Difference between revisions of "PHP-and-MySQL/C4/User-Password-Change-Part-1/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 9: | Line 9: | ||
|password ஐ மாற்ற விரும்பும் user க்கு அந்த option ஐ எப்படி தருவது? | |password ஐ மாற்ற விரும்பும் user க்கு அந்த option ஐ எப்படி தருவது? | ||
|- | |- | ||
− | |0:13 | + | |0:13 |
|இதற்கு அதிக நேரம் தேவைப்படாது. 3 பகுதிகளில் முடித்துவிடலாம். | |இதற்கு அதிக நேரம் தேவைப்படாது. 3 பகுதிகளில் முடித்துவிடலாம். | ||
|- | |- |
Latest revision as of 15:58, 27 February 2017
Time | Narration |
---|---|
0:00 | இந்த tutorial லில், user எப்படி அவரது password ஐ மாற்றலாம் என காண்போம். |
0:08 | password ஐ மாற்ற விரும்பும் user க்கு அந்த option ஐ எப்படி தருவது? |
0:13 | இதற்கு அதிக நேரம் தேவைப்படாது. 3 பகுதிகளில் முடித்துவிடலாம். |
0:18 | user க்கு ஒரு form ஐ தரலாம். user தன் பழைய password ஐயும் அவரது புதிய password ஐ இரு முறையும் உள்ளிட வேண்டும். |
0:27 | அந்த பழைய password அதாவது database இல் இருப்பதை சோதிப்போம். |
0:31 | அவை encrypt ஆகியுள்ளது நினைவில் இருக்கிறதா? |
0:33 | பிழை ஏதுமில்லை என உறுதி செய்ய இரண்டு புதிய password களையும் ஒப்பிட்டு ஒத்துப்போவதை சோதிக்கலாம். |
0:39 | அடுத்து புதிய sql code களால் database ஐ update செய்யலாம். |
0:44 | முதலில் "session" ஐ என் "member" page இல் துவக்குகிறேன். "session_start" இங்கே உள்ளது. |
0:53 | அதை பக்கத்தின் உச்சிக்கு copy paste செய்கிறேன். ஆக நம் session துவங்கிவிட்டது, |
0:59 | "user" என்னும் variable ஐ நாம் பயன்படுத்த வேண்டும். அது இங்கே set செய்த session க்கு சமம். |
1:09 | முதலில் user... log in செய்திருப்பதை உறுதிசெய்யலாம். - இதுதான் நான் சொன்ன code. - அதன் பின் password ஐ மாற்றலாம் அல்லது மாற்ற அவர்களை அனுமதிக்கலாம். |
1:19 | இந்த "user" variable ஐ நம் "session" name ஆக இங்கே அமைக்கிறேன். |
1:24 | சரி, இப்போது சொல்வது “ user இருந்தால்”, password ஐ மாற்ற அனுமதிக்கலாம். இல்லையானால் page ஐ நீக்கலாம் மற்றும் சொல்வது “You must be logged in to change your password". |
1:41 | “User log in” க்கான block இதுவே. user log in செய்ததாக கொண்டு தொடரலாம். login ஐ உறுதி செய்த பின், அவர்கள் நிரப்ப ஒரு form ஐ கொடுக்கலாம். |
1:49 | நம் code ஐ இங்கே echo out செய்கிறேன். இதுவே நம் form. அது தானாக submit செய்து கொள்ளும் form. ஆகவே "change password dot php" க்கு தானாக செல்லும். form இங்கே முடிகிறது. |
2:14 | அது நாம் ஏற்கெனெவே இருக்கிற பக்கம். ஆகவே விவரங்களை ஆராய ஒரு சோதனை தேவை. |
2:21 | form இன் method POST. ஏனெனில் எந்த password தகவலும் URL க்கு போகக்கூடாது, |
2:30 | அடுத்து சில input box களை உருவாக்கலாம். முதலில் “old password:” அது password type இல்லை. ஆகவே entry மறைக்கப்படாது. ஆகவே input type "text" ஆகும். மேலும் name "oldpassword". |
2:48 | ஒரு paragraph break இடலாம். அடுத்து "New password:" input type "password" ஆக இருக்கட்டும். ஆகவே அது அனைவரிடமிருந்தும் மறைக்கப்படும். name “new password”. |
3:02 | இங்கே ஒரு line break இடலாம். இப்போது இந்த வாக்கியத்தை copy paste செய்து சில மாறுதல்கள் மட்டும் செய்யலாம். இங்கே label “Repeat new password” மற்றும் name "repeat new password" அதன் பின் ஒரு paragraph break. |
3:23 | கடைசியாக “submit" button தேவை. name "submit" . அது அழுத்தப்பட்டதா என சோதிப்போம். ஆம் எனில் அதன் value "Change password". |
3:33 | சரி, நம் பக்கத்துக்குப்போகலாம். password ஐ மாற்ற members’ page இல் ஒரு link ஐ இடுகிறேன். |
3:40 | இப்போதைக்கு, விவரங்களுடன் login செய்கிறேன். இப்போதைய password “abc மற்றும் username “Alex”. |
3:48 | login மீது சொடுக்கலாம். அது "welcome Alex" என்கிறது. இங்கே member page இருக்கிறது. session அமைக்கப்பட்டுவிட்டது. log out செய்ய வேண்டுமானால் log out செய்யலாம். ஆனால் நமக்கு password ஐ மாற்ற இன்னொரு option தேவை. |
4:01 | ஆகவே நம் "member dot php" page க்குப்போய் இன்னொரு link ஐ உருவாக்குவேன். |
4:08 | அது “Change password”. |
4:11 | இது இணைப்பது “change password dot php" க்கு. |
4:14 | ஆகவே refresh செய்ய இன்னொரு option தெரிகிறது. இங்கே சொடுக்க முன்னே உருவாக்கிய form கிடைக்கிறது. என் பழைய password ஐ இங்கே type செய்கிறேன். பின் புதிய password களை இங்கே இடுகிறேன். |
4:26 | "Change password" ஐ சொடுக்க ஒன்றுமே நடக்கவில்லை. ஆகவே இது submit ஆயிற்றா இல்லையா என சோதிக்க வேண்டும். இந்த கூடுதல் வரியை நீக்கலாம். |
4:38 | உருவாக்க வேண்டியது ஒரு If statement .... “if POST submit” அதன் பொருள் "user இந்த submit button ஐ அழுத்தினாரா?". name submit, ஆகவே submit இங்கே எழுதப்பட்டுள்ளது. |
4:52 | user submit செய்திருந்தால் நாம் password ஐ இங்கே மாற்றுவோம். |
4:59 | இல்லையானால் user submit செய்யவில்லை; ஆகவே இந்த code ஐ echo out செய்வோம். |
5:05 | user ஏற்கெனெவே submit செய்யவில்லையானால், இந்த form submit செய்வதற்காக அவருக்குத்தரப்படும். |
5:12 | சோதிக்கலாம். வேலை செய்கிறதா என பார்க்க “test” என echo out செய்யலாம். |
5:18 | மீண்டும் நிரப்பலாம். உண்மையில் நிரப்பக் கூட வேண்டாம். submit button ஐ சொடுக்கினால் போதும். “test” என கிடைக்கும் echo ... submit ஆனதை சொல்லுகிறது. |
5:34 | சரி. password மாற்றத்தை ஆரம்பிக்கலாம். இதை நீக்கலாம். மேலும் இங்கே சொல்வது “check fields”. |
5:40 | சில variable களை அமைக்க வேண்டும். நம் old password .. அது POST variable name “old password” க்கு சமம். அந்த பெயரை கீழே இங்கே form இல் கொடுத்து இருக்கிறோம். |
5:55 | மேலும் நாம் submit செய்யும் ஒவ்வொரு value க்கும் அதை திருப்பி இடுகிறேன். |
6:00 | அடுத்து “new password” மற்றும் “repeat new password”. நாம் இதை மாற்றினால் போதும். |
6:10 | இவை வேலை செய்வதை உறுதி செய்ய ... மற்றும் இதை எப்போதும் செய்யுங்கள் என பரிந்துரைக்கிறேன்... echo out “old password”, “new password” மற்றும்”repeat new password”. |
6:25 | form இருப்பதை சோதித்து, form submit ஆனதையும் சோதித்து, நம் variableகளை பெற்று, post variable களை variable name ஆக்குவோம். |
6:38 | box இல் type செய்ததை echo out செய்து எல்லாம் வேலை செய்கிறதா எனப்பார்க்கலாம். |
6:40 | என் பழைய password “abc” மற்றும் புதிய password “123”. "Change password" ஐ சொடுக்கினால் கிடைப்பது abc, 123 மற்றும் 123. |
6:52 | ஆகவே form தகவல் submit ஆகிவிட்டது. எழுத்துப் பிழைகள் ஏதுமில்லை. தைரியமாக user க்கு புதிய password அமைக்கும் வசதியை தரலாம். |
7:00 | இந்த tutorial ஐ இப்போது நிறுத்துகிறேன். அடுத்த பகுதியில் பழைய password ஐ database இல் உள்ளதுடன் ஒப்பிடுவதையும், புதியதுடன் மீண்டும் உள்ளிட்ட password ஒத்து போவதை சோதிப்பதும் பின் user’s password ஐ மாற்றுவதையும் பார்க்கலாம். |
7:24 | தமிழாக்கம் கடலுர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |