Single-Board-Heater-System/C2/Implementing-Proportional-Controller-on-SBHS-remotely/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 SBHSல், proportional controllerஐ remoteஆக, செயல்படுத்துவது குறித்த Spoken tutorialக்கு நல்வரவு.
00:09 இந்த டுடோரியலில், நாம் கற்கப்போவது: proportional controller gainஐ கணக்கிட, Ziegler-Nichols tuning methodஐ பயன்படுத்துவது
00:18 ஒரு proportional controllerஐ வடிவமைக்க, step test codeஐ மாற்றுவது
00:22 SBHSல், இந்த proportional controllerஐ செயல்படுத்துவது
00:26 உங்கள் கணிணியில், Scilab , நிறுவப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
00:30 இந்த டுடோரியலை தொடங்கும் முன், உங்களிடம் internet இணைப்பு உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
00:36 இந்த டுடோரியலை, நான், ஒரு Windows-7, 32-bit Operating Systemல் பதிவு செய்கிறேன்.
00:41 முன்நிபந்தனையாக, Using SBHS Virtual labs on Windows OS மீதான டுடோரியலை காணவும்.
00:48 இந்த டுடோரியல், Spoken Tutorial வலைத்தளத்தில் இருக்கிறது.
00:53 Remoteஆக, ஒரு அடிப்படை Step Test சோதனையை எப்படி செய்வது, என்று அது உங்களுக்கு கற்பிக்கும்.
01:00 அடிப்படை PID tuning பற்றியும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
01:05 Step test experiment code folder உங்களிடம் இருக்க வேண்டும்.
01:10 Step test experiment data fileஉம் உங்களிடம் இருக்க வேண்டும்.
01:15 அப்படி இல்லை எனில், நீங்கள் Step Test சோதனையை மீண்டும் செய்து, ஒரு புது data fileஐ உருவாக்க பரிந்துரைக்கப்படுகிறது.
01:23 என் கணிணியில், data file, Scilab_codes_windows folder >> step test folder >> logs folderன் உள் இருக்கிறது.
01:35 என் usernameஉடன் கூடிய folder, மற்றும் என் data file இதோ.
01:41 வலைத்தளத்தில் இருந்து, Analysis codeஐ, இப்போது download செய்வோம்.
01:46 ஒரு web browserஐ திறந்து, sbhs dot os hyphen hardware dot in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.
01:55 இடது பக்கத்தில் இருக்கும், Downloadsஐ க்ளிக் செய்யவும்.
02:00 SBHS Analysis Code file ஐ download செய்து, அதை Desktopல் சேமிக்கவும்.
02:09 இங்கிருக்கிறது! Download செய்யப்படும் file, Zip formatல் இருக்கும்.
02:14 ரைட்- க்ளிக் செய்து, zip fileன் contentகளை, Desktopல், Extract செய்யவும்.
02:19 Scilab codes analysis என்ற பெயருடைய ஒரு folder உருவாக்கப்படும்.
02:25 இந்த folder ஐ திறக்கவும்.
02:27 Step Analysis folder ஐ கண்டறிந்து, திறக்கவும்.
02:32 Step Analysis folder, மேலும் சில folderகளை கொண்டிருக்கும்.
02:36 Kp tau order1 folderன் உள் முன்பு உருவாக்கப்பட்ட, data fileஐ, Copy-paste செய்யவும்.
02:50 Firstorder என்ற Scilab fileஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
02:55 இது Scilabஐ தானாகவே நிறுவி, fileஐயும், Scilab editorல் திறக்கும்.
03:02 அது fileஐ திறக்கவில்லை எனில்,File menuஐ க்ளிக் செய்து, பின், Open a fileஐ க்ளிக் செய்யவும்.
03:09 Firstorder fileஐ தேர்வு செய்து, பின் Openஐ க்ளிக் செய்யவும்.
03:18 Filename variableஐ கண்டறிந்து, அதன் மதிப்பை, உங்கள் data fileன் filenameக்கு மாற்றவும்.
03:27 எழுத்துப்பிழைகளை தவிர்க்க, filenameஐ copy-paste செய்கிறேன்.
03:34 ".txt" extensionஐ அப்படியே வைக்கவும்.
03:37 இந்த Scilab codeஐ, சேமித்து, இயக்கவும்.
03:42 Data file corrupt ஆகாமலும், errorகள் எதுவும் இல்லாமலும் இருந்தால், ஒரு plot window திறக்கும்.
03:48 இந்த Plot window, இரண்டு graphகளை காட்டும், noise உள்ள SBHS temperature plot, மற்றும், மென்மையான வளைவாக இருக்கும், SBHS first order modelன் output.
04:05 இந்த code, data fileஐ பயன்படுத்தி, ஒரு first order transfer functionஐ பொருத்தும் பணியை செய்கிறது.
04:12 Time constant tau மற்றும் gain Kpனின் மதிப்புகள், மேல் பகுதியில் காட்டப்படுகின்றன.
04:19 இந்த டுடோரியலில், first order transfer functionஐ நாம் பயன்படுத்த மாட்டோம்.
04:23 நாம், SBHS outputன், plotஐ மட்டுமே பயன்படுத்துவோம்.
04:26 Scilab editorக்கு மாறவும்.
04:29 Plot2d of t comma y underscore prediction வரியை கண்டறியவும்.
04:37 நமக்கு, Plotல், prediction output, தோன்ற வேண்டாம்.
04:41 இந்த வரியின் தொடக்கத்தில், இரண்டு forward slasheகளை வைத்து, இந்த வரியை Comment out செய்யவும்.
04:48 Scilab codeஐ சேமித்து இயக்கவும்.
04:52 Plot windowக்கு மாறவும்.
04:54 Plot window, இப்போதுSBHS temperature plotஐ மட்டும் கொண்டிருப்பதை கவனிக்கவும்.
05:00 இந்த imageஐ சேமிக்க, File menuஐ க்ளிக் செய்யவும்.
05:04 பின், Export to optionஐ தேர்வு செய்யவும்.
05:07 Image fileக்கு ஒரு பெயரை கொடுக்கவும். நான், sbhsplot என டைப் செய்கிறேன்.
05:14 Files of type க்கு, drop-down menu க்ளிக் செய்து, PNGஐ தேர்வு செய்யவும்.
05:22 இந்த fileஐ நீங்கள் சேமிக்க வேண்டிய, directoryஐ தேர்வு செய்யவும்.
05:27 நான் Desktopஐ தேர்வு செய்து, Saveஐ க்ளிக் செய்கிறேன்.
05:31 அதை திறந்து, image file, Desktopல் உருவாக்கப்பட்டுள்ளதா என்று பார்ப்போம்.
05:36 இங்கிருக்கிறது!
05:39 இந்த image windowஐ மூடவும்.
05:42 இப்போது, slideகளுக்கு திரும்புகிறேன்.
05:45 Ziegler-Nichols tuning method ஐ பயன்படுத்தி, proportional gainனின் மதிப்பை கணக்கிடுவோம்.
05:52 PID parameterகளை கணக்கிட, Ziegler-Nichols, இரண்டு tuning விதிகளை தருகிறது. அவை, Reaction curve method மற்றும் Instability method.
06:03 நாம், Reaction curve method ஐ பார்ப்போம்.
06:06 இந்த methodல், systemக்கு ஒரு step input கொடுக்கப்பட்டு, அதன் output, ஒரு நேர காலத்திற்கு, கவனிக்கப்படுகிறது.
06:13 ஒரு step inputக்கு, எந்த practical systemமும், exponentialஆக பதிலளிக்கும்.
06:18 Inflection புள்ளியில், ஒரு tangent வரையப்படுகிறது.
06:22 அதாவது, curve, convexல் இருந்து, concaveக்கு மாறும் போது.
06:27 Time axisல் இருந்து, dead time மற்றும் time constant, கணக்கிடப்படுகிறது.
06:33 இது, இந்த figureல் காட்டப்பட்டுள்ளது. Inflection புள்ளியில் வரையப்பட்ட tangent வரி இது தான்.
06:41 'K', systemன், gain ஆகும்,
06:45 'L', என்பது dead time, மற்றும்
06:48 'T', என்பது time constant.
06:50 Desktopல், சேமிக்கப்பட்ட, SBHS output figureல், இதன் நகலை உருவாக்கவும்.
06:56 நான் இதை ஏற்கனவே செய்துவிட்டேன்.
06:58 இந்த fileஐ, நான் திறக்கிறேன்.
07:01 Windowsன், முன்னிருப்பான, image editing toolஆன, paint brushஐ நான் பயன்படுத்தி இருக்கிறேன்.
07:08 Gainனின் மதிப்பு, 2.7ஆகவும், dead time னின் மதிப்பு, 1 நொடியாகவும் மற்றும் time constantனின் மதிப்பை, 50 நொடிகளாகவும் நான் பெற்றிருக்கிறேன்.
07:18 இவை அனைத்தும், தோராயமான மதிப்புகள் என்பதை கவனிக்கவும்.
07:22 Inflection pointயில், நீங்கள் வரையும் tangent வரியின் துல்லியத்தை சார்ந்தே, இந்த மதிப்புகள் அமைகின்றன.
07:30 தேவையான மதிப்புகளை நீங்கள் பெற்ற பிறகு, proportional gainனின் மதிப்பை கணக்கிட, Ziegler-Nicholsஆல் கொடுக்கப்பட்ட tableஐ பார்க்கவும்.
07:39 ஒரு proportional controllerக்கு, proportional gain னின் மதிப்பை மட்டுமே நாம் கணக்கிட வேண்டும்.
07:44 எனக்கு, proportional gain னின் மதிப்பு, 18 ஆகும்.
07:50 இப்போது, SBHSல், proportional controllerஐ செயல்படுத்தக் கற்போம்.
07:56 இதற்கு, step test codeஐ மாற்றுவோம்.
07:59 உங்கள் step test codeஐ கொண்டுள்ள folderக்கு மாறவும்.
08:03 இங்கிருக்கிறது. இந்த folderன் ஒரு copyஐ எடுக்கவும்.
08:08 இந்த folderக்கு, proportional என்ற மறுபெயர் வைத்து, அதை திறக்கவும்.
08:14 Stepc fileக்கு, proportional என்ற மறுபெயரை வைக்கவும்.
08:19 Steptest dot sci fileக்கு, proportional என்ற மறுபெயரை வைக்கவும்.
08:24 steptest dot xcos fileகளுக்கு, proportional என்ற மறுபெயரை வைக்கவும்.
08:29 Scilab ஏற்கனவே run செய்து கொண்டிருந்தால், அதை மூடவும்.
08:33 Proportional dot sce fileஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
08:38 இது Scilabஐ தானாகவே நிறுவி, மேலும், fileஐ, Scilab editorல் திறக்க வேண்டும்.
08:43 அது file ஐ திறக்கவில்லை எனில், File menuஐ க்ளிக் செய்து, பின், Open a fileஐ க்ளிக் செய்யவும்.
08:50 Proportional fileஐ தேர்வு செய்து, Openஐ க்ளிக் செய்யவும்.
08:56 Steptest.sci fileக்கு பதிலாக, proportional.sci fileஐ இயக்க, exec commandஐ மாற்றவும்.
09:06 Steptest.xcos fileக்கு பதிலாக, proportional.xcos fileஐ இயக்க, xcos commandஐ மாற்றவும்.
09:16 இந்த fileஐ சேமிக்கவும்.
09:18 File menuஐ க்ளிக் செய்து, Openஐ தேர்வு செய்யவும்.
09:22 proportional.sci fileஐ தேர்ந்தெடுத்து, Openஐ க்ளிக் செய்யவும்.
09:28 Function பெயரை, steptestல் இருந்து, proportionalக்கு மாற்றவும்.
09:33 Proportional function inputல் இருந்து, input variableஐ நீக்கி, டைப் செய்க: setpoint.
09:42 அடுத்த வரியில், டைப் செய்க: global, ஒரு space விட்டு, temp என டைப் செய்து, பின் Enterஐ அழுத்தவும்.
09:51 அடுத்த வரியில், டைப் செய்க: err equal to setpoint minus temp.
10:00 இறுதியில் semicolonஐ சேர்த்து, Enterஐ அழுத்தவும்.
10:05 அடுத்த வரியில், டைப் செய்க: heat equal to 18ஐ, errஆல் பெருக்கவும். இறுதியில் ஒரு semicolonஐ சேர்க்கவும்.
10:17 என் SBHSக்கு, proportional gainனின் மதிப்பு, 18 ஆகும்.
10:22 உங்கள் SBHSக்கு, நீங்கள் கணக்கீடு செய்ததற்கு ஏற்றவாறு, அதை மாற்றிக் கொள்ளலாம்.
10:28 அதன் function callன் உள் இருக்கும் plotting functionனின் input variableக்கு , setpointஐ சேர்க்கவும்.
10:36 அதைச் செய்ய, tempக்கு பிறகு ஒரு spaceஐ சேர்த்து, டைப் செய்க: setpoint.
10:43 இந்த fileஐ சேமிக்கவும்.
10:45 Scilab consoleக்கு மாறவும்.
10:52 xcos window திறக்கும்.
10:55 Palette windowஐ மூடவும்.
10:58 xcos untitled windowவில், File menuஐ க்ளிக் செய்து, Openஐ தேர்வு செய்யவும்.
11:05 Proportional directoryஐ browse செய்யவும்.
11:08 Proportional.xcosஐ தேர்வு செய்து, Openஐ க்ளிக் செய்யவும்.
11:13 Xcos file திறக்கும்.
11:15 Heat input in percentage என்ற labelஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
11:20 அதை நீக்கி, டைப் செய்க: setpoint.
11:24 Labelஐ சேமிக்க, xcos windowவில், எங்கினும், ஒருமுறை க்ளிக் செய்யவும்.
11:29 Step input blockன், Properties windowஐ திறக்க, அதை டபுள்-க்ளிக் செய்யவும்.
11:34 Initial Valueஐ, 30க்கும், Final Valueஐ, 40க்கும் மாற்றவும்.
11:40 Step timeஐ, 300 என வைக்கவும். Okஐ க்ளிக் செய்யவும்.
11:45 Function blockஐ டபுள்-க்ளிக் செய்யவும். ஒரு window தோன்றும். Okஐ க்ளிக் செய்யவும்.
11:53 மற்றொரு window தோன்றும்.
11:55 இங்கு, xcos blockஆல் call செய்யப்படக்கூடிய function பெயரை enter செய்ய ஒரு option இருக்கிறது.
12:02 Function பெயரை, step testல் இருந்து, proportionalக்கு மாற்றவும்.
12:09 மற்றொரு window திறக்கும்.
12:11 Function blockன் configurationஐ முடிக்க, Okஐ மூன்று முறை க்ளிக் செய்யவும்.
12:18 'Xcos' diagramஐ சேமித்து மூடவும்.
12:22 Xcos untitled windowவையும் மூடவும்.
12:25 Web browserக்கு மாறவும்.
12:27 இடது பக்கத்தில் இருக்கும், Virtual Labs ஐ க்ளிக் செய்யவும்.
12:32 பதிவு செய்யப்பட்ட, உங்கள் username மற்றும் passwordஐ வைத்து login செய்யவும். ஒரு slotBook செய்யவும்.
12:42 Proportional folderக்கு மாறவும். Run fileஐ டபுள்-க்ளிக் செய்யவும்.
12:48 இது, SBHS client applicationஐ திறக்கும்.
12:53 உங்கள் username மற்றும் passwordஐ வைத்து login செய்யவும். Book செய்யப்பட்டslot நேரத்தில் login செய்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
13:02 "Ready to execute Scilab code" என்ற messageஐ எதிர்பார்க்கவும்.
13:06 Scilab consoleக்கு மாறவும்.
13:08 டைப் செய்க: get d space dot dot slash common files. பின் Enterஐ அழுத்தவும்.
13:17 Scilab editorக்கு மாறவும். Proportional.sce fileஐ இயக்கவும்.
13:25 Network சரியாக இருந்தால், அது xcos windowஐ, ஒரு proportional controller xcos diagramஉடன் தானாகவே திறக்கும்.
13:34 இந்த xcos diagramஐ இயக்கி, ஒரு plot windowஐ எதிர்பார்க்கவும்.
13:41 Plot window, heat, fan, temperature என்ற மூன்று plotகளை கொண்டிருக்கும்.
13:47 Setpointஉம், temperature graphல் plot செய்யப்படும்.
13:52 Temperatureன் setpoint மதிப்பை அடைய, proportional controller, heatன் மதிப்பை கணக்கிடுகிறது என்பதை கவனிக்கவும்.
14:02 Setpointல், ஒரு step change ஏற்பட்ட பிறகு என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க, இந்த சோதனையை நீண்ட நேரத்திற்கு run செய்யவும்.
14:10 சோதனை, போதுமான நேரத்திற்கு இயக்கப்படும் வரை, இந்த பதிவை நான் இடைநிறுத்துகிறேன்.
14:16 Setpointன் மாற்றத்திற்கு, proportional controller, பதில் அளித்துள்ளதை நீங்கள் காணலாம்.
14:23 Proportional controller, offsetன் propertyஐ இயல்பாகவே கொண்டுள்ளதை நீங்கள் காணலாம்.
14:29 ஒரு proportional controller, setpoint மதிப்புக்கும், உண்மையான மதிப்புக்கும் இடையே, எப்போதும் ஒரு offsetஐ கொண்டிருக்கும்.
14:36 இப்போது, சுருங்கச் சொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது:SBHSக்கு, proportional controller gainஐ கணக்கிட, Ziegler-Nichols tuning methodஐ பயன்படுத்துவது
14:47 ஒரு proportional controllerஐ வடிவமைக்க, step test codeஐ மாற்றுவது
14:51 SBHSல், வடிவமைக்கப்பட்ட proportional controllerஐ செயல்படுத்துவது
14:56 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். அது, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
15:02 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
15:06 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
15:10 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.
15:14 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
15:21 Spoken Tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
15:25 இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
15:31 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[1].
15:42 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree