PHP-and-MySQL/C2/Arithmatic-Operators/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:00 அடிப்படை Arithmetic operators குறித்த tutorial க்கு நல்வரவு!
0:03 கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் செயல்பாடுகளை பார்க்கலாம்
0:09 கூட்டல், கழித்தல், பெருக்கல் ஆனது asterisk ஆகவும், வகுத்தல் ஆனது forward slash ஆகவும் எழுதப்படுகின்றன
0:17 2 variable கள் உள்ளன
0:20 "num1" எனும் variable ஐ உருவாக்கி, மதிப்பு "10" ஆகவும், அவ்வாறே "num2" க்கு"2" ஆகவும் சேமிக்கிறேன்.
0:30 இவை தசம மதிப்பு இல்லாமல் integer எண்களாக உள்ளன
0:34 இப்போது "num1" மற்றும் "num2" ஐ கூட்ட போவதாக வைத்து கொள்வோம்
0:40 "num1" ன் மதிப்பை "num2"வுடன் கூட்ட echo செய்கிறேன்
0:44 பரிசோதித்து பார்க்கலாம்
0:47 அது "12". 10 மற்றும் 2,.... num1 மற்றும் num2,.... அதாவது 10 மற்றும் 2 கூட்டப்படும் பொழுது விடை "12"..
0:55 கழித்தல் பற்றி பார்க்கலாம். அங்கு கழித்தல் குறியால் இடமாற்றம் செய்வோம்.
1:01 Refresh பண்ண பின் அது "8" ஆக இருக்கும்
1:05 பெருக்கலை பற்றி பார்க்கலாம். 10 முறைகள் 2 ஆனது 20. எனவே 20 கிடைத்துள்ளது.
1:11 அடுத்து 10 ஐ 2 ஆல் வகுப்பதால் கிடைப்பது. 10 இல் பாதி அதாவது "5".
1:18 தற்பொழுது என்ன செய்யலாம்? இதன் இறுதியில் ஏதாவதொன்றை சேர்க்கலாம்
1:24 அதாவது இதனை num2 ஆல் வகுக்கலாம்
1:27 இந்த செயல்பாடு என்ன செய்யும் எனப் பார்த்தால் "num1" மற்றும் "num2"வை கூட்டுவதால் கிடைக்கும் 12 ஆனது 2 ஆல் வகுக்கப்படும்
1:39 எனவே 12 ஆனது 2 ஆல் வகுக்க... கிடைப்பது 6.
1:43 உண்மையில் இது செய்வதை பார்த்தால்.... num2 ஆனது num2ஆலேயே வகுக்கப்பட்டு... 1 கிடைத்துவிடுகிறது. பிறகு இந்த 1ஆனது num1 வுடன் கூட்டப்படுகிறது.
1:56 இதனால் 6க்கு பதிலாக 11 நமக்கு கிடைத்துவிடும்
2:00 இதற்கு காரணம்.... எப்போதும் வகுத்தல் குறியானது கூட்டல் குறிக்கு முன் செயல்படும். இப்படியே பெருக்கல் குறியும்.
2:10 இதனை சரி செய்ய ... அடைப்பு குறியை சேர்க்க வேண்டும்
2:16 இந்த அடைப்புக் குறி சொல்வது ... முதலில் இதற்குள் இருக்கும் செயல்பாட்டை எடுத்துக்கொண்டு ….அதனை செய்து முடித்த பின் … வகுத்தலை தொடர். அப்படி தொடரப்படும் போது அது integer ஆகவோ அல்லது variable ஆகவோ இருக்கலாம்.
2:29 இப்பொழுது இது என்ன செய்யும் என்றால் … num1 மற்றும் num2 … அதாவது 10 மற்றும் 2 ஐ கூட்டுவதால் கிடைக்கும் 12... 2 ஆல் வகுபடும் போது 6 கிடைக்கும்.
2:39 refresh பண்ணி பார்த்தால் … அது சரியாக நடந்திருக்கிறது.
2:43 இவைதான் ... எளிதாக பயன்படுத்தக்கூடிய..... அடிப்படை கணித operators
2:48 நீங்கள் அணுகும் எவ்வித கணக்குகளையும் … எப்போதும் ஒரு துணை கொண்டு … அவை சரியாக கணக்கிடப்பட்டுள்ளதா என சரி பார்க்கவும்
2:55 இதுபோன்ற சிலவற்றை விரைவில் காண்போம்
2:58 increment arithmetic operator பற்றி கற்க உள்ளோம். இது மதிப்பை 1 ஆல் அதிகரிக்கும். இதனை சிறிது நேரத்திற்கு பின்பு பயன்படுத்தி பார்க்கலாம்
3:05 இவற்றை பழகிப்பார்த்து நன்றாக கற்றுள்ளீர்களா என உறுதி செய்க
3:09 இத்துடன் இந்த tutorial முடிகிறது. தமிழாக்கம் நித்யா. நன்றி

Contributors and Content Editors

Priya