Difference between revisions of "Advanced-Cpp/C2/Function-Overloading-And-Overriding/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- |00:01 | '''C++''' ல் '''function Overloading மற்றும் Overriding''' குறித்த ஸ்போகன...") |
(No difference)
|
Revision as of 12:02, 19 December 2014
| Time | Narration |
| 00:01 | C++ ல் function Overloading மற்றும் Overriding குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
| 00:09 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
| 00:11 | Function Overloading. |
| 00:12 | Function Overriding. |
| 00:14 | இதை உதாரணங்களின் உதவியுடன் செய்யலாம். |
| 00:18 | இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது |
| 00:21 | உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10, |
| 00:26 | g++ compiler பதிப்பு 4.6.1 |
| 00:30 | function overloading க்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
| 00:34 | Function Overloading என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட functionகள் ஒரே பெயரைக் கொண்டிருப்பது. |
| 00:41 | argumentகளின் எண்ணிக்கை மற்றும் argumentகளின் data-type வித்தியாசமாக இருக்கும். |
| 00:47 | ஒரு function call செய்யப்படும் போது அது argument பட்டியல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
| 00:53 | ஒரு உதாரணத்தைக் காண்போம். |
| 00:56 | எடிடரில் ஏற்கனவே code ஐ கொண்டுள்ளேன். |
| 00:59 | இந்த ப்ரோகிராமில் கூடடல் செயல்பாட்டை செயல்படுத்துவோம் |
| 01:03 | நம் file பெயர் overload.cpp என்பதை கவனிக்கவும் |
| 01:08 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
| 01:10 | இது நம் header file iostream. |
| 01:13 | இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம் |
| 01:17 | பின் int ஆக define செய்யப்பட்ட add function உள்ளது |
| 01:21 | இதில் மூன்று argumentகளை pass செய்துள்ளோம். |
| 01:24 | Int a, int b மற்றும் int c |
| 01:28 | பின் மூன்று எண்களை கூட்டி மதிப்பை திருப்புகிறோம் |
| 01:33 | இங்கே function add உள்ளது |
| 01:36 | இது float ஆக declare செய்யப்படுகிறது |
| 01:38 | இரு argumentகள் float d மற்றும் float e ஐ pass செய்துள்ளோம் |
| 01:44 | பின் இரு எண்களின் மீதும் கூட்டல் செயல்பாட்டை செயல்படுத்துகிறோம். |
| 01:48 | இது நம் main function. |
| 01:50 | function main ல் add function ஐ வெவ்வேறு argumentகளுடன் declare செய்கிறோம். |
| 01:56 | பின் variableகளை declare செய்கிறோம். |
| 01:58 | இங்கே பயனரிடம் இருந்து integer மதிப்புகளை ஏற்கிறோம். |
| 02:03 | பின் function add ஐ மூன்று argument களுடன் call செய்து |
| 02:07 | variable sum ல் முடிவை சேமிக்கிறோம் |
| 02:09 | இங்கே முடிவை அச்சடிக்கிறோம். |
| 02:12 | இப்போது இங்கே பயனரிடம் இருந்து தசம புள்ளி எண்களை ஏற்கிறோம். |
| 02:17 | பின் add function ஐ இரு argumentகளுடன் call செய்கிறோம். |
| 02:21 | பின் இங்கே sum ஐ அச்சடிக்கிறோம். |
| 02:23 | இது நம் return statement |
| 02:26 | இப்போது நம் ப்ரோகிராமை இயக்குவோம் |
| 02:29 | Ctrl, Alt மறறும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும். |
| 02:38 | இயக்க டைப் செய்க: g++ space overload dot cpp space hyphen o space over |
| 02:49 | எண்டரை அழுத்துக |
| 02:51 | டைப் செய்க dot slash over |
| 02:53 | எண்டரை அழுத்துக |
| 02:55 | Enter three integers என காட்டுகிறது |
| 02:58 | நான் கொடுப்பது 10, 25 மற்றும் 48 |
| 03:04 | காட்டப்படும் வெளியீடு: Sum of integers is 83 |
| 03:09 | இப்போதூ காண்பது: Enter two floating point numbers |
| 03:13 | நான் கொடுப்பது: 4.5 மற்றும் 8.9 |
| 03:17 | எண்டரை அழுத்துக |
| 03:19 | காட்டப்படும் வெளியீடு: Sum of floating point numbers is 13.4 |
| 03:25 | இப்போது function overriding ஐ காண்போம். |
| 03:29 | நம் slideகளுக்கு வருவோம். |
| 03:31 | derived class ல் ஒரு base class function ஐ மீண்டும் define செய்தல். |
| 03:36 | base class function ஐ derived class function override செய்கிறது. |
| 03:40 | ஆனால் pass செய்யப்பட்ட argumentகள் அதேதான். |
| 03:44 | return-type ம் அதேதான். |
| 03:47 | ஒரு உதாரணத்தை காண்போம் |
| 03:49 | இங்கே function Overriding க்கான உதாரணம் உள்ளது |
| 03:53 | நம் file பெயர் override.cpp என்பதை கவனிக்கவும் |
| 03:57 | code ஐ காண்போம். |
| 04:00 | இது நம் header file iostream |
| 04:03 | இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம் |
| 04:06 | பின் class arithmetic ஐ கொண்டுள்ளோம் |
| 04:09 | இதில் integer variableகளை protected ஆக declare செய்துள்ளோம் |
| 04:14 | பின் function values ஐ public ஆக declare செய்துள்ளோம். |
| 04:18 | இவற்றில் இரு argumentகள் int x மற்றும் int y ஐ pass செய்துள்ளோம். |
| 04:23 | பின் a மற்றும் b ல் மதிப்பை சேமித்தோம். |
| 04:26 | இங்கே operations ஆக virtual function ஐ கொண்டுள்ளோம் |
| 04:30 | இதில் இரு எண்களை கூட்டி sum ஐ அச்சடிக்கிறோம் |
| 04:34 | இங்கே class ஐ மூடுகிறோம். |
| 04:37 | இப்போது derived class ஆக class Subtract ஐ கொண்டுள்ளோம் |
| 04:41 | இது base class arithmetic ஐ inherit செய்கிறது |
| 04:45 | இதில் இரு எண்களின் வித்தியாசத்தைக் கணக்கிட்டு வித்தியாசத்தை அச்சடிக்கிறோம். |
| 04:50 | இப்போது Multiply ஆக மற்றொரு derived class ஐ கொண்டுள்ளோம் |
| 04:54 | இதுவும் base class arithmetic ஐ inherit செய்கிறது |
| 04:57 | இதில் இரு எண்களின் பெருக்கலைக் கணக்கிட்டு முடிவைக் காட்டுகிறோம். |
| 05:03 | பின் class Divide ஐ கொண்டுள்ளோம் இதுவும் base class arithmetic ஐ inherit செய்கிறது |
| 05:09 | இதில் இரு எண்களின் வகுத்தலைக் கணக்கிட்டு அதன் முடிவை காட்டுகிறோம். |
| 05:15 | function ன் return type மற்றும் pass செய்யப்பட்ட argumentகள் ஒன்றே என்பதை கவனிக்கவும். |
| 05:23 | இது நம் main function. |
| 05:26 | இதில் class arithmetic க்கு ஒரு object p ஐ உருவாக்குகிறோம் |
| 05:31 | arith ஆனது class arithmetic க்கு pointer ஆகும் |
| 05:35 | பின் class Subtract ன் subt object |
| 05:39 | class Multiply ன் mult object |
| 05:42 | மற்றும் class Divide ன் divd object ஐ கொண்டுள்ளோம் |
| 05:46 | இப்பொது இங்கே p ஆனது arith ன் address க்கு அமைக்கப்படுகிறது. |
| 05:50 | பின் function values ல் argumentகள் 30 மற்றும் 12 pass செய்கிறோம் |
| 05:56 | இப்போது function operations ஐ call செய்கிறோம் |
| 05:59 | இது கூட்டல் செயல்பாட்டை செயல்படுத்தும். |
| 06:02 | இங்கே subt ஐ arith ன் address க்கு அமைக்கிறோம் |
| 06:07 | 42 மற்றும் 5 ஐ argumentகளாக pass செய்கிறோம் |
| 06:11 | மீண்டும் function operations ஐ call செய்கிறோம் |
| 06:14 | இது இரு எண்களின் கழித்தலை செயல்பாட்டை செயல்படுத்தும். |
| 06:18 | இப்போது, இங்கே mult ஐ arithன் address க்கு அமைக்கிறோம் |
| 06:22 | பின் 6 மற்றும் 5 ஐ argument ஆக pass செய்கிறோம் |
| 06:26 | function operations ஐ call செய்கிறோம் |
| 06:29 | இது இரு எண்களின் பெருக்கலை செயல்படுத்தும். |
| 06:33 | கடைசியாக we set divd ஐ arith ன் address க்கு அமைத்து 6 மற்றும் 3 ஐ argument களாக pass செய்கிறோம் |
| 06:41 | இப்போது operations functions ஐ call செய்கிறோம் |
| 06:44 | இது இரு எண்களின் வகுத்தை செயல்படுத்தும். |
| 06:48 | இது நம் return statement. |
| 06:50 | ப்ரோகிராமை இயக்குவோம். நம் டெர்மினலுக்கு வருவோம். |
| 06:54 | டைப் செய்க: g++ space override dot cpp space hyphen o space over2 |
| 07:04 | எண்டரை அழுத்துக |
| 07:06 | டைப் செய்க: dot slash over2 |
| 07:09 | எண்டரை அழுத்துக |
| 07:11 | காட்டப்படும் வெளியீடு: |
| 07:13 | Addition of two numbers is 42 |
| 07:16 | Difference of two numbers is 37 |
| 07:19 | Product of two numbers is 30 மற்றும் Division of two numbers is 2 |
| 07:25 | நம் slideகளுக்கு வருவோம். |
| 07:27 | overloading மற்றும் overriding ன் வித்தியாசத்தைக் காண்போம். |
| 07:31 | inheritance இல்லாமல் Overloading நிகழலாம். |
| 07:35 | ஒரு class மற்றொன்றிலிருந்து inherite செய்யப்படும்போது Overriding நிகழ்கிறது . |
| 07:41 | overloading ல் argumentகளும் return-type ம் வித்தியாசமாக இருக்கவேண்டும். |
| 07:46 | overriding ல் argumentகளும் return-type ம் ஒரே மாதிரி இருக்கவேண்டும். |
| 07:51 | overloading ல் function பெயர் ஒரே மாதிரியானது. |
| 07:55 | ஆனால் pass செய்யப்பட்ட argumentகளை பொருத்து அது வித்தியாசமாக செயல்படுகிறது. |
| 08:01 | overriding ல் function பெயர் ஒரே மாதிரியானது. |
| 08:05 | base class லிருந்து வெவ்வேறு செயல்பாடுகளை Derived class function செயல்படுத்தலாம். |
| 08:11 | சுருங்கசொல்ல: |
| 08:13 | இதில் நாம் கற்றது |
| 08:15 | Function overloading. |
| 08:16 | எகா. மூன்று வெவ்வேறு argumentகளுடன் int add |
| 08:21 | இரு வெவ்வேறு argumentகளுடன் float add. |
| 08:24 | Function Overriding. |
| 08:26 | எகா. virtual int operations () மற்றும் int operations () |
| 08:31 | ஒரே மாதிரியான argument மற்றும் ஒரே மாதிரியான return type உடன் functionகள்.... இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம். |
| 08:38 | பயிற்சியாக |
| 08:39 | செவ்வகம் சதுரம் மற்றும் வட்டத்தின் பரப்பளவை கணக்கிட function overloading ஐ பயன்படுத்தி ஒரு ப்ரோகிராம் எழுதுக |
| 08:48 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
| 08:52 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
| 08:55 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
| 08:59 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
| 09:05 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
| 09:09 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
| 09:16 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
| 09:20 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
| 09:27 | இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
| 09:32 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |