Difference between revisions of "Netbeans/C3/Connecting-to-a-MySQL-Database/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 436: | Line 436: | ||
|- | |- | ||
| 14:10 | | 14:10 | ||
− | |பயிற்சியாக, | + | |பயிற்சியாக, tableகளுடன் மற்றொரு உதாரண databaseஐ உருவாக்கவும் |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 14:15 | | 14:15 |
Revision as of 14:39, 27 February 2017
Time | Narration |
00:00 | வணக்கம், |
00:02 | 'MySQL Databaseக்கு இணைத்தல்' குறித்த டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:09 | MySQL server properties ஐ configure செய்தல் |
00:14 | MySQL server ஐ துவக்குதல் |
00:17 | databaseஐ உருவாக்கி இணைத்தல் |
00:20 | database tableகளை உருவாக்குதல், அதன் இரு methodகளை ஆய்ந்தறிதல்: |
00:26 | sql editorஐ பயன்படுத்துதல், |
00:29 | create table dialogueஐ பயன்படுத்துதல், |
00:33 | கடைசியாக SQL script ஐ இயக்குதல். |
00:37 | இந்த செயல்விளக்கத்திற்கு, நான் பயன்படுத்துவது லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 12.04, |
00:44 | மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1 |
00:48 | மேலும் தேவையான Java Development Kit (JDK) பதிப்பு 6 |
00:54 | மற்றும் MySQL database server. |
00:57 | இந்த டுடோரியலைக் கற்க உங்களுக்கு database management குறித்து தெரிந்திருக்க வேண்டும். |
01:03 | அதற்கு இந்த இணைப்பில் உள்ள PHP மற்றும் MySQL ஸ்போகன் டுடோரியல்களைக் காணவும். |
01:10 | இந்த டுடோரியலில் மற்ற standard programming terminologyகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. |
01:16 | இந்த டுடோரியல் Netbeans IDEல் இருந்து MySQL databaseக்கு இணைப்பு அமைப்பதை விளக்குகிறது |
01:24 | அதை இணைத்தப்பின் IDEன் Database Explorer ல் MySQL உடன் வேலைசெய்யலாம். |
01:31 | இப்போது IDEக்கு வருகிறேன். |
01:36 | MySQL RDBMSக்கான ஆதரவுடன் Netbeans IDE வருகிறது |
01:42 | Netbeansல் MySQL database serverஐ அனுகுவதற்கு முன் MySQL server properties ஐ configure செய்ய வேண்டும். |
01:51 | Services window ல் Databases nodeஐ ரைட் க்ளிக் செய்க. |
01:56 | Register MySQL Serverஐ தேர்ந்தெடுத்து க்ளிக் செய்ய MySQL server properties dialogue box திறக்கிறது. |
02:05 | server host name மற்றும் port சரிதானா என உறுதிசெய்க. |
02:10 | localhost ஐ முன்னிருப்பு server host name ஆக IDE உள்ளிட்டிருப்பதை கவனிக்கவும். |
02:18 | 3306 முன்னிருப்பு server port number. |
02:23 | Administrator Username காட்டப்படவில்லை எனில் அதை சேர்க்கவும் |
02:27 | என் கணினியில் Administrator username ஆனது root |
02:33 | Administrator passwordஐ உள்ளிடவும். |
02:36 | என் கணினிக்கு password ஏதும் இல்லை. |
02:40 | dialog boxன் மேலே Admin Properties tabஐ க்ளிக் செய்க. |
02:45 | இது MySQL serverஐ கட்டுப்படுத்துவதற்கான தகவல்களை உள்ளிட அனுமதிக்கிறது |
02:51 | Path/URL to admin tool: field ல், |
02:56 | உங்கள் MySQL Administration application ன் இடத்தை சேர்க்கவும். |
03:02 | என் கணினியில் அந்த இடம் /usr/bin/mysqladmin |
03:12 | Arguments field ல் admin toolக்கான ஏதேனும் argumentகளை டைப் செய்யவும். |
03:18 | இதையும் காலியாக விடலாம். |
03:22 | Path to start command: field ல் |
03:25 | MySQL start commandன் இடத்தை உள்ளிடிடவும். |
03:29 | என் கணினியில் அது /usr/bin/mysqld_safe |
03:38 | Arguments fieldல் start commandக்கான ஏதேனும் argumentகளை டைப் செய்யவும். |
03:42 | இங்கே, நான் டைப் செய்வது -u space root space start |
03:51 | Path to stop command: ல் |
03:54 | MySQL stop commandன் இடத்தை உள்ளிடவும். |
03:58 | இது பொதுவாக MySQL' installation directoryன் bin folder ல் mysqladminக்கான path ஆக இருக்கிறது. |
04:06 | என் கணினியில் அது /usr/bin/mysqladmin |
04:14 | command ஆனது mysqladmin எனில் Arguments fieldல் டைப் செய்க -u space root space stop. |
04:27 | முடிந்த பின், திரையில் காட்டப்படுவது போல Admin Properties tab இருக்க வேண்டும். |
04:33 | OKஐ க்ளிக் செய்க |
04:36 | உங்கள் கணினியில் MySQL database server இயங்கிக்கொண்டிருப்பதை உறுதி செய்க. |
04:42 | MySQL database server இணைக்கப்பட்டுள்ளதா என்பதை Service window ல் MySQL server node குறிக்கிறது. |
04:52 | அது இயங்குவதை உறுதிசெய்த பின், Databases >> MySQL server node ல் ரைட் க்ளிக் செய்து Connectஐ தேர்ந்தெடுக்கவும் |
05:05 | விரிக்கும் போது, MySQL server nodeல் இருக்கும் அனைத்து MySQL databaseகளையும் காட்டுகிறது |
05:13 | databaseகளை அணுக பொதுவான வழி SQL Editor மூலம் தொடர்புகொள்வதே |
05:19 | இதற்கு Netbeans ஒரு built-in SQL Editorஐ கொண்டுள்ளது. |
05:23 | அந்த connection node ஐ ரைட் க்ளிக் செய்து அதை அணுகலாம். |
05:29 | இப்போது SQL Editorஐ பயன்படுத்தி ஒரு புதிய உதாரண databaseஐ உருவாக்குவோம். |
05:34 | Services windowல், MySQL server node ல் ரைட் க்ளிக் செய்து Create Databaseஐ தேர்ந்தெடுக்கவும். |
05:44 | Create Database dialogue ல், புது databaseன் பெயரை டைப் செய்க |
05:50 | நான் அதை mynewdatabase என்கிறேன் |
05:56 | ஒரு userக்கு அனைத்து அனுமதிகளையும் கொடுக்கலாம். |
06:01 | முன்னிருப்பாக, குறிப்பிட்ட commandகளை செயல்படுத்த user க்குத்தான் அனுமதி உண்டு. |
06:08 | ஒரு குறிப்பிட்ட user க்கு இந்த அனுமதிகளைக் கொடுக்க இந்த drop-down list அனுமதிக்கிறது. |
06:13 | userகளுக்கு drop tablesஐ தவிர பெரும்பான்மையான அனுமதிகளைக் கொடுப்பது நல்ல பழக்கம். |
06:18 | userகளை அவர்களின் application மூலம் உருவாக்கப்பட்ட databaseகளை மட்டும் மாற்ற அனுமதிக்கவும். |
06:25 | இப்போதைக்கு, இந்த தேர்வில் குறிநீக்குவோம். |
06:30 | OK ஐ க்ளிக் செய்க |
06:34 | இப்போது tableகளை உருவாக்கி, அவற்றிற்கு dataஐ கொடுத்து, tableகளில் பராமரிக்கப்படும் data ஐ மாற்றுவோம். |
06:41 | mynewdatabase தற்சமயம் காலியாக உள்ளது. |
06:44 | tableகளில் data ஐ உள்ளிட முதல் வழியைக் காண்போம். |
06:48 | Database explorerல், mynewdatabase connection node ஐ விரிப்போம். |
06:58 | மூன்று துணை folderகள் உள்ளன: |
07:00 | Tables, Views மற்றும் Procedures. |
07:04 | Tables folderஐ ரைட் க்ளிக் செய்து Execute Commandஐ தேர்ந்தெடுக்கவும் |
07:11 | main window ல் SQL Editorல் காலி canvas திறக்கிறது. |
07:16 | இந்த SQL editorல் ஒரு எளிய query ஐ டைப் செய்வோம். |
07:30 | இப்போது SQL editor ல் ஒரு எளிய query ஐ டைப் செய்துள்ளேன். |
07:36 | இது நாம் உருவாக்கப்போகும் Counselor table ன் definition ஆகும். |
07:42 | இந்த queryஐ இயக்க, மேலே task bar ல் Run SQL icon ஐ ரைட் க்ளிக் செய்க. |
07:51 | அல்லது SQL Editorன் உள் ரைட் க்ளிக் செய்து Run Statementஐ தேர்ந்தெடுக்கவும் |
08:00 | IDE... database ல் Counselor table ஐ உருவாக்குகிறது |
08:04 | command வெற்றிகரமாக இயக்கப்பட்டது என்ற இந்த செய்தியை Output window ல் காணலாம், |
08:17 | இந்த மாற்றங்களை சரிபார்க்க Database Explorer ல் Tables node மீது ரைட் க்ளிக் செய்க. |
08:25 | Refreshஐ தேர்ந்தெடுக்கவும் |
08:28 | இது குறிப்பிட்ட database ன் நடப்பு நிலையை புதுப்பிக்கும் |
08:32 | Tables தேர்வின் கீழ் இப்போது புதிய Counselor table காட்டப்படுகிறது. |
08:40 | இந்த table nodeஐ விரிக்கும் போது, உருவாக்கப்பட்ட columnகளைக் காணலாம். |
08:46 | இப்போது tableகளில் data ஐ உள்ளிடுவதற்கான அடுத்த முறையைக் காண்போம், |
08:51 | அதாவது Create Table Dialog ஐ பயன்படுத்தி |
08:54 | Database Explorerல், Tables nodeல் ரைட் க்ளிக் செய்து Create Tableஐ தேர்ந்தெடுக்கவும் |
09:03 | Create Table dialogue திறக்கிறது. |
09:06 | Table name text fieldல் டைப் செய்க Subject |
09:13 | Add Column ஐ க்ளிக் செய்க |
09:16 | Add Column dialogue ல் Name field ல் id என டைப் செய்க. |
09:22 | data-type க்கு Type drop-down menu ல் இருந்து SMALLINTஐ தேர்ந்தெடுக்கவும். |
09:30 | Add Column dialog box ல் Primary Key checkboxஐ தேர்ந்தெடுக்கவும். |
09:35 | இது உங்கள் tableக்கு primary key ஐ குறிப்பிடுவதற்காக. |
09:39 | Key check boxஐ தேர்ந்தெடுக்கும்போது, Index மற்றும் Unique check boxகளும் தானாகவே தேர்வாகி; |
09:49 | Null check box தேர்வுநீக்கப்படுவதை கவனிக்கவும். |
09:53 | இது ஏனெனில் database ல் unique row ஐ கண்டறிய primary keyகள் பயன்படுகின்றன |
09:59 | OK ஐ க்ளிக் செய்க. |
10:03 | திரையில் காட்டப்படுவது போல மற்ற columnகளை சேர்க்க இதே முறையை பின்பற்றவும். |
10:09 | Subject என்ற table ஐ உருவாக்கியுள்ளோம் அது Name, Description, மற்றும் Counselor IDக்கான dataஐ சேமிக்கும் |
10:20 | OK ஐ க்ளிக் செய்க |
10:23 | database ல் SQL queryகளை இயக்குவதன் மூலம், database structureகளில் பராமரிக்கப்படும் data ஐ சேர்க்கலாம், மாற்றலாம் மற்றும் நீக்கலாம். |
10:32 | Counselor table க்கு ஒரு புது record ஐ சேர்ப்போம். |
10:35 | Tables node context menu ல் Execute Commandஐ தேர்ந்தெடுப்போம். |
10:43 | main windowல் ஒரு SQL Editor திறக்கிறது. |
10:47 | SQL Editorல், ஒரு எளிய query ஐ டைப் செய்வோம்: |
11:00 | இந்த queryஐ இயக்க, source editorன் உள் ரைட் க்ளிக் செய்து Run Statementஐ தேர்ந்தெடுக்கவும் |
11:07 | இப்போது tableக்கு அந்த புது record சேர்க்கப்பட்டதா என சோதிப்போம். |
11:12 | Counselor tableல் ரைட் க்ளிக் செய்து View Dataஐ தேர்ந்தெடுக்கவும் |
11:18 | main window ல் ஒரு புது SQL Editor திறக்கிறது. |
11:21 | table ல் இருந்து அனைத்து data ஐயும் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு query தானாவே உருவாக்கப்பட்டுள்ளது. |
11:27 | இந்த statement ன் முடிவு, workspaceன் கீழே table view ல் காட்டப்படுகிறது. |
11:41 | நாம் தற்போது கொடுத்த data புது row ல் சேர்க்கப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். |
11:46 | IDEல் ஒரு external SQL script ஐயும் இயக்கலாம் |
11:52 | செயல்விளக்கத்திற்காக ஒரு SQL query ஐ இங்கு கொண்டுள்ளேன். |
11:59 | சமீபத்தில் நாம் உருவாக்கியது போல, இந்த script இரு tableகளை உருவாக்கும். |
12:04 | அதாவது Counselor மற்றும் Subject |
12:09 | இந்த tableகளை இந்த script overwrite செய்யும் என்பதால், |
12:12 | ஏற்கனவே உள்ள இந்த இரு tableகளையும் நீக்குவோம். |
12:16 | tableகளை நீக்க, Counselor tableல் ரைட் க்ளிக் செய்து |
12:21 | Deleteஐ தேர்ந்தெடுக்கவும் |
12:24 | Confirm Object Deletion dialogue box ல் Yesஐ க்ளிக் செய்க. |
12:31 | Subject table க்கும் இதையே செய்யவும் |
12:38 | இப்போது உங்கள் கணினியில் ஏற்கனவே உள்ள ஒரு SQL query file ஐ திறக்கவும். |
12:43 | File menu ல், Open Fileஐ தேர்ந்தெடுத்து |
12:48 | அந்த file உள்ள இடத்திற்கு சென்று அதை திறக்கவும். |
12:54 | SQL editor ல் அந்த script திறக்கப்படுகிறது. |
12:59 | connectionல் mynewdatabase தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்க. |
13:03 | editor ன் மேலே toolbar ல் உள்ள connection drop-down ல் அதை சோதிக்கவும். |
13:13 | task barல் Run SQL buttonஐ க்ளிக் செய்க. |
13:17 | தேர்ந்தெடுக்கப்பட்ட databaseக்கு அந்த script இயக்கப்படுகிறது |
13:22 | mynewdatabase connection node ல் ரைட் க்ளிக் செய்து Refreshஐ தேர்ந்தெடுக்கவும் |
13:28 | இது குறிப்பிட்ட database ன் நடப்பு நிலையை database componentக்கு புதுப்பிக்கிறது |
13:34 | இப்போது இந்த table களில் ஏதேனும் ஒன்றில் ரைட் க்ளிக் செய்து View Dataஐ தேர்ந்தெடுக்கவும் |
13:41 | workspaceக்கு கீழே, புது tableகளில் உள்ள dataஐ காணலாம். |
13:52 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
13:54 | உங்கள் கணினியில் MySQL ஐ configure செய்தல் |
13:57 | IDE ல் இருந்து database server க்கு connectionஐ அமைத்தல் |
14:02 | data ஐ உருவாக்குதல் நீக்குதல் மாற்றுதல் |
14:06 | SQL queryகளை இயக்குதல். |
14:10 | பயிற்சியாக, tableகளுடன் மற்றொரு உதாரண databaseஐ உருவாக்கவும் |
14:15 | உங்கள் personal book library ஐ பராமரிக்க தேவையான dataஐ கொண்டு இந்த tableகளை நிரப்பவும் |
14:21 | பின் data ஐ காண இந்த SQL statementகளை இயக்கவும் |
14:29 | இதேபோலவே என் movie libraryன் தகவல்களை பராமரிக்கும் ஒரு database ஐ உருவாக்கியுள்ளேன். |
14:37 | நீங்கள் செய்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
14:44 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
14:48 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
14:51 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
14:56 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
15:01 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
15:04 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
15:10 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
15:15 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
15:20 | மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
15:27 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |