Python/C3/Conditionals/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:01 'Conditionals' tutorial க்கு நல்வரவு!
0:05 இந்த டுடோரியலின் முடிவில் செய்ய முடிவது....
  1. if/else blocks ஐ பயன்படுத்துதல்
  2. if/elif/else blocks ஐ பயன்படுத்துதல்
  3. Ternary conditional statement - C if X else Y ஐ பயன்படுத்துதல்
0:25 ipython ஐ துவக்குவோம்,
0:29 ஆகவே terminal லில் type செய்க: ipython
0:36 குறிப்பிட்ட condition ஐ பொருத்து இரண்டு சாத்தியக்கூறுகள் இருக்கையில், Python இல் if/else construct ஐ பயன்படுத்தலாம்
0:45 உதாரணமாக, நம்மிடம் ஒரு variable a உள்ளது. அது integers ஐ store செய்கிறது. நமக்கு a இரட்டைப்படையா அல்லது ஒற்றைப்படையா என தெரிய வேண்டும்.
0:52 a இன் value 5 என்போம்.
0:55 ஆகவே type செய்க: a=5
0:59 இது மாதிரியான சமயத்தில் if/else block ஐ இப்படி எழுதலாம்.
1:04 command line இல் if a percentage 2 == 0 colon
   		print in double quotes Even

else colon

   		print in double quotes Odd
1:37 a 2 ஆல் வகுக்க முடியுமானால், அதாவது, "a modulo 2" இன் விடை 0 ஆனால், அது "Even" என print செய்கிறது. இல்லையானால் "Odd" என print செய்கிறது.
1:51 இம்மாதிரி சமயங்களில், இரண்டு block களில் ஒன்றே execute ஆகும். அது condition True ஆ அல்லது False ஆ என்பதை பொருத்தது.
1:58 மிக முக்கிய syntactic element ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
2:03 ஒவ்வொரு code block உம் துவங்குவது ஒரு colon இல் முடியும் line உடன். இந்த உதாரணத்தில் if மற்றும் else line கள்.
2:15 மேலும், ஒரு code block இல் உள்ள statement கள் 4 space களால் intend ஆகியிருக்கும்.
2:21 enter ஐ இரு முறை தட்ட code block முடிவுறும்.
2:25 if/else blocks ஒரு condition க்கு வேலை செய்கிறது. அதில் இரு நிலைகள் இருக்கலாம்.
2:31 ஒரு வேளை conditions இரண்டுக்கு மேல் நிலைகளை கொள்ளுமானால் என்ன செய்வது?
2:38 Python இதற்கு if/elif/else blocks களை தருகிறது.
2:47 உதாரணமாக.
2:49 ஒரு variable a integer value களை கொண்டு இருக்கிறது.
2:52 நமக்கு a is positive ஆனால் "positive" என்றும் negative எனில் "negative" என்றும் அல்லது 0 எனில் "zero" என்றும் print செய்ய வேண்டும்.
3:04 அதற்கு if/elif/else ladder ஐ பயன்படுத்தலாம்.
3:09 நம் code ஐ test செய்ய a is -3 என கொள்வோம்.
3:16 type செய்க: a = -3

if a greater than 0 colon print in double quotes positive elif a less than 0 colon print in double quotes negative else colon print in double quotes zero

4:17 if/else statement களுக்கான syntax மற்றும் rules அதேதான்.
4:24 இங்கே கூடுதலாக இருப்பது elif statement. அதற்கு மட்டுமே இன்னொரு condition இருக்கலாம்
4:30 இங்கேயும் ஒரே ஒரு block of code தான் execute ஆகிறது. -- முதலில் True க்கு evaluate ஆகும் block of code.
4:41 ஒரு வேளை பல conditionகள் True என evaluate ஆனாலும், முதலில் அப்படி எவாலுவேட் ஆகும் கண்டிஷன் தவிர மற்றவை உதாசீனப்படுத்தப் படும்.
4:51 ஆகவே else block execute ஆவது எல்லா condition களும் False என evaluate ஆனால்தான்.
4:59 மேலும் if/else statement, if/elif/else statement இரண்டிலும் else block optional ஆகும்.
5:08 நமக்கு ஒரு if statement அல்லது வெறும் if/elif statement கள் else block இல்லாமலே கூட இருக்கலாம்.
5:17 மேலும் எத்தனை elif களும் ஒரு if/elif/else ladder இல் இருக்கலாம்.
5:26 உதாரணமாக
5:28 type செய்க: if user == in single quotes admin colon

elif user == in single quotes moderator colon elif user == in single quotes client colon

5:47 பல elif blocks இருப்பதையும் மற்றும் else block இல்லாததையும் கவனிக்க.
5:53 video வை நிறுத்தி பயிற்சியை முடித்த பின் தொடரவும்.
5:57 ஒரு number, num கொடுக்கப்படுகிறது. ஒரு if else block ஐ எழுதுக. பத்தால் வகு படுமானால் num ஐ print செய்க. இல்லையானால் 10 into num ஐ print செய்க.
6:12 solution ... screen இல் உள்ளது
6:14 if num modulo 10 == 0 colon

print num

     else colon

print 10 star num

6:30 இந்த conditional statement களுக்கு கூடுதலாக, Python மிகவும் வசதியான ternary conditional operator ஐயும் தருகிறது.
6:36 பின் வரும் example ஐ பார்க்கலாம். ஒரு data file லில் இருந்து கிடைத்த marks ஐ படிக்கும்போது string ஆக கிடைப்பதை படிக்கலாம்.
6:43 இந்த marks 0 to 100 range இல் இருக்கலாம். அல்லது student absent ஆகி இருந்தால் 'AA' ஆக இருக்கலாம்.
6:52 அப்படி இருக்கும்போது, marks ஐ integer ஆக பெற ternary conditional operator ஐ பயன்படுத்தலாம்.
6:59 அந்த string ஆகிய score.... score underscore str variable இல் store செய்திருப்பதாக கொள்வோம்.
7:05 ஆகவே type செய்க: score underscore str = in single quotes AA
7:13 இப்போது ternary conditional operator ஐ பயன்படுத்தலாம்.
7:20 type செய்க: score = int within bracket score underscore str if score underscore str exclamation = in single quotes AA else 0
7:54 ஒரு number, num கொடுக்கப்படுகிறது. ஒரு ternary operator எழுதுக. பத்தால் வகு படுமானால் num ஐ print செய்க. இல்லையானால் 10 into num ஐ print செய்க.
8:08 solution …. screen இல் உள்ளது
8:11 print num if num modulo 10 == 0 else 10 star num
8:20 மேலே போகலாம். சில situation களில் ஒரு block of code இல் நமக்கு operations அல்லது statements இராது.
8:27 உதாரணமாக, ஒரு code இல் keyboard input க்கு காத்து இருந்தால்...
8:32 user "c", "d" அல்லது "x" ஐ input ஆக enter செய்தால், நாம் சில operation ஐ செய்யலாம்; இல்லையானால் ஒன்றுமில்லை.
8:42 இம்மாதிரி case களில் "pass" statement மிகவும் உதவிகரமாக இருக்கும்.
8:49 a = raw underscore input Enter 'c' to calculate and exit, 'd' to display the existing
9:04 results exit and 'x' to exit and any other key to continue colon)
9:12 if a == in single quote c colon
9:18 elif a == in single quote d colon
9:23 elif a == in single quote x colon
9:29 else colon
9:32 pass
9:35 இந்த case இல் "pass" statement, block of code க்கு place holder ஆக இருக்கிறது.
9:41 அது ஒரு null operation போல.
9:45 அதாவது அது ஏதும் செய்யாது.
9:46 இன்னும் உண்மையான code implementation க்கு block of code தெரியவில்லை; பின்னால் நிரப்பப்படும் எனும் நிலையில் இது place holder ஆக செயல்படும்.
9:56 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
9:59 இந்த டுடோரியலில், கற்றவை, 1. Python இல் conditional statement களை புரிந்து கொள்ளுதல்.
10:04 2. if/else blocks ஐ பயன்படுத்துதல்
10:06 3.if/elif/else blocks ஐ பயன்படுத்துதல்
10:09 4. Ternary conditional statement - C if X else Y ஐ பயன்படுத்துதல்
10:14 5. "pass" statement ஐ பயன்படுத்துதல்.
10:18 தீர்வு காண சில self assessment கேள்விகள்
10:21 1. பின்வருவனவற்றுக்கு conditional statement களை பயன்படுத்துக.
10:23 ஒரு time ஐ கொடுக்க, அது 12 க்கு குறைவானால் Good Morning என print செய்க. இல்லையானால் Hello என print செய்க.
10:30 2.கீழே உள்ள if else ladder ஐ ஒரு ternary conditional statement ஆக Convert செய்க.
10:39 x = 20
 if x greater than 10 colon
  print x multiply by 100
 else colon
  print x
10:49 விடைகள் இதோ
10:52 1. if/else statementகளை இப்படி பயன்படுத்தலாம்
 if time less than 12 colon
  print in double quotes Good Morning
 else colon
  print in double quotes Hello
11:06 1. இந்த if else ladder ஐ ஒரு ternary conditional statement ஆக Convert செய்ய,
  print x multiply by 100 if x greater than 10 else x
11:17 இந்த டுடோரியல் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
11:20 நன்றி!

Contributors and Content Editors

Priyacst