Difference between revisions of "C-and-C++/C3/Arrays/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 4: Line 4:
  
 
|'''Narration'''  
 
|'''Narration'''  
 
  
 
|-  
 
|-  

Revision as of 17:59, 21 July 2014

Time Narration
00:01 C மற்றும் C++ ல் Arraysக்கான spoken tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த tutorial லில் நாம் கற்கபோவது,
00:09 array என்றால் என்ன.
00:11 array ஐ Declare செய்வது.
00:13 array ஐ initialize செய்வது.
00:16 arrayக்கு சில உதாரணங்கள்
00:18 சில பொதுவான பிழைகள் அவற்றிற்கான தீர்வுகள்
00:22 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது,
00:25 Ubuntu இயங்குதளம் version 11.04
00:30 gcc மற்றும் g++ Compiler version 4.6.1 .


00:36 Arrayக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00:39 Array என்பது data அல்லது ஒரே data-type கொண்ட elementகளின் தொகுப்பு ஆகும்.
00:44 Array index 0லிருந்து ஆரம்பிக்கிறது.
00:48 முதல் element... index 0 ல் சேமிக்கப்படுகிறது.
00:52 மூன்று வகை arrayகள் உள்ளன:
00:55 Single dimensional array.
00:57 Two dimensional array மற்றும்
00:59 Multi-dimensional array.
01:01 இந்த tutorial லில் single dimensional array பற்றி விவாதிப்போம்.
01:06 single dimensional array ஐ declare செய்வதைக் காண்போம்.
01:09 அதற்கு Syntax:
01:11 data-type... arrayன் பெயர் பின் அளவு
01:16 உதாரணமாக, இங்கே 5 elementகளைக் கொண்ட star என்ற ஒரு integer array ஐ declare செய்துள்ளோம்
01:24 array index star 0 ல் ஆரம்பித்து star 4 வரை
01:29 ஒரு arrayஐ declare செய்வதைப் பார்த்தோம்


01:32 இப்போது ஒரு arrayஐ Initialize செய்வதைக் காணலாம்.
01:35 இதற்கு Syntax:
01:38 data-type, arrayன் பெயர் , அளவு..... is equal to elements


01:44 உதாரணமாக இங்கே அளவு 3 உடன் integer array star ஐ declare செய்துள்ளோம். அந்த array ன் elementகள் 1,2 மற்றும் 3
01:54 இங்கே index star 0 ல் ஆரம்பித்து star 2 வரை
01:59 இப்போது உதாரணங்களுக்கு வருவோம்
02:01 programஐ editorல் ஏற்கனவே எழுதிவைத்துள்ளேன்.
02:04 அதை திறக்கிறேன்.
02:06 நம் file பெயர் array.c என்பதை கவனிக்க .


02:10 இந்த programல், array ல் சேமிக்கப்பட்ட elementகளின் கூட்டுத்தொகையைக் கணக்கிடுவோம்
02:16 இப்போது இந்த code ஐ விளக்குகிறேன்
02:18 இது நம் header file.


02:20 இது நம் main function.


02:22 இங்கே, அளவு 3 உடன் array star ஐ declare மற்றும் initialize செய்துள்ளோம்
02:28 array ன் elementகள் 4, 5 மற்றும் 6
02:33 பின் ஒரு integer variable sum ஐ declare செய்துள்ளோம்
02:36 இங்கே array ன் element களை கூட்டி முடிவை sumல் சேமிக்கிறோம்.
02:41 4 index 0ல் சேமிக்கப்படும், 5 index 1ல் சேமிக்கப்படும் மற்றும் 6 index 2 ல் சேமிக்கப்படும் என்பதைக் கவனிக்கவும்
02:50 பின் sumஐ அச்சடிக்கிறோம்.
02:52 இது நம் return statement.
02:54 இப்போது Saveல் சொடுக்கவும்.
02:57 programஐ இயக்குவோம்.
02:59 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும்
03:09 compile செய்ய எழுதுக, gcc space array dot c space hypen o array பின் Enter ஐ அழுத்துக.
03:19 இயக்க எழுதுக, dot slash array. Enterஐ அழுத்துக
03:24 இங்கே வெளியீடு காட்டப்படுகிறது,
03:26 The sum is 15.
03:28 இப்போது நாம் சந்திக்கக்கூடிய சில பொதுவான பிழைகளைக் காணலாம்


03:32 programக்கு வருவோம்.
03:34 இங்கே வரி எண் 4 ல் curly bracketகளை மறக்கிறோம் எனில்.
03:39 Saveல் சொடுக்குவோம். நடப்பதைக் காண்போம்
03:42 terminalக்கு வருவோம்.
03:44 முன்பு போல compile செய்வோம்.
03:47 ஒரு பிழையைக் காண்கிறோம்
03:49 Invalid initializer மற்றும் Expected identifier or bracket before numeric constant.
03:56 இது ஏனெனில் arrayகளை curly bracketகளினுள் initialize செய்ய வேண்டும்.
04:01 நம் programக்கு வருவோம். இந்த பிழையை சரிசெய்வோம்.
04:04 இங்கே வரி எண் 4 ல் curly brackets ஐ இடுவோம்.
04:09 இப்போது Saveல் சொடுக்குக
04:12 இயக்குவோம். terminal க்கு வருவோம்
04:15 முன்பு போல compile செய்வோம். முன்புபோல இயக்குவோம்.


04:19 ஆம் இது வேலை செய்கிறது


04:21 இப்போது இதே program ஐ C++ல் இயக்குவோம்.
04:25 நம் programக்கு வருவோம்.
04:28 இங்கே சிலவற்றை மாற்றுகிறேன்.
04:30 முதலில் Shift , Ctrl மற்றும் S விசைகளை ஒருசேர அழுத்துக
04:38 இப்போது dot cpp extension உடன் file ஐ சேமிக்கவும். Saveல் சொடுக்குக
04:44 header file ஐ iostream என மாற்றுவோம்
04:49 இப்போது using statementஐ சேர்ப்போம்
04:55 ஒரு array ஐ declare மற்றும் initialize செய்வது C++ ல் ஒன்றே.
05:01 எனவே இங்கு எதையும் மாற்ற வேண்டியதில்லை.
05:04 இப்போது printf statement ஐ cout statementஆக மாற்றுவோம்.
05:09 format specifier மற்றும் back slash nஐ நீக்குக, இப்போது commaஐ நீக்கி இரு opening angle bracketகளை இடுக
05:17 இங்கே bracket ஐ நீக்குக. மீண்டும் இரு opening angle bracketகளை இட்டு இரட்டை மேற்கோள்களில் எழுதுக back slash n
05:26 இப்போது Saveல் சொடுக்குக.
05:29 இயக்குவோம். terminalக்கு வருவோம்.
05:32 compile செய்ய எழுதுக, g++ space array dot cpp space hyphen o space array1.
05:42 இங்கே array1 உள்ளது. ஏனெனில் நாம் file array dot c க்கான வெளியீட்டு parameter array ஐ overwrite செய்ய விரும்பவில்லை
05:51 இப்போது Enterஐ அழுத்துக.
05:54 இயக்க எழுதுக, dot slash array1. Enterஐ அழுத்துக
05:59 வெளியீடு காட்டப்படுகிறது, The sum is 15
06:02 இது நம் C code போன்று இருப்பதைக் காணலாம்
06:07 இப்போது மற்றொரு பொதுவான பிழையைக் காணலாம்.


06:10 programக்கு வருவோம்
06:12 இங்கே வரி எண் 7
06:14 star[1], star[2] மற்றும் star[3] என எழுதுகிறேன் எனில்
06:23 Saveல் சொடுக்குக.
06:24 இயக்குவோம். நம் terminalக்கு வருவோம்
06:28 promptஐ துடைக்கிறேன்.
06:30 முன்பு போல compile செய்வோம்.
06:33 முன்புபோல இயக்குகிறோம்.
06:36 எதிர்பாராத வெளியீட்டைக் காண்கிறோம்.


06:39 இது ஏனெனில் array index 0லிருந்து ஆரம்பிக்கிறது.
06:43 நம் programக்கு வருவோம். array index ஒன்றிலிருந்து ஆரம்பிப்பதை இங்கு காணலாம்.
06:49 எனவே இது ஒரு பிழையைத் தருகிறது. பிழையைச் சரிசெய்வோம்.
06:54 இங்கே 0ஐ இடுக. 1 மற்றும் 2. Saveல் சொடுக்குக
07:02 இயக்குவோம். நம் terminalக்கு வருவோம்
07:05 முன்புபோல compile செய்வோம். முன்புபோல இயக்குவோம்
07:09 ஆம இது வேலைசெய்கிறது.
07:12 இப்போது, நம் slideகளுக்கு வருவோம்
07:14 சுருங்கசொல்ல
07:16 இந்த tutorial லில் நாம் கற்றது,


07:19 Arrays.
07:20 Single Dimensional Arrays ஐ declare செய்வது.
07:23 Single Dimensional Arrays ஐ initialize செய்வது.


07:26 உதாரணமாக int star[3]={4, 5, 6}
07:31 arrayன் elementகளை சேர்க்க, உதாரணமாக sum is equal to star 0 plus star 1 plus star 2
07:40 பயிற்சியாக,
07:41 ஒரு array ல் சேமிக்கப்பட்ட elementகளின் வித்தியாசத்தைக் கணக்கிட ஒரு program எழுதுக.


07:47 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
07:50 இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது
07:53 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
07:57 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
08:06 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
08:13 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

08:25 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:30 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst