Single-Board-Heater-System/C2/Introduction-to-Single-Board-Heater-System/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 “Single Board Heater Systemக்கு அறிமுகம்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், SBHSன் முக்கிய அம்சங்கள்,
00:11 SBHSன் block diagramன் விளக்கம் பற்றி காண்போம்.
00:14 Single-board Heater System, SBHS என சுருக்கப்படுகிறது.
00:19 இது ஒரு micro-controllerஐ அடிப்படையாகக் கொண்ட, lab-in-a-box, வெப்பநிலை கட்டுப்படுத்தும் அமைப்பாகும்.
00:24 இது, இளங்கலை மற்றும் முதுகலை control பாடங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட அமைப்பாகும்.
00:32 இவற்றின் கருத்துக்களை சுற்றியே இது அமைந்திருக்கிறது, electronics
00::36 Serial port communication
00:38 Micro-controller programming
00:40 Data acquisition interface
00:42 Control theory.
00:44 இதன் வளர்ச்சிக்கு, அடிப்படை அடித்தளமாக, இந்த பாடங்கள் அமைகின்றன.
00:50 அடுத்து, SBHSன் முக்கிய அம்சங்கள் பற்றி பேசுவோம்.
00:55 SBHS, அதன் hardware வடிவமைப்பு மற்றும் codeகள், open sourceஆக வெளியிடப்பட்ட ஒரு 3000 ரூபாய் மதிப்புள்ள கருவி ஆகும்.
01:03 ஆனால், கொள்முதல் செய்யும் போது, அதன் உண்மையான விலை மாறலாம் என்பதை கவனிக்கவும்.
01:08 SBHSஐ interface செய்ய, ஒரு open source software பயன்படுத்தப்படுகிறது.
01:12 மேலும் விவரங்களுக்கு, sbhs dot os hyphen hardware dot in ஐ பார்க்கவும்.
01:19 மேலும், சுமார் 1 நிமிடம் கூடிய, ஒரு சிறிய time constantஐ இது கொண்டிருக்கிறது.
01:24 அதனால், ஒருவர், 10 நிமிடத்திற்குள் யதார்த்தமான சோதனையை செய்யலாம்.
01:29 இந்த அமைப்பை, Virtual labs projectன் கீழ், remoteஆகவும் அணுகலாம்.
01:35 ஒருவர், அதனை remoteஆக அணுகி, அதனை புரிந்து கொள்ளலாம்.
01:38 பின்னர், user அதனை வாங்கி அல்லது assemble செய்து, அதனை ஒரு labஆக, கல்லூரியிலோ அல்லது வீட்டிலோ அமைக்கலாம்.
01:46 இந்த figure, Single Board Heater Systemன் படத்தை காட்டுகிறது.
01:50 12 Volt regulated DC மின் வழங்கலை உருவாக்க, ஒரு SMPSஐயும்
01:56 இந்த உலோக துணையின் கீழ், ஒரு உலோக blade மற்றும் ஒரு heater coilஐயும்
02:02 ஒரு கணணி மின்விசிறி, ஒரு display,
02:04 USB மற்றும் RS232 portகளையும் இது கொண்டுள்ளது.
02:08 இப்போது, SBHSன் block diagramஐ காண்போம்.
02:11 இந்த figure, SBHSன் block diagramஐ காட்டுகிறது.
02:14 அது, power supply,
02:17 8-bit micro-controller,
02:19 display, fan,
02:21 Heater Assembly, temperature sensor,
02:25 instrumentation amplifier மற்றும் associated circuitry,
02:29 ISP, serial மற்றும் USB portகளை கொண்டுள்ளது.
02:33 இப்போது, SBHSல் உள்ள பல்வேறு blockகளின் சுருக்கமான விளக்கத்தை காண்போம்.
02:39 முதலில், power Supplyஐ காண்போம்.
02:42 மின் வழங்கல், அடிப்படையில், ஒரு 12V 400 watt SMPS ஆகும்.
02:47 இந்த 12V வழங்கல், நேராக பயன்படுத்தப்படுகிறது, ஆனால், பெரும்பாலான circuitryக்கு, 15V வழங்கல் தேவைப்படுகிறது.
02:54 அதனால், தேவையான போது, தனித்தனி voltage regulatorகள் பயன்படுத்தப்படுகின்றன.
02:59 மேலும், மின் வழங்கலின் ஏற்ற இறக்கங்களினால் ஏற்படும் தெளிவற்ற வெப்பநிலை readingகளை தவிர்க்க, systemகள் மற்றும் sensorகளுக்கான voltage regulatorகள், தனித்தனியே வைக்கப்படுகின்றன.
03:09 அடுத்தது Micro-controller.
03:11 ஒரு 8-bit ATmega16 micro-controller பயன்படுத்தப்படுகிறது.
03:15 Micro-controller, ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
03:19 SBHSல் இருக்கும் ஒவ்வொரு தனி hardwareஐயும், நேராகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்துகிறது.
03:25 இவை போன்ற பல்வேறு பணிகளை இது செயல்படுத்துகிறது, கணிணி மற்றும் SBHSக்கு இடையே தொடர்பை அமைப்பது
03:33 heater coil வழியாக செல்லும் மின்சாரத்தின் அளவை கட்டுப்படுத்துவது
03:37 fanன் வேகத்தை கட்டுப்படுத்துவது
03:39 வெப்பநிலையின் மதிப்பை read செய்வது
03:42 parameter மதிப்புகளை காட்டுவது, மற்றும், மற்ற பல்வேறு தேவையான operationகள்.
03:47 அடுத்து வருவது, heater மற்றும் fan.
03:50 ஒரு nichrome wire coilல் இருந்து, 3.5 mm தள்ளி வைக்கப்பட்ட ஒரு உலோக தட்டை, heater assembly கொண்டிருக்கிறது.
03:58 மின்சாரம் coil வழியாக செல்லும் போது, coil சூடாகிறது.
04:02 இந்த வெப்பம், convention வழியாக உலோக தட்டுக்கு பரிமாற்றப்படுவதால், வெப்பநிலை அதிகரிக்கிறது.
04:08 ஒரு சிறிய வழக்கமான கணிணி மின்விசிறி பயன்படுத்தப்படுகிறது.
04:12 அது, சூடாக்கப்பட்ட உலோக தட்டை குளிர வைக்க பயன்படுத்தப்படுகிறது.
04:15 சில முயற்சி மற்றும் சோதனை காரணங்களால், அது heaterக்கு கீழே வைக்கப்படுகிறது.
04:20 அடுத்தது Driver block.
04:23 இது, fan மற்றும் heaterக்கு கொண்டு சேர்க்கப்படும் powerன் அளவை வேறுபடுத்தும் ஒரு கருவி ஆகும்.
04:29 MOSFETSகளும் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
04:32 Micro-controller கொடுக்கின்ற commandகளின் படி, MOSFETSகள் operate செய்யப்படுகின்றன.
04:37 இந்த MOSFETSகள், ஏதோ ஒரு PWM frequencyல், switch செய்யப்படுகின்றன.
04:42 இப்போது, Temperature sensor பற்றி பேசுவோம்.
04:45 AD590, சூடாக்கப்பட்டplateன் வெப்பநிலையை உணர பயன்படும் Temperature sensor ஆகும்.
04:51 இந்த sensorன் output, micro ampere per kelvinல் இருக்கும்.
04:56 Operating வெப்பநிலை, -55ல் இருந்து, 150 degree Celsius வரை இருக்கும்.
05:02 மேலும், இதற்கு, linearization செயல்முறை எதுவும் தேவையில்லை.
05:07 அடுத்ததாக, Instrumentation amplifierஐ காண்போம்.
05:11 AD590ஆல் உருவாக்கப்பட்ட signalன் signal conditioningக்கு, Instrumentation amplifier பயன்படுத்தப்படுகிறது.
05:18 Temperature sensorக்கு அது, நல்ல input impedanceஐயும் தருகிறது.
05:23 அதனால், sensorஆல் உருவாக்கப்பட்ட signal, signal conditioningன் போது, மெலிப்பிடப்படுவதில்லை.
05:30 அடுத்தது, Display மற்றும் Indicators block.
05:33 Display, ஒரு 16x2 LCD displayஐ இது கொண்டிருக்கிறது.
05:37 ஒவ்வொரு வரியிலும் 16 characterகளை கொண்ட, இரண்டு வரிகளை காட்டும் திறன் கொண்டது display என்பது இதன் பொருள்.
05:44 அதற்கு சொந்த in-built controller இருப்பதால், தனி controller தேவையில்லை.
05:50 Temperature, fan, heater மற்றும் machine ID (MID) போன்ற பல்வேறுparameterகளை காட்ட, இது பயன்படுகிறது.
05:56 இது 4-bit modeல் operate செய்யப்படுகிறது.
05:59 Indicators, பல்வேறு on-board LEDக்களை கொண்டிருக்கும்.
06:04 அடுத்து, Serial Voltage Level Converter blockஐ காண்போம்.
06:09 Signalகளை, serialல் இருந்து, TTLக்கும் மற்றும் அதன் எதிர்மறை மாற்றத்திற்கும், இது பயன்படுகிறது.
06:15 அடுத்தது, USB to Serial Converter block.
06:19 Signalகளை, USBல் இருந்து, serialக்கும் மற்றும் அதன் எதிர்மறை மாற்றத்திற்கும், இது பயன்படுகிறது.
06:24 அடுத்து வருவது, USB மற்றும் RS232 blockகள்.
06:28 இது, USB மற்றும் RS232 cableஐ இணைக்க பயன்படுகிறது.
06:33 கடைசியாக, ISP blockஐ காண்போம்.
06:36 ISP என்றால், "In-System Programming" என்று பொருள்.
06:39 அது ஒரு 10 pin male connector ஆகும்.
06:42 இதை வைத்து, முறையான programming deviceன் உதவியுடன், micro-controllerஐ நாம் program செய்ய முடியும்.
06:48 “Single Board Heater Systemக்கு அறிமுகம்” குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.
06:54 சுருங்கச் சொல்ல,
06:56 இந்த டுடோரியலில், SBHSன், முக்கிய அம்சங்கள், மற்றும் அதன்block diagramன் விளக்கத்தை பார்த்தோம்.
07:03 இதில் சுருக்கமாக விளக்கப்பட்ட பல்வேறு blockகள்:Power Supply,
07:07 micro-controller, heater மற்றும் fan,
07:09 driver, temperature sensor,
07:11 instrumentation amplifier, display,
07:14 USB மற்றும் RS232 portகள், ISP.
07:19 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
07:22 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
07:25 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
07:29 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:34 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
07:38 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
07:45 Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
07:49 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
07:56 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[1].
08:08 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree