Difference between revisions of "Inkscape/C2/Basics-of-Bezier-Tool/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 3: | Line 3: | ||
| Narration | | Narration | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:01 |
|'''Inkscape'''ல் “'''Bezier toolன் அடிப்படைகள்'''” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | |'''Inkscape'''ல் “'''Bezier toolன் அடிப்படைகள்'''” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | ||
|- | |- | ||
Line 359: | Line 359: | ||
| 10:29 | | 10:29 | ||
| அவற்றை நீங்களே செய்து பார்க்கலாம். | | அவற்றை நீங்களே செய்து பார்க்கலாம். | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:34 | | 10:34 | ||
− | | இந்த டுடோரியலில் நாம் கற்றது | + | | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது |
|- | |- | ||
| 10:37 | | 10:37 |
Revision as of 14:18, 23 February 2017
Time | Narration |
00:01 | Inkscapeல் “Bezier toolன் அடிப்படைகள்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் கற்க போவது |
00:08 | நேர்க்கோடுகள் மற்றும் மூடிய வடிவங்களை வரைதல் |
00:11 | வளைந்த கோடுகளை வரைதல் |
0013 | nodeகளை சேர்த்தல், மாற்றுதல் மற்றும் நீக்குதல். |
00:15 | இந்த டுடோரியலுக்கு பயன்படுத்துவது |
00:18 | Ubuntu Linux 12.04 |
00:21 | Inkscape 0.48.4 |
00:24 | அனைத்து toolகளையும் விளக்க ஏதுவாக அதிக resolution modeல் இந்த டுடோரியலை பதிவு செய்கிறேன். |
00:32 | Inkscapeஐ திறப்போம் |
00:35 | முதலில் Bezier tool ஐ பயன்படுத்தி ஒரு நேர்க்கோட்டை உருவாக்க கற்போம் |
00:39 | Pencil toolக்கு கீழே Bezier tool உள்ளது |
00:42 | அதை க்ளிக் செய்வோம். |
00:44 | மேல் இடப்பக்கம் Tool controls bar ல் உள்ள 4 தேர்வுகளைக் காணவும். |
00:48 | bezier curveஐ வரைவதில் 4 முறைகள் உள்ளன. |
00:51 | முன்னிருப்பாக, Create regular bezier path தேர்வு செயலில் உள்ளது. |
00:57 | canvas ல் க்ளிக் செய்து cursorஐ மற்றொரு பக்கமாக நகர்த்தவும். |
01:01 | மீண்டும் க்ளிக் செய்க. வரையப்பட்ட கோடு பச்சை நிறத்தில் இருப்பதைக் காண்க. |
01:07 | கோட்டை முடிக்க இப்போது right-click செய்க. |
01:11 | கோட்டின் இரு முடிவு புள்ளிகளும் nodeகள் எனப்படும் அவை பற்றி பின்னர் காண்போம். |
00:17 | அடுத்து, ஒரு முக்கோணத்தை வரைவோம். |
01:21 | முதலில் ஒரு சாய்க்கோட்டை வரைவோம். மீண்டும் க்ளிக் செய்து அந்த கோணத்தில் மற்றொரு கோட்டை வரைவோம். |
01:27 | இப்போது முக்கோணத்தை முடிக்க மீண்டும் க்ளிக் செய்து மூன்றாம் கோட்டை வரைந்து ஆரம்ப node ல் அதை இணைக்கவும். |
01:34 | அடுத்து, bezier toolஐ பயன்படுத்தி ஒரு வளைந்த கோட்டை வரைவோம் |
01:38 | ஒரு நேர்க்கோட்டை வரைய canvasல் க்ளிக் செய்க. மீண்டும் க்ளிக் செய்து அப்படியே நிறுத்தி cursorஐ இழுத்து ஒரு வளைவை வரையவும். |
01:46 | வளைவை முடிக்க ரைட் க்ளிக் செய்க. |
01:48 | இதேபோல, canvasல் மேலும் பல வளைவுகளை வரையவும். |
01:55 | இந்த படிகளை நினைவுகொள்க- க்ளிக் செய்து நேர்க்கோட்டை வரையவும். |
01:59 | மீண்டும் க்ளிக் செய்து, நிறுத்தி வளைவை உருவாக்க இழுக்கவும். |
02:03 | பின் வளைவை முடிக்க ரைட் க்ளிக் செய்யவும். |
02:06 | மேலும் செல்வதற்கு முன் Ctrl + Aஐ அழுத்தி பின் canvas ஐ துடைக்கவும். |
02:11 | அடுத்து ஒரு மூடிய வளைவுப் பாதையை உருவாக்க கற்போம். |
02:15 | முதலில் canvasல் ஒரு வளைவுக் கோட்டை வரைவோம். |
02:18 | பின் mouseஐ விடுவித்து வளைவு கோட்டின் முடிவு nodeல் இருந்து cursor ஐ சற்று விலக்கவும். |
02:23 | சிவப்பு நிற வளைவு பாதையைக் காண்கிறோம். |
02:27 | மீண்டும் க்ளிக் செய்து cursorஐ நகர்த்தினால், சிவப்பு நிற நேர் பாதையைக் காணலாம். இதை வளைக்க க்ளிக் செய்து இழுக்கவும். |
02:36 | மீண்டும் கடைசி nodeல் நாம் நகர்த்துகையில் கோடு வளைகிறது. |
02:41 | மீண்டும் க்ளிக் செய்து ஒரு சிவப்பு நிற நேர் பாதையைக் காண்கிறோம். நேர் கோட்டை வளைக்க க்ளிக் செய்து இழுக்கவும் |
02:50 | மீண்டும் முடிவு nodeல் நாம் நகர்த்துகையில் கோடு வளைகிறது. cursorஐ நகர்த்தி ஆரம்ப nodeக்கு சென்று பாதையை மூடவும். |
02:59 | Tool controls barக்கு செல்க modeன் இரண்டாம் icon ஐ க்ளிக் செய்க. இது சுழல் பாதைகள் மற்றும் ஒழுங்கற்ற வடிவங்களை உருவாக்க உதவுகிறது. |
03:08 | சில ஒழுங்கற்ற வளைவுகளை வரைந்து பாதையை மூடவும். |
03:15 | அது நெருங்கிய சுழல் வடிவமாக மாறுவதைக் காண்க. இப்போது canvasஐ துடைக்கிறேன். |
03:22 | மூன்றாம் icon நேர்க்கோடுகளை மட்டும் உருவாக்குகிறது. அதை க்ளிக் செய்து canvas ல் கோடுகளை வரையவும் |
03:29 | இந்த modeல் வளைந்த கோடுகளை வரைய முடியாது என்பதைக் காண்க. |
03:32 | நேரான பக்கங்களைக் கொண்ட முக்கோணங்கள் அல்லது பலகோணங்களை வரையலாம். |
03:40 | கடைசி iconஐ க்ளிக் செய்து canvasல் வரைக |
03:44 | இந்த modeல், இணை மற்றும் செங்குத்து கோடுகளை மட்டும் வரையலாம் அதாவது செங்குத்து அல்லது கிடைமட்ட கோடுகள். |
03:52 | எனவே, இந்த modeல் சதுரங்கள் மற்றும் செவ்வகங்களை வரையலாம். |
03:58 | வரைந்த அனைத்து வடிவங்களையும் நீக்குகிறேன். |
04:02 | ஒரு குறிப்பிட்ட வடிவில் கோடுகள் அல்லது வளைவுகளை வரைய Shape தேர்வு உதவுகிறது. |
04:07 | drop down buttonஐ க்ளிக் செய்க. |
04:09 | இங்கே 5 தேர்வுகள் உள்ளன- None, Triangle in, Triangle out, Ellipse, From clipboard. |
04:18 | முதல் தேர்வு None எந்த effectஉம் கொடுக்காது. எனவே Triangle in தேர்வுக்கு செல்வோம் |
04:25 | அதை க்ளிக் செய்து canvasல் ஒரு கோட்டை வரைக |
04:28 | அந்த கோடு ஒரு முக்கோண வடிவமாக உட்புறமாக மாறுகிறது. |
04:34 | அடுத்து Triangle out ஐ க்ளிக் செய்து canvasல் ஒரு கோட்டை வரைக. |
04:39 | இப்போது முக்கோண வடிவம் வெளிப்புறமாக உருவாக்கப்படுகிறது. |
04:43 | Ellipseஐ க்ளிக் செய்து ஒரு கோட்டை வரைக. |
04:47 | கோடு நீள்வட்டமாக இருப்பதைக் காண்க. |
04:50 | கடைசி தேர்வான From clipboard பற்றி பின்னர் அறிவோம். |
04:56 | இப்போது, nodeகளை சேர்க்க, மாற்ற மற்றும் நீக்க கற்போம். |
05:00 | அதை Node tool மூலம் செய்யலாம் |
05:03 | canvasல் கோடுகளை நீக்கவும் |
05:06 | Tool controls barக்கு சென்று Modeஐ regular path எனவும் Shape ஐ None எனவும் மாற்றுக |
05:13 | canvasக்கு வந்து ஒரு கை வடிவத்தை வரைவோம். |
05:23 | இப்போது Node toolஐ க்ளிக் செய்க |
05:26 | இந்த வடிவத்தின் அனைத்து nodeகளும் தோன்றுவதைக் காண்க. |
05:30 | இப்போது Tool Controls barஐ கவனிக்கவும் |
05:33 | இங்கே முதல் 6 iconகள், nodeகள் மற்றும் பாதைகளை சேர்க்கவும் நீக்குவும் உதவுகின்றன |
05:38 | சரியாக புரிந்துகொள்ள அதனதன் tool tipஐ காணவும். |
05:41 | ஏதேனும் ஒரு segment ல் க்ளிக் செய்து இரு nodeகளும் நீலநிறமாவதைக் காணவும். |
05:48 | பின் Add node தேர்வை க்ளிக் செய்க. |
05:52 | தேர்ந்தெடுந்தெடுக்கப்பட்ட segmentன் nodeகளுக்கு மையத்தில் ஒரு புதிய node சேர்க்கப்பட்டிருப்பதைக் காணவும். |
05:58 | இப்போது சிறிய segmentஐ தேர்ந்தெடுத்து முன்புபோல செய்யவும். |
06:04 | சிறிய segmentன் மையப்புள்ளியில் ஒரு புது node சேர்க்கப்படுவதைக் காணலாம். |
06:10 | புது nodeஐ தேர்ந்தெடுக்கவும். |
06:13 | Delete node தேர்வை க்ளிக் செய்க. அந்த node நீக்கப்படுகிறது. |
06:18 | கை வடிவத்தின் ஏதேனும் ஒரு node ஐ க்ளிக் செய்க. |
06:21 | bezier handleஐ காண Tool controls barன் கடைசி இரண்டாம் iconஐ க்ளிக் செய்க |
06:27 | தேர்ந்தெடுக்கப்பட்ட segmentக்கான bezier handleகள் இப்போது தெரிகின்றன. |
06:32 | இல்லையெனில், அந்த segmentஐ க்ளிக் செய்து mouseஐ விடுவிக்காமல், அதை சற்று நகர்த்தவும். |
06:37 | segment வளைந்து bezier handleகள் இப்போது தெரியவரும். |
06:41 | தேர்ந்தெடுக்கப்பட்ட nodeஐ அளவுமாற்றவும் சுழற்றவும் handleகளை க்ளிக் செய்யவும். |
06:45 | இதேபோல, மற்ற nodeகளையும் மாற்றவும். |
07:04 | nodeகளை இணைக்க அடுத்த icon பயன்படுகிறது |
07:07 | ஆட்காட்டி விரலில் ஒரு node கூடுதலாக இருப்பதைக் காண்க. |
07:11 | அந்த கூடுதல் nodeஐயும் மேல் node ஐயும் Shift key மூலம் தேர்ந்தெடுக்கவும். |
07:18 | இப்போது join node iconஐ க்ளிக் செய்க. nodeகள் இப்போது இணைந்திருப்பதைக் காணலாம். |
07:25 | அடுத்த icon தேர்ந்தெடுக்கப்பட்ட nodeகளில் பாதையை உடைக்க உதவுகிறது. |
07:29 | கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு இடையே இணைப்பை உடைப்போம். |
07:33 | எனவே அவற்றின் இணைப்பு nodeஐ தேர்ந்தெடுத்து break path iconஐ க்ளிக் செய்க. |
07:40 | அந்த node ஐ தேர்வுநீக்கி மீண்டும் அதை தேர்ந்தெடுத்து சற்று நகர்த்தவும். |
07:46 | பாதை உடைக்கப்பட்டு nodeகள் இரு தனித்தனி nodeகளாக இருப்பதைக் காணலாம். |
07:53 | அவற்றை இணைக்க, அந்த இரு nodeகளையும் தேர்ந்தெடுத்து Tool controls barல் join selected end-nodes icon ஐ க்ளிக் செய்க |
08:03 | அந்த இரு nodeகளுக்கும் இடையே ஒரு பாதை உருவாக்கப்படுவதைக் காண்க |
08:08 | பாதை அல்லது segmentஐ நீக்க அடுத்த icon அதாவது Delete segment iconஐ க்ளிக் செய்க. பாதை நீக்கப்படுகிறது. |
08:17 | இந்த செயலை undo செய்ய Ctrl + Zஐ அழுத்துக |
08:20 | இந்த கையை ஒரு ஓரமாக வைக்கவும். Node tool ஐ மீண்டும் க்ளிக் செய்க. |
08:26 | Tool controls barல் உள்ள அடுத்த 4 iconகளை பயன்படுத்த கற்போம் |
08:30 | தேர்ந்தெடுக்கப்பட்ட nodeகளை மாற்ற இந்த iconகள் உதவுகின்றன. |
08:34 | Bezier tool ஐ பயன்படுத்தி ஒரு தலைகீழ் U வடிவத்தை வரைக. Node toolல் க்ளிக் செய்க இந்த மூன்று nodeகளை கவனிக்கவும் |
08:49 | மேல் nodeஐ தேர்ந்தெடுத்து Tool controls barல் Make selected nodes corner iconஐ க்ளிக் செய்க |
08:55 | இதை அது corner node ஆக்கும். |
08:58 | bezier handleகளை க்ளிக் செய்து அவற்றை மேலும் கீழும் நகர்த்தி மாற்றத்தைக் காணவும். |
09:03 | nodeஐ மிருதுவாக்க அடுத்த iconஐ க்ளிக் செய்க. வடிவத்தில் மாற்றத்தைக் கவனிக்கவும். |
09:11 | node ஐ சமச்சீராக்கும் அடுத்த iconஐ க்ளிக் செய்க. |
09:16 | nodeஐ தானாக மிருதுவாக்கும் அடுத்த iconஐ க்ளிக் செய்க. |
09:20 | அடுத்த இரு iconகள் segmentகளில் மட்டும் வேலை செய்யும். எனவே, U வடிவத்தின் இடப்பக்க segmentஐ தேர்ந்தெடுத்து முதல் iconஐ க்ளிக் செய்க. |
09:30 | tool tip சொல்வது போல, segment இப்போது நேர் கோடாகிறது. |
09:35 | bezier handleஐ க்ளிக் செய்து அதை நகர்த்த முயற்சிக்கவும். அதை வளைக்க முடியாது என்பதைக் காணலாம். |
09:44 | அதை மீண்டும் வளைவு கோடாக்க அடுத்த iconஐ க்ளிக் செய்க. |
09:49 | இப்போது bezier handleகளை நகர்த்தி அதை வளைக்கலாம். |
09:54 | தேர்ந்தெடுக்கப்பட்ட objectஐ path ஆக மாற்ற அடுத்த iconஐ க்ளிக் செய்க |
09:58 | strokeஐ path ஆக மாற்ற அடுத்த iconஐ க்ளிக் செய்க. |
10:02 | stroke களை காண nodeகளை க்ளிக் செய்து இழுக்கவும். |
10:08 | தேர்ந்தெடுக்கப்பட்ட nodeகளை முறையே X மற்றும் Y திசைகளில் நகர்த்த அடுத்த இரு iconகள் உதவுகின்றன. |
10:15 | மேல் கீழ் அம்புகளை க்ளிக் செய்து மாற்றத்தை கவனிக்கவும். |
10:24 | அடுத்த இரு iconகள் clipping மற்றும் masking effectகளை கொண்ட pathகளில் மட்டும்தான் வேலை செய்யும். |
10:29 | அவற்றை நீங்களே செய்து பார்க்கலாம். |
10:34 | சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது |
10:37 | நேர்க்கோடுகள் மற்றும் மூடிய வடிவங்களை வரைதல் |
10:39 | வளைந்த கோடுகளை வரைதல் |
10:41 | nodeகளை சேர்த்தல் மாற்றுதல் மற்றும் நீக்குதல். |
10:43 | இங்கே உங்களுக்கான பயிற்சி |
10:46 | bezier tool மூலம் 5 இதழ்கள், 1 தண்டு மற்றும் இரு இலைகளைக் கொண்ட ஒரு பூ வரையவும். |
10:52 | இதழ்களுக்கு ஊதா நிறம் கொடுக்கவும். |
10:54 | தண்டு மற்றும் இலைகளுக்கு பச்சை நிறம் கொடுக்கவும். |
10:57 | நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
11:00 | இந்த இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும். |
11:05 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது |
11:12 | மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
11:14 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
11:20 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
11:26 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |