Difference between revisions of "GChemPaint/C2/Editing-molecules/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
− | {|border =1 | + | {|border=1 |
|'''Time''' | |'''Time''' | ||
|'''Narration''' | |'''Narration''' |
Revision as of 12:50, 25 November 2014
Time | Narration |
00:01 | வணக்கம் |
00:02 | (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் ல் மூலக்கூறுகளை திருத்துதல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.. |
00:06 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது |
00:09 | * ஒரு அணுவில் கட்டுறா எலெக்ட்ரானை சேர்த்தல் |
00:12 | * கார்பானிக் அமிலம் (Carbonic acid) மற்றும் கந்தக அமிலத்தின் (Sulphuric acid) அமைப்புகளை வரைதல் |
00:16 | * அணுக்களின் தொகுதியில் ஒரு இடஞ்சார்ந்த மின்னூட்டத்தை சேர்த்தல் மற்றும் மாற்றுதல். |
00:21 | மேலும் நாம் கற்பது, |
00:23 | * அணுவில் இடஞ்சார்ந்த மின்னூட்டத்தை சேர்த்தல் மற்றும் மாற்றுதல் |
00:26 | * வட்டமுறை மூலக்கூறுகளை சேர்த்தல் |
00:29 | * ஒரு வட்டமுறை மூலக்கூறுகளை இரு வட்டமுறை மூலக்கூறுகளாக மாற்றுதல். |
00:34 | இங்கே நான் பயன்படுத்துவது, உபுண்டு லினக்ஸ் இயங்குதளம் பதிப்பு 12.04 |
00:39 | (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் பதிப்பு 0.12.10 |
00:46 | இந்த டுடோரியலை பின்தொடர, உங்களுக்கு, |
00:50 | (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் வேதியியல் அமைப்பு திருத்தி பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:53 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும். |
00:58 | ஒரு புதிய (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் application ஐ திறந்துள்ளேன். |
01:02 | முதலில் அம்மோனியா (Ammonia) அமைப்பை வரைவோம். |
01:06 | Current element கீழிறங்கு அம்பு பட்டனை க்ளிக் செய்வோம். |
01:09 | அட்டவணையில் N ஐ தேர்ந்தெடுப்போம். |
01:11 | tool box ல் N ஐ கவனிக்கவும். |
01:15 | Add or modify an atom tool ஐ க்ளிக் செய்க. |
01:18 | பின் காட்சி பகுதியில்' க்ளிக் செய்க. |
01:21 | காட்சி பகுதியில் NH3 ஐ காணலாம். |
01:24 | capital Hஐ அழுத்துக. H உடன் ஆரம்பிக்கும் தனிமங்களின் பட்டியலுடன் ஒரு துணைmenu தோன்றுகிறது |
01:30 | பட்டியலில் H ஐ தேர்ந்தெடுக்கவும். |
01:33 | Add a bond or change the multiplicity of an existing one tool மீது க்ளிக் செய்க. |
01:38 | நைட்ரஜன் அணுவிற்கு மூன்று பிணைப்புகளை வரைய |
01:41 | நைட்ரஜன் அணுவின் மீது மூன்று முறை க்ளிக் செய்து பிணைப்புகளை இழுக்கவும். |
01:46 | ஒரு பிரமிட் போன்ற அமைப்பை உருவாக்குமாறு அந்த பிணைப்புகளை வைக்கவும். |
01:51 | நைட்ரஜன் அணுவில் ஒரு ஜோடி கட்டுறா எலெக்ட்ரான்களை சேர்ப்போம். |
01:56 | Add an electron pair to an atom tool மீது க்ளிக் செய்க. |
02:01 | பின் அம்மோனியாவின் நைட்ரஜன் அணு மீது க்ளிக் செய்க . |
02:05 | மாற்றங்களை கவனிக்கவும். |
02:07 | இப்போது அம்மோனியாவின் நைட்ரஜன் ஒரு ஜோடி எலெக்ட்ரான்களை கொண்டிருப்பதை கவனிக்கவும். |
02:12 | இந்த ஜோடி பிணைப்பில் இல்லை. |
02:16 | இந்த ஜோடி எலெக்ட்ரான்கள் தனி ஜோடி ஆகும். |
02:20 | பயிற்சியாக, |
02:21 | * பாஸ்பரஸ் ட்ரைக்ளோரைட் (Phosphorus trichloride) அமைப்பை வரைக |
02:24 | * பாஸ்பரஸ் (Phosphorus) அணுவிற்கு கட்டுறா எலெக்ட்ரான்களின் ஒரு ஜோடியை செர்க்கவும். |
02:29 | இப்போது'கார்பானிக் அமிலம் (Carbonic acid) (H2CO3) மற்றும் கந்தக அமிலம் (Sulphuric acid)(H2SO4) ன் அமைப்புகளை வரைவோம். |
02:34 | இங்கே, கார்பானிக் அமிலம் மற்றும் கந்தக அமிலத்தின் அமைப்புகள் உள்ளன. |
02:40 | முதலில் அம்மோனியா அமைப்பை ஒரு பக்கமாக நகர்த்துவோம். |
02:44 | அதற்கு, Select one or more objects tool மீது க்ளிக் செய்க. |
02:48 | பின் அம்மோனியா அமைப்பின் மீது க்ளிக் செய்து அதை ஒரு பக்கமாக இழுக்கவும். |
02:53 | இப்போது கார்பானிக் அமிலம் அமைப்பை வரைவோம். |
02:56 | Current element கீழிறங்கு அம்பு பட்டன் மீது க்ளிக் செய்க. |
03:00 | அட்டவணையில் C ஐ தேர்ந்தெடுப்போம். |
03:02 | Add a bond or change the multiplicity of an existing one tool மீது க்ளிக் செய்க. |
03:07 | காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க. |
03:09 | தலைகீழ் Y போன்ற அமைப்பை தருமாறு மூன்று பிணைப்புகளை அமைக்கவும். |
03:15 | ஏதேனும் ஒரு பிணைப்பில் இரட்டை பிணைப்பை நான்காம் பிணைப்பாக வரையவும். |
03:21 | இப்போது Current element கீழிறங்கு அம்பு பட்டன் மீது க்ளிக் செய்க. |
03:25 | O ஐ தேர்க. |
03:26 | Add or modify an atom tool மீது க்ளிக் செய்க |
03:30 | பிணைப்புகளுக்கு அருகில் கர்சரை வைக்கவும். |
03:33 | மூன்று பிணைப்பு நிலைகளிலும் க்ளிக் செய்க. |
03:37 | கார்பானிக் அமிலம்(H2CO3) அமைப்பு வரையப்பட்டது. |
03:40 | இப்போது கந்தக அமிலம் அமைப்பை வரைவோம். |
03:44 | Current element கீழிறங்கு அம்பு பட்டன் மீது க்ளிக் செய்க. |
03:47 | S ஐ தேர்க |
03:48 | Add or modify an atom tool மீது க்ளிக் செய்க. |
03:52 | காட்சி பகுதியில் க்ளிக் செய்க. |
03:55 | H2S ஐ கவனிக்கவும். |
03:57 | இப்போது காட்சி பகுதியில் எங்கேனும் O ஐ அழுத்துக |
04:01 | O மற்றும் Os என்ற இரு தேர்வுகளுடன் ஒரு துணை menu திறக்கிறது. |
04:06 | O ஐ தேர்க. |
04:08 | Add or modify an atom tool மீது க்ளிக் செய்க. |
04:11 | பின் Add a bond or change the multiplicity of an existing one tool மீது க்ளிக் செய்க. |
04:17 | Property menu ல், 200 அல்லது அதற்கு மேலாக Bond length மதிப்பை அதிகரிக்கவும். |
04:23 | S க்கு OH ன் மூன்று பிணைப்புகளை வரைய H2S மீது க்ளிக் செய்க. |
04:29 | S க்கு அருகே ஒரு நேர் மின்னூட்டத்தைக் கவனிக்கவும். |
04:32 | கந்தகத்தின் இணைத்திறன் 6 ஐ பூர்த்திசெய்ய வேண்டும் என்பதால் இது தோன்றுகிறது. |
04:39 | நான்காம் பிணைப்பிற்கு, முதலில் S மீது க்ளிக் செய்க. |
04:43 | இப்போது mouse ஐ விடுவிக்காமல் ஒரு பக்கதிற்கு பிணைப்பை இழுக்கவும். |
04:47 | இப்போது எதிர்பக்க பிணைப்புகளை இரட்டை பிணைப்புகளாக மாற்றுவோம். |
04:52 | Add a bond or change the multiplicity of an existing one tool மீது க்ளிக் செய்க. |
04:58 | பின அமைப்பில் எதிர் பக்கத்தில் உள்ள பிணைப்புகளின் மீது க்ளிக் செய்க. |
05:03 | நேர்மின்னூட்டம் தெரிவதில்லை என்பதை கவனிக்கவும். |
05:08 | கந்தக அமில அமைப்பு முடிந்தது. |
05:12 | அடுத்து கார்பானிக் அமிலம் மற்றும் கந்தக அமில அமைப்புகளில் இடஞ்சார்ந்த மின்னூட்டத்தை (local charge) சேர்ப்போம். |
05:18 | இடஞ்சார்ந்த மின்னூட்டத்தைக் காட்ட Decrement the charge of an atom tool மீது க்ளிக் செய்க. |
05:24 | கார்பானிக் அமில அமைப்பின் இரு O-H தொகுதிகளின் மீதும் க்ளிக் செய்க. |
05:30 | கார்போனேட் அயனி (Carbonate ion) CO3 2- உருவாக்கப்பட்டத்தை கவனிக்கவும். |
05:36 | கந்தக அமில அமைப்பின் மீது இடஞ்சார்ந்த மின்னூட்டத்தைக் காட்ட |
05:41 | Decrement the charge of an atom tool மீது க்ளிக் செய்க. |
05:44 | கந்தக அமிலத்தின் எதிரெதிரான இரு O-H தொகுதிகளின் மீது க்ளிக் செய்க . |
05:49 | சல்பேட் அயனி (Sulphate ion) SO4 2- உருவாக்கப்பட்டதை கவனிக்கவும். |
05:56 | பயிற்சியாக, |
05:57 | * நைட்ரிக் அமில (Nitric acid) அமைப்பை உருவாக்கவும் |
05:59 | * நைட்ரேட் அயனியில் (Nitrate ion) இடஞ்சார்ந்த மின்னூட்டத்தைக் காட்டவும் |
06:02 | பயிற்சியை முடித்தபின் அது இவ்வாறு இருக்க வேண்டும். |
06:07 | ஒரு அணுவில் எவ்வாறு இடஞ்சார்ந்த மின்னூட்டத்தை சேர்ப்பது என விரைவாக செய்துகாட்டுகிறேன். |
06:12 | காட்சிப்பகுதியில் எங்கேனும், capital N ஐ அழுத்தவும். |
06:16 | ஒரு துணை menu திறக்கிறது அதில் Na ஐ தேர்ந்தெடுக்கலாம். |
06:21 | Add or modify an atom tool மீது க்ளிக் செய்க |
06:24 | பின் காட்சிபகுதியில் க்ளிக் செய்க. |
06:27 | காட்சி பகுதியில் சோடியம் அணு தோன்றுகிறது. |
06:30 | Increment the charge of an atom tool மீது க்ளிக் செய்க. |
06:35 | பின் Na மீது க்ளிக் செய்க. |
06:37 | சோடியம் அணுவின் மீது நேர்மின்னூட்டத்தைக் கவனிக்கவும். |
06:41 | அதேபோலவே, ஒரு அணுவிற்கு ஒரு எதிர் மின்னூட்டத்தையும் சேர்க்கலாம். |
06:46 | Decrement the charge of an atom tool ஐ தேர்ந்தெடுப்பதன் மூலம் இதை செய்யலாம். |
06:51 | இப்போது வட்டமுறை மூலக்கூறுகளை வரையக் கற்போம். |
06:54 | அதற்கு, ஒரு புதிய (GChemPaint) ஜிகெம்பெய்ண்ட் விண்டோவை திறப்போம். |
06:59 | toolbar ல் Create a new file ஐகான் மீது க்ளிக் செய்க. |
07:03 | C அதாவது கார்பன் ஒரு தனிமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்க. |
07:09 | Bond length 200 அல்லது அதற்கு மேல் உள்ளதா எனவும் காண்க. |
07:14 | tool box ல் நான்காவது toolbar.... Cycle tool ஆகும் |
07:19 | இங்கே நாம் பயன்படுத்த கூடிய பல்வேறு toolகள் உள்ளன. |
07:22 | உதாரணமாக - |
07:24 | * Add a three membered cycle |
07:26 | * Add a four membered cycle |
07:29 | * மேலும் சில cycle toolகள் |
07:32 | பின் * Add a cycle tool. |
07:35 | Add a four membered cycle ஐ பயன்படுத்துவோம். |
07:40 | அதன் மீது க்ளிக் செய்க. |
07:42 | பின் காட்சி பகுதியில் க்ளிக் செய்க. |
07:44 | வளையத்தின் மூலைகளில் அணுக்களை சேர்ப்போம். |
07:49 | ஏதேனும் ஒரு மூலையில் ரைட் க்ளிக் செய்க. |
07:52 | ஒரு துணைmenu திறக்கிறது. Atom ஐ தேர்ந்தெடுத்து பின் Display symbol மீது க்ளிக் செய்க. |
07:58 | அதேபோல மற்ற அனைத்து மூலைகளிலும் அணுக்களை சேர்ப்போம். |
08:03 | பெறப்பட்ட அமைப்பு சைக்ளோப்யூட்டேன் (Cyclobutane). |
08:07 | இப்போது ஒரு வட்டமுறை சேர்மத்தை (mono-cyclic compound) இரு வட்டமுறை சேர்மமாக ( bi-cyclic compound) மாற்றுவோம். |
08:12 | Add a six membered cycle tool மீது க்ளிக் செய்க. |
08:16 | பின் காட்சி பகுதியின் மீது க்ளிக் செய்க. |
08:19 | வளையத்தின் பிணைப்பின் மீது கர்சரை வைத்து மீண்டும் க்ளிக் செய்க. |
08:24 | இரு வட்டமுறை சேர்மத்தை (Bi-cyclic compound) கவனிக்கவும். |
08:27 | file ஐ சேமிக்க, toolbar ல் Save the current file ஐகான் மீது க்ளிக் செய்க. |
08:32 | Save as dialogue box திறக்கிறது. |
08:35 | file பெயரை Editing Molecules என கொடுக்கவும் |
08:38 | Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
08:41 | சுருங்க சொல்ல. |
08:43 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
08:45 | * ஒரு அணுவில் கட்டுறா எலெக்ட்ரானை சேர்த்தல் |
08:48 | * கார்பானிக் அமிலம் (Carbonic acid) மற்றும் கந்தக அமிலத்தின் (Sulphuric acid) அமைப்புகளை வரைக |
08:53 | * அணுக்களின் தொகுதியில் ஒரு இடஞ்சார்ந்த மின்னூட்டத்தை சேர்த்தல் மற்றும் மாற்றுதல். |
08:58 | மேலும நாம் கற்றது, |
09:00 | * ஒரு அணுவில் ஒரு இடஞ்சார்ந்த மின்னூட்டத்தை சேர்த்தல் மற்றும் மாற்றுதல் |
09:04 | * வட்டமுறை மூலக்கூறுகளை சேர்த்தல் |
09:06 | * ஒரு வட்டமுறை மூலக்கூறுகளை இரு வட்டமுறை மூலக்கூறுகளாக மாற்றுதல். |
09:11 | பயிற்சியாக |
09:13 | * காட்சி பகுதியில் ஏழு உறுப்பினர் கொண்ட வட்டமுறையை சேர்க்கவும் |
09:16 | * அதை மூவட்டமுறை சேர்மமாக மாற்றவும். |
09:20 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org /What_a_Spoken_Tutorial |
09:24 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
09:27 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
09:32 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
09:36 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
09:40 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:46 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
09:50 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:57 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10:03 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |