Difference between revisions of "Drupal/C3/Adding-Functionalities-using-Modules/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 19: Line 19:
 
'''Drupal 8''' மற்றும்
 
'''Drupal 8''' மற்றும்
 
'''Firefox''' web browser.
 
'''Firefox''' web browser.
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
+
உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.
 
|-
 
|-
 
| 00:35
 
| 00:35

Revision as of 15:17, 7 October 2016

Time Narration
00:01 வணக்கம், Moduleகளைப் பயன்படுத்தி செயல்பாடுகளை சேர்த்தல் குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது Moduleகளுக்கு அறிமுகம்.

Book Module மற்றும் Forum Module.

00:19 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது:

Ubuntu இயங்குதளம் Drupal 8 மற்றும் Firefox web browser. உங்களுக்கு விருப்பமான எந்த web browserஐயும் பயன்படுத்தலாம்.

00:35 Modules மற்றும் themes என்பவை Drupal websiteஐ விரிவுபடுத்த அல்லது அம்சங்களை சேர்ப்பதற்கான வழி.
00:42 Drupal ஒரு முழுமையான content management system. சிலசமயங்களில் நம் தேவைகள் அதிகமாகலாம். அப்போதுதான் moduleகள் வருகின்றன.
00:53 Moduleகள் நம் Drupal websiteக்கு அம்சங்களை சேர்க்கின்றன. Drupalல் மூன்று வகை moduleகள் உள்ளன.
00:59 முதலாவது Core Modules. இவை Drupalல் default ஆக வருகின்றன.
01:06 இவற்றை நிறுத்தியும் வைக்கலாம். ஆனால் ftpஐ பயன்படுத்தி ஒரு websiteன் core areaக்கு சென்று இந்த moduleகளை நீக்க வேண்டாம்
01:15 Drupalஐ update செய்யும்போதெல்லாம் இவையும் re-install செய்யப்படுகின்றன.
01:22 இந்த Core Moduleகள் Drupal ன் அடிப்படை செயல்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டவை.
01:28 பின் Contributed Modules. நாம் ஏற்கனவே முன்னர் Devel moduleஐ நிறுவியுள்ளோம்.
01:38 ஒரு Contributed Module என்பது யாரோஒருவரால் community க்கு கொடுக்கப்பட்ட module.

அது drupal.orgல் கிடைக்கும்

01:49 கடைசியாக Custom Module.
01:52 நம் website க்கு தேவையான ஒரு குறிப்பிட்ட செயல்பாடுக்கு இது உருவாக்கப்படும். நம் websiteக்கு இப்போதைக்கு இந்த module இல்லை, யாரும் அதை உருவாக்கவில்லை.
02:07 ஆனால் இதை நாமே உருவாக்க வேண்டும் அல்லது யாருக்காவது காசு கொடுத்து உருவாக்க சொல்ல வேண்டும்.
02:15 Drupalல் பலவகை moduleகள் உள்ளன.
02:20 இங்கு drupal.orgல் ஏற்கனவே 32,458 moduleகள் உள்ளன.
02:30 Moduleகள் பல வேலைகளை செய்கின்றன.
02:33 ஒரு module Content typeக்கு fieldஐ சேர்க்கலாம். மற்றொரு module உங்கள் website க்கு ஒரு முழுமையான Voting Systemஐ சேர்க்கலாம்.
02:45 ஆனால் நம் Drupal version க்கு பொருந்தும் moduleஐ தான் பயன்படுத்த வேண்டும்.
02:51 இங்கே drupal.org/project/modulesல் module களை filter செய்யலாம்
03:03 அவற்றை filter செய்யும்போது பிரபலமானவை முதலில் காட்டப்படும்.
03:09 முதல் மூன்று அல்லது நான்கு பக்கங்களில் மிகவும் பிரபலமான moduleகள் உள்ளன. அதாவது, அவைதான் மிக பயனுள்ளவை.
03:21 Moduleகள் என்பவை அம்சங்களை சேர்ப்பவை. அவை இலவசமாக drupal.orgல் கிடைக்கும்.
03:30 நாம் ஏற்கனவே உருவாக்கிய websiteஐ திறப்போம். Extendஐ க்ளிக் செய்து கீழே வரவும்.
03:38 Drupal உடன் முன்னிருப்பாக வரும் சில moduleகளைக் காணலாம். ஆனால் அவை செயலில் இல்லை.
03:48 'Book' moduleஐ செயலுக்கு கொண்டுவருவோம்.
03:53 மேலும் சற்று கீழே வந்து 'Forum' moduleஐ காண்போம். அதையும் செயலுக்கு கொண்டுவருவோம்.
04:01 ஒரே நேரத்தில் இரு வித்தியாசமான moduleகளை நாம் செயலுக்கு கொண்டுவரலாம்.
04:07 கீழே வந்து அடியில் Installஐ க்ளிக் செய்க.
04:12 Book module மற்றும் Forum module இவை இரண்டும் மிகவும் வேறுபட்ட moduleகள்.
04:19 ஆனால் இவை இரண்டும் புது Content typeகளை உருவாக்கும். இவை Drupalக்கு சில அம்சங்களை சேர்க்கும்.
04:29 Drupal moduleகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலை செய்யும்.
04:35 அவை நம் siteக்கு புது அம்சத்தை சேர்க்கலாம்

அதில் ஒரு புது செயல்பாடு அல்லது ஒரு புது Field type ஐ சேர்ப்பதாக இருக்கலாம்

04:45 Drupal coreஐ விரிவுபடுத்த moduleஐ சேர்க்கலாம்.
04:50 இப்போது Structure பின் Content typesல் க்ளிக் செய்க. இங்கு இரு புதிய Content Type கள் இருப்பதைக் காணலாம்- அவை Book page மற்றும் Forum topic.
05:03 Book page Content typeஐ காண Content பின் Add contentல் க்ளிக் செய்க.
05:11 Book page நம் siteல் ஒரு bookஐ உருவாக்கும் அதில் chapters, navigations மற்றும் நாம் விரும்பிய இடத்தில் வைக்குமாறு ஒரு blockஉம் இருக்கும்.
05:24 Book pageல் க்ளிக் செய்க. Title ஐ "Our Drupal Manual" என்போம்.
05:30 Bodyல் டைப் செய்க: "This is the beginning of our Drupal manual".
05:36 Publication settingsல் ஒரு புது setting உள்ளது.
05:41 BOOK OUTLINEஐ க்ளிக் செய்து None Create a new book என மாற்றி

Save and publishஐ க்ளிக் செய்க.

05:55 இங்கு ஒரு link Add child page இருப்பதைக் காண்க. drupal.orgல் Documentationஐ க்ளிக் செய்க
06:06 Understanding Drupalஐ க்ளிக் செய்கையில் Book moduleஐ காணலாம்.
06:12 இங்கே வலப்பக்கம் இருப்பது navigation. இங்கே அந்த பக்கத்தின் முடிவில் மேலும் சில navigation உள்ளன. அவை தானாகவே உருவாக்கப்பட்டவை.
06:24 இடப்பக்கம் linksஐ காணலாம்.
06:29 Drupal conceptsஐ க்ளிக் செய்க. இங்கு navigation இருப்பதைக் காணலாம்.
06:34 வலப்பக்கம் உள்ள navigationல் அடுத்து என்னென்ன வருகிறது என காணலாம்.
06:42 Book moduleஐ பயன்படுத்தி ஒரு முழுமையான user guides அல்லது எந்த வகை booksஐயும் உருவாக்கலாம்.
06:51 நம் websiteக்கு வருவோம். Add child pageஐ க்ளிக் செய்க.
06:57 Title ஐ "Installing Drupal" என்க Body ல் டைப் செய்க "This is where we explain how to install Drupal".
07:08 இது தானாக நாம் உருவாக்கும் Drupal manualல் சேமிக்கப்படுவதைக் காண்க.

நாம் Create Book pageஐ க்ளிக் செய்ததால் இது நடக்கிறது.

07:20 Save and publishஐ க்ளிக் செய்க.
07:23 நமக்காக navigation தானாக உருவாக்கப்படுவதைக் காணலாம்.
07:29 Upஐ க்ளிக் செய்க. இது மேல் மட்டத்திற்கு கொண்டுசெல்கிறது. ஏற்கனவே சொன்னது போல இதனுடன் ஒரு block இருப்பதைக் நினைவுகொள்க.
07:41 Structure பின் Block layout ஐ க்ளிக் செய்க
07:45 Sidebar firstல் இந்த blockஐ வைப்போம்.

Place blockல் க்ளிக் செய்க. இங்கு Book navigation menu ஐக் காணலாம்.

07:56 Place blockஐ க்ளிக் செய்து பின் Save blockல் க்ளிக் செய்க.
08:01 Save blocksல் க்ளிக் செய்து பின் நம் siteக்கு வருவோம். இங்கு Book navigation உள்ளது அதில் உள்ளவை Our Drupal Manual மற்றும் Installing Drupal
08:14 புது child pageகளை சேர்க்கும்போது இது மேலும் பெரியதாகும்
08:21 drupal.orgக்கு சென்று Book moduleஐ பயன்படுத்தும் user manual அல்லது documentation ஐ பார்த்து இதை செய்ய வேண்டும் என்பதை நினைவு கொள்க.
08:35 இம்மாதிரியான content உங்கள் site ல் வேண்டுமெனில் இது மிகவும் பயனுள்ளது. title, body மட்டுமல்லாமல் இவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
08:47 Book module உடன் வரும் fieldகளையும் உங்கள் Content type க்கு சேர்க்கலாம்.
08:53 உங்கள் websiteக்கு ஒரு forum வேண்டுமெனில் Forum module மிக பயனுள்ளதாக இருக்கும்.
09:01 Content ஐ க்ளிக் செய்து பின் Add contentஐ க்ளிக் செய்க
09:07 Forum module ஆனது Forum topic என்ற ஒரு புது Content typeஐ உருவாக்குகிறது.
09:13 இவை field able அதாவது title, body மட்டுமல்லாது மற்றவற்றையும் சேர்க்கலாம்.
09:21 Forum topicஐ க்ளிக் செய்க. ஒரு புது forum topicஐ கொடுப்போம், "Learning Drupal". Forumsல் General discussion என்போம்
09:35 பின் bodyல் டைப் செய்க "Hi, I’m just learning Drupal. Can someone help me?".
09:42 Save and publishஐ க்ளிக் செய்க
09:45 இப்போது இது Forum Content typeல் இருப்பதால், comments மூலம் இதற்கு பதிலளிக்கலாம்
09:53 ஒரு commentஐ சேர்ப்போம் -"Sure I can help". "You should just read everything at Drupalville!". பின் Saveஐ க்ளிக் செய்க.
10:07 நாம் super user ஆக log in செய்துள்ளதால், இது தானாக அனுமதிக்கப்படுகிறது.
10:14 General discussionல் க்ளிக் செய்தால், ஒரு general discussionஐ காணலாம்.
10:21 "Learning Drupal" என்ற Forum topic ல் ஒரு comment உள்ளது.
10:25 இப்போது அந்த commentஐ க்ளிக் செய்து மேலும் commentகளை சேர்க்கலாம். இவ்வாறு அனைத்து வகை forumகளையும் உருவாக்கலாம்.
10:37 இங்கு Forumsஐ க்ளிக் செய்க
10:41 புது forum topic ஐ சேர்க்க இந்த பட்டனை க்ளிக் செய்யலாம். அது general discussionல் சேர்க்கப்படும். ஆனால் administratorக்கு இந்த forum மட்டுமல்லாது மேலும் forumகள் தேவைப்படும்.
10:55 அவற்றை சேர்ப்போம். க்ளிக் செய்க Structure பின் Forums. இங்கு நாம் புது forums மற்றும் புது containersஐ சேர்க்கலாம்.
11:07 இங்கு ஒரு forumஐ சேர்க்கலாம். தேவையானவாறு அவற்றை மாற்றியும் வைக்கலாம்.
11:18 Contentக்கு திரும்ப வந்து Add content பின் Forum topicல் க்ளிக் செய்க

இப்போது இதை மற்ற forumகளிலும் வைக்கலாம்

11:31 இவ்வாறு இதுபோன்ற ஒரு forum ஐ நம் Drupal websiteல் நாம் நிர்வகிக்கலாம்.
11:38 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது:

Moduleகளுக்கு அறிமுகம் Book Module மற்றும் Forum Module.

12:05 இந்த வீடியோ 'Acquia' மற்றும் 'OSTraining' இல் இருந்து எடுக்கப்பட்டு ஸ்போகன் டுடோரியல் திட்டம், ஐஐடி பாம்பே-ஆல் மாற்றப்பட்டது.
12:16 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
12:25 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையவழி பரிட்சையில் தேர்வோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
12:35 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்

NMEICT - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம்.

12:49 இந்த டுடொரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst