Difference between revisions of "Linux/C2/The-Linux-Environment/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 222: | Line 222: | ||
|அடிக்கடி சமீபத்தில் இயக்கிய ஒரு கமாண்டை மீண்டும் இயக்குகிறோம். இதற்கு முழு கமாண்டையும் மீண்டும் உள்ளிட வேண்டுமா? | |அடிக்கடி சமீபத்தில் இயக்கிய ஒரு கமாண்டை மீண்டும் இயக்குகிறோம். இதற்கு முழு கமாண்டையும் மீண்டும் உள்ளிட வேண்டுமா? | ||
|- | |- | ||
− | | | + | |09:22 |
|இல்லை, பல தீர்வுகள் உள்ளன. | |இல்லை, பல தீர்வுகள் உள்ளன. | ||
|- | |- |
Latest revision as of 12:51, 27 February 2017
Time | Narration |
---|---|
0:00 | லீனக்ஸ் என்விரான்மென்ட் மற்றும் அதை மாற்றுவது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இதில் தரப்படும் உதாரணங்களை செய்ய லீனக்ஸ் கணினி தேவை. ஆதர்சமாக உபுன்டு. |
00:13 | உபுன்டுவை இயக்குவது... அதன் சில அடிப்படை கமாண்ட்கள்... கோப்பு அமைப்புகள்... ஷெல் ஆகியவை தெரியும் என கொள்கிறேன் |
00:22 | ஒரு முறை மீள்பார்வை இட வேண்டுமானால் இதே தளத்தில் உள்ள மற்ற டிடோரியல்களை பாருங்கள். |
00:32 | இந்த டுடோரியலுக்கு உபுன்டு 10 .10 பயன்பட்டது. |
00:36 | லீனக்ஸ் case sensitive ஆனவை. மற்றபடி குறிப்பிட்டால் ஒழிய கமாண்ட்களில் எல்லாம் கீழ் நிலை எழுத்துக்களே. |
00:46 | லீனக்ஸ் என்விரான்மென்ட் என்பது ஆபரேடிங் சிஸ்டம் உங்களுடன் உறவாடுவது கமாண்ட்களுக்கு கீழ் படிவது உங்கள் செய்கைகளை புரிந்து கொள்வது ஆகியவற்றை நிர்ணயிக்கிறது. |
00:55 | ஷெல் அமைப்பை மாற்றுவதன் மூலம் தகுந்தபடி அமைத்துக்கொள்ளலாம். |
00:59 | ஷெல் இன் நடத்தையை ஷெல் வேரியபில்ஸ் நிர்ணயிக்கின்றன. |
01:04 | வேரியபில்ஸ் இரண்டு வகைப்படும். என்விரான்மென்ட் வேரியபில்ஸ். லோகல் வேரியபில்ஸ். |
01:12 | என்விரான்மென்ட் வேரியபில்ஸ் பயனரின் முழு என்விரான்மென்ட்டிலும் கிடைக்கும். |
01:19 | ஷெல் ஸ்க்ரிப்ட் இயக்குவது போன்ற சப் ஷெல்களிலும் இவை கிடைக்கும். |
01:24 | லோகல் வேரியபில்ஸ் பெயருக்கு ஏற்றாற்போல் குறைந்த அளவில் கிடைக்கும். |
01:31 | ஷெல் உருவாக்கிய சப் ஷெல்களுக்கு இவை கிடைக்கா. |
01:36 | இதில் என்விரான்மென்ட் வேரியபில்ஸ் பற்றி பேசுவோம். இவற்றின் மதிப்புகளைக் காண்பதைப் பார்க்கலாம். |
01:48 | நடப்பு ஷெல்லில் உள்ள எல்லா வேரியபில்களையும் காண ... |
01:53 | டைப் செய்க: செட் ஸ்பேஸ் செங்குத்து கோடு மோர். என்டர் செய்க |
02:00 | நடப்பு ஷெல்லில் உள்ள எல்லா வேரியபில்களையும் காணலாம், |
02:04 | உதாரணத்துக்கு: ஹோம் என்விரான்மென்ட் வேரியபிலை பாருங்கள். அதன் வேல்யுவையும் பாருங்கள். |
02:15 | பட்டியலில் மேலும் காண என்டர் செய்க. வெளியேற க்யூ ஐ அழுத்தவும். |
02:21 | பல பக்க பட்டியலை வெளியிடும் வகையில் செட் கமாண்டின் அவுட்புட் மோர் என்பதற்கு பைப்லைன் செய்யப்பட்டது. |
02:38 | என்விரான்மென்ட் வேரியபில்களை மட்டும் காண கமாண்ட் ஈஎன்வி. |
02:45 | டைப் செய்க: ஈஎன்வி ஸ்பேஸ் செங்குத்து கோடு மோர். என்டர் செய்க. |
02:52 | உதாரணத்துக்கு, ஷெல் வேரியபில்களின் மதிப்பு ச்லாஷ் பின்[bin] ச்லாஷ் பாஷ் என்பதை கவனிக்கவும். |
03:00 | மீண்டும் வெளியேற க்யூ விசையை அழுத்தவும். |
03:07 | இன்னும் முக்கியமான என்விரான்மென்ட் வேரியபில்களை காணலாம். |
03:11 | மாதிரி இயக்கங்களுக்கு எல்லாம் பாஷ் ஷெல்லை பயன்படுத்துவோம். |
03:15 | ஷெல்கள் ஒவ்வொன்றும் கொஞ்சம் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளன. |
03:19 | ஒரு வேரியபில் என்ன உண்மையில் வைத்துள்ளது என அறிய டாலர் குறியை முன்னே சேர்க்க வேண்டும். அத்துடன் எகோ கமாண்டை சேர்க்க வேண்டும். |
03:30 | பார்க்கப்போகும் முதல் என்விரான்மென்ட் வேரியபில் ஷெல். |
03:35 | அது நடப்பு ஷெல்லின் பெயரை வைத்துள்ளது. |
03:37 | ஷெல் வேரியபிளின் வேல்யுவை காண. எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் எஸ்ஹெச்இஎல்எல் shell. என்டர் செய்க. |
03:55 | ஸ்லாஷ் பின் ஸ்லாஷ் பாஷ். இதுவே நாம் பயன்படுத்தும் ஷெல் ஆகும். |
04:02 | அடுத்த வேரியபில் ஹோம். |
04:05 | சாதாரணமாக உள் நுழையும் போது யூசர் பெயரில் உள்ள ஒரு டிரக்டரியில் சேர்த்துவிடும். |
04:11 | இது ஹோம் டிரக்டரி எனப்படும். அதுவே ஹோம் வேரியபில் இல் கிடைப்பது. |
04:17 | இதன் வேல்யுவை காண எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் ஹெச்ஓஎம்இ home. என்டர் செய்க. |
04:29 | அடுத்த என்விரான்மென்ட் வேரியபில் பாத்[PATH] |
04:32 | இது செயலாக்க வேண்டிய கமாண்ட்களுக்காக ஷெல் தேட வேண்டிய டிரக்டரிகளின் நிச்சய பாதை. |
04:40 | இதன் வேல்யுவை காணலாம். |
04:43 | மீண்டும் உள்ளிடுக. எகோ ஸ்பேஸ் டாலர் - மேல் நிலை எழுத்துக்களில் பிஏடிஹெச்[PATH] |
04:51 | என் கணினியில் அவை இப்படி உள்ளன.ச்லாஷ் யூசர் ச்லாஷ் லோகல் ச்லாஷ் எஸ்பின்[sbin]; ச்லாஷ் யூசர் ச்லாஷ் லோகல் ச்லாஷ் பின்[bin]; ச்லாஷ் யூசர் ச்லாஷ் எஸ்பின்[sbin]; ச்லாஷ் யூசர் ச்லாஷ் பின்[bin] |
05:04 | இது கணினிக்கு கணினி வேறுபடலாம். |
05:07 | அது கோலன் டிலிமிடரால் பிரிக்கப்பட்ட டிரக்டரிகளின் பட்டியல். இந்த வரிசையில்தான் ஷெல் செயலாக்க வேண்டிய கமாண்டை தேடும். |
05:18 | வேண்டிய டிரக்டரியை இந்த பட்டியலில் சேர்க்கலாம். அப்போது அதுவும் தேடப்படும். |
05:25 | அதற்கு டைப் செய்க |
5:29 | மேல் நிலை எழுத்தில் பிஏடிஹெச்[PATH] ஈக்வல்டு டாலர் மீண்டும் மேல் நிலை எழுத்தில் பிஏடிஹெச்[PATH] கோலன் ஸ்லாஷ் ஹோம் ஸ்லாஷ் பின்னர் ஹோம் டிரக்டரியின் பெயர். என்டர் செய்க. |
05:54 | இப்போது பாத் வேல்யுவை எகோ செய்தால் |
06:04 | நம் டிரக்டரி பாத் வேரியபில்களில் சேர்க்கப்பட்டுள்ளதை காணலாம். |
06:10 | இங்கு அந்த டிரக்டரி உள்ளதை பாருங்கள். |
06:16 | இன்னொரு சுவாரசியமான வேரியபில் லாக்நேம். |
06:20 | நடப்பில் செயலாக உள்ள யூசரை இது கொண்டுள்ளது. |
06:24 | இதன் வேல்யுவை காண எகோ ஸ்பேஸ் டாலர் மேல் நிலை எழுத்தில் லாக்நேம். |
06:35 | டெர்மினலை நாம் திறக்கும் போது டாலர் குறியை பார்க்கிறோம். இதை ஒட்டிதான் கமாண்ட்களை டைப் செய்கிறோம். |
06:42 | இதுவே பிரைமரி ப்ராம்ப்ட் ஸ்டிரிங். இதன் என்விரான்மென்ட் வேரியபில்களின் பிரதிநிதி பிஎஸ்ஒன்று[PS1] |
06:47 | இரண்டாம் ப்ராம்ப்ட் ஸ்டிரிங்கும் உள்ளது. |
06:50 | உள்ளிடும் கமாண்ட் மிக நீளமாக போய் அடுத்த வரிக்கு செல்ல நேரிட்டால் வல அம்புக்குறியை ப்ராம்ப்ட் இடத்தில் பார்க்கலாம். |
07:00 | இது இரண்டாம் ப்ராம்ப்ட் ஸ்டிரிங். இதன் என்விரான்மென்ட் வேரியபில்களின் பிரதிநிதி பிஎஸ் இரண்டு[PS2]. |
07:05 | இரண்டாம் ப்ராம்ப்டின் மதிப்பைஅறிய உள்ளிடுக: எகோ ஸ்பேஸ் டாலர் பிஎஸ் இரண்டு. என்டரை தட்டுவோம். |
07:20 | நம் முதன்மை ப்ராம்ப்ட் ஸ்டிரிங் ஐ அட் தெ ரேட் என்னும் குறியாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம். |
07:28 | இதற்கு உள்ளிடுக: மேலெழுத்தில் பிஎஸ்ஒன்று ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் அட் தெ ரேட். என்டரை தட்டுவோம். |
07:41 | இப்போது டாலர் குறிக்கு பதில் அட் தெ ரேட் ஐ காணலாம். |
07:50 | இப்போது ப்ராம்ப்டில் நமது பெயர் வரும்படி செய்யலாம். |
07:56 | உள்ளிடுக: பிஎஸ்1 ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் டாலர் லாக்னேம். என்டரை தட்டுவோம். |
08:12 | இப்போது ப்ராம்ப்டில் என் பெயர் இருக்கிறது. |
08:16 | மீண்டும் பழையபடி ஆக்க பிஎஸ்1 ஈக்வல்டு மேற்கோள்களுக்குள் டாலர். என்டரை தட்டுவோம் |
08:28 | பல என்விரான்மென்ட் வேரியபில்களுக்கு நாம் வேல்யுகளை தந்துள்ளோம். |
08:32 | ஆனால் மாறுதல்கள் எல்லாமே நடப்பு அமர்வுக்குத்தான் என்பதை நினைவு கொள்க. |
08:37 | உதாரணத்துக்கு ஒரு டிரக்டரியை பாத் இல் சேர்த்தோம். |
08:40 | டெர்மினலை மூடிவிட்டு திறந்து அல்லது முற்றிலும் புதிய டெர்மினலை திறந்து, பாத் வேரியபில்களின் வேல்யுவை எகோ செய்து பார்த்தால். |
09:00 | அத்தனை மாறுதல்களும் போய்விட்டன என காணலாம் |
09:05 | இந்த மாறுதல்களை நிரந்தரமாக்குவதே இன்னொரு அட்வான்ஸ்ட் டுடோரியலுக்கான பொருளாகும். |
09:13 | அடிக்கடி சமீபத்தில் இயக்கிய ஒரு கமாண்டை மீண்டும் இயக்குகிறோம். இதற்கு முழு கமாண்டையும் மீண்டும் உள்ளிட வேண்டுமா? |
09:22 | இல்லை, பல தீர்வுகள் உள்ளன. |
09:26 | முதலில் மேல் நோக்கு அம்பு குறைஅழுத்தினால் கடைசியாக உள்ளிட்ட கமாண்டை காணலாம். |
09:33 | அழுத்திக்கொண்டே இருக்க முந்தைய கமாண்ட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும். |
09:37 | பின் செல்ல கீழ் நோக்கிய அம்புக்குறி விசையை அழுத்தலாம். |
09:42 | ஆனால் இப்படி போவது கொஞ்சம் சலிப்பான விஷயம். இதைக்காட்டிலும் நல்ல தேர்வு ஹிஸ்டரி கமாண்ட். |
09:52 | ஹிஸ்டரி என டைப் செய்து ... |
09:58 | உள்ளிடுங்கள். முன்னே இட்ட கமாண்ட்களின் பட்டியல் தென் படும். |
10:04 | பெரிய பட்டியல் வேண்டாம். கடைசி பத்து கமாண்ட்கள் போதுமெனில் ... |
10:08 | ஹிஸ்டரி ஸ்பேஸ் 10 என டைப் செய்து உள்ளிடுங்கள். |
10:20 | இதில் ஒவ்வொரு முன் இட்ட கமாண்டுக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்பட்டுள்ளது. |
10:27 | ஏதேனும் ஒரு கமாண்டை திரும்பவும் தட்டச்ச... |
10:32 | ஆச்சரிய குறியை டைப் செய்து கமாண்டின் எண்ணை உள்ளிடுக. உதாரணமாக என் பட்டியலில் ஆச்சரியக்குறி 442 என்பது எகோ ஸ்பேஸ் டாலர் பாத் கமாண்டை இயக்கும் |
10:51 | கடைசி கமாண்ட்க்கு வெறும் இரண்டு ஆச்சரியக்குறியை உள்ளிட்டால் போதும்! |
11:03 | அடுத்து பார்க்ககூடியது டில்டே சப்ஸ்டிடுஷன். இந்த டில்டே குறி ஹோம் டிரக்டரிக்கு சுருக்கு வழி. |
11:12 | உதாரணமாக ஹோம் டிரக்டரியில் டெஸ்ட்ட்ரீ என்று ஒரு டிரக்டரி இருப்பதாக கொள்வோம். இப்போது சிடி ஸ்பேஸ் டில்டே ச்லாஷ் டெஸ்ட்ட்ரீ என உள்ளிட்டு அங்கு சென்று விடலாம். |
11:25 | நடப்பு வொர்கிங் டிரக்டரிக்கும் கடைசியாக வேலை செய்த டிரக்டரிக்கும் சிடி டில்டே மைனஸ் அல்லது சிடி மைனஸ் கமாண்ட் ஆல் முன்னும் பின்னும் செல்லலாம். |
11:35 | உதாரணமாக இப்போது டெஸ்ட்ட்ரீ டிரக்டரியில் இருக்கிறோம். கடைசியாக நாம் இருந்தது ஹோம் டிரக்டரி. |
11:41 | சிடி ஸ்பேஸ் மைனஸ் என உள்ளிட்டு ஹோம் டிரக்டரிக்கு சென்று விட்டோம். |
11:47 | அதையே மீண்டும் இயக்க டெஸ்ட்ட்ரீ டிரக்டரிக்கு சென்றுவிட்டோம். |
11:55 | கடைசியாக பார்க்கப்போகும் கமாண்ட் அலையஸ் கமாண்ட். |
11:59 | மீண்டும் மீண்டும் இயக்க வேண்டிய நீளமான கமாண்ட் இருப்பதாக கொள்வோம். |
12:04 | இதற்கு ஒரு சிறிய மாற்று பெயரிட்டு கமாண்டை இயக்க இதை பயன்படுத்திக்கொள்ளலாம். |
12:11 | டிரக்டரி அடுக்கு மிகபெரியதாக இருந்து இசை டிரக்டரிக்கு செல்ல பாதை பெரியது எனில் அலையஸ் ஐ உருவாக்கலாம். |
12:20 | உள்ளிடுக: அலையஸ் ஸ்பேஸ் சிடிம்யுசிக் (cdmusic) ஈக்வல்டு இரட்டை மேற்கோள்களில் சிடி ஸ்பேஸ் ச்லாஷ் ஹோம் ச்லாஷ் எஆர்சி(arc) ச்லாஷ் பைல்ஸ்[files] ச்லாஷ் என்டர்டெய்ன்மென்ட் ச்லாஷ் ம்யூசிக். |
12:47 | இப்போது இசை டிரக்டரிக்கு போக நினைக்கும் போதெல்லாம் சிடிம்யுசிக் என்று எழுதி உள்ளிட்டால் போதும்! |
12:55 | இப்போது ம்யூசிக் டிரக்டரியில் இருக்கிறோம். |
12:58 | சிடி ஸ்பேஸ் மைனஸ் என உள்ளிட்டு முந்தைய நடப்பு டிரக்டரிக்கு போகலாம். |
13:08 | இந்த அலையஸ் அமைப்பை நீக்க அன்அலையஸ் ஸ்பேஸ் சிடிம்யுசிக் என எழுதி உள்ளிடலாம். |
13:20 | இப்போது மீண்டும் சிடிம்யுசிக் என டெர்மினலில் கமாண்ட் இட்டால் கமாண்டை காணவில்லை என்று பிழை செய்திதான் வரும். |
13:30 | நடப்பு டிரக்டரியில் இரண்டு கோப்புகள் டெஸ்ட்1 டெஸ்ட்2 என இருப்பதாக கொள்ளலாம். |
13:38 | ஆர்எம் டெஸ்ட்1 என உள்ளிட்டால் டெஸ்ட்1 டிரக்டரி மௌனமாக நீக்கப்படும். |
13:45 | இதனுடன் ஹைபன் ஐ சேர்த்தால் நீக்கல் செயல் இன்டராக்டிவ் செயலாகிவிடும். |
13:52 | ஒரு அலையஸ் ஐ அமைக்கலாம். அலையஸ் ஈக்வல்டு, மேற்கோள்களில் ஆர்எம் ஸ்பேஸ் ஹைபன் ஐ. |
14:03 | ஆர்எம் ஐ இயக்கினால் உண்மையில் ஆர்எம் ஸ்பேஸ் ஹைபன் ஐ தான் இயங்கும். |
14:13 | டெஸ்ட்1 மௌனமாக நீக்கப்பட்டாலும் டெஸ்ட்2 ஐ நீக்குமுன் கணினி உறுதிபடுத்திக்கொண்டது. |
14:20 | இதில் என்விரான்மென்ட் வேரியபில்ஸ், ஹிஸ்டரி, அலையஸ் ஆகியன பார்த்தோம். |
14:25 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது |
14:28 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
14:36 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
14:42 | மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி |