Difference between revisions of "C-and-C++/C4/Function-Call/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.01 |'''C மற்றும் C++ ல் Function calls''' குறித்த ஸ்போகன் டுடோரிய…') |
|||
Line 190: | Line 190: | ||
|- | |- | ||
| 03.37 | | 03.37 | ||
− | | இவ்வாறு மதிப்புகள் | + | | இவ்வாறு மதிப்புகள் இடமாற்றப்படுகின்றன. |
|- | |- | ||
Line 214: | Line 214: | ||
|- | |- | ||
| 04.04 | | 04.04 | ||
− | |பின் function '''swap''' ஐ | + | |பின் function '''swap''' ஐ செய்வோம் |
|- | |- | ||
Line 262: | Line 262: | ||
|- | |- | ||
| 04.57 | | 04.57 | ||
− | |இது இரண்டாவது program... | + | |இது இரண்டாவது program... reference மூலம் function ஐ call செய்வது. |
|- | |- |
Revision as of 09:01, 8 May 2014
Time | Narration |
00.01 | C மற்றும் C++ ல் Function calls குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00.07 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது function call ன் வகைகளான |
00.13 | மதிப்பு மூலம் call செய்வது. |
00.14 | reference மூலம் call செய்வது. |
00.16 | இதை ஒரு உதாரணத்தின் மூலம் செய்யலாம். |
00.19 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10 |
00.26 | gcc மற்றும் g++ Compiler பதிப்பு 4.6.1 |
00.31 | மதிப்பு மூலம் call செய்யும் functionகளின் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00.35 | இது function க்கு arguments ஐ அனுப்பும் ஒரு வழி ஆகும். |
00.40 | மதிப்பு மூலம் ஒரு variable ஐ அனுப்பும் போது... function க்கு அனுப்பும் முன் அது variable ஐ ஒரு பிரதி எடுக்கும். |
00.48 | function க்குள் arguments ல் செய்யப்பட்ட மாற்றங்கள் function ல் இருக்கும். |
00.54 | இது function க்கு வெளியில் எதையும் பாதிக்காது. |
00.58 | மதிப்பு மூலம் call செய்யும் function க்கு ஒரு program ஐ காண்போம். |
01.02 | Editor ல் ஏற்கனவே program ஐ எழுதி வைத்துள்ளேன். அதை திறக்கிறேன். |
01.08 | நம் file பெயர் callbyval.c என்பதைக் கவனிக்க |
01.13 | இந்த program ல் ஒரு எண்ணின் கனத்தைக் கணக்கிடுவோம். இப்போது code ஐ விளக்குகிறேன். |
01.19 | இது நம் header file |
01.21 | இங்கே ஒரு argument int x உடன் ஒரு function cube உள்ளது |
01.27 | இந்த function ல் x ன் கனத்தைக் கணக்கிட்டு x ன் மதிப்பைத் திருப்புவோம். |
01.33 | இது நம் main function. |
01.36 | இங்கே n ன் மதிப்பை 8 என கொடுப்போம். n ஒரு integer variable |
01.43 | பின் function cube ஐ call செய்வோம். |
01.45 | பின் n ன் மதிப்பையும் n ன் கனத்தையும் அச்சடிப்போம். |
01.49 | இது நம் return statement. |
01.52 | இப்போது program ஐ இயக்குவோம். |
01.54 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவைத் திறப்போம். |
02.02 | கம்பைல் செய்ய டைப் செய்க gcc space callbyval.c space hyphen o space val. எண்டரை அழுத்துக |
02.12 | இப்போது டைப் செய்க ./val (dot slash val). எண்டரை அழுத்துக |
02.16 | வெளியீடு Cube of 8 is 512 என காட்டப்படுகிறது |
02.23 | இப்போது reference மூலம் function ஐ call செய்வதைக் காண்போம். |
02.26 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
02.29 | இது function க்கு arguments ஐ அனுப்பும் மற்றொரு முறை ஆகும். |
02.33 | இந்த முறை... மதிப்பிற்கு பதில் argument ன் address ஐ பிரதி எடுக்கிறது.. |
02.39 | Function க்குள் argumentகளில் செய்யப்படும் மாற்றங்கள் வெளியேயும் அவற்றை பாதிக்கலாம். |
02.45 | இதில் argumentகளை pointer type யாக declare செய்ய வேண்டும். |
02.50 | Reference மூலம் function ஐ call செய்வதற்கான ஒரு உதாரணத்தைக் காணலாம். |
02.54 | நம் file பெயர் callbyref.c என்பதை கவனிக்க |
02.59 | இது நம் header file stdio.h |
03.03 | பின் function swap உள்ளது |
03.06 | இந்த function... variable களின் மதிப்பை இடமாற்றும். |
03.10 | a ன் மதிப்பு b ல் சேமிக்கப்படும். b ன் மதிப்பு a ல் சேமிக்கப்படும். |
03.15 | Function க்கு அனுப்பப்பட்ட arguments... pointer type என்பதைக் காண்க |
03.21 | இங்கே ஒரு integer variable t ஐ declare செய்துள்ளோம் |
03.25 | a ன் முதல் மதிப்பு t ல் சேமிக்கப்படுகிறது. |
03.28 | பின் b ன் மதிப்பு a ல் சேமிக்கப்படுகிறது. |
03.32 | பின் t ன் மதிப்பு b ல் சேமிக்கப்படுகிறது |
03.37 | இவ்வாறு மதிப்புகள் இடமாற்றப்படுகின்றன. |
03.40 | இது நம் main function. |
03.42 | இங்கே இரு integer variableகளை i மற்றும் j என declare செய்துள்ளோம். |
03.49 | பின் i மற்றும் j ன் மதிப்புகளை பயனரிடமிருந்து வாங்குகிறோம். |
03.53 | Ampersand i மற்றும் Ampersand j... i மற்றும் j ன் memory address ஐ தரும். |
03.59 | முதலில் இடமாற்றுதலுக்கு முன் மதிப்புகளை அச்சடிப்போம். |
04.04 | பின் function swap ஐ செய்வோம் |
04.06 | பின் இடமாற்றியபின் மதிப்புகளை அச்சடிப்போம். |
04.10 | இது நம் return statement. |
04.13 | இப்போது program ஐ இயக்குவோம் |
04.16 | நம் டெர்மினலுக்கு வருவோம். |
04.19 | கம்பைல் செய்ய டைப் செய்க gcc space callbyref dot c space hyphen o space ref. எண்டரை அழுத்துக |
04.29 | இப்போது டைப் செய்க dot slash ref. எண்டரை அழுத்துக |
04.33 | Enter the values என காண்கிறோம். நான் 6 ஐயும் 4 ஐயும் தருகிறேன் |
04.40 | காட்டப்படும் வெளியீடு, Before swapping 6 and 4 |
04.44 | After swapping 4 and 6 |
04.48 | இப்போது அதே Program ஐ C++ ல் எவ்வாறு இயக்குவது என காணலாம். |
04.53 | என்னிடம் அந்த code உள்ளது, அதை பார்ப்போம். |
04.57 | இது இரண்டாவது program... reference மூலம் function ஐ call செய்வது. |
05.01 | நம் file பெயர் callbyref.cpp என்பதைக் காண்க |
05.06 | code ஐ காண்போம் |
05.08 | இது நம் header file iostream |
05.12 | இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம் |
05.16 | Function ஐ declare செய்வது C++ லும் ஒன்றே. |
05.19 | இதில் argumentகளை ampersand x மற்றும் ampersand y என அனுப்புகிறோம். |
05.25 | இது x மற்றும் y ன் memory address ஐ தரும். |
05.29 | பின் மதிப்புகளை இடமாற்றுவோம். |
05.32 | மீதமுள்ள code நம் C code போன்றதே. |
05.36 | printf statement க்கு பதில் cout உம் scanf statement க்கு பதில் cin ம் இட வேண்டும் |
05.44 | இப்போது program ஐ இயக்குவோம். நம் டெர்மினலுக்கு வருவோம் |
05.48 | கம்பைல் செய்ய டைப் செய்க; g++ space callbyref.cpp space hyphen o space ref1, எண்டரை அழுத்துக |
06.00 | இப்போது டைப் செய்க dot slash ref1, எண்டரை அழுத்துக |
06.05 | இங்கே இது காட்டுவது: |
06.07 | Enter values of a and b |
06.10 | 4 மற்றும் 3 என தருகிறேன் |
06.13 | வெளியீடு காட்டப்படுகிறது |
06.15 | Before swapping a and b 4 and 3 |
06.19 | After swapping a and b 3 and 4 |
06.23 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06.26 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம். |
06.30 | சுருங்க சொல்ல நாம் கற்றது: |
06.32 | மதிப்பு மூலம் function ஐ call செய்வது. |
06.34 | Reference மூலம் function ஐ call செய்வது. |
06.37 | பயிற்சியாக |
06.38 | C++ ல் மதிப்பு மூலம் call செய்வதைப் பயன்படுத்தி ஒரு எண்ணின் கனத்தைக் கணக்கிட இதுபோன்ற ஒரு program எழுதுக. |
06.46 | கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
06.49 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
06.52 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
06.56 | ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
07.01 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07.05 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07.11 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07.15 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07.23 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
07.27 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |