Netbeans/C2/Handling-Images-in-a-Java-GUI-Application/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 வணக்கம். Netbeans IDE ஐ பயன்படுத்தி Java GUI Application ல் imageகளை கையாளுதல் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு.
00:10 உங்களுக்கு Netbeans ன் அடிப்படை அறிவு இருக்கும் என கொள்கிறோம்.
00:15 text fieldகள், buttonகள், menuகள், போன்றவற்றை JFrame form ல் வைக்க தெரியும் எனவும் கொள்கிறோம்
00:22 இல்லையெனில், Netbeans மீதான அந்த டுடோரியல்களுக்கு ஸ்போகன் டுடோரியல் இணையத்தளத்தைக் காணவும்.
00:29 இந்த டுடோரியலில் கற்கபோவது imageகளைக் கையாளுதல்
00:34 எளிய GUI application ல் அவற்றின் செயல்பாடுகளை செயல்படுத்துதல்.
00:39 இந்த செயல்விளக்கத்திற்கு நான் பயன்படுத்துவது லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு பதிப்பு 11.04 மற்றும் Netbeans IDE பதிப்பு 7.1.1
00:52 ஒரு Java Application ல் imageகளை கையாளுவதற்கும் அணுகுவதற்கும் தரமான வழி getResource() method ஐ பயன்படுத்துவது.
00:59 உங்கள் applicationல் imageகளை சேர்ப்பதற்கான code ஐ உருவாக்க IDE ன் GUI Builder ஐ பயன்படுத்த கற்போம்,
01:07 ஒரு image ஐ காட்டும் Jlabel உடன் ஒரு உதாரண Jframe ஐ உருவாக்குவோம்.
01:13 இந்த டுடோரியலில் -
01:15 அந்த application formஐ உருவாக்குவோம்
01:18 imageக்கு ஒரு package ஐ சேர்ப்போம்
01:20 Label ல் image ஐ காட்டுவோம்
01:22 mouse-eventகள் மற்றும் pop-upகளை உருவாக்குவோம்
01:25 applicationஐ கட்டமைத்து இயக்குவோம்.
01:28 இப்போது நம் உதாரண applicationஐ உருவாக்க IDEக்கு வருவோம்.
01:33 File menuல், New Projectஐ தேர்ந்தெடுக்கவும்
01:37 Categories ல் Javaஐயும் Projects ல் Java Application ஐயும் தேர்ந்தெடுத்து Nextல் க்ளிக் செய்க
01:46 Project Name field ல் ImageDisplayApp என டைப் செய்க
01:54 Create Main Class checkbox ஐ குறிநீக்கவும்.
01:58 Set as Main Project checkbox குறியிடப்பட்டுள்ளதா என உறுதிசெய்க.
02:03 Finishஐ க்ளிக் செய்க உங்கள் IDEல் project உருவாக்கப்படுகிறது.
02:08 இந்த sectionல், Jframe formஐ உருவாக்கி அதற்கு ஒரு Jlabel ஐ சேர்ப்போம்.
02:14 முதலில் Jframe form ஐ உருவாக்குவோம்
02:17 Projects windowல், ImageDisplayApp nodeஐ விரிவாக்கவும்.
02:23 Source Packages node ல் ரைட் க்ளிக் செய்து Newல் Jframe form ஐ தேர்ந்தெடுக்கவும்
02:30 Class Name field ல் டைப் செய்க ImageDisplay.
02:37 Package field ல் டைப் செய்க org.me.myimageapp.
02:45 Finish ஐ க்ளிக் செய்க
02:48 இப்போது Jlabelஐ சேர்ப்போம்
02:52 IDEன் வலப்பக்கம் Paletteல், Label component ஐ தேர்ந்தெடுத்து அதை Jframeக்கு இழுத்துவிடவும்
03:01 இப்போதைக்கு, உங்கள் form இவ்வாறு தோன்றும்.
03:06 ஒரு applicationல் imageகள் அல்லது மற்ற resourceகளை பயன்படுத்தும்போது, பொதுவாக resourceக்கு ஒரு தனி Java package ஐ உருவாக்குகிறோம்.
03:15 உங்கள் local file systemல், ஒரு package ஆனது ஒரு folder போல இருக்கும்.
03:19 Projects windowல், org.me.myimageapp node ஐ ரைட் க்ளிக் செய்து New ல் Java Packageஐ தேர்ந்தெடுக்கவும்
03:30 'New Package Wizard ல் org.me.myimageappக்கு .resources ஐ சேர்ப்போம்
03:40 எனவே புது package ஆனது org.me.myimageapp.resources எனப்படும்
03:47 Finish ஐ க்ளிக் செய்க
03:49 imageஐ சேர்க்கும்போது Projects windowல், org.me.myimageapp.resources packageனுள் அந்த image ஐ காணவேண்டும்.
03:59 இந்த applicationல், ஒரு Jlabel componentனுடன் image... embed செய்யப்படும்.
04:04 இப்போது labelக்கு image ஐ சேர்ப்போம்.
04:08 GUI designerல், உங்கள் form க்கு சேர்க்கப்பட்ட label ஐ தேர்ந்தெடுக்கவும்.
04:14 windowன் வலப்பக்கம் paletteக்கு கீழே, Properties windowல், Icon propertyக்கு வரவும்.
04:23 வலப்பக்கம் ellipsis (...) அல்லது மூன்று புள்ளிகள் மீது க்ளிக் செய்க.
04:30 Icon Property dialog boxல், Import to Projectஐ க்ளிக் செய்க
04:34 file chooserல், நீங்கள் பயன்படுத்த விரும்பும் image உள்ள folder க்கு செல்லவும்.
04:42 Next ஐ க்ளிக் செய்க
04:45 wizardன் Select Target Folder page ல், Resources folderஐ தேர்ந்தெடுக்கவும்.
04:49 Finish ஐ க்ளிக் செய்க
04:52 Finishஐ க்ளிக் செய்தபின் IDE உங்கள் projectக்கு image ஐ பிரதி எடுக்கிறது.
04:57 எனவே, applicationஐ கட்டமைத்து இயக்கும்போது, பங்கிடக்கூடிய JAR file ல் image சேர்க்கப்படுகிறது.
05:07 இங்கு OK ஐ க்ளிக் செய்க.
05:11 உங்கள் project nodeல் ரைட் க்ளிக் செய்து Clean and Build தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
05:18 இப்போது Files menuக்கு சென்று build folder ன் கீழ்,
05:29 dist folderன் கீழ், அந்த jar fileஐ காணலாம்.
05:33 image ஐ அணுக imagedisplay class ல் இது code ஐ உருவாக்குகிறது.
05:38 இது உங்கள் formன் Design view ல் label மீது image ஐயும் காட்டுகிறது.
05:43 இந்நிலையில், formன் தோற்றத்தை மேம்படுத்த சில எளிய விஷயங்களை செய்யலாம்.
05:48 Properties windowல், Text property ஐ தேர்ந்தெடுத்து
05:56 jLabel1ஐ நீக்கவும்
06:04 அந்த மதிப்பு labelக்கான display text ஆக GUI Builder ஆல் உருவாக்கப்பட்டது.
06:10 எனினும், image ஐ காட்ட அந்த label ஐ பயன்படுத்துகிறோம், text ஐ காட்ட அல்ல.
06:15 எனவே இந்த text தேவையில்லை.
06:18 இப்போது form ன் மையத்தில் வைக்க அந்த label ஐ இழுப்போம்.
06:26 GUI Designerல் Source tabஐ க்ளிக் செய்க.
06:30 Generated Code என்ற வரிக்கு வருவோம்
06:33 GUI Designer உருவாக்கிய code ஐ காட்ட Generated Code வரியின் இடப்பக்க கூட்டல் குறியை க்ளிக் செய்க.
06:46 இங்கே, இதுதான் keyline.
06:49 jLabel1 icon propertyக்கான Property editor ஐ நாம் பயன்படுத்தியுள்ளதால் setIcon method ஐ IDE உருவாக்கியுள்ளது.
06:57 அந்த methodன் parameter ஆனது getResource() methodக்கான call ஐ கொண்டுள்ளது. அது பெயரில்லாத ஒரு inner class ImageIcon ல் உள்ளது
07:10 உங்கள் image சேர்க்கப்பட்ட பின், Design view ல் அந்த image மீது ரைட் க்ளிக் செய்க.
07:19 Events ல் Mouse பின் mouseClickedல் க்ளிக் செய்க
07:24 Source modeக்கு view மாற்றப்படுகிறது.
07:28 இங்கே mouse க்ளிக்ன் செயலை மாற்ற code ஐ customize செய்யலாம்.
07:33 GUIல் image க்ளிக் செய்யப்படும்போது ஒரு pop-up ஐ காட்ட சில வரி code ஐ சேர்க்கிறேன்.
08:00 இப்போது pop-upஐ உருவாக்க சிலவரி code ஐ சேர்த்துள்ளேன்.
08:05 முதலில் pop-upக்கான ஒரு புது Jframe ஐ உருவாக்கியுள்ளேன்.
08:12 default close operation ஐ அமைத்துள்ளேன்.
08:15 கடைசியாக pop-up க்கான text ஐ கொடுத்துள்ளேன்
08:24 இந்த வரி code களை சேர்த்தபின், fileன் ஆரம்பத்தில் இரு statementகளை சேர்ப்பதன் மூலம் முக்கியமான packageகளை import செய்வோம்.
08:36 import javax.swing.*;
08:45 மற்றும் import java.awt.*;
08:53 இது இந்த programக்கு தேவைப்படும் முக்கியமான packageகளை import செய்யும் .
08:59 இப்போது application ஐ கட்டமைத்து இயக்குவோம்.
09:02 நாம் imageஐ அணுகவும் காட்டவும் code ஐ உருவாக்கியுள்ளோம்.
09:07 image ஐ அணுகமுடிகிறதா என உறுதிசெய்ய applicationஐ கட்டமைத்து இயக்குவோம்.
09:12 முதலில், projectன் Main class ஐ அமைக்க வேண்டும்
09:16 Main classஐ அமைக்கையில், projectஐ இயக்கும்போது எந்த class ஐ இயக்க வேண்டும் என IDE தெரிந்துகொள்கிறது.
09:21 கூடுதலாக, applicationஐ கட்டமைக்கும் போது application ன் JAR file ல் Main class element உருவாக்கப்படுவதை இது உறுதிசெய்கிறது.
09:33 இங்கே Projects window ன் ImageDisplayApp project Node ல் ரைட் க்ளிக் செய்து Propertiesஐ தேர்ந்தெடுக்கவும்
09:41 Project Properties dialog box ல், இடப்பக்கம் Run category ஐ தேர்ந்தெடுக்கவும்.
09:47 Main Class fieldக்கு அடுத்துள்ள Browse buttonஐ க்ளிக் செய்க.
09:51 org.me.myimageapp.ImageDisplay ஐ தேர்ந்தெடுத்து Select Main Classஐ தேர்ந்தெடுக்கவும்
10:01 இங்கே OK ஐ க்ளிக் செய்க.
10:05 இங்கே Project nodeல் ரைட் க்ளிக் செய்து Clean and Buildஐ தேர்ந்தெடுக்கவும்
10:11 Files window ல் application ன் Build properties ஐ காணலாம்.
10:20 compiled class ஐ Build folder கொண்டுள்ளது.
10:23 compiled class மற்றும் imageஐ கொண்ட executable JAR file ஐ dist folder கொண்டுள்ளது.
10:32 tool barல் Run ஐ தேர்ந்தெடுக்கவும்.
10:34 image உடன் நம் output window திறக்கிறது.
10:39 இப்போது இந்த image ல் க்ளிக் செய்கிறேன்.
10:42 imageன் விவரத்தைக் கொண்ட pop-up ஐ மேலே இது காட்டுகிறது.
10:50 இப்போது, உங்களுக்கான பயிற்சி!
10:54 இந்த டுடோரியலில் காட்டப்பட்டது போன்ற மூன்று image களை மற்றொரு GUIல் உருவாக்குக,
11:01 ஒவ்வொரு imageலும், பின்வருவனபோன்ற eventகளை குறிப்பிடவும் keyboard event, mouse-motion event, mouse-click event, mouse-wheel event
11:12 நான் ஏற்கனவே பயிற்சியை செய்துவிட்டேன்.
11:17 அந்த projectஐ இயக்குவோம்.
11:20 நீங்கள் செய்துமுடித்த பயிற்சி பார்க்க இவ்வாறு இருக்க வேண்டும்.
11:26 இங்கே என் பயிற்சியில் keyboard-eventகள் மற்றும் mouse eventகளை உருவாக்கியுள்ளேன்.
11:34 சுருங்க சொல்ல,
11:36 இந்த டுடோரியலில், ஒரு Jframe form ஐ உருவாக்கினோம்
11:39 image க்கு ஒரு packageஐ சேர்த்தோம்
11:41 label ல் imageஐ காட்டினோம்
11:44 mouse eventகள் மற்றும் pop-upகளையும் உருவாக்கினோம்.
11:49 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
11:53 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது.
11:56 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்.
12:02 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
12:07 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
12:11 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
12:19 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:30 மேலும் தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12:42 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst