.
01:55 Adjust Hydrogens check box ஐ அன் செக் செய்யவும்.
01:59 Panelஇல் கிளிக் மற்றும் drag செய்து இரண்டு அணுக்களை வரையவும்.
02:04 Element drop down இல் இருந்துChlorine ஐ தேர்வு செய்யவும்.
02:08 ஒவ்வொரு carbon னிலும் பிணைப்பை வரையவும்.
02:11 Buildமெனுவுக்கு சென்று Add Hydrogensன் மீது கிளிக் செய்யவும்.
02:15 Panelஇல் 1,2-dichloroethane வரையப்பட்டுள்ளது.
02:19 நாம் வடிவமைப்பை optimize செய்யலாம்.
02:22 Auto Optimization tool ஐ கிளிக் செய்யவும்
02:25 Force Fieldஇல்MMFF94ஐ தேர்வு செய்து Startபட்டனை கிளிக் செய்யவும்.
02:35 Stop ஐ கிளிக் செய்து optimization செயலை நிறுத்தவும்.
02:40 Navigation tool ஐ கிளிக் செய்து வடிவமைப்பை சரியான இணக்கத்திற்கு சுழற்றவும்.
02:45 Panelஇல் Gauche conformer உள்ளது.
02:49 1,2-dichloroethaneஇன் conformers ஐ காண நான் சுழலும் தளத்தை சரி செய்கிறேன்.
02:55 Bond Centric Manipulation tool ஐ கிளிக் செய்யவும்.
02:59 இரண்டு carbon அணுக்களுக்கு இடையே உள்ள பிணைப்பை கிளிக் செய்யவும்.
03:03 அணுக்களுக்கு இடையே உள்ள தளம் நீலம் அல்லது மஞ்சள் வண்ணத்தில் தோன்றுகிறது.
03:08 Chlorineஅணுவின் மீது கர்ஸரை வைக்கவும்.
03:10 பிணைப்பை கடிகாரம் சுழலும் திசையில் சுழற்றவும்.
03:14 Navigation tool ஐ கிளிக் செய்து வடிவமைப்பை சுழற்றவும்.
03:18 Panelஇல் Anti conformer உள்ளது
03:21 மறுபடியும் Bond centric Manipulation tool ஐ பயன்படுத்தி C-C bondசுழற்றவும்.
03:25 நம்மிடம்Panelஇல் Eclipsed conformer உள்ளது.
03:30 இனி Cyclohexane இன் பல்வேறு conformersஐ காட்டுகிறேன்.
03:35 ஒரு புதிய விண்டோவைத் திறக்கவும்.
03:38 Draw settings மெனுவில் Carbon முன்னிருப்பு தனிமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
03:44 Adjust Hydrogensசெக் பாக்ஸை அன் செக் செய்யவும்.
03:48 cyclohexane இன் அமைப்பை boat formஇல் வரையலாம்.
03:53 Click மற்றும் drag செய்து cyclohexane இன் boat conformerPanel இல் வரையவும்.
04:01 அணுக்களை label செய்ய, Display Types இல் இருக்கும் Label செக் பாக்ஸில் கிளிக் செய்யவும்.
04:07 labeling எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது என்பதை நினைவில் கொள்க.
04:11 நமது தேவைக்கேற்ப conformers ஐ label செய்யலாம்.
04:16 Selection tool ஐ கிளிக் செய்து பின், முதல் carbon அணுவில் ரைட் கிளிக் செய்யவும்.
04:21 ஒரு menu கிடைக்கும். அதில் Change label ஐ தேர்வு செய்யவும்.
04:25 Change label of the atom text box தோன்றுகிறது.
04:30 New Label field இல் 1 என டைப் செய்து OKஐ கிளிக் செய்யவும்.
04:35 பின்பு இரண்டாவது அணுவில் ரைட் கிளிக் செய்து label ஐ 2 என மாற்றவும்.
04:41 இதேபோல 3, 4, 5 மற்றும் 6 வது அணுவின் label களை மாற்றுகிறேன்.
04:50 boattwist boat conformerஆக மாற்றலாம்.
04:54 Manipulation Tool பின் 2 ஐ கிளிக் செய்து மேல் பக்கம் இழுக்கவும்.
04:57 5 இன் மீது கிளிக் செய்து மேல் பக்கம் இழுக்கவும். 3 இன் மீது கிளிக் செய்து மேல் பக்கம் இழுக்கவும்.
05:08 இப்போதுPanel இல் twist boat உள்ளது.
05:10 இனி twist boathalf chair conformer ஆக மாற்றுவோம்.
05:16 2 ஐ கிளிக் செய்து கீழ் பக்கம் இழுக்கவும்.
05:19 5 ஐ கிளிக் செய்து கீழ் பக்கம் இழுக்கவும்.
05:23 4 ஐ கிளிக் செய்து பக்கவாட்டில் இழுக்கவும்.
05:27 சரியான வடிவமைப்புக்கு தேவைப்பட்டால் அனைத்து carbon அணுக்களின் இருப்பிடத்தை சரிசெய்யவும்.
05:33 Panelஇல் இருப்பது half chair conformerஆகும்.
05:36 இப்பொழுது half chairchair conformerக்கு மாற்றியமைப்போம்.
05:41 4 ஐ கிளிக் செய்து கீழ் பக்கம் இழுக்கவும்.
05:44 1 ஐ கிளிக் செய்து கீழ் பக்கம் இழுக்கவும்.
05:47 சரியான வடிவமைப்புக்கு தேவைப்பட்டால் அனைத்து carbon அணுக்களின் இருப்பிடத்தை சரிசெய்யவும்.
05:53 இப்பொழுது இருப்பது chair conformer ஆகும்.
05:56 பயிற்சிக்காக, Butane மற்றும் Cyclopentane இன் பல்வேறு conformer களை வரையவும்.
06:03 இனி geometrical isomerismஐ எடுத்துக்காட்ட சில வடிவமைப்புகளை வரைகிறேன்.
06:09 இரட்டைப்பிணைப்பைச் சுற்றி அணுக்கள் பல்வேறு தளத்தில் அமைவதன் காரணமாக Geometrical isomerism ஏற்படுகிறது.
06:17 இங்கே double-bonded carbonஇன் மீது அணுக்கள் அல்லது groupகள் சுழல தடை உள்ளது.
06:24 செயல் விளக்கத்திற்காக, cisplatinஎனப்படும் diamminedichloroplatinum(II) இன் வடிவமைப்பை வரைகிறேன்.
06:33 ஒரு புதிய விண்டோவைத் திறக்கவும்.
06:36 Draw settings மெனுவில், Element drop down ஐ கிளிக் செய்து Other ஐ தேர்வு செய்யவும். Periodic tableவிண்டோ திறக்கிறது.
06:44 பட்டியலில் Platinum (Pt) ஐ தேர்ந்தெடுக்கவும். Periodic table விண்டோவை மூடவும்.
06:50 Panel இல் கிளிக் செய்யவும்.
06:53 Element drop down இல் Chlorine ஐ தேர்வு செய்யவும்.
06:55 இரண்டு chlorine bondகளை Platinum அணுவின் ஒரே பக்கத்தில் வரையவும்.
07:00 Element drop down இல் Nitrogen ஐ தேர்ந்தெடுத்து முன்பு போல இரண்டு nitrogen bonds ஐ வரையவும்.
07:07 வடிவமைப்பை வரைந்து முடிக்க nitrogen அணுக்களில் மூன்று hydrogen கள் தேவை.
07:13 Element drop down இல் Hydrogenஐ தேர்ந்தெடுக்கவும்.
07:16 ஒவ்வொருnitrogenஅணுவையும் கிளிக் செய்து மூன்றாவது பிணைப்பை வரையவும்.
07:21 வடிவமைப்பை optimize செய்யலாம்.
07:24 Auto Optimization tool ஐ கிளிக் செய்யவும்.
07:27 Force Field இல் UFF ஐ கிளிக் செய்து Start பட்டனை கிளிக் செய்யவும்.
07:35 Stop ஐ கிளிக் செய்து optimization செயலை நிறுத்தவும்.
07:39 செய்முறை விளக்கத்திற்கு இரண்டு வடிவங்கள் தேவை.
07:43 நான் வடிவமைப்பை copy மற்றும் paste செய்கிறேன்.
07:46 Selection tool ஐ கிளிக் செய்து வடிவமைப்பை தேர்வு செய்யவும்.
07:50 முறையே CTRL+C மற்றும் CTRL+V அழுத்தி copy, paste செய்யவும். வடிவமைப்பை வலதுபக்கத்துக்கு Drag செய்யவும்.
07:57 வசதிக்காக நான் அணுக்களை label செய்கிறேன்.
08:00 Display Types மெனுவில் Label check box ஐ கிளிக் செய்யவும்.
08:05 Hydrogenகளை நீக்க Build மெனுவில் Remove Hydrogensஐ கிளிக் செய்யவும்.
08:11 இப்போது Panelஇல் cisplatin இன் இரண்டு isomerகள் உள்ளன.
08:16 நான் இரண்டாவது cis isomertrans isomer ஆக மாற்றுகிறேன்.
08:21 Manipulation toolஐ கிளிக் செய்யவும்.
08:24 Cl4 ஐ கிளிக் செய்து இடது பக்கம் drag செய்யவும். N4ஐ கிளிக் செய்து வலதுபக்கம் drag செய்யவும்.
08:32 பின்னர் பிணைப்புகளின் இருப்பிடத்தை சரியான இணக்கத்திற்கு சரிசெய்து கொள்ளவும்
08:38 Build மெனுவுக்கு சென்று Add Hydrogensஐ தேர்வு செய்யவும்.
08:43 முன்பு போல ஒவ்வொரு nitrogen அணுவிலும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைக்கப்பட்டுள்ளது.
08:48 மூன்றாவது HydrogenDraw tool இல் உள்ள Hydrogen மூலம் இணைக்கவும்.
08:53 வடிவத்தை optimize செய்யலாம்.
08:55 Auto Optimization ஐ கிளிக் செய்யவும்.
08:59 Force Field இல் UFF ஐ தேர்வு செய்து Start button ஐ கிளிக் செய்யவும்.
09:05 Stop ஐ கிளிக் செய்து optimization செயலை நிறுத்தவும்.
09:09 இப்போது Panelஇல் இரண்டு diamminedichloroplatinum(II) இன் இரண்டு geometrical isomerகள் உள்ளன.
09:17 இதுபோலவே நம்மிடம் diamminetetracyanoferrate(III)ion [Fe(NH3</sub)2(CN)4]-இன் geometrical isomerகள் உள்ளன.
09:25 அடுத்ததாக R-S configurationபற்றி காணலாம்.
09:29 Chiral centre, இருப்பதன் காரணமாக R-S configurationsஉருவாகின்றன.
09:35 Chiral centre என்பது ஒரு அணு நான்கு வெவ்வேறு substituent களுடன் இணைந்திருப்பதை குறிப்பதாகும்.
09:41 Configuration கள் மற்றவையின் non-superimposable mirror images ஆகும்.
09:47 R-S configurations இன் செயல் விளக்கத்திற்காக நான் amino acid - Alanine ஐ பயன்படுத்துகிறேன்.
09:53 ஒரு புதிய விண்டோவைத் திறக்கவும்.
09:56 Alanine வடிவமைப்பை Fragment library இல் இருந்து load செய்கிறேன்.
10:01 Fragment libraryஇல் இருக்கும் அனைத்து amino acidகளும் optically active ஆகும்.
10:07 நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப explore செய்துகொள்ளலாம்.
10:11 CTRL+SHIFT மற்றும் A ஐ அழுத்தி வடிவமைப்பை deselect செய்யவும்.
10:15 Navigation tool ஐப் பயன்படுத்தி சரியான இணக்கத்திற்கு வடிவமைப்பை சுழற்றிக்கொள்ளவும்.
10:22 நான்கு வெவ்வேறு தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள மைய carbon அணு chiral ஆகும்.
10:26 R S configuration substituent க்கு clockwise அல்லது anticlockwise திசையில் கொடுக்கப்படும் முன்னுரிமையைப் பொறுத்ததாகும்.
10:35 substituent இன் அணு எண்ணைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படுகிறது.
10:40 அதிக அணு எண் கொண்டுள்ள Substituent முதல் முன்னுரிமையைப் பெறுகிறது.
10:45 நாம் இப்போது clockwise திசையில் முன்னுரிமையைக் காண்கிறோம்.
10:49 இந்த வடிவமைப்பில், nitrogen முதல் முன்னுரிமையைப் பெறுகிறது.
10:53 Oxygenகள் இணைக்கப்பட்டுள்ள Carbon இரண்டாவது முன்னுரிமையையும், methyl தொகுதி மூன்றாவது முன்னுரிமையையும் பெறுகிறது.
11:02 இந்த வடிவம் R configurationஐக் கொண்டுள்ளது.
11:05 நான் 'chiral carbon உடன் இணைக்கப்பட்டுள்ள தொகுதிகளை இடம் மாற்றுகிறேன்.
11:10 Build மெனுவுக்கு சென்று Remove Hydrogens ஐத் தேர்ந்தெடுக்கவும்.
11:15 Manipulation tool ஐ கிளிக் செய்யவும்.
11:17 Carbon ஐ வலதுபக்கம் நகர்த்தவும்.
11:20 oxygens உடன் இணைக்கப்பட்டுள்ள carbon ஐ இடது பக்கம் நகர்த்தவும்.
11:25 Build மெனுவுக்கு சென்று Add Hydrogensஐத் தேர்ந்தெடுக்கவும்.
11:29 இப்போது முன்னுரிமையை anti-clockwise திசையில் காணலாம்.
11:33 Nitrogen முதல் முன்னுரிமையையும், Oxygenகளுடன் இணைக்கப்பட்டுள்ள Carbon இரண்டாவது முன்னுரிமையையும் Methyl தொகுதி மூன்றாவது முன்னுரிமையையும் பெற்றுள்ளது.
11:45 இந்த அமைப்பு S configuration ஆகும்.
11:48 இதுபோல Glyceraldehyde இன் R மற்றும் S configurationகள் Panel இல் உள்ளன.
11:55 அனைத்தையும் நினைவு கூறலாம்.
11:57 இந்த டுடோரியலில் நாம்,

1,2-dichloroethane இன் Conformationகள் cyclohexane இன் Conformationகள் cisplatin இன் Geometrical isomerகள் மற்றும் amino acid Alanine இன் R-S configurationகள் ஆகியவற்றை வரைய கற்றுள்ளோம்.

12:15 பயிற்சிக்காக, 2-butene மற்றும் 1,2-dichloroethene இன் Geometrical isomerகளையும், bromochloroiodomethaneஇன் R-S configurationகளையும் வரையவும்.
12:29 இந்த வீடியோ ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்களிடம் நல்ல bandwidth இல்லை எனில் இதை download செய்து பார்த்துக்கொள்ளலாம்.
12:37 Spoken Tutorialகளை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகள் நடத்தி சான்றிதழ் அளிக்கிறோம். எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
12:44 இந்திய அரசின் NMEICT, MHRD இந்த spoken tutorial திட்டத்திற்க்கு தேவையான நிதியுதவியை அளிக்கிறது.
12:51 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பாலசுப்பிரமணியம்.குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி.

Contributors and Content Editors

Balasubramaniam, Venuspriya