LibreOffice-Suite-Base/C4/Design-Refine-Database-Design-and-Normalization-Rules/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 LibreOffice Base மீதான Spoken tutorial க்கு நல்வரவு
00:06 Database Design மீதான முந்தைய tutorial லின் தொடர்ச்சியே இந்த tutorial ஆகும்
00:11 இங்கே பின்வருவருவனவற்றைக் கற்போம்
00:15 7. database design ஐ துல்லியப்படுத்துதல்
00:18 8. normalization rule களைப் பயன்படுத்துதல்
00:21 9. database design ஐ சோதித்தல்
00:25 இந்த கடைசி tutorial ல், table relationships ஐ நிறுவ எப்படி primary keys மற்றும் foreign keys ஐ அமைத்தல் என கற்போம்
00:34 database design ன் செயல்முறையைத் தொடர்வோம்
00:38 முதலில் நம் database design ஐ துல்லியப்படுத்துவோம்
00:42 இப்போது ஆரம்ப design உள்ளது, மாதிரி data உடன் tableகளை உருவாக்கி விரிவுப்படுத்த முடியும்
00:50 மாதிரி queries, forms மற்றும் reports ஐ உருவாக்கி நம் ஆரம்ப கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படுகிறதா என காணலாம்
00:59 தேவையில்லாத நகல்களை சரிபார்த்து design ஐ மாற்றுவதன் மூலம் நீக்கலாம்
01:06 நாம் மறந்துவிட்ட columnகளை சேர்க்க முடியும்
01:10 Library database க்கு Database Integrity ஐ செயல்படுத்த Business ruleகளையும் சேர்க்க முடியும்
01:19 உதாரணமாக Books table ல் Price column... numeric ஆக இருக்க வேண்டும்
01:24 மற்றொரு business rule: புத்தகம் கொடுத்த தேதிக்கு பின் ஒரு மாதத்திற்கு பிறகு திருப்பவேண்டிய தேதி இருக்க வேண்டும்
01:32 அல்லது ஒரு குறிப்பிட்ட செயல் நடக்கும் போது, மேற்கொண்டு செயல்கள் தூண்டப்பட வேண்டும்
01:39 புத்தகம் திருப்பவேண்டிய தேதி கடந்துவிட்டால் உறுப்பினருக்கு ஒரு email reminder ஐ அனுப்ப database ல் செயல்களை அமைக்க வேண்டும்
01:50 அதனால் மறுபடி design செய்து புது tables , columns, rules அல்லது constraints ஐ அறிமுகப்படுத்தலாம்
01:58 மேலும் Data Integrity கெடவில்லை என உறுதிசெய்ய முன் படிகளை சற்று பார்க்கவேண்டும்
02:07 அடுத்து normalization ruleகளைப் பயன்படுத்தலாம்
02:13 நம் tableகள்
02:17 a) சரியாக கட்டமைக்கப்பட்டுள்ளதா
02:20 b) நாம் முன்னரே பார்த்த எந்த anomalies உம் இல்லாமல் இருக்கிறதா என பார்க்க இவை பயன்படுத்தபடுகின்றன
02:25 ஒரு database design க்கு rules அல்லது normal formகளைப் பயன்படுத்தும் செயல்முறை normalization எனப்படும்
02:33 நம் tutorial லில் முதல் மூன்று Normal formகளைக் காணலாம்
02:38 முதலில் First Normal Form. First Normal Form அல்லது 1NF, எல்லா column மதிப்புகளும் தனித்தன்மையுடன் இருக்கவேண்டும் என்கிறது
02:51 உதாரணமாக, Books table ன் Price column ல் ஒவ்வொரு cell ம் ஒரே ஒரு மதிப்பை கொண்டிருக்கவேண்டும்
02:59 அதாவது அந்த column புத்தகத்தின் விலையை மட்டும் கொண்டிருக்கவேண்டும் மற்றதை அல்ல
03:07 அதேபோல்,Authors table ல் First Name cell ம் ஒரே ஒரு author ன் first name ஐ கொண்டிருக்க வேண்டும்
03:16 மேலும் First Normal form, column களின் தொகுதி மீண்டும் வரகூடாது என்கிறது
03:23 உதாரணமாக, ஒரு வெளியீட்டாளர் 3 புத்தகங்களை கொண்டிருப்பதாக கருதுவோம்
03:29 Publishers table structure பின்வரும் columnகளைக் கொண்டிருக்கும்:
03:34 Publisher Id, Publisher, Book1, Author 1, Book 2, Author 2, Book 3, Author 3
03:47 Book மற்றும் Author தொகுதி மூன்று முறை வருவதை கவனிக்கவும்
03:52 இவ்வாறு தொகுதிகள் மீண்டும் வருவதைப் பார்த்தால் நம் design ஐ மீண்டும் பார்வையிட வேண்டும்
03:58 வெளியீட்டாளர் மேலும் பத்து புத்தகங்களை வெளியிடுகிறார் என்றால், 20 column களை சேர்ப்பதன் மூலம் நாம் table structure ஐ மாற்ற வேண்டியிருக்கிறது
04:08 data மாறுவதால் table design நிலையாக இல்லை என பார்க்கிறோம்
04:14 மேலும் book அல்லது author மூலம் தேடுதல் மற்றும் அடுக்குதல் சிக்கலை உருவாக்கும்
04:23 எனவே இந்த குறையை table ஐ இரண்டு அல்லது மூன்று table களாக பிரிப்பதன் மூலம் தீர்க்கலாம்
04:30 நம் உதாரணத்தில், திரையில் தோன்றும் image ஐ போல், மேலே உள்ள table ஐ Publishers, Books மற்றும் Authors என பிரிக்கலாம்
04:41 இந்த design, table ஐ First Normal Form க்கு கொண்டுவருகிறது
04:47 publishers மற்றும் books ல் data மாறிக்கொண்டே இருப்பதால் table structureகளை நிலையாக வைக்கிறது
04:56 இப்போது Second Normal Form ஐ காண்போம்
05:00 ஒரு table, 1NF ல் இருந்தால் அது Second Normal Form, அல்லது 2NF என சொல்லப்படுகிறது
05:07 ஒவ்வொரு non-key column உம் மொத்த primary key ஐயும் முழுமையாக சார்ந்துள்ளது
05:14 ஒரு primary key ஒன்றுக்கும் மேற்பட்ட columnகளை வைத்திருக்கும் போது இந்த rule பயன்படுத்தப்படுகிறது
05:22 உதாரணமாக, பின்வரும் column களுடன் BooksIssued table ஐ கருத்தில் கொள்வோம்
05:29 BookId, MemberId, BookTitle, IssueDate, மற்றும் table க்கு primary key ஐ உருவாக்கும் BookId மற்றும் MemberId
05:42 இப்போது BookTitle column ஐ கவனிக்கவும்
05:45 Books table ல் BookId ஐ பார்ப்பதன் மூலம் BookTitle ஐ பெறலாம்
05:52 அதாவது BookTitle, Book ID ஐ மட்டும் சார்ந்துள்ளது, Member ID ஐ அல்ல
06:00 அதனால் இது மொத்த primary key ஐயும் சார்ந்தது அல்ல
06:06 இந்த table ஐ Second Normal Formக்கு கொண்டுவர, இந்த table ல் இருந்து BookTitle ஐ நீக்க வேண்டும்
06:14 primary key மற்றும் column களை முழுமையாக சார்ந்திருக்கும் column கள் அங்கேயே இருக்கட்டும்
06:23 இரண்டு primary key fieldகளையும் முழுமையாக சார்ந்திருக்கும் IssueDate column இங்கேயே இருக்கட்டும்
06:31 இப்போது Third Normal Form ஐ பார்க்கலாம்
06:35 ஒரு table 2NF ல் இருந்தால் அது Third Normal Form (3NF) ல் இருப்பதாக சொல்லப்படுகிறது,
06:42 மேலும் எல்லா non-key column களும் ஒன்றோடொன்று சார்பற்றவையாக இருக்க வேண்டும்
06:48 உதாரணமாக, BooksIssued table ல் பின்வரும் columnகள் இருப்பதாக கொள்வோம்
06:54 BookIssueId (primary key ஆக), BookTitle, Member, IssueDate, மற்றும் ReturnDate.
07:03 Library ன் கொள்கைப்படி புத்தகம் திருப்ப வேண்டிய தேதி கொடுத்த தேதிக்கு பின் ஒரு மாதம் என இருப்பதாக கொள்வோம்
07:11 non-key column ஆக உள்ள IssueDate column ஐ பயன்படுத்தி திருப்ப வேண்டிய தேதியை Base கணக்கிட முடியும்
07:19 அதாவது, ReturnDate ஆனது IssueDate column ஐ மட்டுமே சார்ந்துள்ளது மற்ற column ஐ அல்ல
07:26 மேலும், Return Date field ல் வேறு தேதியை கொடுக்கிறோம் என்றால் அது Library கொள்கையை மீறுவதாக இருக்கும்
07:37 எனவே table ஐ Third Normal Form ல் வைக்க, table ல் இருந்து ReturnDate column ஐ நீக்குவோம்
07:44 இப்போது முதல் மூன்று Normal formகளை பயன்படுத்த தெரியும்
07:49 சாதாரணமாக நம் database design, 3NF உடன் முடியலாம்
07:55 Normal forms மற்றும் database design பற்றி மேலும் அறிய திரையில் காணும் website களுக்கு செல்லவும்
08:05 கடைசியாக நம் database design process ஐ முடித்திருப்பதால் database design ஐ சோதிப்போம்
08:12 database structure ஐ உருவாக்க முடியும்;
08:16 இங்கே Tables, Relationships, Rules அல்லது Constraints, Forms, Queries மற்றும் Reports ஐ உருவாக்கலாம்
08:24 நம் database ஐ real data மற்றும் users உடன் சோதிக்கலாம்
08:29 database க்கு data சேர்த்தல், update செய்தல் அல்லது நீக்குதலுக்கு form களை பயன்படுத்துக
08:36 report தீர்வுகள் சரியாகவும் துல்லியமாகவும் இருக்கிறதா என பார்க்க reports ஐ run செய்க
08:42 database பயன்படுத்த தயாராக இருப்பதால் வேகம் அடிப்படையில் செயல்திறனை சோதிக்கலாம்
08:50 வேகமாக data ஐ பெற table களுக்கு Indexகளை சேர்க்கலாம்
08:55 நம் database application வெற்றிகரமாக இயங்க, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் database ஐ பராமரிக்க வேண்டும்
09:03 முடித்துவிட்டோம். இப்போது assignment
09:08 Library database design க்கு Media என்ற புது entity ஐ சேர்க்கவும்
09:14 Media, DVDs மற்றும் CDs ஐ கொண்டுள்ளது. அவை audio அல்லது video ஆக இருக்கலாம்
09:21 புத்தகங்களை போல DVDs மற்றும் CDs ஐயும் Library உறுப்பினர்களுக்கு வழங்கலாம்
09:28 database design செயல்முறையைப் பின்தொடரவும்
09:31 உங்கள் designக்கு முதல் மூன்று Normal forms ஐ பயன்படுத்தவும்
09:37 LibreOffice Base ல் Database Design ன் மூன்றாம் பகுதி இத்துடன் முடிகிறது
09:45 இந்த tutorial லில் நாம் கற்றது
09:50 7. database design ஐ துல்லியப்படுத்துதல்
09:52 8. normalization ruleகளைப் பயன்படுத்துதல்
09:55 9. database design ஐ சோதித்தல்
09:58 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
10:20 மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst