Difference between revisions of "Digital-Divide/D0/Model-Village-Hiware-Bazar/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 98: Line 98:
 
| 01:51
 
| 01:51
 
| குற்ற விகிதம் கடுமையாக குறைந்துள்ளது
 
| குற்ற விகிதம் கடுமையாக குறைந்துள்ளது
.
+
 
|-
 
|-
 
| 01:54
 
| 01:54

Revision as of 11:21, 14 July 2014

Time Narration
00:01 மாதிரி கிராமம் : ஹிவரே பசார் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:09 1. ஹிவரே பசார் மக்கள் சந்தித்த பிரச்சனைகள்
00:13 2. ஹிவரே பசாரின் தற்போதைய நிலை
00:16 3. இந்த மாற்றங்களை கொண்டுவர உதவிய செயல்முறைகள்.
00:20 ஹிவரே பசார் மக்கள் சந்தித்த பிரச்சனைகள்
00:24 ஹிவரே பசார் மக்கள் விவசாயத்திற்கு மழையை நம்பியிருந்தனர்.
00:29 தீவிர மண் அரிப்பால் நிலம் தரம் இழந்திருந்தது.
00:35 குடிநீர் பற்றாக்குறை இருந்தது.
00:40 அவர்களிடம் போதுமான தீவினம் இல்லை.
00:44 விறகுகளும் இல்லை.
00:49 இவை பின்வரும் பல சமூக பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது:-
00:53 வேலைவாய்ப்பினமை.
00:55 மக்கள் வேலை கிடைக்க மிக சிரமபட்டனர்.
00:58 இடம்பெயர்வு
01:00 மக்கள் கிராமத்தில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர்.
01:03 குற்ற விகிதமும் அதிகரித்தது.
01:06 ஹிவரே பசாரின் தற்போதைய நிலை
01:09 1995 ல் ரூ 830 ஆக இருந்த தனிநபர் வருமானம் 2012 ல் ரூ 30,000 ஆக அதிகரித்துள்ளது
01:19 கிராமத்தில் 6 கோடி மக்கள் உள்ளனர்
01:23 1995 ல் 168 ஆக இருந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2012 ல் 3 ஆக குறைந்துள்ளது
01:34 அதே காலகட்டத்தில், ஒரு நாளின் பால் உற்பத்தி 150 லிட்டரில் இருந்து 4000 லிட்டர்களாக அதிகரித்துள்ளது.
01:43 கல்வியறிவு விகிதம் 30% லிருந்து 95% ஆக அதிகரித்துள்ளது
01:51 குற்ற விகிதம் கடுமையாக குறைந்துள்ளது
01:54 வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.
01:57 நிலையை உயர்த்த உதவிய செயல்முறைகள்.
02:00 ஐந்து முனை அணுகுமுறை அல்லது பஞ்ச்சுட்ரி(Panchsutri)


02:05 1.இலவச தன்னார்வ தொழிலாளர் அல்லது ஸ்ரம்டான்(Shramdaan)
02:09 2.அதிக மேய்ச்சலுக்கு தடை அல்லது சரை பந்தி(Charai bandi)


02:14 3.மரம் வெட்டுதலுக்கு தடை அல்லது குர்ஹட் பந்தி(Kurhad bandi)
02:19 4.பூரண மதுவிலக்கு அல்லது ந ஷா பந்தி(Nasha Bandi)
02:25 5. குடும்ப கட்டுப்பாடு அல்லது குடும்ப் நியோஜன்(Kutumb Niyojan)
02:30 ஸ்ரம்டான்(Shramdaan)
02:32 சமூக நலனுக்காக மக்கள் ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய ஆரம்பித்தனர்.
02:38 கிராமத்தினர் ஒரு வேலை கலாச்சாரத்தை உருவாக்கினர்.
02:42 நீரோட்டத்தின் வேகத்தை குறைக்க அவர்கள் ஒன்றாக வந்து மலைக்கு அருகே அணைகளை கட்டினர்
02:50 இந்த அணைகள் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும் மண் அரிப்பை குறைக்கவும் உதவின.
02:58 சரை பந்தி(CharaiBandi)
03:00 அதிகமான கால்நடை மேய்ச்சல் தடைசெய்யப்பட்டது.
03:05 அதிகமான மேய்ச்சல் மண் அரிப்புக்கும் நிலம் பாலைவனமாதலுக்கும் வழிவகுக்கிறது.
03:12 அதிக மேய்ச்சலுக்கு தடை -
03:14 1994-95 ல் புற்களின் உற்பத்தி 200 டன்களில் இருந்து 2001-2002 ல் 5000-6000 டன்களுக்கும் மேலே அதிகரித்துள்ளது
03:30 குர்ஹர்ட் பந்தி(Kurhad Bandi)
03:32 மரம் வெட்டுதல் தடை செய்யப்பட்டது.
03:35 மரங்கள் மண் அரிப்பை தடுக்க உதவுகின்றன
03:40 மண் அரிப்பு நிலம் தரமிழப்பிற்கு காரணமாகிறது. அதனால் விவசாய உற்பத்தி குறைகிறது.
03:47 மரங்கள் மழைநீரின் வேகத்தை குறைத்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.
03:54 மரக்கழிவுகள் மண் வளத்தை அதிகரிக்க உதவுகின்றன.
04:00 ந ஷா பந்தி(Nasha Bandi)
04:02 22 சாராயக் கடைகள் மூடப்பட்டன
04:05 சாராயம் குடிப்பதும் புகையிலையும் முற்றிலும் தடைசெய்யப்பட்டன
04:10 சாராயக்கடை வைத்திருந்தவர்களுக்கு கடன் வழங்க கிராம சபை வங்கிகளுடன் இணைந்தது
04:17 குற்ற விகிதம் குறைந்தது
04:20 சமூகத்திற்கு உதவும் பல ஆக்க பணிகளில் மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர்
04:26 குடும்ப் நியோஜன்(Kutumb Niyojan)
04:28 குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற விதி அமுல்படுத்தப்பட்டது
04:33 ஆயிரத்திற்கு 11 என பிறப்பு விகிதம் குறைக்கப்பட்டிருந்தது
04:39 இது பெண்களுக்கு கர்ப்ப காலம் சம்பந்தப்பட்ட ஆபத்துகளை தடுக்கிறது
04:44 குடும்ப கட்டுப்பாடும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கிறது
04:49 இது மக்களை வலுப்படுத்தவும் குடும்ப கல்வியை மேம்படுத்தவும் உதவுகிறது
04:55 ஒரு நிலையான சமூகத்தை உருவாக்குவதற்கு குடும்ப கட்டுப்பாடு முக்கியமானதாகும்
05:01 இந்த டுடோரியலில் இருந்து நாம் கற்றது
05:04 கிராம மக்கள் ஒன்றிணைந்தால் நல்ல மாற்றங்களை கொண்டுவரலாம்
05:09 பஞ்ச் சுட்ரி (Panchsutri) கொள்கைகள் மிக பயனுள்ளது என்பதை நிரூபித்துள்ளன
05:15 இந்த செயல்முறைகளை பின்பற்றினால் இது போன்ற மேலும் பல மாதிரி கிராமங்களை உருவாக்க முடியும்
05:21 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
05:24 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
05:28 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
05:32 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
05:37 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
05:44 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
05:48 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
05:55 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06:01 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:09 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
06:21 இந்த டுடோரியலுக்கு ஸ்க்ரிப்ட் மயன்க் மிலின்ட், ட்ராயிங்ஸ் செளரப் காட்கில்
06:28 தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst, Ranjana