Difference between revisions of "BOSS-Linux/C2/Working-with-Regular-Files/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 !Visual Cue !Narration |- | 0:00 |Linux ல் working with regular files குறித்த spoken tutorial க்கு நல்வரவு |- | 0:07 |File...")
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Visual Cue
+
|Time
!Narration
+
|Narration
 +
 
 
|-
 
|-
 
| 0:00
 
| 0:00

Revision as of 16:07, 12 January 2015

Time Narration
0:00 Linux ல் working with regular files குறித்த spoken tutorial க்கு நல்வரவு
0:07 Files மற்றும் directoryகள் சேர்ந்து Linux File System ஐ வடிவமைக்கின்றன
0:13 ஏற்கனவே முன் tutorial லில் directory களுடன் வேலை செய்வதை கண்டோம் . அதை இந்த website ல் காணலாம்.
0:25 இந்த tutorial லில் regular files ஐ கையாளுவதைப் பார்க்கலாம்.
0:32 ஏற்கனவே ஒரு tutorial லில் cat command ஐப் பயன்படுத்தி file ஐ உருவாக்குவதை பார்த்திருக்கிறோம். தகவல்களுக்கு இந்த website ஐக் காணவும்.
0:46 ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு file ஐ பிரதி எடுப்பதைப் பார்க்கலாம். அதற்கு cp command உள்ளது
0:56 அந்த command இன் பயன்பட்டைப் பார்க்கலாம்.
1:00 ஒரு file ஐ பிரதி எடுக்க, type செய்க
cp space ஒன்று அல்லது மேற்பட்ட  [OPTION]... space  SOURCE file ன் பெயர் space destination file ன் பெயர் DEST.
1:15 ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட file களை பிரதி எடுக்க, எழுதுவோம்
 cp space ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [OPTION]... பிரதி எடுக்க விரும்பும் files ன்  SOURCE ன் பெயர்... மற்றும் அந்த files, பிரதி எடுக்கப்படவேண்டிய destination DIRECTORY ன் பெயர். 
1:34 ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். terminal ஐத் திறப்போம்
1:42 home directroy ல் test1 என்ற file ஐ ஏற்கனவே வைத்துள்ளோம்.
1:49 test1 ல் உள்ளதைப் பார்க்க type செய்வோம்
$ cat test1
enter ஐ அழுத்தவும்
2:00 நாம் test1 ல் பார்க்கும் உள்ளடக்கத்தை test2 என்ற file க்கு பிரதி எடுக்க, எழுதுவோம்

$ cp test1 test2 enter ஐ அழுத்தவும்

2:22 இப்போது file, பிரதி எடுக்கப்படுகிறது .
2:25 test2 என்ற file இல்லையானால் முதலில் அது உருவாக்கப்படுகிறது பிறகு test1 ன் உள்ளடக்கம் அதனுள் ஒட்டப்படுகிறது.
2:35 ஏற்கனவே அந்த file இருந்தால் அது overwrite செய்யப்படுகிறது. பிரதி எடுத்த file ஐக் காண

$ cat test2 enter செய்க

2:52 உங்களால் different directories ல் இருந்தும் files ஐ பிரதி எடுக்க முடியும். உதாரணமாக type செய்க

$ cp /home/anirban/arc/demo1 /home/anirban/demo2

enter செய்க
3:32 இது என்ன செய்கிறது எனில் file demo1 ஐ source diretory /home/anirban/arc/ ல் இருந்து destination directory /home/anirban ன் file demo2 க்கு பிரதி எடுக்கிறது
3:51 demo2 அங்கிருக்கிறது எனக் காண type செய்க

ls space /home/anirban enter செய்க

4:07 demo2 இருப்பதைக் காணலாம்
4:12 screen ஐ clear செய்வோம்
4:17 அந்த file அதே பெயரில் destination directory ல் வேண்டும் என்றால், file பெயரைக்குறிப்பிடாமல் இருக்கலாம். உதாரணமாக
4:27 Type செய்க
$ cp /home/anirban/arc/demo1 /home/anirban/ 

enter செய்க

4:55 இது மீண்டும் /home/anirban/arc/ directory ல் இருக்கும் file demo1 ஐ /home/anirban directory க்கு demo1 என்ற பெயரிலேயே பிரதி எடுக்கும்
5:11 முன் போல demo1 ஐப் பார்க்க type செய்க

ls /home/anirban

enter செய்க 
5:25 demo1 file இருப்பதைப் பார்க்கலாம்.
5:30 மீண்டும் screen ஐ clear செய்வோம்
5:37 மற்றொரு உதாரணம் destination file name கொடுக்கத் தேவையில்லாத போது ஒன்றுக்கும் மேற்பட்ட file களை பிரதி எடுத்தல்
5:44 நாம் 3 file கள் test1 test2 test3 என home directory ல் வைத்திருப்பதாக கொள்வோம்
5:53 type செய்வோம்

$ cp test1 test2 test3 /home/anirban/testdir enter செய்க

6:16 இது 3 file களையும் test1,test2 மற்றும் test3 ஐ /home/anirban/testdir directory க்கு அவற்றின் பெயர்கள் மாறாமலே பிரதி எடுக்கும்
6:30 இந்த file கள் பிரதி எடுக்கப்பட்டதைக் காண type செய்க

ls /home/anirban/testdir enter செய்க

6:52 test1,test2 மற்றும் test3 இந்த directory ல் இருப்பதைக் காணலாம்
6:58 cp க்கு நிறைய optionகள் உள்ளன . இங்கே அவற்றில் மிக முக்கியமாவற்றைப் பார்க்கலாம்.
7:07 முதலில் slide களுக்குச் செல்லலாம்.
7:12 அந்த option களுள் -R முக்கியமான ஒன்று. இது அந்த மொத்த directory structure லும் recursive பிரதி எடுக்க பயனாவது
7:23 ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்
7:27 testdir directory யின் அனைத்து உள்ளடக்கத்தையும் test directory க்கு பிரதி எடுக்க முயற்சிக்கலாம்.
7:36 அதற்கு type செய்வோம்

cp testdir/ test

enter செய்க
7:51 நீங்கள் output message ஐ பார்க்கலாம்
7:54 வழக்கமாக சில உள்ளடக்கத்தை வைத்திருக்கும் directory ஐ cp command பயன்படுத்தி பிரதி எடுக்க முடியாது
8:02 ஆனால் -R option ஐ பயன்படுத்தி செய்யலாம்
8:07 இப்போது type செய்வோம்
cp -R testdir/ test 
enter செய்க
8:25 இப்போது பிரதி எடுக்கப்பட்ட directory ஐக் காண type செய்க

ls enter செய்க

8:37 நாம் test directory இருப்பதைக் காணலாம். screen ஐ clear செய்வோம்
8:45 test ல் உள்ள உள்ளடக்கத்தைக் காண type செய்க

ls test enter செய்க

8:57 test directory ன் உள்ளடக்கத்தைக் காணலாம்
9:01 இப்போது slide களுக்குத் திரும்ப செல்கிறோம்
9:05 ஒரு file மற்றொரு file க்கு பிரதி எடுக்கப்படும்போது அந்த file ஏற்கனவே இருந்தால் அது overwrite செய்யப்படும் என தெரியும்
9:14 இப்போது தவறுதலாக முக்கியமான file ஐ overwrite செய்கிறோம் என்றால்?
9:19 இது போல் ஏதும் நடக்காமல் தடுக்க -b option உள்ளது
9:25 இது இருக்கும் ஒவ்வொரு destination file க்கும் ஒரு backup ஐ உருவாக்குகிறது
9:32 நாம் -i(interactive)option யும் பயன்படுத்தலாம். இது எப்போதும் destination file ஐ overwrite செய்யும் முன் நம்மை எச்சரிக்கும்
9:43 இப்போது mv command வேலை செய்வதைப் பார்க்கலாம்
9:47 இது file களை இடமாற்ற பயனாவது. அது எப்படி பயனாகிறது?
9:53 இது முக்கியமான இரு பயன்களைக் கொண்டுள்ளது.
9:57 இது ஒரு file அல்லது directory ஐ rename செய்ய பயனாகிறது
10:00 ஒரு group of files ஐ மற்றொரு directory க்கு மாற்றவும் பயனாகிறது
10:05 mv நாம் ஏற்கனவே பார்த்த cp போலவேதான் . அதனால் mv ஐ எப்படி பயன்படுத்த முடியும் என சீக்கிரமாக காணலாம்.
10:17 terminal திறந்து type செய்க

$ mv test1 test2

enter செய்க
10:32 இது ஏற்கனவே home directory ல் உள்ள file test1 ஐ test2 என மாற்றும்
10:40 test2 ஏற்கனவே இருந்தால் இது overwrite செய்யப்படும்
10:49 file overwrite செய்யப்படும் முன் நமக்கு எச்சரிக்கை வேண்டுமானால்
10:54 mv command ல் -i option ஐப் பயன்படுத்தலாம்.
10:59 anirban என்ற மற்றொரு file ஐ வைத்துள்ளதாக கொள்வோம்.இந்த file யும் test2 என மாற்ற விரும்புகிறோம்
11:08 type செய்வோம்
mv -i anirban test2 

enter செய்க

11:21 நாம் பார்ப்பது போல ஒரு எச்சரிக்கை கொடுத்து test2 overwrite செய்யப்பட வேண்டுமா எனக் கேட்கிறது
11:30 y ஐ அழுத்தி enter ஐ அழுத்தினால் , அந்த file overwrite செய்யப்படும்
11:37 cp போல mv ஐயும் ஒன்றுக்கும் மேற்பட்ட file களுடன் பயன்படுத்தலாம். ஆனால் இங்கே destination ஒரு directory ஆக இருக்க வேண்டும்
11:47 தொடர்வதற்கு முன்னால் screen ஐ clear செய்யலாம்.
11:52 abc.txt, pop.txt மற்றும் push.txt என 3 fileகளை home directory ல் வைத்திருப்பதாக கொள்வோம்
12:03 அவை இருப்பதைக் காண type செய்க

ls enter செய்க

12:09 இங்கே fileகள் pop.txt,push.txt மற்றும் abc.txt உள்ளன. screen ஐ clear செய்வோம்
12:24 இப்போது இந்த 3 fileகளையும் testdir directory க்கு மாற்ற விரும்புகிறோம்
12:32 அதற்கு type செய்க

mv abc.txt pop.txt push.txt destination folder ன் பெயர் testdir

enter செய்க
12:58 அவற்றைப் பார்க்க type செய்க
ls testdir 

enter செய்க

13:06 abc, pop மற்றும் push.txt fileகளை நீங்கள் பார்க்கலாம்
13:14 mv ன் சில option களைப் பார்க்கலாம். முதலில் slide களுக்குத் திரும்ப போகலாம்
13:22 பிறகு mv command உடன் இருக்கும் -b அல்லது –backup option... destination ல் ஒவ்வொரு file யும் overwrite செய்யப்படும் முன் backup எடுக்கும்
13:34 நாம் ஏற்கனவே பார்த்த எந்த destination file யும் overwrite செய்யும் முன் -i option நம்மை எச்சரிக்கும்
13:44 அடுத்தது rm command. இது file களை நீக்கப் பயன்படுகிறது
13:52 terminal க்கு திரும்பச் சென்று type செய்க

ls testdir

14:00 அதில் ஒரு file faq.txt ஐப் பார்க்கலாம். இதை நீக்க வேண்டும் எனக் கொள்வோம்
14:09 அதற்கு type செய்க

$ rm testdir/faq.txt enter செய்க

14:23 இந்த command file faq.txt ஐ /testdir directory யில் இருந்து நீக்கும்
14:32 உண்மையில் அந்த file நீக்கப்பட்டதா இல்லையா எனப் பார்க்க... மீண்டும் அழுத்தவும்
ls testdir
enter செய்க


14:47 நீங்கள் அந்த file faq.txt ஐ பார்க்க முடியாது
14:51 நீங்கள் rm command ஐ ஒன்றுக்கும் மேற்பட்ட file களுடனும் பயன்படுத்தலாம்
14:57 testdir directory யில் இரண்டு file கள் உள்ளன abc2 மற்றும் abc1
15:03 இந்த files abc1 மற்றும் abc2 ஐ நாம் நீக்க வேண்டும் என்றால் .
15:09 அதற்கு type செய்வோம்
rm testdir/abc1 testdir/abc2 

enter செய்க

15:31 இது files abc1 மற்றும் abc2 ஐ testdir directory யில் இருந்து நீக்குகிறது
15:39 அவை நீக்கப்பட்டிருப்பதைக் காண மீண்டும் type செய்க
ls testdir 
abc1 மற்றும்  abc2 ஐ பார்க்க முடியாது
15:53 மேலும் போகு முன் screen ஐ clear செய்யலாம்
15:58 இப்போது மீண்டும் slide களுக்குப் போகலாம்
16:02 சுருங்க சொல்ல நாம் கற்றது
16:04 ஒரே ஒரு file ஐ நீக்க எழுதுவது rm மற்றும் file ன் பெயர்.
16:11 ஒன்றுக்கும் மேற்பட்ட file களை நீக்க எழுதுவது rm மற்றும் நீக்க வேண்டிய file களின் பெயர்
16:19 இப்போது rm command ன் சில optionகளைப் பார்க்கலாம் .
16:24 சில சமயம் பாதுகாக்கப்பட்ட file ஐ rm command ஆல் நீக்க முடியாது. அப்போது அந்த file ஐ கட்டாயப்படுத்தி நீக்க -f option ஐ நாம் பயன்படுத்தலாம்
16:41 மற்றொரு பொதுவான option -r. இந்த option எங்கே பயனுள்ளதாக இருக்கிறது என பார்க்கலாம்.
16:52 terminal க்குத் திரும்ப போகலாம்
16:57 rm command ஐ வழக்கமாக directory களை நீக்க பயன்படுத்துவதில்லை, அதற்கு பயனாவது rmdir command.
17:05 ஆனால் rmdir command ஒரு directory காலியாக இருந்தால் மட்டுமே நீக்கும்.
17:12 அதிக subdirectory களையும் file களையும் கொண்ட directory ஐ நீக்க வேண்டுமானால்?
17:19 அதற்கு rm command ஐ முயற்சிக்கலாம்
17:23 type செய்வோம்

rm மற்றும் நாம் நீக்க விரும்பும் directory testdir

enter செய்க
17:31 rm command ஐ testdir directory ஐ நீக்க பயன்படுத்த முடியாது என்ற output message ஐ பார்க்கலாம்
17:39 ஆனால் -r மற்றும் -f option களை சேர்த்தோமேயானால் அதை நீக்க முடியும்
17:47 rm -rf testdir
enter செய்க
18:00 இப்போது testdir directory வெற்றிகரமாக நீக்கப்பட்டது
18:06 இப்போது slide களுக்குத் திரும்பச் சென்று அடுத்த command ஐப் பார்க்கலாம்
18:11 cmp command.
18:13 சில சமயம் இரண்டு file களும் ஒன்றா என சோதிக்க வேண்டியிருக்கும். அப்படியானால் அவற்றில் ஒன்றை நீக்கலாம்
18:22 கடைசி பதிப்பில் இருந்து அந்த file மாற்றப்படுள்ளதா என பார்க்கவும் விரும்பலாம்
18:28 இவற்றுக்காகவும் மற்றும் பல காரணங்களுக்காகவும் cmp command ஐப் பயன்படுத்தலாம்
18:33 இது இரண்டு file களையும் byte வாரியாக ஒப்பிடுகிறது
18:38 file1 மற்றும் file2 ஐ ஒப்பிட எழுதுவோம்
cmp file1 file2.
18:47 இரண்டு file களின் உள்ளடக்கங்கள் ஒத்திருந்தால் message ஏதும் காட்டப்படாது.
18:55 prompt மட்டும் அச்சிடப்படும்
18:58 உள்ளடக்கங்களில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் முதல் வேறுபாட்டின் இடம் terminal லில் அச்சிடப்படும்
19:10 cmp எப்படி வேலை செய்கிறது என பார்க்கலாம். home directory ல் sample1 மற்றும் sample2 என இரண்டு file கள் வைத்திருக்கிறோம்
19:19 அவற்றினுள் இருப்பதைக் காணலாம்
19:22 Type செய்க
cat sampe1 

Enter செய்க இது “This is a Linux file to test the cmp command” என்ற text ஐ வைத்துள்ளது

19:34 மற்றொரு file sample2 text ஐ வைத்திருக்கும். அதை காண type செய்வோம்
cat sample2 
enter செய்க
19:44 இது வைத்திருக்கும் text “This is a Unix file to test the cmp command.”
19:50 இப்போது இந்த இரண்டு file களுக்கும் cmp command ஐ பயன்படுத்தலாம்
19:55 எழுதுவோம்
cmp sample1 sample2 

enter செய்க

20:08 sample1 மற்றும் sample2 file களுக்கு இடையே சுட்டிக்காட்டப்பட்ட முதல் வேறுபாட்டை பார்க்கலாம்.
20:16 மேலே போகு முன் screen ஐ clear செய்யலாம்
20:22 அடுத்து நாம் பார்க்கபோகும் command wc
20:26 இந்த command ஒரு file ன் வரிகள் வார்த்தைகள் மற்றும் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் காட்ட பயன்படுகிறது
20:34 sample3 என்ற file ஐ நம் home directory யில் வைத்துள்ளோம்
20:39 இதன் உள்ளடக்கத்தைக் காணலாம், அதற்கு type செய்வோம்
cat sample3 

enter செய்க

20:50 இது sample3 file ன் உள்ளடக்கம்
20:54 இப்போது இந்த file லில் wc command ஐப் பயன்படுத்தலாம்


20:59 அதற்கு எழுதுவோம்
wc sample3 
enter செய்க
21:10 இந்த file 6 வரிகள், 67 வார்த்தைகள் மற்றும் 385 எழுத்துக்கள் கொண்டிருப்பதாக இந்த command காட்டுகிறது
21:22 இவைதான் file களுடன் வேலை செய்ய உதவும் சில commandகள்
21:27 இன்னும் பல commandகள் உள்ளன. மேலும் நாம் பார்த்தது போல ஒவ்வொரு command ம் பல option களை வைத்துள்ளன
21:36 man command ஐப் பயன்படுத்தி அவற்றை மேலும் பார்க்க பரிந்துரைக்கிறேன்
21:44 இந்த tutorial லின் நிறைவுக்கு வந்துவிட்டோம்
21:48 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

22:02 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
22:18 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst