Difference between revisions of "Scilab/C2/Iteration/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by the same user not shown)
Line 2: Line 2:
 
|| '''Time'''
 
|| '''Time'''
 
|| '''Narration'''
 
|| '''Narration'''
 
  
 
|-
 
|-
Line 107: Line 106:
  
 
|-
 
|-
ல்
 
 
| 01:34
 
| 01:34
  

Latest revision as of 11:55, 7 April 2017

Time Narration
00:01 Scilab இல் iterative கணக்கீடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 நான் பயன்படுத்துவது Mac இயங்கு தளத்தில் scilab பதிப்பு 5.2
00:11 ஆனாலும் இந்த கணக்கீடுகள் ஏனைய பதிப்புகளிலும் வேலை செய்ய வேண்டும். மேலும் linux மற்றும் windows இலும்.
00:17 iteration.sce file இல் உள்ள code ஐ பயன்படுத்துவேன்.
00:22 இந்த file ஐ Scilab editor இல் திறந்துள்ளேன். இதை editor ஆக மட்டுமே பயன்படுத்துவேன்.
00:29 colon operator மூலம் ஒரு vector ஐ உருவாக்கலாம். i equal to 1 colon 5
00:38 இது ஒரு vector ஐ 1 இலிருந்து 5 க்கு, படிக்கு 1 அதிகரித்து உருவாக்குகிறது.
00:42 இந்த command இல், i equal to 1 colon 2 colon 5,
00:51 நடுவில் உள்ள argument 2 increment ஐ காட்டுகிறது
00:56 1 தான் முதல் argument; அங்கே vector துவங்குகிறது. நாம் 5 க்கு மேல் போக முடியாது.
01:01 5 க்கு சமமாக இருக்கலாம்.
01:04 முடிக்கும் argument 6 ஆக மாறினாலும் விடை அப்படியே இருக்கும்.
01:09 இந்த நடத்தையை விளக்குவது சுலபமே.
01:13 ஏன் என்று ஒரு கணம் யோசிக்கலாமா ?
01:15 இப்போது iterative கணக்கீடுகளை செய்ய for statement ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம்
01:22 for... i equal to 1 colon 2 colon 7... disp i... end.
01:28 scilab console ல் வெட்டி ஒட்டி Enter செய்க.
01:34 நாம் loop இல் செல்ல செல்ல இந்த code... i ஐ print out செய்கிறது,
01:37 இதன் காரணம் command disp அனுப்பிய argument காட்டப்படுகிறது.
01:42 for loop integer மதிப்புகளுக்கு பயனாகிறது என்பதை நினைவில் கொள்க.
01:45 இங்கே, நான்கு integer மதிப்புகள் ... 1, 3, 5 மற்றும் 7 காட்டப்படுகின்றன,
01:50 for loop இல் எவ்வளவு முறை iterationகள் நடக்கிறதோ அந்த எண்ணிக்கை priori எனப்படும்.
01:56 இந்த tutorial இல் முன்னிருப்பு increment ஆக ஒன்றைக்கொள்வோம்.
02:01 i equal to 1 லிருந்து 5 என காட்டும் loop உடன் துவக்கலாம்.
02:10 break statement ஐ உள்ளிடுவதன் மூலம் code ஐ மாற்றலாம்.
02:18 i ... 2 வரை மட்டுமே காட்டபப்டுவதை கவனிக்கவும்
02:22 iteration i இன் கடைசி மதிப்பான 5 வரை நடக்கவில்லை.
02:27 i equal to 2 என ஆனபோது if block முதல் முறையாக செயலாக்கப்பட்டது.
02:30 ஆனால் break command .... loop ஐ நிறுத்தி விட்டது.
02:34 இடையில் ஏதேனும் condition பூர்த்தியானால் loop இலிருந்து வெளியேற break statement ஐ பயன்படுத்தலாம்.
02:40 "i equal to 2" statement இல் "equal to" குறி இரு முறை இருப்பதை காணவும்.
02:45 programming மொழிகளில் சமநிலையைக் காட்ட இதுவே நியமம் ஆகும்.
02:50 இந்த comparison statement இன் விடை ஒரு boolean: true அல்லது false.
02:56 continue statement ஐ இங்கே நுழைக்கலாம். ஒட்டி Enter ஐ அழுத்தவும்
03:06 இதன் விளைவாக i 4 க்கும் 5 க்கும் மட்டுமே காட்டப்படுகிறது.
03:10 i less than or equal to 3 statement இன் நிபந்தனையால் i 3 க்கு சமம் அல்லது குறைவு என்ற நிலையில் ஏதும் காட்டப்படுவதில்லை.
03:18 continue statement ... program ஐ மீதி loop ஐ தவிர்க்கச்சொல்லுகிறது.
03:22 break statement போலில்லாமல் இது loop ஐ முடிப்பதில்லை.
03:25 parameter i increment ஆகிறது மற்றும் loop இன் எல்லா கணக்கீடுகளும் புதிய i க்கு செயலாகிறது.
03:32 இங்கு சற்று இளைப்பாறி எப்படி less than or equal to வகை operator களுக்கு உதவி பெறுவது எனப்பார்க்கலாம்.
03:38 type செய்க ... less than or equal to ... help உடன்...
03:46 இது scilab help browser ஐ திறக்கிறது.
03:51 less option இன் கீழ் உதவி இருக்கிறது
03:56 ஆகவே இப்போது இதை மூடிவிட்டு help less என type செய்தால்
04:06 தேவையான help வழிக்காட்டல்கள் இங்கே கிடைக்கின்றன. இதை மூடுகிறேன்.
04:11 Scilab இல் இந்த for statement... programming language களில் உள்ளதை விட சக்தி வாய்ந்தது.
04:16 உதாரணமாக , ஒரு vector மீது ஒரு loop ஐ இயக்கலாம்:
04:24 இந்த script .... v இன் மதிப்புகள் எல்லாவற்றையும் காட்டுகிறது.
04:28 இதுவரை variable களை மட்டுமே காட்டிக்கொண்டு இருந்தோம்.
04:32 உண்மையில் ஒரு கணக்கீட்டின் விடையைக்கூட காட்டலாம்.
04:35 பின் வரும் code... எண்களின் இரண்டுக்குகளை காட்டுகிறது.
04:44 for loop ஐ விவரிக்க நிறையவே நேரம் எடுத்துக்கொண்டோம்.
04:48 இப்போது while loop ஐ பார்க்கலாம்.
04:50 ஒரு boolean expression true ஆக இருக்கும் வரை loop ஐ இயக்க while statement அனுமதிக்கிறது.
04:55 loop இன் ஆரம்பத்தில் expression true எனில்,
04:58 while loop இன் body இல் உள்ள statementகள் இயங்குகின்றன.
05:02 program ஐ நன்றாக எழுதி இருந்தால் expression false ஆகி loop முடிவடையும்.
05:08 இப்போது while loop க்கு உதாரணத்தை பார்க்கலாம் :
05:15 i இன் மதிப்புகள், 1 முதல் 6 வரை காட்டப்படுகின்றது.
05:19 for loop போலவே Break மற்றும் continue statementகள் while loop இலும் வேலை செய்கின்றன. Break ஐ பயன்படுத்தி இதை செய்து காட்டலாம்.
05:33 i equal to 3 என்றானதும் break statement காரணமாக program... loop ஐ நிறுத்துகிறது.
05:39 மேலும் continue statement ஐ while loop இல் முயற்சிக்கலாம்.
05:44 இத்துடன் Scilab இல் iterative கணக்கீடுகள் மீதான spoken tutorial முடிவுக்கு வருகிறது.
05:50 Spoken Tutorialகள் இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே ஆதரிக்கப்படும் Talk to a Teacher திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
05:57 இது குறித்த மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
06:00 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst