Difference between revisions of "Drupal/C2/Installation-of-Drupal/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 35: | Line 35: | ||
| 00:57 | | 00:57 | ||
| ''' Bitnami Drupal Stack'''ஐ நிறுவ தேவையானவை: | | ''' Bitnami Drupal Stack'''ஐ நிறுவ தேவையானவை: | ||
− | + | '''Intel x86''' அல்லது compatible processor | |
|- | |- | ||
Line 428: | Line 428: | ||
| 10:25 | | 10:25 | ||
|ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | |ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின் | ||
− | + | NMEICT, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் | |
− | + | NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். | |
|- | |- |
Revision as of 14:40, 7 October 2016
Time | Narration |
00:01 | வணக்கம் Drupalஐ நிறுவுதல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், உபுண்டு லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் ட்ரூபலை தரவிறக்கி நிறுவக் கற்போம். |
00:17 | இந்த டுடோரியலைத் தொடரத் தேவையானவை-
ட்ரூபலின் சமீபத்திய பதிப்பை இணையத்திலிருந்து தரவிறக்கி நிறுவ இணைய இணைப்பு அல்லது நிறுவ தேவையான fileகள் உங்களுக்கு தரப்பட்டிருக்கலாம். |
00:30 | உபுண்டு லினக்ஸ் அல்லது விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்பட்ட ஒரு கணினியும் தேவை. |
00:38 | இந்த டுடோரியலைத் தொடர, ஏதேனும் ஒரு இயங்குத்தளத்தைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். |
00:45 | ட்ரூபலை நிறுவ பல வழிகள் உள்ளன. |
00:48 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது Bitnami Drupal Stack. ஏனெனில் இது நிறுவ மிக சுலபமானது. |
00:57 | Bitnami Drupal Stackஐ நிறுவ தேவையானவை:
Intel x86 அல்லது compatible processor |
01:05 | குறைந்தது 256 MB RAM |
01:08 | குறைந்தது 150 MB hard drive மற்றும் |
01:13 | TCP/IP protocol. |
01:16 | பின்வரும் இயங்குத்தளங்களில் மட்டும் இது வேலைசெய்யும்: |
01:20 | x86 லினக்ஸ் இயங்குதளம் |
01:24 | பின்வருவனபோன்ற 32-bit விண்டோஸ் இயங்குதளங்கள் Windows Vista, Windows 7, Windows 8, Windows 10, Windows Server 2008 அல்லது Windows Server 2012. |
01:41 | OS X இயங்குதளம் x86. |
01:46 | ஏதேனும் ஒரு web browserஐ திறந்து, காட்டப்படும் URLக்கு செல்லவும். |
01:53 | கீழே வந்து Windows மற்றும் Linux இயங்குதளங்களுக்கான installerகளைக் காணவும். |
02:01 | உங்களுக்குத் தேவையான installerஐத் தேர்ந்தெடுக்கவும். |
02:06 | நான் Linux user என்பதால், Linux installerஐத் தேர்ந்தெடுக்கிறேன். |
02:11 | நீங்கள் Windows user எனில், Windowsக்கான Drupal installerஐத் தேர்ந்தெடுக்கவும். |
02:17 | இங்கே Drupalக்கான பல பதிப்புகளைக் காணலாம். |
02:22 | எந்த பதிப்பைத் தரவிறக்கவேண்டும் என்பது தெரியவில்லை எனில் Recommended பதிப்பைத் தரவிறக்கவும். |
02:29 | இந்த டுடோரியலைப் பதிவுசெய்யும்போது, Recommended பதிப்பு Drupal 8.1.3. |
02:36 | நீங்கள் பார்க்கும்போது பதிப்பு மாறியிருக்கலாம். |
02:39 | வலதுப்பக்கம் Download buttonஐ க்ளிக் செய்யவும். |
02:43 | Bitnami websiteக்கு ஒரு account ஐ உருவாக்க சொல்லி ஒரு popup window தோன்றுகிறது. |
02:50 | இப்போதைக்கு “No thanks”ஐ க்ளிக் செய்வோம். |
02:53 | உடனே, அது installerஐ தரவிறக்க ஆரம்பிக்கும். சேமிக்க OK button ஐ க்ளிக் செய்க. |
03:01 | பின்வரும் நிறுவல் படிநிலைகள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்கதளங்குக்குப் பொதுவானது. |
03:07 | உங்களுக்கு Bitnami installer file கொடுக்கப்பட்டிருந்தால், தரவிறக்குவதற்கு பதிலாக அதைப் பயன்படுத்தவும். |
03:15 | அந்த installer fileஐ தரவிறக்கிய Downloads folderக்கு செல்வோம். |
03:20 | இந்த installer fileஐ இயக்க, admin access இருக்க வேண்டும் |
03:25 | நீங்கள் Windows user எனில், installer fileஐ right click செய்து Run as administrator optionஐத் தேர்ந்தெடுக்கவும். |
03:33 | Linux user எனில், installer fileஐ right click செய்து Propertiesஐ தேர்ந்தெடுக்கவும். |
03:40 | பின் Permissions tabஐ க்ளிக் செய்து Allow executing file as program optionன் check-boxஐ க்ளிக் செய்யவும். |
03:48 | இந்த விண்டோவை மூட Close buttonஐ க்ளிக் செய்யவும். |
03:52 | இப்போது installer fileஐ double-click செய்யவும். |
03:55 | installation ஆரம்பிக்கிறது. Next buttonஐ க்ளிக் செய்யவும். |
04:01 | இங்கே நமக்கு தேவையான componentகளைத் தேர்ந்தெடுக்கவும். |
04:06 | முதலில் ஒவ்வொரு component மீதும் க்ளிக் செய்து அது பற்றி தெரிந்துகொள்ளவும். |
04:12 | நான் அனைத்து componentகளையும் தேர்ந்தெடுக்கிறேன். Next buttonஐ க்ளிக் செய்க. |
04:18 | இந்த windowல், Drupalஐ நிறுவ folder ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
04:24 | நான் Home folderஐ தேர்ந்தெடுக்கிறேன். |
04:27 | Windowsல் முன்னிருப்பாக C colon அல்லது main driveல் நிறுவப்படும். |
04:34 | Next buttonஐ க்ளிக் செய்யவும். |
04:36 | இப்போது Drupal admin accountஐ உருவாக்க வேண்டும் |
04:40 | real nameஐ "Priya" என டைப் செய்கிறேன். இந்த பெயர் applicationல் காட்டப்படும். |
04:47 | இங்கு உங்கள் பெயரை டைப் செய்யவும். |
04:50 | Email Address fieldல், "priyaspoken@gmail.com" என டைப் செய்கிறேன். |
04:56 | உங்கள் சரியான email addressஐ பயன்படுத்தவும். |
05:00 | அடுத்து administratorக்கான username மற்றும் password ஐ கொடுக்க வேண்டும். |
05:07 | Login user nameல் "admin" என டைப் செய்கிறேன். |
05:11 | Passwordல் என் passwordஐ டைப் செய்கிறேன். உறுதிப்படுத்த மீண்டும் passwordஐ டைப் செய்கிறேன். |
05:17 | உங்கள் விருப்பம் போல login name மற்றும் passwordஐத் தேர்ந்தெடுக்கலாம். |
05:22 | Next buttonஐ க்ளிக் செய்க. |
05:24 | Linuxல், Apacheக்கான default listening port 8080 மற்றும் MySQL க்கு 3306. |
05:34 | Windowsல், அது 80 மற்றும் 3306. |
05:39 | ஏற்கனவே வேறு applicationகளால் அந்த portகள் பயன்படுத்தப்பட்டால் வேறு portகளை பயன்படுத்த வேண்டும். |
05:47 | நான் ஏற்கனவே MySQLஐ என் கணினியில் நிறுவியுள்ளேன். எனவே வேறு portஐ கொடுக்க சொல்லி கேட்கிறது. |
05:54 | 3307 என கொடுக்கிறேன். |
05:57 | Next buttonஐ க்ளிக் செய்க. |
05:59 | இப்போது நம் Drupal siteக்கு ஒரு பெயர் கொடுக்க வேண்டும். நான் கொடுப்பது Drupal 8. |
06:06 | உங்கள் விருப்பத்திற்கேற்ப பெயரைக் கொடுக்கலாம். |
06:10 | Next buttonஐ க்ளிக் செய்க. |
06:12 | இங்கே Bitnami Cloud Hostingக்கு கேட்கிறது. இப்போதைக்கு இது தேவையில்லை. |
06:19 | எனவே, அதை தேர்வுநீக்க இந்த check-boxஐ க்ளிக் செய்யவும். |
06:23 | பின் Next buttonஐ க்ளிக் செய்யவும். |
06:26 | இப்போது Drupal நிறுவ தயராக உள்ளது. Next buttonஐ க்ளிக் செய்க. |
06:31 | நிறுவல் முடிய சில நிமிடங்கள் ஆகலாம். |
06:36 | installation முடிந்தவுடன், Launch Bitnami Drupal Stack தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும். |
06:43 | பின் Finish buttonஐ க்ளிக் செய்க. |
06:46 | Bitnami Drupal Stack control window தானாக திறக்கிறது. |
06:51 | அனைத்து running serviceகளையும் காண Manage Servers tab ஐ க்ளிக் செய்க. |
06:56 | இங்கே MySQL Database மற்றும் Apache Web Server இயங்கிக்கொண்டிருப்பதைக் காணலாம். |
07:02 | Drupalல் வேலை செய்ய நமக்கு தேவையானவை MySQL, PostgreSQL அல்லது Oracle போன்ற ஒரு database |
07:11 | மற்றும் Apache அல்லது Nginx போன்ற ஒரு web server |
07:16 | முன்னிருப்பாக, Bitnami Drupal Stack, MySQL database மற்றும் Apache web serverஉடன் வருகிறது. |
07:23 | control windowக்கு வருவோம். |
07:26 | serviceகளை start, stop மற்றும் restart செய்ய அவற்றிற்கான buttonகளை பயன்படுத்தலாம் |
07:33 | Welcome tabஐ க்ளிக் செய்வோம் |
07:36 | Drupalஐ துவக்க, வலப்பக்கம் உள்ள Go to Application buttonஐ க்ளிக் செய்க. |
07:42 | bitnami page உடன் ஒரு browser தானாக திறக்கப்படுகிறது |
07:46 | இப்போது, Access Drupal linkஐ க்ளிக் செய்க. நம் Drupal websiteக்கு செல்கிறோம். |
07:54 | நம் website பெயர் Drupal 8 என்பதைக் காண்க. |
07:58 | websiteல் login செய்ய, மேல் வலது மூலையில் உள்ள Log in linkஐ க்ளிக் செய்க. |
08:03 | நாம் முன்னர் உருவாக்கிய user name மற்றும் password ஐ டைப் செய்வோம். |
08:11 | இப்போது Login buttonஐ க்ளிக் செய்க. |
08:14 | address barல், நம் websiteன் web address http://localhost:8080/drupal/user/1 என காணலாம். |
08:27 | அடுத்த டுடோரியலில், /user/1 பற்றி கற்போம் |
08:32 | இங்கே localhostக்கு பதிலாக 127.0.0.1 எனவும் காணலாம். இது உங்கள் system configurationஐ பொருத்தது. |
08:42 | இதன் பின், Drupalஐ பின்வரும் web address மூலம் அனுகலாம்
localhost colon 8080 slash drupal அல்லது Apacheன் port 80 எனில் localhost slash drupal . |
08:57 | அடுத்து, Bitnami Drupal Stack control windowஐ திறக்க கற்போம். |
09:03 | நீங்கள் Linux user எனில், பின்வரும் படிகளைத் தொடரவும். |
09:07 | File browserக்கு வரவும். |
09:10 | பின் இடது sidebarல், Placesல் Homeஐ க்ளிக் செய்க. |
09:15 | இப்போது, drupal hyphen 8.1.3 hyphen 0 folderஐ double-click செய்க. |
09:23 | இங்கே manager hyphen linux hyphen x64.run fileஐ காணலாம். அதை திறக்க double-click செய்க. |
09:33 | நீங்கள் Windows user எனில், Start Menu -> All Programs -> Bitnami Drupal Stack -> Bitnami Drupal Stack Manager Toolக்கு செல்க. |
09:44 | Bitnami Drupal Stack control window திறக்கப்படும். |
09:48 | ஒவ்வொருமுறை Drupalஐ திறக்கும் முன்பும், அனைத்து serverகளும் இயங்குவதை உறுதிசெய்க. |
09:54 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09:57 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் உபுண்டு லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் ட்ரூபலை நிறுவ கற்றோம். |
10:07 | இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
10:14 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:25 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்க்கு நிதியுதவி இந்திய அரசின்
NMEICT, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் NVLI - மத்திய கலாச்சார அமைச்சகம். |
10:36 | இந்த டுடோரியலைத் தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து ப்ரியா. நன்றி. |