C-and-C++/C2/First-C++-Program/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:02 | முதல் C++ program குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorial-லில், நாம் கற்க போவது |
00:10 | C++ program ஐ எழுதுதல் |
00:13 | அதை compile செய்தல், இயக்குதல் |
00:17 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் |
00:22 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது Ubuntu version 11.10 மற்றும் G++ Compiler version 4.5.2 |
00:35 | இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய, |
00:38 | Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும் |
00:44 | சில editorகள் vim மற்றும் gedit |
00:48 | நான் gedit ஐ பயன்படுத்துகிறேன் |
00:51 | இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் http://spoken-tutorial.org |
00:56 | ஒரு உதாரணத்தின் மூலம் C++ program எழுதுவதைப் பார்ப்போம் |
01:01 | Ctrl, Alt மற்றும் T ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும் |
01:09 | text editor ஐ திறக்க prompt ல் type செய்க |
01:13 | “gedit” space “talk” dot “cpp” space ampersand “&”. |
01:21 | prompt லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம் |
01:25 | அனைத்து C++ fileகளும் dot “cpp” extension ஐ கொண்டிருக்கும் என்பதை குறித்துக்கொள்ளவும் |
01:31 | Enter ஐ அழுத்தவும் |
01:33 | text editor திறந்துள்ளது |
01:36 | program ஐ எழுத ஆரம்பிக்கலாம் |
01:38 | எழுதுக - double slash “//” space |
01:41 | “My first C++ program”. |
01:44 | double slash வரியை comment செய்ய பயன்படுகிறது |
01:49 | program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது |
01:52 | இது ஆவணமாக்கலுக்கு பயன்படும் |
01:55 | இது program ன் தகவலைக் கொடுக்கிறது |
01:59 | double slash... single line comment எனப்படும். Enterஐ அழுத்தவும் |
02:05 | எழுதுக hash “#include” space opening angle bracket closing angle bracket . |
02:13 | முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம் |
02:20 | bracket னுள் எழுதுக “iostream” . |
02:23 | iostream என்பது header file |
02:26 | இந்த file... C++ ல் standard input output functionகளின் declaration ஐ சேர்க்கிறது. Enter ஐ அழுத்துக |
02:35 | எழுதுக “using” space “namespace” space “std” மற்றும் semicolon “;” . |
02:45 | using statement... compiler க்கு std namespace ஐ பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறது |
02:52 | namespace என்பது பெயர் மோதல்களை தவிர்ப்பதற்கே. |
02:56 | இது identifierகளின் பெயர்களை localize செய்வதன் மூலம் செய்யப்படுகிறது |
03:01 | இது ஒரு declarative region ஐ உருவாக்குகிறது; scope ஐ வரையறுக்கிறது |
03:05 | ஒரு namespace னுள் வரையறுக்கப்பட்ட எதுவும் அந்த namespace ன் SCOPE ல் இருக்கும் |
03:11 | முழு standard C++ library உம் declare செய்யப்படும் std தான் இங்கே namespace. Enter ஐ அழுத்துக. |
03:20 | எழுதுக “int” space “main” opening bracket “(” closing bracket “)” . |
03:27 | main ஒரு சிறப்பு function |
03:30 | program ன் இயக்கம் இந்த வரியிலிருந்து ஆரம்பிப்பதாக இது சொல்கிறது |
03:35 | opening மற்றும் closing bracket... Parenthesis எனப்படும். |
03:39 | main ஐ அடுத்துவரும் Parenthesis... main ஒரு function என்கிறது |
03:45 | இங்கே int main function க்கு arguments இல்லை. இது ஒரு integer வகை மதிப்பைத் திருப்புகிறது |
03:52 | data types பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். |
03:56 | main function பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம். |
04:02 | ஒவ்வொரு program மும் ஒரு main function ஐ கொண்டிருக்க வேண்டும் |
04:05 | ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல |
04:09 | இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது |
04:13 | main க்கு arguments இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது |
04:19 | argumentகளின் கோட்பாட்டை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம். இப்போது நம் program க்கு வருவோம். Enter ஐ அழுத்துக. |
04:29 | எழுதுக opening curly bracket “{” |
04:32 | opening curly bracket... function main ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது. |
04:37 | பின் closing curly bracket “}” |
04:40 | closing curly bracket... function main ன் முடிவை குறிக்கிறது. |
04:45 | இப்போது bracket னுள் இருமுறை Enter செய்க |
04:49 | cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும் |
04:51 | Indentation... code ஐ படிக்க சுலபமாக்குகிறது |
04:55 | பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது |
04:58 | இங்கே space விடுவோம் |
05:01 | எழுதுக “cout” space இரண்டு opening angle bracket ' |
05:08 | இங்கே cout என்பது terminal ல் வெளியீட்டைக் காட்டுவதற்கான standard C++ function |
05:14 | bracketகளுக்குபின், double quotes னுள் எழுதுக |
05:18 | cout functionகளில் double quotes னுள் இருக்கும் எதுவும் print செய்யப்படும். quotes னுள் எழுதுக “Talk to a teacher backslash n”. |
05:31 | “\n” ... புதுவரியைக் குறிக்கிறது |
05:35 | இதன்படி cout function இயங்கியபின், cursor புதுவரிக்கு நகர்கிறது |
05:41 | ஒவ்வொரு C++ statement-ம் semicolon “;”னுடன் முடிய வேண்டும் |
05:45 | அதனால் வரி முடிவில் அதை இடவும் |
05:48 | Semicolon... statement terminator ஆக செயல்படுகிறது. Enter ஐ அழுத்துக. |
05:53 | ஒரு space விட்டு எழுதுக “return” space “0” semicolon “;”. |
06:00 | இந்த statement... integer zero ஐ திருப்புகிறது |
06:03 | இந்த function க்கு ஒரு integer திருப்பப்படவேண்டும் |
06:06 | function வகை int என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும் |
06:10 | return statement... executable statementகளின் முடிவை குறிக்கிறது |
06:15 | return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். |
06:20 | file ஐ சேமிக்க Save ஐ சொடுக்கவும் |
06:23 | அடிக்கடி file களை சேமிப்பது ஒரு நல்ல பழக்கம் |
06:26 | இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும் |
06:30 | applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும் |
06:34 | இப்போது program ஐ compile செய்வோம் |
06:37 | terminal க்கு திரும்புவோம் |
06:39 | எழுதுக “g++” space “talk.cpp” space hyphen “-o” space “output”. |
06:49 | இங்கே g++ என்பது C++ programகளை compile செய்ய பயன்படும் compiler. |
06:55 | talk.cpp என்பது file பெயர் |
06:59 | -o output என்பது executable... file output க்கு செல்லவேண்டும் என்கிறது. enter ஐ அழுத்துக |
07:07 | program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம் |
07:10 | ls -lrt என எழுதி, உருவாக்கப்பட்ட output... கடைசி file என பார்க்கிறோம் |
07:19 | program ஐ இயக்க dot slash “output” என எழுதி |
07:24 | Enter செய்க |
07:27 | “Talk To a Teacher” என வெளியீடு காட்டப்படுகிறது |
07:31 | குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம். |
07:35 | editor க்கு திரும்புவோம். |
07:38 | இங்கே { ஐ மறக்கிறோம் எனில். |
07:42 | file ஐ சேமிக்கவும். |
07:44 | இயக்குவோம். terminal க்கு திரும்பவும் |
07:48 | முன் பயன்படுத்திய command ஐ பயன்படுத்தி program ஐ compile செய்து இயக்கவும் |
07:55 | talk.cpp file ல் வரி 7 ல் பிழை இருப்பதைப் பார்க்கிறோம் |
08:02 | input ன் முடிவில் curly bracket ஐ எதிர்ப்பார்கிறது. |
08:07 | text editor க்கு திரும்புவோம். |
08:09 | முன்னர் சொன்னது போல closing curly bracket... function main ன் முடிவைக் குறிக்கிறது |
08:14 | bracket ஐ சேர்த்து file ஐ சேமிக்கவும் |
08:19 | அதை இயக்குவோம் |
08:21 | மேல் அம்பு விசை மூலம் முன்னர் கொடுத்த command களை மீண்டும் அழைக்கலாம் |
08:26 | அதைதான் இப்போது செய்தேன். ஆம் வேலைசெய்கிறது |
08:32 | மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன் |
08:35 | text editor க்கு திரும்புவோம். |
08:38 | இங்கே std. ஐ உள்ளிடாமல் சேமிக்கிறோம் எனில் |
08:44 | terminal க்கு சென்று compile செய்வோம். |
08:48 | talk.cpp file ல் வரி 3 மற்றும் 6 ல் பிழை இருப்பதாக பார்க்கிறோம் |
08:59 | semicolon க்கு முன்னால் identifier ஐ எதிர்பார்த்தது மேலும் எல்லைக்குள் cout declare செய்யப்படவில்லை |
09:05 | cout என்பது standard C++ library function |
09:09 | முழு C++ library function உம் std namespace ல் வரையறுக்ப்படுகிறது |
09:15 | ஆகவே அது ஒரு பிழையைக் கொடுக்கிறது. |
09:18 | இப்போது பிழையை சரிசெய்வோம் |
09:19 | Text editor க்கு சென்று வரி 3 ல் std என எழுதுக |
09:23 | அதை சேமிப்போம் |
09:25 | compile செய்வோம். ஆம் வேலைசெய்கிறது. slide களுக்குப் திரும்புவோம். |
09:32 | இப்போது பயிற்சி, |
09:33 | உங்கள் பெயர் மற்றும் ஊரை அச்சடிக்க ஒரு program எழுதுக |
09:37 | single line comment பயன்படுத்தினோம் |
09:40 | எனவே ஒரு multiline commentஐ முயற்சிக்கவும் |
09:44 | தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
09:49 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
09:53 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
10:01 | மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
10:14 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:20 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:28 | தமிழாக்கம் பிரியா. நன்றி |