Difference between revisions of "Digital-Divide/D0/Model-Village-Hiware-Bazar/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 127: Line 127:
 
|-
 
|-
 
| 02:19
 
| 02:19
| 4.பூரண மதுவிலக்கு அல்லது '''நஷா பந்தி(Nasha Bandi)'''
+
| 4.பூரண மதுவிலக்கு அல்லது '''ந ஷா பந்தி(Nasha Bandi)'''
  
 
|-
 
|-
Line 199: Line 199:
 
|-
 
|-
 
|  04.00
 
|  04.00
| '''நஷா பந்தி(Nasha Bandi)'''
+
| '''ந ஷா பந்தி(Nasha Bandi)'''
  
 
|-
 
|-

Revision as of 18:56, 9 June 2014

Visual Cue Narration
00:01 மாதிரி கிராமம் : ஹிவரே பசார் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:09 1. ஹிவரே பசார் மக்கள் சந்தித்த பிரச்சனைகள்
00:13 2. ஹிவரே பசாரின் தற்போதைய நிலை
00:16 3. இந்த மாற்றங்களை கொண்டுவர உதவிய செயல்முறைகள்.
00:20 ஹிவரே பசார் மக்கள் சந்தித்த பிரச்சனைகள்
00:24 ஹிவரே பசார் மக்கள் விவசாயத்திற்கு மழையை நம்பியிருந்தனர்.
00:29 தீவிர மண் அரிப்பால் நிலம் தரம் இழந்திருந்தது.
00.35 குடிநீர் பற்றாக்குறை இருந்தது.
00.40 அவர்களிடம் போதுமான தீவினம் இல்லை.
00.44 விறகுகளும் இல்லை.
00.49 இவை பின்வரும் பல சமூக பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது:-
00.53 வேலைவாய்ப்பினமை.
00.55 மக்கள் வேலை கிடைக்க மிக சிரமபட்டனர்.
00.58 இடம்பெயர்வு
01:00 மக்கள் கிராமத்தில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர்.
01:03 குற்ற விகிதமும் அதிகரித்தது.
01:06 ஹிவரே பசாரின் தற்போதைய நிலை
01:09 1995 ல் ரூ 830 ஆக இருந்த தனிநபர் வருமானம் 2012 ல் ரூ 30,000 ஆக அதிகரித்துள்ளது
01.19 கிராமத்தில் 6 கோடி மக்கள் உள்ளனர்
01.23 1995 ல் 168 ஆக இருந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2012 ல் 3 ஆக குறைந்துள்ளது
01.34 அதே காலகட்டத்தில், ஒரு நாளின் பால் உற்பத்தி 150 லிட்டரில் இருந்து 4000 லிட்டர்களாக அதிகரித்துள்ளது.
01:43 கல்வியறிவு விகிதம் 30% லிருந்து 95% ஆக அதிகரித்துள்ளது
01.51 குற்ற விகிதம் கடுமையாக குறைந்துள்ளது

.

01.54 வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.
01.57 நிலையை உயர்த்த உதவிய செயல்முறைகள்.
02.00 ஐந்து முனை அணுகுமுறை அல்லது பஞ்ச்சுட்ரி(Panchsutri)


02.05 1.இலவச தன்னார்வ தொழிலாளர் அல்லது ஸ்ரம்டான்(Shramdaan)
02:09 2.அதிக மேய்ச்சலுக்கு தடை அல்லது சரை பந்தி(Charai bandi)


02:14 3.மரம் வெட்டுதலுக்கு தடை அல்லது குர்ஹட் பந்தி(Kurhad bandi)
02:19 4.பூரண மதுவிலக்கு அல்லது ந ஷா பந்தி(Nasha Bandi)
02.25 5. குடும்ப கட்டுப்பாடு அல்லது குடும்ப் நியோஜன்(Kutumb Niyojan)
02.30 ஸ்ரம்டான்(Shramdaan)
02.32 சமூக நலனுக்காக மக்கள் ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய ஆரம்பித்தனர்.
02.38 கிராமத்தினர் ஒரு வேலை கலாச்சாரத்தை உருவாக்கினர்.
02.42 நீரோட்டத்தின் வேகத்தை குறைக்க அவர்கள் ஒன்றாக வந்து மலைக்கு அருகே அணைகளை கட்டினர்
02.50 இந்த அணைகள் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும் மண் அரிப்பை குறைக்கவும் உதவின.
02.58 சரை பந்தி(CharaiBandi)
03.00 அதிகமான கால்நடை மேய்ச்சல் தடைசெய்யப்பட்டது.
03.05 அதிகமான மேய்ச்சல் மண் அரிப்புக்கும் நிலம் பாலைவனமாதலுக்கும் வழிவகுக்கிறது.
03.12 அதிக மேய்ச்சலுக்கு தடை -
03.14 1994-95 ல் புற்களின் உற்பத்தி 200 டன்களில் இருந்து 2001-2002 ல் 5000-6000 டன்களுக்கும் மேலே அதிகரித்துள்ளது
03.30 குர்ஹர்ட் பந்தி(Kurhad Bandi)
03.32 மரம் வெட்டுதல் தடை செய்யப்பட்டது.
03.35 மரங்கள் மண் அரிப்பை தடுக்க உதவுகின்றன
03.40 மண் அரிப்பு நிலம் தரமிழப்பிற்கு காரணமாகிறது. அதனால் விவசாய உற்பத்தி குறைகிறது.
03.47 மரங்கள் மழைநீரின் வேகத்தை குறைத்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.
03.54 மரக்கழிவுகள் மண் வளத்தை அதிகரிக்க உதவுகின்றன.
04.00 ந ஷா பந்தி(Nasha Bandi)
04.02 22 சாராயக் கடைகள் மூடப்பட்டன
04.05 சாராயம் குடிப்பதும் புகையிலையும் முற்றிலும் தடைசெய்யப்பட்டன
04.10 சாராயக்கடை வைத்திருந்தவர்களுக்கு கடன் வழங்க கிராம சபை வங்கிகளுடன் இணைந்தது
04:17 குற்ற விகிதம் குறைந்தது
04:20 சமூகத்திற்கு உதவும் பல ஆக்க பணிகளில் மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர்
04.26 குடும்ப் நியோஜன்(Kutumb Niyojan)
04.28 குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற விதி அமுல்படுத்தப்பட்டது
04.33 ஆயிரத்திற்கு 11 என பிறப்பு விகிதம் குறைக்கப்பட்டிருந்தது
04.39 இது பெண்களுக்கு கர்ப்ப காலம் சம்பந்தப்பட்ட ஆபத்துகளை தடுக்கிறது
04.44 குடும்ப கட்டுப்பாடும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கிறது
04.49 இது மக்களை வலுப்படுத்தவும் குடும்ப கல்வியை மேம்படுத்தவும் உதவுகிறது
04.55 ஒரு நிலையான சமூகத்தை உருவாக்குவதற்கு குடும்ப கட்டுப்பாடு முக்கியமானதாகும்
05.01 இந்த டுடோரியலில் இருந்து நாம் கற்றது
05:04 கிராம மக்கள் ஒன்றிணைந்தால் நல்ல மாற்றங்களை கொண்டுவரலாம்
05:09 பஞ்ச் சுட்ரி (Panchsutri) கொள்கைகள் மிக பயனுள்ளது என்பதை நிரூபித்துள்ளன
05.15 இந்த செயல்முறைகளை பின்பற்றினால் இது போன்ற மேலும் பல மாதிரி கிராமங்களை உருவாக்க முடியும்
05:21 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
05.24 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
05.28 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
05.32 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
05.37 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
05.44 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
05.48 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
05.55 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06.01 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06.09 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
06.21 இந்த டுடோரியலுக்கு ஸ்க்ரிப்ட் மயன்க் மிலின்ட், ட்ராயிங்ஸ் செளரப் காட்கில்
06.28 தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst, Ranjana