Difference between revisions of "Inkscape/C4/Special-effects-on-text/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 221: | Line 221: | ||
|- | |- | ||
| 05:43 | | 05:43 | ||
− | |இப்போது '''Extensions menu'''ற்கு சென்று '''Text''' என்று பெயரிடப்பட்ட optionல் | + | |இப்போது '''Extensions menu'''ற்கு சென்று '''Text''' என்று பெயரிடப்பட்ட optionல் Change Case ஐ க்ளிக் செய்யவும். நீங்கள் சில options களை பார்ப்பீர்கள். |
|- | |- |
Latest revision as of 15:08, 6 April 2017
Time | Narration |
00:01 | வணக்கம். Inkscapeஐ பயன்படுத்தி Text மீதான Special Effects குறித்த டுட்டோரியல்-க்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorialல் நாம் உருவாக்க கற்றுக்கொள்வது: Reflected text, Labeled text மற்றும் text-ன் case-ஐ மாற்றுவது. |
00:16 | இந்த டுட்டோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 OS. |
00:22 | இந்த தொடரில் அனைத்து முந்தைய tutorial-களும் Inkscape 0.48.4 -இல் பதிவு செய்யப்பட்டன. |
00:28 | இந்த டுட்டோரியலில், நான் பதிவு செய்த பதிப்பு 0.91, இது சமீபத்திய நிலையான பதிப்பு. |
00:35 | Inkscape ஐ திறக்கவும். முதலில், நாம் ஒரு Reflected text ஐ உருவாக்க கற்றுக்கொள்வோம். |
00:41 | Text tool-ஐ தேர்வு செய்து, SPOKEN என்ற வார்த்தையை டைப் செய்யவும். text-ஐ "Bold" ஆக்கவும். |
00:49 | அதை நன்றாக பார்க்க பெரிதாக்குகிறேன். இதனால் இதை நீங்கள் தெளிவாக பார்க்க முடியும். |
00:54 | இப்பொது Object menu- விற்குச் சென்று Fill and Stroke option-ஐ தேர்வு செய்யவும். |
00:59 | பின்னர் Fill tab ன் கீழ் இருக்கும் , Linear gradientஐ கிளிக் செய்யவும். |
01:03 | இப்போது காண்பிக்கப்படும் gradient handle-களை கிளிக் செய்து சிவப்பு மற்றும் நீல gradient நிறங்களாக மாற்றவும். |
01:12 | செங்குத்தாக gradient-ஐ வைக்கவும். எனவே இப்போது gradientன் மேலே சிவப்பும் கீழே நீலமும் காட்டப்படும். |
01:21 | Selector tool - ஐ க்ளிக் செய்து Text-ஐ duplicate செய்ய Ctrl + D-ஐ அழுத்தவும் |
01:27 | Duplicate text -ஐ flip செய்ய keyboard -ல் V-ஐ அழுத்தவும். |
01:32 | Textஐ flip செய்ய நாம் Tool controls barல் உள்ள optionஐயும் பயன்படுத்த முடியும். |
01:39 | இப்போது, நாம் duplicated textஐ கண்ணாடி படம் போல் தோன்றும் வகையில் original textன் கீழே நகர்த்துவோம். |
01:46 | இப்போது Gradient tool-ஐ தேர்வு செய்து கீழுள்ள gradient handleஐ க்ளிக் செய்யவும். |
01:52 | மீண்டும் Fill and Stroke dialog boxக்கு வரவும். இங்கே நாம் Alpha value ஐ 0 ஆக மாற்றலாம். |
01:59 | நாம் bottom handle-ஐ மேல்நோக்கி சிறுது நகர்த்துவோம். |
02:05 | Selector toolன் மீது க்ளிக் செய்யவும். Opacityஐ 80 ஆக குறைக்கவும் பின் Enterஐ அழுத்தவும். |
02:12 | நம் reflected textமுடிவு பெற்றது . அதை நன்றாக பார்க்க அளவை சற்று சிறியதாக்கவும். |
02:20 | அடுத்து நாம் labeled textஐ உருவாக்க கற்றுக்கொள்வோம். |
02:23 | முதலில் , நாம் பச்சை நிறத்தில் ஒரு செவ்வகத்தை உருவாக்குவோம். Alphaன் மதிப்பு zero ஆக இருப்பதால், அதை தற்போது பார்க்க முடியாது. |
02:32 | அதை 255 ஆக, மாற்றி enter ஐ அழுத்தவும். |
02:36 | இப்போது , செவ்வகத்தின் மீது '“SPOKEN TUTORIAL என டைப் செய்யவும். |
02:43 | Selector tool-ஐ க்ளிக் செய்து textக்கு ஏற்றவாறு செவ்வகத்தின் அளவை மாற்றவும் |
02:48 | அடுத்து textஐ தேர்வு செய்யவும். இப்போது textஐ duplicate செய்ய Ctrl + Dஐ அழுத்தவும். |
02:54 | Duplicate text சரியாக original text-ன் மேலே உள்ளது. |
02:58 | Text-ன் நிறத்தை வெள்ளையாக மாற்றி, பின் Path menu ற்கு சென்று Object to path option-ஐ க்ளிக் செய்யவும். |
03:07 | இப்போது Object menuஐ க்ளிக் செய்து, பின்னர் Ungroup optionஐ க்ளிக் செய்யவும். |
03:12 | மீண்டும் Path menuவிற்குச் சென்று Union option-ஐ க்ளிக் செய்யவும். |
03:17 | Tool controls barல் Lower selection one step icon-ஐ க்ளிக் செய்யவும். |
03:23 | மீண்டும்Path மெனு சென்று இம்முறை Linked offset optionஐ க்ளிக் செய்யவும். |
03:30 | Text ன் மேலே தோன்றும் handle ஐ க்ளிக் செய்து, பின்னர் அவுட்லைனை பெரிதாக்க handle ஐ இழுக்கவும். |
03:37 | Selector toolஐ க்ளிக் செய்து, பின்னர் text ன் மீது க்ளிக் செய்து அதை நகர்த்தவும். |
03:43 | மற்றொரு text உருவாக்கப்பட்டதை கவனிக்கவும். text ஐ தேர்ந்தெடுத்து அதை நீக்கவும். |
03:49 | இப்போது அவுட்லைன் பகுதியை தேர்வு செய்து Nodes toolன் மீது க்ளிக் செய்யவும். |
03:53 | Tool controls barல் Convert selected object to path toolஐ க்ளிக் செய்யவும். |
03:58 | இப்போது நீங்கள் அவுட்லைனில் nodeகளை பார்க்க முடியும். இங்கு காட்டியவாறு, மத்தியில் இருக்கும் தேவையற்ற nodeகளை தேர்வு செய்து நீக்கவும். |
04:09 | Selector toolஐ க்ளிக் செய்து மீண்டும் textஐ அதன் அசல் நிலைக்கு நகர்த்தவும். |
04:14 | text ன் நிறத்தை பச்சையாக மாற்றவும். |
04:18 | அவுட்லைன் பகுதியை தேர்வு செய்து அதை duplicate செய்ய Ctrl + Dஐ அழுத்தவும். Duplicate அவுட்லைன் சரியாக originalன் மேலே உள்ளது என்பதை நினைவுகொள்ளவும். |
04:28 | கருப்பு நிறமாக மாற்றவும். |
04:31 | பின்னர் Tool controls barல் Lower selection one step iconஐ மூன்று முறை க்ளிக் செய்யவும். |
04:38 | இறுதியாக Fill and stroke dialog boxல் opacityஐ 60 ஆக குறைத்து blurஐ 7 ஆக அதிகரிக்கவும். |
04:47 | இதை செய்த பின், நாம் லேபிளிற்கு ஒரு hangerஐ உருவாக்குவோம். |
04:50 | '"Ellipse tool-ன் மீது கிளிக் செய்யவும். '" Ctrl key-ஐ அழுத்தி ஒரு வட்டத்தை செவ்வகத்தின் மேல் இடது பக்கத்தில் வரையும் போது, லேபிளின் மீது துளை உருவாகும். |
05:00 | வட்டத்தை duplicate செய்ய Ctrl + Dஐ அழுத்தவும். வட்டத்தை செய்வகத்தின் மற்றொரு முனைக்கு நகர்த்தவும். |
05:06 | அடுத்து Bezier toolஐ க்ளிக் செய்து இங்கு காட்டியவாறு ஒரு வளைந்த கோட்டை வரையவும் . |
05:13 | வரையப்பட்ட கோடு ஒரு hanger போல் இருக்க வேண்டும். |
05:16 | Fill and stroke dialog boxல் Stroke styleன் அகலத்தை 5 ஆக மாற்றவும். |
05:22 | இப்போது நம்முடைய labeled text தயாராக உள்ளது. நன்றாக பார்க்க சிறியதாக்கவும். |
05:30 | அடுத்து Inkscapeல் text caseஐ எவ்வாறு மாற்றலாம் என கற்போம். |
05:34 | Text toolஐ க்ளிக் செய்து , canvasல் alphabet களை டைப் செய்யவும். அனைத்து text களும் lower-caseல் இருப்பதை கவனிக்கவும். |
05:43 | இப்போது Extensions menuற்கு சென்று Text என்று பெயரிடப்பட்ட optionல் Change Case ஐ க்ளிக் செய்யவும். நீங்கள் சில options களை பார்ப்பீர்கள். |
05:52 | UPPERCASE optionஐ க்ளிக் செய்யவும். alphabetsன் Text case , upper-case ஆக மாறிவிட்டதை காணலாம். |
05:59 | மீண்டும் text-ன் மீது க்ளிக் செய்யவும். Extensions menuற்கு சென்று, Text optionல் Change Case’”-ஐ க்ளிக் செய்யவும். |
06:07 | இந்த முறை Random Case optionஐ தேர்வு செய்யவும். Text case ல் மாற்றத்தை காணலாம். |
06:13 | நீங்கள் உங்கள் மற்ற விருப்பங்களை முயற்சி செய்யலாம். |
06:16 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:19 | சுருங்க சொல்ல இந்த டுட்டோரியலில் நாம் உருவாக்க கற்றுக்கொண்டது: Reflected text, Labeled text மற்றும் Text-ன் caseஐ lowercase லிருந்து uppercase மற்றும் random-case க்கு மாற்றுவது. |
06:31 | பயிற்சியாக பின்வருவனவற்றை உருவாக்கவும். ‘”INKSCAPE’” என்ற reflected text ஐ உருவாக்கவும். |
06:37 | Inkscape என்ற text ஐ உருவாக்கி அதன் text case ஐ Flip caseஆக மாற்றவும் |
06:42 | நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
06:45 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும். |
06:51 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது |
06:58 | மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
07:01 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD, NMEICT மூலம் கிடைக்கிறது. |
07:06 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
07:10 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது மெஹ்தாஜ் குரல் கொடுத்தது IIT Bombay ல் இருந்து பிரியா. நன்றி. |